என் மலர்
நீங்கள் தேடியது "மாண்டஸ் புயல்"
- 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 700 விசைப்படகுகளும், 3 ஆயிரம் பைபர் படகுகளும் துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாகவும் உடனடியாக அரசு நிவாரணம் வழங்கவும் இந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி அவ்வப்பொழுது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வரும் சூழ்நிலையில் தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக உருமாறி உள்ளது இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணுார், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 1-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று திருமுல்லைவாசல், பூம்புகார் பகுதிகளுக்கு சென்ற மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு மற்றும் காவல் நிலைய போலீசார் வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாகியுள்ள காரணத்தினால் இன்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரையில் 16 மீனவ கிராமங்களை சேர்ந்த விசைபடகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவோ, கடலில் தங்கி மீன்பிடிக்கவோ வேண்டாம் எனவும், மேலும் தங்கள் படகுகளையும், உடமைகளையும் பத்திரமாக வைத்துகொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் சீர்காழி தாலுகாவை சேர்ந்த பழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி வரையிலான 16 மீனவ கிராமம் மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுக்கு சொந்தமான 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 2500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் நாட்டுப் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
கடந்த ஒரு மாத காலமாக வங்க கடலில் உருவாகும் தொடர் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாகவும் உடனடியாக அரசு நிவாரணம் வழங்கவும் இந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்வளத் துறை மூலம் வழங்கப்படும் டோக்கன் நிறுத்தப்பட்டுள்ளதால், நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் கல்லார் செருதூர் நாகூர் நம்பியார்நகர் சாமந்தான்–குட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
25 மீனவ கிராமங்களை சேர்ந்த 700 விசைப்படகுகளும், 3 ஆயிரம் பைபர் படகுகளும் துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- புதுச்சேரி துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, 'மாண்டஸ்' புயலாக வலுப்பெற்றது. சென்னை, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக (இன்று) புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவு புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. புயல் தற்போது காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளது.
இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- சென்னையில் இன்று காலையில் இருந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. ஒரு சில பகுதிகளில் மழையும் பெய்தது.
- தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை:
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடந்த 5-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து பின்னர் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்றது.
இந்த தாழ்வு மண்டலம் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக நேற்று மாலை மாறும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நேற்றிரவு தான் புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு "மாண்டஸ்" என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
இந்த புயல் காரைக்காலுக்கு 560 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு 640 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டு இருக்கிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுவை-தெற்கு ஆந்திரா கடற்கரையில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை (9-ந்தேதி) நள்ளிரவில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதற்கிடையே இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி மாண்டஸ் புயல் தென் மேற்கு வங்க கடலில் காரைக்காலுக்கு கிழக்கு-தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 620 கி.மீ. தொலைவிலும் நிலவியது.
சென்னையை நெருங்கிவரும் இந்த புயலால் இன்று முதல் 4 நாட்கள் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் மழை பெய்யும். கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் நாளை கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
இது தவிர காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் கன மழையும் பெய்யும்.
11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், தென்காசி உள்பட 22 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யும்.
சென்னையில் இன்று காலையில் இருந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. ஒரு சில பகுதிகளில் மழையும் பெய்தது. மாண்டஸ் புயல் நாளை சென்னையை நெருங்கக் கூடும் என்பதால் இன்று முதல் சனிக்கிழமை வரை தமிழகம், புதுச்சேரி, கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
- வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வேலூர்:
சென்னையை நெருங்கிவரும் மாண்டஸ் புயலால் இன்று முதல் 4 நாட்கள் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் மழை பெய்யும். கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் நாளை கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. இது தவிர காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், புயல் காரணமாக வட மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் கடலோர பகுதிகளில் இன்று காலை சாரல் மழை பெய்ய தொடங்கியது.
- கடலில் அலையின் சீற்றமும் அதிகமாக இருந்தது. இதனால் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர்.
சென்னை:
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறி உள்ளது. இதற்கு மாண்டஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். புயல் எச்சரிக்கையை தொடர்ந்து எண்ணூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கடல் சீற்றமாக காணப்பட்டது. மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் உள்பட அனைத்து இடங்களிலும் கடலில் ராட்சத அலைகள் எழுந்தன. பல அடி உயரத்துக்கு கடுமையான சீற்றத்துடன் கடல் காணப்பட்டது.
இதை தொடர்ந்து மெரினா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. புயலுக்கு பயந்து மெரினா கடற்கரைக்கு மக்கள் அதிகமாக செல்லவில்லை. ஒரு சிலர் மட்டுமே கடலோர பகுதிகளில் காணப்பட்டனர்.
அவர்களையும் போலீசார் வெளியேறுமாறு எச்சரித்ததை காண முடிந்தது.
பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் சில மீன் கடைகளே செயல்பட்டன. பெரும்பாலான மீனவர்கள் கடைகளை திறக்காமல் மூடியே வைத்திருந்தனர். புயலால் கடலோர பகுதிகளில் பலத்த காற்றும் வீசுகிறது.
படகுகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு விடக்கூடும் என்பதால் கயிற்றில் கட்டி வைத்திருந்தனர். சென்னை மாநகர் முழுவதுமே குளிர்ந்த காற்று வீசி இதமான சூழல் நிலவியது. லேசான சாரல் மழையும் பெய்து கொண்டே இருக்கிறது.
பழவேற்காடு பகுதியில் கடல் அலை பலத்த சீற்றத்துடன் வீசுகிறது. புயல் காரணமாக பழவேற்காட்டை சுற்றி உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள், மீன் பிடி உபகரணங்களை அவர்கள் பத்திரமாக கடல் கரையில் கட்டி வைத்து உள்ளனர். இன்று காலை வழக்கத்தை விட கடலில் குளிர்ந்த காற்று வேகமாக வீசி வருகிறது.
மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் கடலோர பகுதிகளில் இன்று காலை சாரல் மழை பெய்ய தொடங்கியது. கடலில் அலையின் சீற்றமும் அதிகமாக இருந்தது. இதனால் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் (ரேடியேட்டர்) கொதிகலனின் வெப்பத்தை தணிக்க, 1கி.மீ., தொலைவில் கடலில் இருந்து எடுக்கப்படும், கடல் நீர் குழாய்கள் புயல், கடல் சீற்றத்தால் சேதமடைந்து விடாத வண்ணம் அப்பகுதியை அணுமின் நிலைய நிர்வாகத்தினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் பேரிடர் மீட்புப்பணிகள் குறித்து அணுமின் நிலைய பாதுகாப்பு ராணுவத்தினர், தீயணைப்பு படையினர், மருத்துவ பிரிவினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஆலோசனை நடத்தி தயார் நிலையில் உள்ளனர்.
கடலூர் துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்த நிலையில் இன்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்திலும் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. சுமார் 6 அடிக்கு மேல் கடல் அலைகள் கடலூர் தாழங்குடா உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.
புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 15 மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீட்பு படையினர் உஷார் நிலையில் உள்ளனர்.
- பழவேற்காடு பகுதியில் கடல் அலை பலத்த சீற்றத்துடன் வீசுகிறது.
- மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் கடலோர பகுதிகளில் இன்று காலை சாரல் மழை பெய்ய தொடங்கியது.
பொன்னேரி:
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறி உள்ளது. இதற்கு மாண்டஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து எண்ணூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பழவேற்காடு பகுதியில் கடல் அலை பலத்த சீற்றத்துடன் வீசுகிறது. புயல் காரணமாக பழவேற்காட்டை சுற்றி உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள், மீன்பிடி உபகரணங்களை அவர்கள் பத்திரமாக கடல் கரையில் கட்டி வைத்து உள்ளனர். மேலும் இன்று காலை வழக்கத்தை விட பழவேற்காடு கடலில் குளிர்ந்த காற்று வேகமாக வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர். இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.
மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் கடலோர பகுதிகளில் இன்று காலை சாரல் மழை பெய்ய தொடங்கியது. கடலில் அலையின் சீற்றமும் அதிகமாக இருந்தது. இதனால் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் (ரேடியேட்டர்) கொதிகலனின் வெப்பத்தை தணிக்க, 1 கி.மீ., தொலைவில் கடலில் இருந்து எடுக்கப்படும், கடல் நீர் குழாய்கள் புயல், கடல் சீற்றத்தால் சேதமடைந்து விடாத வண்ணம் அப்பகுதியை அணுமின் நிலைய நிர்வாகத்தினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் பேரிடர் மீட்புப்பணிகள் குறித்து அணுமின் நிலைய பாதுகாப்பு ராணுவத்தினர், தீயணைப்பு படையினர், மருத்துவ பிரிவினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஆலோசனை நடத்தி தயார் நிலையில் உள்ளனர்.
- தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக நாகை மீனவர்கள் இன்று 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
- புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3000 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கடற்கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி அவ்வப்பொழுது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வரும் சூழ்நிலையில் தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக உருமாறி உள்ளது இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
புயல் சின்னம் உருவானதை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் 2ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீன்வளத் துறை மூலம் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது வழங்கப்படும் டோக்கன் நிறுத்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டோஸ் புயல் காரணமாக நாகை மீனவர்கள் இன்று 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் நாகை அக்கரைப்பேட்டை, செருதூர் வேளாங்கண்ணி, நாகூர், உள்ளிட்ட மாவட்டம் முழுவதுமுள்ள 25 மீனவ கிராமத்தை சேர்ந்த சுமார் 70 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சுமை தூக்குவோர், ஐஸ் உடைப்போர், சிறு குறு மீன் விற்பனையாளர்கள் என மீன்பிடி தொழிசார்ந்த ஆயிரக்கணக்கானோர் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3000 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கடற்கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. புயல் அறிவிப்பு காரணமாக கடந்த மூன்று நாட்களாக மீன்பிடி தொழில் முடங்கி கிடப்பது மட்டுமில்லாமல் உள்நாட்டு மறறும் வெளிநாட்டு மீன் ஏற்றுமதியும் நடைபெறாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சீர்காழி தாலுகாவை சேர்ந்த பழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி வரையிலான 16 மீனவ கிராமம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுக்கு சொந்தமான 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 2500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், நாட்டுப் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
- சுமார் 5 ஆயிரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லமால் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.
- 30-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் கரைக்கு திரும்பாத நிலையில் வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை.
வேதாரண்யம்:
வங்க கடலில்குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள காரணத்தினால் மீனவர்கள் மீன்பிடிக்கச் கடலுக்குசெல்ல வேண்டாம் என 4-ம் தேதி மீன்வளத்துறை மூலம் அறிவிக்கப்பட்டது.
இதனால் நாகை மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லமால் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.
கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விசைபடகு மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பி விட்டனர்.
கடலில் தங்கி மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற நாகை மாவட்டத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் கரைக்கு திரும்பாத நிலையில் கோடி யக்கரை மீன்வளத்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாக்கி டாக்கி மூலம் மீனவர்களுக்கு புயல் உருவாகி இருப்பதால் கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
ஆகையால் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என தொடர்ந்துஎச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
- சென்னையை நெருங்கிவரும் மாண்டஸ் புயலால் இன்று முதல் 4 நாட்கள் தமிழகத்தில் மழை பெய்யும்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
சென்னையை நெருங்கிவரும் மாண்டஸ் புயலால் இன்று முதல் 4 நாட்கள் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
- மீட்பு குழுவினர் மழை வெள்ளம் பாதிக்கும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
- கனமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
திருவள்ளூர்:
வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் காரணமாக இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு மிக கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளது. இதையொட்டி புயல், மழையை எதிர்கொள்ள தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவடத்தில் புயல் மழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் உத்தரவுப்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 40 பேர் கொண்ட குழுவினர் திருவள்ளூர் வந்தனர்.
அவர்கள் இன்ஸ்பெக்டர் ரவி மேற்பார்வையில் காவலர்கள் விஷ்ணு, கோகுல், ரவிச்சந்திரன் ஆகியோரின் தலைமையில் 3 குழுவாக பிரிக்கப்பட்டு மாவட்டத்தில் மழை பாதிப்பு அதிகம் உள்ள முக்கிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கயிறு, ரப்பர் படகு, லைப் ஜாக்கெட், முதலுதவி மருந்து பெட்டகம், ஜெனரேட்டர், விளக்குகள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, மீட்பு குழுவினர் மழை வெள்ளம் பாதிக்கும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அங்கு தங்கி மீட்பு பணியில் ஈடுபடுவார்கள். கனமழையை எதிர்கொள்ள அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றனர்.
- ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறுஉத்தரவு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவித்தார்.
- ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தடை காரணமாக இன்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றும், கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறுஉத்தரவு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவித்தார். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நேற்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோழியக்குடி, உப்பூர், ஏர்வாடி, வாலிநோக்கம், மூக்கையூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தடை காரணமாக இன்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்களின் 1,200 விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
புயல் எச்சரிக்கை காரணமாக பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று முன்தினம் (6-ந்தேதி) 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று அங்கு 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை மறுநாள் பலத்த காற்று, கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்களைக் கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து புயல் மற்றும் மழை வெள்ள மீட்பு பணிக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் அளிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை மறுநாள் பலத்த காற்று, கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்களைக் கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இக்குழுக்களில் வருவாய் காவல், உள்ளாட்சி மண்டல்க குழுக்கள் மின்சாரம் உள்ளிட்ட 11 துறை அலுவலர்கள் இடம் பெற்றிருப்பர். இந்த குழுவினர் மழை காலங்களில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்கியிருந்து மீட்பு பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டு உள்ளது.
21 மண்டலக் குழுக்களின் குழு தலைவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் விவரம்:- காஞ்சிபுரம் மாநகராட்சி ஜி.கண்ணன் (ஆணையர் காஞ்சிபுரம்)- 7397372823. காஞ்சிபுரம் சிறுகாவேரிபாக்கம் மற்றும் திருப்புக்குழி குறுவட்டம் ஏழுமலை (துணை ஆட்சியர்) -9677053981, பரந்தூர், சிட்டியம்பாக்கம் மற்றும் கோவிந்த வாடி பிரகாஷ்வேல் (மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்)-7338801259.
வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் பிரமிளா (நேர்முக உதவியாளர் சத்துணவு திட்டம்)-7402606004, தென்னேரி சுமதி (தனித்துணை ஆட்சியர்) -9840479712, மாகரல்- கணேசன் (நேர்முக உதவியாளர் (வேளாண்மை)-9894215521. உத்திரமேரூர் பேரூராட்சி - ராமசந்திரன் (உதவி.செயற்பொ றியாளர்)-7402606000, திருப்புலிவனம், களியாம்பூண்டி கனிமொழி (வருவாய் கோட்டாட்சியர்) -9445000413. சாலவாக்கம் அரும்புலியூர் மற்றும் குண்ணவாக்கம் இளங்கோவன் (இணைஇயக்குநர் வேளாண்மை)- 9842007125, திருபெரும்புதூர் பேரூராட்சி மற்றும் செல்வமதி (தனித்துணைஆட்சியர் (நி.எ) மண்ணூர்) -9842023432.
மதுரமங்கலம், சுங்குவார்சத்திரம் புஷ்பா- (நேர்முக, உதவியாளர்)- 9443395125. வல்லம் மற்றும் தண்டலம் மதுராந்தகி-(சிறப்பு மாவட்ட வருவாய அலுவலர்)-7305955670.
படப்பை, மணிமாறன் (உதவி இயக்குநர்)- 7402606005, படப்பை சிவதாஸ் (உதவி ஆணையர்) -9360879271, செரப்பணஞ்சேரி மணிமங்கலம்-எம்.சத்தியா (ஆய்வுக்குழு அலுவலர்) -9566420921. கொளப்பாக்கம் (மவுலிவாக்கம், கொளுத்து வாஞ்சேரி, கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், ஐயப்பந்தாங்கல், தெள்ளியகரம், பரணிப்புத்தூர், சின்னப்பணிச்சேரி, பெரியப்பணிச்சேரி, சீனிவாசபுரம்) பாபு மாவட்ட, வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்- 9445000168.
திருமுடிவாக்கம் மற்றும் பூந்தண்டலம் பஞ்சாயத்து யசோதரன் (மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்)- 9952227179, மாங்காடு குறுவட்டம் (கொல்லச்சேரி, மலையம்பாக்கம், பொழு முனிவாக்கம், தரப்பாக்கம், இரண்டாம் கட்டளை, தண்டலம், கோவூர்சிக் கராயபுரம், மூன்றாம் கட்டளை பகுதிகள்) கோபி (உதவி இயக்குநர் )-7402606006.
மாங்காடு நகராட்சி பகுதிகள் கே.கணேஷ் (கூடுதல் நேர்முக உதவியாளர்)-9840281502, குன்றத்தூர் நகராட்சி ஜெசரவணகண்ணன், (வருவாய் கோட்ட அலுவலர் திருபெரும்புதூர்)- 9444964899.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.