search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி தீவிபத்து"

    • 20 மீட்டர் உயரத்துக்கு மேல் தீ பிழம்புகள் வெளியானது.
    • லாரிகளும், பெட்ரோல் பங்க்கும் தீப்பிடித்ததால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்தது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்-அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் ஜெய்ப்பூர் அருகே பங்ரோதா என்ற பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. அங்கு இன்று அதிகாலை 40-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன.

    அப்போது ரசாயனம் ஏற்றி இருந்த டேங்கர் லாரி ஒன்று பெட்ரோல் நிரப்புவதற்காக அந்த பெட்ரோல் பங்க்குக்கு வந்தது. அப்போது அந்த ரசாயன டேங்கர் லாரி அங்கு நிறுத்தப்பட்டிருந்த கியாஸ் லாரி மீது பயங்கரமாக மோதியது.

    2 லாரிகளும் மோதிய வேகத்தில் ரசாயன லாரியில் தீப்பிடித்தது. அந்த தீ கியாஸ் லாரி மீது பரவியது. இதனால் கண் இமைக்கும் நேரத்துக்குள் கியாஸ் நிரப்பப்பட்டிருந்த லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    அந்த தீப்பொறிகள் பெட்ரோல் பங்க் பகுதியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற டேங்கர் லாரிகள் மீது விழுந்தன. இதனால் அந்த லாரிகளும் தீப்பிடித்து எரிந்தது. அந்த பகுதி முழுக்க தீப்பிடித்து எரிந்தது போன்று மாறியது.


    லாரிகளில் பிடித்த தீ பெட்ரோல் பங்குக்கும் பரவியது. இதனால் அந்த பெட்ரோல் பங்க் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. 20 மீட்டர் உயரத்துக்கு மேல் தீ பிழம்புகள் வெளியானது. இது பல கிலோ மீட்டர் தொலைவுக்கு எரிந்தது.

    லாரிகளும், பெட்ரோல் பங்க்கும் தீப்பிடித்ததால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. அந்த பகுதியில் இருந்தவர்களும், டேங்கர் லாரி டிரைவர்களும், பெட்ரோல் பங்க் ஊழியர்களும் அலறியடித்து உயிர் பிழைக்க ஓடினார்கள்.

    இந்த கோர தீ விபத்து இன்று காலை 5.30 மணி யளவில் நிகழ்ந்தது. ஏற்க னவே பனிப்பொழிவு காரணமாக அந்த பகுதியில் அடர்புகை இருந்தது. தீப்பு கையும் சேர்ந்து கொண்ட தால் டேங்கர் லாரி டிரை வர்கள் தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

    40-க்கும் மேற்பட்டவர் கள் புகை மூட்டத்துக் குள்ளும், தீப்பிடித்த லாரி களுக்கும் சிக்கிக்கொண்ட னர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பல்வேறு பகுதி களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர்.

    அவர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதன் பிறகு மீட்பு பணிகள் நடந்தன. அப்போது 8 பேர் கருகி பலியாகி இருப்பது தெரிய வந்தது.

    தீக்காயங்களுடன் 37 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர் களை போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் மீட்டு ஜெய்ப்பூரில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். லாரி களில் பிடித்த தீ நீண்ட நேரம் எரிந்ததால் கடுமையான கரும்புகை கிளம்பியது.

    அந்த கரும்புகை பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பரவியதால் மக்கள் மத்தியில் பதட்டம் உருவானது. இதையடுத்து கூடுதல் மீட்பு படையினர் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த கோர தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் முழுமையாக எரிந்து சாம்பலாகி விட்டன. அதுபோல பெட்ரோல் பங்க்கிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

    அந்த பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல்-டீசல் நிரப்ப வந்திருந்த தனியார் வாகனங்களும் எரிந்து சேதம் அடைந்தன.

    எத்தனை வாகனங்கள் முழுமையாக எரிந்து நாசமானது என்று போலீசார் கணக்கு எடுத்து வருகிறார்கள். லாரிகள் தீப்பி டித்து எரியும் காட்சிகளை உயிர் தப்பியவர்கள் செல்போனில் படம் எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர். அந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன.

    இந்நிலையில் பிரதமர் மோடி தீவிபத்து சம்பவம் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

    மேலும் தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    • திடீரென லாரியின் உள்பகுதியில் இருந்து தீப்புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • இரவு நேரத்தில் பஞ்சு லோடு ஏற்றி சென்ற லாரியில் திடீரென தீப்புகை ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சங்ககிரி:

    ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் செல்வம் (40). இவர் கண்டெய்னர் லாரியில் சத்தியமங்கலத்தில் இருந்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு ஐதராபாத் நோக்கி சென்றார். இரவு 7 மணி அளவில் பவானி - சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் சங்ககிரி வி.என். பாளையம் என்ற இடத்தில் டிரைவர் செல்வம் லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி லாரியின் சக்கரங்களில் காற்று சரியாக உள்ளதா? என சரிபார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென லாரியின் உள்பகுதியில் இருந்து தீப்புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சங்ககிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அதிகாரி ரமேஷ் குமார் தலைமையிலான மீட்பு படையினர் விரைந்து வந்து லாரியின் பின் கதவுகளை திறந்து தண்ணீர் பாய்ச்சி தீ பரவாமல் தடுத்தனர். மேலும் லாரியில் இருந்த பஞ்சு லோடுகளை கீழே இறக்கி தீப்பிடித்த பேல்களை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    லாரியில் தீப்புகை ஏற்பட்ட இடத்தின் அருகே தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்ககிரி போலீசார் வாகன ங்களை மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் லாரியில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் பஞ்சு லோடு ஏற்றி சென்ற லாரியில் திடீரென தீப்புகை ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • தீ விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • தீ விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார்.

    இவருக்கு சொந்தமான டாரஸ் லாரி ஒன்று நேற்று நள்ளிரவில் தூத்துக்குடியில் இருந்து சிவகாசியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்றது. லாரியை எட்டயபுரம் அருகே உள்ள மஞ்சுநாயக்கன்பட்டியை சேர்ந்த டிரைவர் கற்பகராஜ் என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த கிளீனர் முருகேசன் என்பவர் இருந்தார்.

    லாரி இன்று அதிகாலையில் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியில் வந்த போது திடீரென நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் அதிவேகமாக மோதியது.

    இதில் லாரியின் முன்பக்க டயர் ஒன்று ஸ்டிரியங் உடன் துண்டானது மட்டுமின்றி, மோதிய வேகத்தில் டீசல் டேங்க்கும் உடைந்தது. இதனால் மளமளவென தீ பற்றி எரிந்தது. இதனால் சுதாரித்து கொண்ட டிரைவர் கற்பகராஜா மற்றும் கிளீனர் முருகேசன் ஆகியோர் லாரியின் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

    நடுரோட்டில் லாரி தீப்பிடித்து எரிந்து கொண்டு இருப்பதை பார்த்த அருகில் இருந்த அப்பகுதியினர் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர், நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். எனினும் லாரியில் நிலக்கரி இருந்ததால் லாரி மட்டுமின்றி அதில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள நிலக்கரியும் எரிந்து சாம்பலானது.

    இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • வேப்பூர் போலீஸ் நிலையம் அருகிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது லாரி திடீரென தீப்பிடித்தது.
    • லாரியின் என்ஜின் பகுதி எரிந்தது. உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர்.

    வேப்பூர்:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, தேரிழந்தூர் பகுதி, சிவன்கோவில் கீழவீதியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 27). இவர் லாரியில் உளுந்தூர்பேட்டையில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    கடலூர் மாவட்டம், வேப்பூர் போலீஸ் நிலையம் அருகிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது லாரி திடீரென தீப்பிடித்தது.

    இதில் லாரியின் என்ஜின் பகுதி எரிந்தது. உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரியின் டிரைவர் சரத்குமாருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.

    இது குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • நாகல்கேணி அருகே வந்த போது கண்டெய்னர் லாரி மீது தாழ்வாக சென்ற உயர் மின் அழுத்த கம்பி உரசியது. இதில் மின்கம்பி அறுந்து லாரியின் மீது விழுந்து தீப்பற்றியது.
    • கண்டெய்னர் லாரியில் இருந்த மூலப்பொருட்கள் மளமளவென பற்றி எரிய தொடங்கியது.

    தாம்பரம்:

    ஐதராபாத்தில் இருந்து, பல்லாவரம் அடுத்துள்ள நாகல்கேணியில் உள்ள தனியார் நிறுவன குடோனுக்கு இன்று அதிகாலை கார்களுக்கு பயன்படுத்தும் பெயிண்ட் தயாரிப்பதற்காக 18 டன் மூல பொருட்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி வந்தது.

    லாரியை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இர்பான்(35) என்பவர் ஓட்டிவந்தார். நாகல்கேணி அருகே வந்த போது கண்டெய்னர் லாரி மீது தாழ்வாக சென்ற உயர் மின் அழுத்த கம்பி உரசியது. இதில் மின்கம்பி அறுந்து லாரியின் மீது விழுந்து தீப்பற்றியது.

    இதில் கண்டெய்னர் லாரியில் இருந்த மூலப்பொருட்கள் மளமளவென பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் இர்பான் உடனடியாக லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். தகவல் அறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் லாரியில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள மூல பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    ×