என் மலர்
நீங்கள் தேடியது "கிறிஸ்துமஸ் பண்டிகை"
- தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.
- திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நாகப்பட்டினம்:
இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (புதன்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.
அதன்படி, கீழை நாடுகளின் 'லூர்து' என போற்றப்படும் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பிரமாண்டமான முறையில் கிறிஸ்துமஸ் கூட்டு திருப்பலி நடைபெற்றது.
பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் பங்குத்தந்தை அற்புதராஜ் மற்றும் உதவி பங்குத் தந்தைகள் இரவு 11.30 மணிக்கு பேராலயத்தில் உள்ள விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் தமிழில் சிறப்பு திருப்பலி நடத்தினர்.

சரியாக 12 மணிக்கு கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர், தத்ரூபமாக இயேசு பிறப்பு அரங்கேற்றப்பட்டதை பக்தர்கள் வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மன்றாட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருப்பலியின் முடிவில் பக்தர் ஆரோக்கியம் உள்பட அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து, அனைவருக்கும் கேக், இனிப்புகள் வழங்கப்பட்டது.
தமிழில் திருப்பலி முடிந்த பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.
இந்த சிறப்பு திருப்பலியில் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் தத்ரூபமான முறையில் அமைக்கப்பட்டிருந்த குடில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
மேலும், பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தங்கும் வசதி போன்றவற்றை பேராலய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.
விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தலைமையில் நூற்றுக் கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிறிஸ்துமஸை யொட்டி ஏராளமானோர் வேளாங்கண்ணிக்கு திரண்டதால் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
- குளிர்ந்த குளத்தில் மூழ்கும் வீடியோவையும் ரொனால்டோ வெளியிட்டார்.
- ‘சாண்டாகிளாஸ்’ உடனான சந்திப்பு உள்ளிட்ட தனது பயணத்தை அவர் யூடியூப் சேனலில் பகிர்ந்தார்.
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இவர் பின்லாந்து நாட்டில் உள்ள லாப்லாந்தில் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். கிறிஸ்துமஸ் தாத்தாக்களையும் அவர் சந்தித்தார்.
'சாண்டாகிளாஸ்' உடனான சந்திப்பு உள்ளிட்ட தனது பயணத்தை அவர் யூடியூப் சேனலில் பகிர்ந்தார். குளிர்ந்த குளத்தில் மூழ்கும் வீடியோவையும் வெளியிட்டார்.
இது மிகவும் சிறப்பான நாள், மிகவும் வித்தியாசமானது என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
- 28-ந்தேதி ஜனவரி 2-ந் தேதி வரை 6 நாட்கள் சிறப்பு மலைரெயில் இயக்கப்படும்.
- ரெயிலில் பயணிக்க 180 பயணிகள் வந்திருந்தனர்.
மேட்டுப்பாளையம்:
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு இன்று முதல் வருகிற 1-ந் தேதி வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து கேத்திக்கு தினமும் 3 முறை மலை ரெயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் கோட்ட ரெயில் நிர்வாகம் அறிவித்தது.
மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து இன்று, வருகிற 27, 29 மற்றும் 31 ஆகிய தேதிகளிலும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு நாளை, 28, 30 மற்றும் வரும் ஜனவரி 1-ந் தேதிகளிலும் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
மேட்டுப்பாளையம்-குன்னூர் வரை முதல் வகுப்பில் 40 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகள், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகள் இருக்கும்.
இதேபோல் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு வருகிற 28-ந் தேதி ஜனவரி 2-ந் தேதி வரை 6 நாட்கள் சிறப்பு மலைரெயில் இயக்கப்படும். இதில் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் இருக்கும்.
மேலும் ஊட்டியில் இருந்து கேத்திக்கு வருகிற 28-ந் தேதியிலிருந்து ஜனவரி மாதம் 2-ந் தேதி வரை 6 நாட்களுக்கு தினசரி 3 முறை மலை ரெயில் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதில் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் இருக்கும்.
அதன்படி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 9.10 மணிக்கு சிறப்பு மலைரெயில் ஊட்டி நோக்கி புறப்பட்டது. இந்த ரெயிலில் பயணிக்க 180 பயணிகள் வந்திருந்தனர்.
அவர்கள் ரெயிலில் ஏறி உற்சாகத்துடன் பயணித்தனர். சிறப்பு மலைரெயில் இயக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தற்போது ஏற்காட்டில் பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவிவருகிறது.
- நகரில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்பட்டது.
ஏற்காடு:
அரையாண்டுத் தேர்வு முடிந்து தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை.
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் நேற்று மாலை முதல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்கு வந்தனர்.

இதனால் நேற்று மாலை மற்றும் இன்று காலை முதல் மலைப்பாதையில் வாகனங்கள் அணிவகுத்து வந்து கொண்டு இருக்கிறது. தற்போது ஏற்காட்டில் பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவிவருகிறது. இந்த சீதோஷ்ண நிலையை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
மேலும் அவர்கள் அண்ணாபூங்கா, லேடீஸ் சீட் காட்சி முனை, பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட இடங்களை சுற்றிபார்த்தனர். மேலும் படகு சவாரி செய்தும் உற்சாகம் அடைந்தனர்.
சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதால் படகுகள் தொடர்ந்து இயங்கி கொண்டே இருந்தது. படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஏற்காடு நகரில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்பட்டது.
இன்று முதல் புத்தாண்டு வரை ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் வியாபாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சுற்றுலா தலங்கள் களைகட்டியுள்ளது. கூட்டம் அதிகரித்து வருவதால் மலைப்பாதையில் போலீசார் ரோந்து சென்று வருகிறார்கள்.
- உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
- தோனி கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து கிறிஸ்துமசை கொண்டாடியுள்ளார்.
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அரசியல் தலைவர்கள் முதல் விளையாட்டு வீரர்கள் என பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே வீரருமான எம்.எஸ்.தோனி கிறிஸ்துமஸ் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.
அதில் தோனி கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து தனது மனைவி மற்றும் மகளுடன் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவரது மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் தோனி தாத்தா வேடம் அணிந்து உள்ள புகைப்படத்தை சிஎஸ்கே அணியும் தங்களது அதிகாரபூர்வ சமூக வலைதளங்களில் Santa Class என பதிவிட்டுள்ளது. தோனி தாத்தா வேடமணிந்து உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.