search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்டப் பணிகள்"

    • 10 மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய்க்கான வங்கி வரைவோலைகளை வழங்கினார்.
    • அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறை சார்பில் 8 மாவட்டங்களில் 83 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள், புனரமைக்கப்பட்ட வாய்க்கால்கள், அணைமறுகட்டுமானப் பணி, புதிய குளம், புதிய அலுவலகக் கட்டிடம் உள்ளிட்ட 19 நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார்.

    திருப்பூர், தாராபுரம் வட்டம், கவுண்டையன்வலசு கிராமம் அருகில் அமராவதி ஆற்றின் குறுக்கே 11 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை, மாம்பாடி-புங்கந்துறை கிராமம் அமராவதி ஆற்றில் 11 கோடியே 56 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை, குன்றத்தூர், கொளப்பாக்கம் கிராமத்தில், கொளப்பாக்கம் கால்வாய் 1 முதல் கொளப்பாக்கம் பொழிச்சலூர் சாலையில் இணைப்பு ஓடை வரை 11 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூடிய வடிவிலான கால்வாய், வாலாஜாபாத், உள்ளாவூர் கிராமத்தின் அருகே தொள்ளாழி மடுவின் குறுக்கே 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு,

    உத்திரமேரூர் வட்டம், இருமரம் கிராமத்தின் அருகே புத்தளிமடுவின் குறுக்கே 3 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, திசையன்விளை, கஸ்தூரிரெங்கபுரம் கிராமம் பகுதி 2-ல் 4 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய குளம், திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் வெள்ள நீர் சூழ்வதை தடுக்கும் வகையில் திருப்பணி கரிசல்குளம் வெள்ள நீரை 3 கோடியே 79 லட்சம் செலவில் முடிவுற்ற நெடுங்குளம், மேகமுடையார் குளம் வழியாக சத்திரம் புதுக்குளம் கண்மாய்க்கு திருப்பும் பணி,


    ஒட்டப்பிடாரம், வடக்கு கல்மேடு கண்மாயில் 1 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணி, தூத்துக்குடி, பேரூரணி அணைக்கட்டில் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணி, தூத்துக்குடி, திரு வைகுண்டம், சம்பன்குளம் ஏரியின் வழங்கு வாய்க்காலின் இடது கரையில் 50 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புப் பணிகள், திருச்சி மாவட்டத்தில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு கோட்ட தலைமையிட உப கோட்டத்துடன் புதிய அலுவலகக் கட்டிடம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    தலைமைச் செயலகத்தில், இந்து சமய அற நிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூசைத் திட்ட கோவில்களில் பணி புரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் மற்றும் மகள்களின் மேற்படிப்பிற்கான கல்வித் உதவித்தொகையாக 500 மாணவர்களுக்கு மொத்தம் 50 லட்சம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய்க்கான வங்கி வரைவோலைகளை வழங்கினார்.

    இதன்மூலம் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம் போன்ற உயர்கல்வி பயிலும் அர்ச்சகர்களின் பிள்ளைகள் பயன்பெறுவர். கடந்தாண்டு இத்திட்டத்தின் மூலம் 400 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    2024-ம் ஆண்டுக்கான 'தேசிய நல்லாசிரியர் விருது 'பெற்ற ஆசிரியர்கள் இரா. கோபிநாத் மற்றும் இரா. சே. முரளிதரன் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து, விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

    இந்த நிகழ்வின்போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் நா. முருகா னந்தம், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் மதுமதி, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் உடன, இருந்தனர்.

    • பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் சங்கர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், பதிவேடுகள், வாகனப் பதிவு எண் வழங்குதல், புதிய வாகனங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் சங்கர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது தலைவாசல் வட்டத்திற்கு உட்பட்ட காமக்காபாளையம் கிராமத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் மஞ்சினி ஓடையின் குறுக்கே ரூ.22.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலப் பணியினை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து தலைவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு இருக்கிறதா? என்பது குறித்தும், சிகிச்சைகள் அளிக்கும் முறை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தலைவாசல் தாசில்தார் அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடு களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், பதிவேடுகள், வாகனப் பதிவு எண் வழங்குதல், புதிய வாகனங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நரசிங்கபுரம் நகராட்சியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வார்டு எண் 15-ல் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பூங்காப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென அலு வலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதனைத்தொடர்ந்து வாழப்பாடி வட்டம் காட்டுவேப்பிலை ப்பட்டியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஆழ்துளைக் கிணறுகள், சொட்டு நீர் பாசனம், பழ சாகுபடிகள் மற்றும் தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காளாண் வளர்ப்பு உள்ளிட்டவைகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தை நடத்த உள்ளார்கள்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) (பொறுப்பு) யோகானந்த் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் சுமாா் 30 ஏக்கா் பரப்பளவில் ரூ.450 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
    • மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் 2 முறை நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டாா்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் சுமாா் 30 ஏக்கா் பரப்பளவில் ரூ.450 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள மருத்துவ கல்லூரி செயல்பட்டு வரும் நிலையில் புதிய மருத்துவமனைக்கான பணிகள் நிறைவடைந்து ஓராண்டுக்கு மேலாகியும் செயல்படாமல் உள்ளது.

    குடிநீர் வசதி

    மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் 2 முறை நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டாா். மருத்துவமனைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வந்துவிட்ட நிலையில் முக்கிய தேவையான குடிநீா் வசதி இல்லாமல் உள்ளது.

    அரசு மருத்துவமனை கட்டுமானப் பணியின்போது 11 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தும் ஒன்றில் கூட தண்ணீா் கிடைக்கவில்லை. இதனால் மாற்று ஏற்பாடாக நாமக்கல் நகராட்சி மூலம் அரசு மருத்துவக் கல்லூரிக்கும், மாணவா்கள், ஆசிரியா்களின் விடுதிகளுக்கும் குடிநீா் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

    புதிய குடிநீா் திட்டப் பணிகளுக்காக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தமிழக அரசு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதாவது, ஜேடா்பாளையத்தில் இருந்து பெரியமணலி அருகே முசிறிப்புதூருக்கு வரும் காவிரி குடிநீரை புதிய அரசு மருத்துவமனை கட்டடத்திற்கு கொண்டு வருவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

    90 சதவீத பணிகள்

    சுமாா் 12.5 கி.மீ. தொலை வுடைய இந்தப் பகுதிக்கு குழாய் பதிக்கும் பணி 3 மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கியது. நாமக்கல் மாவட்ட குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து ஒப்பந்ததாரா்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனா். தற்போது 90 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன.

    முசிறிப்புதூரில் 30 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. இங்கிருந்து 15 லட்சம் லிட்டா் நீா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக முசிறிப்புதூரில் 30 ஹெச்.பி திறன் கொண்ட மோட்டாா் பொருத்தும் பணி மட்டும் நிலுவையில் உள்ளது. புது டெல்லியில் இருந்து அந்த மோட்டாா் வரவேண்டும் என்பதால் பணிகளில் தாமதம் நிலவுவதாக தெரிகிறது. அந்த மோட்டாா் பொருத்தப்பட்டு விட்டால் ஓரிரு மாதங்களில் புதிய அரசு மருத்துவ மனைக் கட்டிடம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

    இது குறித்து குடிநீா் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    நாமக்கல் புதிய அரசு மருத்துவ மனைக்காக குடிநீா் குழாய் பதிக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. வேலகவுண்டம்பட்டி அருகில் முசிறிப்புதூரில் இருந்து பொப்பம்பட்டி, மட்டப்பாறை புதூா், காதப்பள்ளி, காவல்துறை ஆயுதப்படை வளாகம் வழியாக 12.5 கி.மீ. தொலைவுக்கு குடிநீா் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 11.7 கி.மீ. தொலைவுக்கு குழாய் பதிக்கப் பட்டுள்ளது. முக்கியமான இடங்களில் 22 ஏா் வால்வுகள் பொருத்தப்பட்டுள்ன.

    15 லட்சம் லிட்டர் தண்ணீர்

    30 லட்சம் லிட்டா் கொள்ள ளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து 15 லட்சம் லிட்டா் நீா் அரசு மருத்துவக்கல்லூரி, புதிய மருத்துவமனைக் கட்டடத்திற்கு விநியோகம் செய்யப்பட உள்ளன. 30 குதிரைத் திறன் கொண்ட மோட்டாா் பொருத்தும் பணி ஓரிரு நாளில் தொடங்கும். அதன்பிறகு முழுமையாக குடிநீா் வழங்குவதற்கான நடை முறைகள் பின்பற்றப்படும். இதற்காக 1000 லிட்டருக்கு ரூ.75 வீதம் மருத்துவமனை நிா்வாகத்திடம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

    சுமாா் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இந்தப் பணிகள் நடைபெற்று உள்ளன. அடுத்து சித்த மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி அமையும்பட்சத்தில் குடிநீா் தேவையென்றால் கூடுதலாக குழாய்களை பதித்து நீரை விநியோகம் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • வத்திராயிருப்பு பகுதியில் நடக்கும் திட்டப் பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்க வேண்டும்.
    • அதிகாரிகளுக்கு கலெக்டர் வலியுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பேரூராட்சி மற்றும் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன்படி, வத்திரா யிருப்பு ஊராட்சி ஒன்றியம் மேலக்கோபாலபுரம் ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், 15-வது மானிய நிதி குழுவின் கீழ் ரூ.1.05 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமைய லறை கூடம் புர ணமைக்கப்பட்டுள்ள தையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.62 லட்சம் மதிப்பில் உயர் நிலைப் பள்ளியில் சுற்றுச் சு வர் கட்டப்பட்டுள்ளதையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    கான்சாபுரம் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.29.69 லட்சம் மதிப்பில் பெரிய ஓடை கால்வாய் வரத்து கால்வாய் மேம்பாடு செய்யப்பட்டு வரும் பணிகளையும், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.93.68 லட்சம் மதிப்பில் கான்சாபுரம்-அத்தி கோயில் சாலை பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரை வாகவும், தரமாகவும் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட கலெக்டர் அவர்கள் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் இலக்கை நிர்ணயிப்பது, அதை நோக்கிய பயணத்தை மேற்கொள்வது குறித்தும், உயர்கல்விக்கு தேசிய அளவில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் கலந்துரை யாடினார்.

    பின்னர், வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொண்டு பேசினார்.

    ஆய்வின் போது உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) சேதுராமன், செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், பேரூராட்சித்தலைவர் திருமணி தவமணி பெரியசாமி, துணைத் தலைவர் பஞ்சு விக்னேஷ், வட்டாட்சியர் முத்துமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் லலிதா, வார்டு உறுப்பினர்கள், உதவி பொறியாளர், பேரூராட்சி பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • அடிக்கல் நாட்டு விழா நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புளியங்குடி:

    புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு பகுதியில் சுமார் ரூ. 75 லட்சம் மதிப்பில் 3 ஆயிரம் சதுர அடியில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 11-வது வார்டில் சுமார் ரூ. 70 லட்சம் மதிப்பில் குடிநீர் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. புதிய திட்டப் பணிகளை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராஜா அடிக்கல் நாட்டினர்.

    விழாவில் நகர்மன்ற துணைத் தலைவர் அந்தோணிசாமி, நகராட்சி ஆணையாளர் சுகந்தி, நகராட்சி பொறியாளர் முகைதீன், சுகாதார அலுவலர் கணேசன், நகர்மன்ற உறுப்பினர் லட்சுமி செல்வம், பீர்பாத்து சாகுல்ஹமீது, சங்கரநாராயணன், முகமது நைனார், பாலசுப்பிரமணியன், சீதாலட்சுமி முனியராஜ், நிர்வாகிகளான பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது, வக்கீல் பிச்சையா, கம்பிளி மாரியப்பன், ராஜவேல்பாண்டியன், ராஜ்குமார், சேதுராமன், குருராஜ், அன்பு, அக்ரி சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார்.
    • அனைத்து கிராம ஓருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகள் செயலாக்கம் குறித்து கலந்துரையாடினார்.

    கடலூர்:

    வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார். உச்சிமேடு கிராமத்தில் தோட்டக்கலை துறைச் சார்பாக அமைக்கப் பட்டுள்ள வெண்டை வய லினை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்து, உச்சிமேடு கிராம விவசாயிகளுடன் கலை ஞரின் அனைத்து கிராம ஓருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகள் செயலாக்கம் குறித்து கலந்துரையாடினார்.

    கலைஞரின் அனைத்து கிராம ஓருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பேட்டரி தெளிப்பான், விதைதளை, வரப்புபயிர், உள்ளிட்டவை மற்றும் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பண்ணை கருவிகள், உணவு மற்றும் ஊட்டசத்து இயக்கத்தின் கீழ் கோனோவீடர், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத் தின் கீழ் சூரியஒளி பொறி மற்றும் உளுந்து விதைகள், தார்பாலின் ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    மதலப்பட்டு ஊராட்சி வில்லுபாளையம் பகுதி யில் வேளாண்மை துறையின் மூலம் சுமார் 50 ஏக்கர் அளவில் அமைக்கப் பட்டுள்ள உளுந்து வம்பன்-8 விதைப் பண்ணை வயலினை ஆய்வு செய்தார். மேலும் வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயி ஒருவர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டையினை ஆய்வு செய்து, இத்திட்டத் தினை முறையாக பயன் படுத்தி மேன்மையடையும் வகையில் கலெக்டர் பால சுப்ரமணியம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி னார். இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் கண்ணையா, வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) கென்னடி ஜெபக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயகுமார், வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) பிரேம்சாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கடையநல்லூர் நகராட்சி பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.
    • நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் 15 எண்ணிக்கையிலான 1,2,5,7,10, மற்றும் 15,16, 19,22,32 ஆகிய வார்டுகளின் தெருக்களில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.

    நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் 5-வது வார்டு நகராட்சி உறுப்பினர் பால சுப்பிரமணியன் என்ற கண்ணன், இளைநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • முகாமில் ஈடுபட்ட மாணவர்களை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பேரூராட்சி தலைவர் பாராட்டினர்
    • முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்

    திருப்பத்தூர்:

    நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட 7 நாள் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் ராமகிருஷ்ணாபுரம் தொடக்கப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளி வளாகங்களில் தூய்மை பணி, மழைநீர் சேகரிப்பு அமைத்தல், மரக்கன்று நடுதல், சட்ட விழிப்புணர்வு, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்பு ணர்வு, ஆளுமைப்பண்பு பயிற்சி போன்ற பல்வேறு பணி களை மாணவர்கள் மேற்கொண்டனர்.

    அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. மாவட்ட ஊராட் சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், பேரூராட்சி தலைவர் சசிகலா சூரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டு முகாமில் ஈடுபட்ட மாணவர்களுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் சா.இளங்கோ, நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சி.இரவி வர்மன்; உதவி திட்ட அலுவலர் கே.ராசேந்திரன், உதவித் தலைமை ஆசிரியர்கள் சி.வேல்முருகன் பி.முருகேசன், தொழிற்கல்வி பயிற்றுனர் எம்.சுடலைமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.

    ×