என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தீ வைத்து எரிப்பு"
- வீராமலையில் உள்ள கோழிப்பண்ணை கடந்த 6 மாதங்களாக செயல்படவல்லை.
- கோழி பண்ணைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே உள்ள நெடுங்கல்லை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 36). ராணுவ வீரர். இவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை வீராமலையில் உள்ளது. அந்த கோழிப்பண்ணை கடந்த 6 மாதங்களாக செயல்படவல்லை. இந்த நிலையில் நேற்று முனதினம் அந்த பண்ணைக்கு யாரோ தீ வைத்து சென்றனர்.
இதில் அந்த பண்ணை முழுமையாக எரிந்தது. இது குறித்து விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள சிவக்குமார் நாகரசம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சாலையில் நிறுத்தி வைத்திருந்தபோது துணிகரம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் கோவிந்தராஜ் வயது (45).
மினி வேனில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு ஆம்பூர் - பேரணாம்பட்டு சாலையில் வேனை நிறுத்தி வைத்திருந்தார்.
இன்று அதிகாலை 5 மணி அளவில் மர்ம கும்பல் வேனிற்கு தீ வைத்துள்ளனர்.
இதனால் வேன் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதில் இருந்த பொருட்களும் தீயில் கருகியது. இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவசாயி ஒருவர் அவரது கரும்பு தோட்டத்தில் சறுகுகள், காய்ந்த இழைகளை அடிக்கடி தீ வைத்து எரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
- கரும்பு தோட்டத்தில் தீ வைப்பதால் கிராம மக்கள் சுவாசிப்பதில் சிரமப்படுகின்றனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ளது அரியாக்குழந்தை புதூர் கிராமம். இங்குள்ள விவசாயி ஒருவர் அவரது கரும்பு தோட்டத்தில் சறுகுகள், காய்ந்த இழைகளை அடிக்கடி தீ வைத்து எரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த தீயினால் வெளியேறும் கரும்புகை அந்த பகுதியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. இதுபற்றி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயி தொடர்ந்து அவரது கரும்பு தோட்டத்தில் தீ வைப்பதால் கிராம மக்கள் சுவாசிப்பதில் சிரமப்படுகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ேஜாடுகுளியில் 2021-ம் ஆண்டு தீவட்டிப்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- 2 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ேஜாடுகுளியில் 2021-ம் ஆண்டு தீவட்டிப்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து சேலம் வழியே கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முயன்ற 2 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஓமலூர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த புகையிலை பொருட்களை தீவட்டிப்பட்டி போலீசார் நேற்று தாசசமுத்திரம் ஏரி அருகே தீ வைத்து அழித்தனர்.
- சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- கார் எரிந்த நிலையில் இருந்தது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே காரமடை சிவந்தரம் வள்ளலார் வீதியை சேர்ந்தவர் சையது முகமது அலி (வயது 51). இவர் தி.மு.க.வில் எல்.பி.எப் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
சம்பவத்தன்று அவர் தனது காரை வீட்டின் முன்பு கடந்த 5 நாட்களாக நிறுத்தி வைத்திரந்தார். இன்று காலை வீட்டின் வெளியே வந்து பார்த்தார். அப்போது கார் எரிந்த நிலையில் இருந்தது.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சையது முகமது அலி இதுகுறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இதுகுறித்து சையது முகமது அலி போலீசில் புகார் அளித்தார். புகாரில் அவர் கடந்த வாரம் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் வாடகை வாகனங்கள் நிறுத்துவதில் சிலரிடம் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும்.
இதனால் ஆத்திரமடைந்த சிலர் எனது காரை தீயிட்டு கொளுத்திருக்கலாம் என தெரிவித்து இருந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை தீ வைத்து எரித்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- மர்ம நபர் ஒருவர் இருவரின் மோட்டார் சைக்கிள் மீதும் திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார்.
- இதில் 2 மோட்டார்சைக்கிளும் முழுவதுமாக எரிந்து சேதமானது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் மணிக்கூண்டு அருகே லலிதா ஓட்டல் சந்து பகுதி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்திருந்தனர்.
நேற்று இரவும் வழக்கம் போல் குடியிருப்பு வாசிகள் தங்களது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் அந்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த கதிரவன் மற்றும் முனீர் அகமது ஆகியோருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள்அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இரவு 11.30 மணி அளவில் அந்த பகுதிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் இருவரின் மோட்டார் சைக்கிள் மீதும் திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார். இதில் 2 மோட்டார்சைக்கிளும் முழுவதுமாக எரிந்து சேதமானது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் இது குறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் மர்ம நபர் ஒருவர் 2 மோட்டார் சைக்கிளை பெட்ரோல் ஊற்றி எரிப்பது பதிவாயிருந்தது.
இந்த செயலில் ஈடுபட்டவர் பழைய குற்றவாளியாக இருக்கலாம் என போலீசார் சந்திக்கின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்