என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிகிச்சை முகாம்"
- கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட நகர்புற நல வாழ்வு மைய வளாகத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிளியர் வியு கண் பரிசோதனை நிலையம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
28-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ராஜலட்சுமி ஜெயகாந்தன், 29-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் சுபாஷிணி செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நகர மன்ற தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ் சாரதிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.
இதில் அண்ணா நகர், புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மேலும் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் இலவச அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். முகாமில் அறிவழகன், ஜெயாமன், சண்முகம், கார்த்திக், அருண்குமார், அலெக்ஸ் நிர்மல்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 1,017 பேருக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது
- கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது
வந்தவாசி:
வந்தவாசியை அருகே தென்வணக்கம்பாடி கிராமத்தில் வருமுன் காப்போம் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு தென்வணக்கம்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் சக்குபாய் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். திமுக மாவட்டச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன், தெள்ளார் ஒன்றியக்குழு தலைவர் கமலாட்சி இளங்கோவன், செய்யாறு சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் கோதண்டராமன் வரவேற்றார்.
வந்தவாசி எம்.எல்.ஏ. எஸ்.அம்பேத்குமார் முகாமை தொடக்கி வைத்தார். தெள்ளார் வட்டார மருத்துவ அலுவலர் ஹித்தேன்ஷா தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இதில் 1017 பேருக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாமில் 5 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 5 பேருக்கு மக்களை தேடி மருத்துவப் பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன.
முகாமில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் ப.இளங்கோவன், டி.டி.ராதா, தெள்ளார் ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.ஆனந்த், ஒன்றியக்குழு உறுப்பினர் கே.பழனி அங்கன்வாடி மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இருதியில் சுகாதார ஆய்வாளர் பாஸ்கர் நன்றி தெரிவித்தார்.
- 460 பேர் முகாமில் பங்கேற்றனர்
- கண்ணாடி மற்றும் மருந்து மாத்திரைகள் போன்ற வற்றை பயன்படுத்த பரிந்துரை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட வக்கணம்பட்டி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் சென்னை தனியார் மருத்துவமனை மற்றும் லயன் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது.
இதில் லைன் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தனர். 460 பேர் முகாமில் பங்கேற்றனர்.
இதில் 42 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள நபர்களுக்கு தனியார் மருத்துவக் குழுவினர் மூலம் கண்களை பரிசோதனை செய்து கண்ணாடி மற்றும் மருந்து மாத்திரைகள் போன்ற வற்றை பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டது.
- பனைக்குளத்தில் கால்நடை சிறப்பு சிகிச்சை முகாம் நடந்தது.
- முகாமில் கால்நடைகளுக்கு பொது மருத்துவம், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, உள்ளிட்ட சிகிச்ைச மேற்கொள்ளப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பனைக்குளத்தில் பனைக்கும் வட்டார கால்நடை வளர்ப்போர் சங்கம், தமிழ்நாடு அரசு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் ஜெய்னுல் அஸ்ஸலாம், முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் ஹம்சத் அலி, ஊராட்சி தலைவர் பவுசியா பானு, ஜமாஅத் செயலாளர்கள் முகமது ரோஸ் சுல்த்தான், சாகுல் ஹமீது, பனைக்குளம் வட்டார கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் செய்குல் அக்பர், துணைத் தலைவர் முகமது களஞ்சியம், ஒருங்கினைப்பாளர் அபு முகம்மது, உதவி செயலாளர் பாலமுருகன், பொருளாளர் முகம்மது ஹசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்,
இம்முகாமில் கால்நடைகளுக்கு பொது மருத்துவம், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல் சிகிச்ைச மேற்கொள்ளப்பட்டது மேலும் கால்நடைகளுக்கு தாது உப்பு கலவைகளும் வழங்கப்பட்டது. சிறந்த கால்நடை வளர்ப்போர் மற்றும் சிறந்த கிடாரி கன்றுகளுக்கு ஊராட்சி மன்ற தலைவி பவுசியாபானு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் அசோலா பாசி வளர்ப்பிற்கான படுக்கைகள் வழங்கப்பட்டது.
இதில் ராமநாதபுரம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் இளங்கோவன், உதவி மருத்துவர்கள் நிஜாமுதீன், டாப்னி, ஆய்வாளர் பூங்கோதை, பராமரிப்பு உதவியாளர் கண்ணகி ஆகியோர் அடங்கிய குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் 80 பயனாளிகளின் 146 மாடுகள், 365 வெள்ளாடுகள், 85 செம்மறியாடுகள், 175 கோழிகள், 8 நாய்கள் பயன் பெற்றன. முடிவில் சமூக ஆர்வலர் சிராஜ் மைதீன் நன்றி கூறினார்.
- கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், பெரியசோளிபாளையம் ஊராட்சி குமாரசாமிபாளையம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான கால்நடை சிகிச்சை, சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- 700 -க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி மற்றும் இதர சிகிச்சைகள் அளித்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், பெரியசோளிபாளையம் ஊராட்சி குமாரசாமிபாளையம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான கால்நடை சிகிச்சை, சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் கால்நடை மருத்துவர்கள் ரவிச்சந்திரன், பொன்.தனவேல், செந்தில்குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சுரேஷ், துரைசாமி, தடுப்பூசி பணியாளர் சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் 700 -க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி மற்றும் இதர சிகிச்சைகள் அளித்தனர்.
கிராமத்தை சார்ந்த கால்நடை விவசாயிகள் தங்களது கால்நடைகளை முகாமிற்கு கொண்டு வந்து தேவையான சிகிச்சை பெற்று சென்றனர். இம்முகாமில் கன்றுகள் மற்றும் ஆட்டினங்களுக்கு குடற்புழு நீக்க மருந்துகளை அளித்தல், சினை பிடிக்காத கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
சினை பருவத்தில் உள்ள பசு மற்றும் எருமைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல்கள் செய்யப்பட்டன. முகாமில் 61 கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டன.சிறந்த முறையில் கன்றுகள் பராமரிப்போருக்கு சிறப்பு பரிசுகள் மற்றும்
சிறந்த முறையில் கால்நடை வளர்ப்பு முறைகளை கையாளும் முன்னோடி கால்நடை வளர்க்கும் சிறந்த கால்நடை விவசாயிகளுக்கு பெரியசோளிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி சிறப்பு மேலாண்மை விருதுகளை வழங்கினார். முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை பெரியசாமிபாளையம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராமத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை முகாம் நடக்கிறது.
- குழந்தை பிறப்பிற்கு மட்டுமே தடை, இல்லற இன்பத்திற்கு எவ்வித தடையும் இருக்காது.
விருதுநகர்
கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை முகாம் வருகிற 3-ந் தேதி நடக்கிறது. இதில் கலந்து கொண்டு நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை செய்யும் ஆண்களுக்கு ரூ.3 ஆயிரத்து 300 வழங்கப்படும்.
பெண்களுக்கு செய்யும் குடும்ப நல கருத்தடை அறுவை சிகிச்சையை விட ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது.
இந்த சிகிச்சை மிக மிக எளிமையானது. மிகவும் பாதுகாப்பானது. பயப்பட தேவையில்லை. மயக்க மருந்து கொடுப்ப தில்லை. 5 நிமிடங்களில் செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை கிடையாது. தையல் போடுவது கிடையாது. மருத்துவமனையில் தங்க வேண்டியது இல்லை, சிகிச்சை முடிந்தவுடன் வீடு திரும்பலாம். குழந்தை பிறப்பிற்கு மட்டுமே தடை, இல்லற இன்பத்திற்கு எவ்வித தடையும் இருக்காது. எப்போதும் போல உறவு கொள்ளலாம்.
அலுவலர்கள், பணியாளர்கள், பஞ்சாலை தொழிலாளர்கள், விவசாய வேலை செய்வோர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், வெடி மருந்து கம்பெனி மற்றும் பிரிண்டிங் பிரஸ் போன்ற கடினமான வேலை செய்வோர்கள் கூட செய்து கொள்ளலாம்.
கருத்தடை சிகிச்சைக்கு பின்னரும் முன்னர் செய்த அதே வேலையினை எவ்வித களைப்பும் இன்றி எப்போதும் போல இயல்பாக செய்ய முடியும். இதில் ஆண்மைக்குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை.
குறிப்பாக ரத்த சோகை, இதய நோய் மற்றும் பிற மருத்துவ காரணங்களினால் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாத தாய்மார்களின் கணவன்மார்கள் தாமாக முன் வந்து கருத்தடை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருமங்கலம் அடுத்த எஸ். புளியங்குளம் கிராமத்தில் கால்நடை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- இதனைத்தொடர்ந்து சிறந்த கால்நடை வளர்ப்போர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மதுரை
திருமங்கலம் அடுத்த எஸ். புளியங்குளம் கிராமத்தில் கால்நடை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் திருமங்கலம் கோட்ட கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் ரவிச்சந்திரன், மதுரை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் கிரிஜா, விடத்தகுளம் உதவி மருத்துவர் கஜேந்திரன், கால்நடை ஆய்வாளர்கள் பிரபாகரன், சீனிவாச பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை மற்றும் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிறந்த கால்நடை வளர்ப்போர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- தேவரம்பூர் கிராமத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை முகாம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது.
- விவசாயிகள் தங்கள் கால்நடைகளை முகாமிற்கு அழைத்து வந்து பயன்பெறலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், தேவராம்பூர் கிராமத்தில், வருகிற (14-ந்் தேதி) மாவட்ட கலெக்டர் தலைமையில், ஏழை எளிய விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடக்கிறது.
இந்த முகாமில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல். நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, ஊடு அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி, நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு அளிக்கப்படும்.
மேலும் சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளைப் பின்பற்றும் சிறந்த 3 விவசாயிகளுக்கு விருது வழங்கப்படும். கிடாரி கன்று பேரணி நடத்தி சிறந்த 3 கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
மேலும், தாது உப்புக்கலவைகள் கால்நடை வளர்ப்போருக்கு விநியோகிக்கப்படும். எனவே, கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை முகாமிற்கு அழைத்து வந்து பயன்பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்