என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வணிகர் சங்கம்"
- வெள்ளையன் (76) இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
- வெள்ளையன் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.
தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் (76) இன்று உடல்நலக்குறைவால் காலமானார்
நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நலக்குறைவால் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
வெள்ளையன் அவர்கள் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தியில், "தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருத்தினேன்.
வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- வெள்ளையன் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் (76) இன்று உடல்நலக்குறைவால் காலமானார்
நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நலக்குறைவால் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
வெள்ளையன் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஓ. பன்னீர்செல்வம், சரத்குமார், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமாரி எம்.பி. விஜய் வசந்த் அவரது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதவியில், "வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
வணிகர்களின் நலனுக்காக உழைத்து, வணிகர் நலன் கருதி பல்வேறு போராட்டங்கள் நடத்திய திரு. வெள்ளையன் அவர்கள் மறைவு வணிகர் சமூகத்திற்கு தீரா இழப்பாகும்.
அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரை சார்ந்தோர் அனைவரது துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
வணிகர் சங்க பேரவை தலைவர் திரு. வெள்ளையன் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். வணிகர்களின் நலனுக்காக உழைத்து, வணிகர் நலன் கருதி பல்வேறு போராட்டங்கள் நடத்திய திரு. வெள்ளையன் அவர்கள் மறைவு வணிகர்… pic.twitter.com/H4AD0pTBw0
— VijayVasanth (@iamvijayvasanth) September 10, 2024
- நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சில ஆண்டுகளாக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
- உடல்நலக்குறைவால் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அவர் அனுமதிக்கப்பட்டார்.
வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் (76) இன்று உடல்நலக்குறைவால் காலமானார்
நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நலக்குறைவால் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
- மாநாட்டில் தமிழகத்தில் இருந்து பல லட்சம் வணிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
- பல விதமான ஜி.எஸ்.டியாக இல்லமல் ஒரு முனை வரியாக இருக்க வேண்டும்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல கூட்டம், கோவில்பட்டி மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.
இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஆண்டுக்கு ஒரு முறை உரிமம் பெறுவதை 3 ஆண்டுக்கு ஒரு முறை என்று மாற்றி தருவதாக திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். அதன்படி 3 ஆண்டுக்கு ஒரு முறை உரிமம் பெற வேண்டும் என்பதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி இருக்கிறோம்.
வணிக உரிமை பெறுவதற்கு கட்டிட உரிமையாளரும் வரி கட்ட வேண்டும், அதனை இணைக்க வேண்டும் என்பதனை தவிர்த்து உரிமத்தினை தனியாக வழங்க வேண்டும் என்பதனையும் முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்று தீர்க்க இருக்கிறோம். ஆகவே தான் மே 5-ந் தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு வணிகர் விடுதலை முழக்க மாநாடாக நடைபெற உள்ளது. மாநாட்டில் தமிழகத்தில் இருந்து பல லட்சம் வணிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
உற்பத்தியாளர்கள் தனி விலை நிர்ணயம் செய்வதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும். உற்பத்தியாளர்கள் அனைத்து கடைகளுக்கு ஒரே விலையில் பொருட்களை தர வேண்டும். அந்நிய நாட்டு சக்திகள் ஆன்லைனில் புகுந்து கொண்டு வணிகத்தினை சீரழிப்பதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். வணிக நிறுவனங்களில் அமலாக்கதுறையினர் சோதனை செய்கின்றனர். அதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பாரபட்சம் இல்லமால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து ஆய்வு செய்யும் அரசு அதிகாரிகள் பாரபட்சம் இல்லமால் செயல்பட வேண்டும். ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அதனை அதிகளவு பயன்படுத்துவது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். அந்த நிறுவனங்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.
சிறு வணிக நிறுவனங்களில் பறிமுதல் செய்து அதிகளவு அபராதம் விதிக்கின்றனர். பிளாஸ்டிக்குக்கு பதில் மாற்று எது என்பதனை அரசு உறுதி செய்ய வேண்டும். அதனை முறைப்படுத்த வேண்டும்.
அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கோரிக்கைகளை வாங்கியுள்ளனர். மத்திய, மாநிலத்தில் ஆளும் கட்சிகள், எதிர்கட்சிகளிடம் எங்களின் கோரிக்கைகளை கொடுத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகள், மாநாட்டு தீர்மானங்கைள நிறைவேற்றி தருகிறோம் என்று யார் உறுதி அளிக்கிறார்களோ, அது குறித்து ஆலோசனை நடத்தி வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதனை தெரிவிப்போம்
பல விதமான ஜி.எஸ்.டியாக இல்லமல் ஒரு முனை வரியாக இருக்க வேண்டும் என்பதனை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். வணிகர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வணிகர்களை மிரட்டும் ரவுடிகள் மீது புகார் அளித்தால் கைது செய்யப்பட்ட சில நாள்களில் வெளியே வந்து மிரட்டும் சூழ்நிலை உள்ளது.
தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்தால் தான் ரவுடியிசம் ஒழியும். வணிகர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். தவறு செய்யும் வணிகர்களுக்கு அவர்களின் பொருளாதரத்தினை கருத்தில் கொண்டு அபராதம் விதிக்க வேண்டும். தொடர்ந்து தவறும் செய்யும் வியாபாரிகளை நீக்குவது என்று சங்கத்தில் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வணிகப் பயன்பாட்டுக்கான மனைகளுக்கு அரசு வழிகாட்டு மதிப்பு 3 மடங்கு உயர்த்துவதாக இருப்பது மிகவும் வேதனைக் குரியதாகும்.
- சொத்து பரிமாற்றத்திலும், மிகப்பெரும் மந்த நிலையை ஏற்படுத்தும்.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் குடியிருப்பு மனைகளின் அரசு மதிப்பீடு அண்மையில் அனைத்து பகுதிகளிலும், உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் வணிக பயன்பாட்டுக்கான மனைகளின் அரசு வழிகாட்டு மதிப்பீடு, சாதாரண குடியிருப்பு மனை மதிப்பீட்டிலிருந்து 3 மடங்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிட இருப்பதாக தெரிய வருகின்றது.
வணிகர்களும், வணிகமும் ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. ஆன்லைன் வர்த்தகம், தற்காலிக விழாக்கால கடைகள், போக்குவரத்து கட்டண உயர்வு, மின் கட்டணம், சொத்துவரி உயர்வு, என பல்வேறு காரணங்களால் தொழில் நசிந்து வரும் நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது.
இந்த கால கட்டத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான மனைகளுக்கு அரசு வழிகாட்டு மதிப்பு 3 மடங்கு உயர்த்துவதாக இருப்பது மிகவும் வேதனைக் குரியதாகும். இதனால் புதிதாக தொழில் தொடங்குவோர், புதிய வணிக நிறுவனர்கள் தொழிலுக்கு வருவதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, சொத்து பரிமாற்றத்திலும், மிகப்பெரும் மந்த நிலையை ஏற்படுத்தும். இதனால், வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கும். தமிழக முதலமைச்சர் இவற்றை கவனத்தில் கொண்டு, வணிக மனைகளுக்கான அரசு வழிகாட்டு மதிப்பீட்டு உயர்வினை உடனடியாக மறுபரிசீலனை செய்திட வேண்டுமென வணிகர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு வழங்கினார்
- முதல் 2 இடங்களை பிடித்த 10 மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
கன்னியாகுமரி :
தக்கலை நகர தொழில் வணிகர் சங்க 27-வது ஆண்டு விழா வருடாந்திர பொதுக்குழு, பரிசளிப்பு மற்றும் விருது வழங்குதல் உள்ளிட்டவை முப்பெரும் விழாக்களாக கொண்டாடப்பட்டது. சங்க கொடியை தலைவர் ஜெகபர் சாதிக் ஏற்றினார். விழாவில் கடந்த 2 கல்வி ஆண்டுகளில் அரசு பொதுத்தேர்வில் 10,12-ம் வகுப்புகளில் முதல் 2 இடங்களை பிடித்த 10 மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன், நகர்மன்ற ஆணையாளர் லெனின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
தொடர்ந்து நடந்த பொதுக்குழு கூட்டத்தில் சந்திரமோகன், மன்மதன், வெனிபால்டு ரூபஸ், சனூஜ் கபூர், விஜயகுமார், விஷாக், முருகேசன், வேலாயுதன் பிள்ளை, தக்கலை சிவா, பத்மதாஸ், பொதுச் செயலாளர் விஜயகுமார், பொருளாளர் தாணு மூர்த்தி, துணை தலைவர்கள் சுரேஷ்குமார், சண்முகம், செயலாளர்கள் மோசஸ் ஆனந்த், எபனேசர், கவுரவத் தலைவர் ஆனந்தம் குமார், ஜெயக்குமார், தொழிலாளர் நலத்துறை அலுவலர் மன்னன் பெருமாள், நகர் மன்ற துணைத் தலைவர் உன்னிகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
- வணிகர் சங்க கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.
- கூட்டமைப்பின் தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் விருதுநகர் மேற்கு மாவட்ட கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மே 5-ந் தேதி வணிகர் சங்க மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற உள்ளது. ராஜபாளையம்-சத்திரப்பட்டி ெரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். விருதுநகர்-செங்கோட்டை ெரயில் பாதை மின்மயமாக்கல் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு வணிகர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களை விரைந்து சேர்க்க வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் வணிகர்களுக்கு இடையூறு இல்லாமல் அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும். இடைத்தேர்தல் ஆதரவு குறித்து ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் போர்க்கொடி தூக்குவதை ஏற்க முடியாது. புகையிலையை உணவு பாதுகாப்பு சட்டத்தில் சேர்க்க முடியாது என்று கோர்ட்டு தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து வணிகர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். தமிழக அரசு இந்த முடிவை அறிவிக்கும் வரை வணிகர்கள் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.
புகையிலை விற்பனை தொடர்பாக வணிகர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஸ்ரீவில்லிபுத்தூர் வணிகர் சங்க நிர்வாகிகள் பச்சி வன்னியராஜ், கோமதி சங்கர் குருசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு அனைத்து வணிகர்களின் சார்பாக கருத்துக்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
- டெஸ்ட் பர்ச்சேஸ் குறித்து வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
திருப்பூர் :
வணிகவரித்துறையினரால் கடந்த மார்ச் மாதத்தில் சில்லறை கடைகளில் ஆய்வு செய்வது சம்பந்தமாகவும் , டெஸ்ட் பர்சேஸ் செய்வது சம்பந்தமாக அறிவிப்புகள் வெளியிட்ட போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தமிழ்நாடு அனைத்து வணிகர்களின் சார்பாக கருத்துக்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் வணிகவரித்துறை அதிகாரிகள் டெஸ்ட் பர்ச்சேஸ் எனும் பெயரில் சில்லரை வணிகம் செய்யும் வணிகர்களிடம் பொருட்கள் வாங்கி அதனை டெஸ்ட் பர்ச்சேஸ் என குறிப்பிட்டு அதற்கு 20,000 ரூபாய் வரை அபராதம் வசூலிப்பதாகவும், இதனால் சில்லறை வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் டெஸ்ட் பர்ச்சேஸ் குறித்து வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், டெஸ்ட் பர்ச்சேஸ் முறைக்கு 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் துணை ஆணையரிடம் வணிகர்கள் இன்று மனு அளித்தனர்.
- “மொத்த வணிகர்கள் அன்னிய வணிகர்களுடன் கைகோர்த்துக் கொண்டு சில்லறை வணிகத்தை சீரழிக்கிறார்கள்
- நம் நாட்டு வணிகத்தை வளர்க்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு சில்லறை வணிகத்திற்கு எதிரானதாகும். அரிசிக்கு வரி கொண்டு வந்து உள்ளார்கள்.
நாகர்கோவில் :
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பொதுக்குழு கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் டேவிட்சன் தலைமை தாங்கினார். அருள்ராஜ், பால்ராஜ், சலீம், ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
மாநில பொதுச் செயலாளர் மணி, உயர் மட்ட குழு உறுப்பினர் கருப்பையா, பேரவை துணைத் தலைவர் ஜார்ஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மார்சல் அறிக்கை வாசித்தார். முடிவில் ஜாகிர் உசேன் நன்றி கூறினார்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது "மொத்த வணிகர்கள் அன்னிய வணிகர்களுடன் கைகோர்த்துக் கொண்டு சில்லறை வணிகத்தை சீரழிக்கிறார்கள். எனவே சில்லறை வணிகர்களை காப்பாற்ற வேண்டும். அன்னிய வணிகத்தை ஒழிக்க வேண்டும். நம் நாட்டு வணிகத்தை வளர்க்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு சில்லறை வணிகத்திற்கு எதிரானதாகும். அரிசிக்கு வரி கொண்டு வந்து உள்ளார்கள்.
இந்தியாவில் அநேக மாநிலங்களில் அரிசி, பருப்புக்கான வரியை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தனர். அரிசிக்கு வரி விதித்திருப்பதை ஏற்க முடியாது. ஏழை எளிய சாமானிய மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். விலைவாசி உயரும்.
எனவே இதை கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும். மக்களை பாதிக்காத வகையில் வரி விதிப்புகள் இருக்க வேண்டும்" என்றார்.
- கண்காணிப்பு கேமராக்களை அதிகப்படுத்தவும் வணிகர்கள் எவ்வாறு பாதுகாப்பாக வணிகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி பேசினர்.
- புதிதாக இணைய இருக்கும் 8 கிளை சங்கங்களுக்கும் 10 கண்காணிப்பு கேமரா புதிதாக பொருத்துதல் என வணிகர்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக பொருத்தப்பட வேண்டும்.
சுவாமிமலை:
பந்தநல்லூரில் டெல்டா வணிகர் நல சங்க கூட்டமைப்பின் தலைவர் முகமது சுகைல், செயலாளர் உதயகுமார், பொருளாளர் ரகுராமன், கௌரவத் தலைவர் அசோகன் மற்றும் பொறுப்பாளர்கள், முன்னிலையில் மேலும் கிளை சங்கமான பந்தநல்லூர் அனைத்து வணிகர் நல சங்கம் தலைவர் ரகுராமன், மற்றும் பொறுப்பாளர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் வணிகர்களின் குறை கேட்டு அறிய திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகபர் சாதிக், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் வணிகர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அதிகப்படுத்தவும் வணிகர்கள் எவ்வாறு பாதுகாப்பாக வணிகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி பேசினர்.
டெல்டா வணிகர் நல சங்க கூட்டமைப்பின் கிளை சங்கமான திருப்பனந்தாளில் மேலும் 10 கேமராக்கள் அதிகப்படுத்துதல், பந்தநல்லூரில் மேலும் 10 கேமராக்கள் அதிகப்படுத்துதல், மேலும் புதிதாக இணைய இருக்கும் 8 கிளை சங்கங்களுக்கும் 10 கண்காணிப்பு கேமரா புதிதாக பொருத்துதல் என வணிகர்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக பொருத்தப்பட வேண்டும் என டெல்டா வணிகர் நல சங்க கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் மத்தியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்