search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன் படுகாயம்"

    • காயமடைந்த சிறுவன் ஹரீஷ் குமாருக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • நாயின் உரிமையாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை புளியந்தோப்பு பகுதியில் வீட்டின் கீழே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுவனை பக்கத்து வீட்டு வளர்ப்பு நாய் கடித்துக் குதறியது.

    கே.பி. பார்க் பகுதியில் நடைபயிற்சிக்கு நாயை அழைத்து சென்றபோது சிறுவனை கடித்துக் குதறியது.

    காயமடைந்த சிறுவன் ஹரீஷ் குமாருக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது நாய் கடித்த சம்பவம் சென்னையில் மீண்டும் அரங்கேறியதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக நாயின் உரிமையாளர் ஸ்டெல்லா உட்பட 3 பேர் மீது பேசின் பிரிட்ஜ் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை 2 நாய்கள் கடித்ததில் பலத்த காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வேட்டை துப்பாக்கியில் இருந்து வெளியேறிய பால் ரஸ் குண்டு சிறுவனின் வயிற்றுக்குள் புகுந்திருந்தது டாக்டர்கள் பரிசோதனையில் தெரியவந்தது.
    • யோகேஷ் பாண்டி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள குச்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கடம்பன்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் முத்து முருகன் மகன் குரு பிரவீன் (வயது 16) மற்றும் தங்கப்பாண்டி மகன் யோகேஷ் பாண்டி (9). இவர்கள் தீபாவளிக்கு முதல் நாள் அதே பகுதியில் பட்டாசுகள் வெடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது குருபிரவீன் கையில் குருவி சுடும் வேட்டைக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கியை வைத்திருந்தான். அவன் விளையாட்டாக அருகில் இருந்த யோகேஷ் பாண்டியை நோக்கி துப்பாக்கியை இயக்கி உள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த குண்டு யோகேஷ் பாண்டியின் வயிற்றுக்குள் புகுந்தது. ஆனால் அதை உணராமல் வயிற்றில் அடிபட்டதாக நினைத்து வலியில் யோகேஷ் பாண்டி துடித்துள்ளார்.

    உடனடியாக அவரை திருச்சுழி மருத்துவமனையில் பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று சிறுவன் வீடு திரும்பினான். ஆனால் சிறுவனுக்கு மீண்டும் வயிற்று பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது. இதையடுத்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    வேட்டை துப்பாக்கியில் இருந்து வெளியேறிய பால் ரஸ் குண்டு சிறுவனின் வயிற்றுக்குள் புகுந்திருந்தது டாக்டர்கள் பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து யோகேஷ் பாண்டி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதுகுறித்து சிறுவனின் தாய் சத்யா கொடுத்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கி சிறுவனின் கைக்கு எப்படி வந்தது? அல்லது வேறு யாரிடமாவது வாங்கி வந்து வேட்டையில் ஈடுபட்டனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • வெங்கடேசன் வீட்டில் இருந்த பொருட்களும் சேதம் அடைந்தன.

    திருவொற்றியூர் வடக்கு மாட வீதி, செட்டி தெருவில் வசித்து வருபவர். நிர்மலா. இந்த வீட்டின் பாழடைந்த பால்கனி திடீரென இடிந்து அருகில் உள்ள வெங்கடேசன் என்பவரது ஓட்டு வீட்டின் மீது விழுந்தது.

    அப்போது அருகில் விளையாடிக் காொண்டு இருந்த நிர்மலாவின் 3 வயது பேரன் நவீன் கிஷோரின் தலையில் கட்டிடத்தின் கல் பட்டது. இதில் அவனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வெங்கடேசன் வீட்டில் இருந்த பொருட்களும் சேதம் அடைந்தன.

    • தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தான்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பைசல்.

    இவரது மகன் அம்தான் (வயது 6). இவன் நேற்று மாலை வீட்டின் மாடி படிக்கட்டில் ஏறிஇறங்கி விளையாடிக்கொண் டிருந்தான். அப்போது படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே வீட்டில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத் துவமனையில் சேர்த்தனர்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட் டான். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தான்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டி.எஸ்.பி. அமலா அட்வின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவனுக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரிநாள் பண்டிகையையொட்டி எருது விடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    அந்த வகையில் போச்சம்பள்ளி அருகேயுள்ள அத்திகானூர் கிராமத்தில் இன்று எருது விடும் விழா நடத்தப்பட்டது.

    இதில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர் உள்பட பல்வேறு மாவட்ட இளைஞர்கள் குவிந்தனர்.

    டி.எஸ்.பி. அமலா அட்வின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டது.

    இதனால் நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் கொத்து கொத்தாக விழுந்தனர். இதையடுத்து அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.

    இதில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கவுதம் (வயது 12) என்ற சிறுவனுக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து அந்த சிறுவனுக்கு அங்கிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிசிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • ராமு தலைக்குந்தா பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்
    • அந்த வழியாக வந்த அரசு பஸ் திடீரென அஜர்வால் மீது மோதியது.

    ஊட்டி

    ஊட்டியில் உள்ள அழகர்மலையை சேர்ந்தவர் ராமு. தலைக்குந்தா பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் அஜர்வால்(வயது 9). எச்.பி.எப். பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் அஜர்வால் சம்பவத்தன்று பள்ளி முடிந்து ஏ.சி.எஸ். பகுதியில் உள்ள டியூசன் சென்டருக்கு மினி பஸ் மூலம் சென்றான். பின்னர் அங்குள்ள சாலையை கடக்க முயற்சி செய்தான். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் திடீரென அஜர்வால் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்த அவனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த புதுமந்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் எம்பாலாடாவை சேர்ந்த பஸ் டிரைவர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×