என் மலர்
நீங்கள் தேடியது "சமத்துவ பொங்கல் விழா"
- புறநகர் மாவட்ட பொருளாளர் சண்முகசுப்பிரமணியம், பல்லடம் ஒன்றிய செயலாளர் சந்திரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
- நெசவாளர் அணி செயலாளர் திருநாவுக்கரசு, தொண்டரணி அமைப்பாளர் ராஜகோபால் பகுதி செயலாளர்கள் சம்பத், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
ம.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் காந்திநகர் பகுதியில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட பொருளாளர் நல்லூர் மணி தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர்.நாகராஜ் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மணி, புறநகர் மாவட்ட பொருளாளர் சண்முகசுப்பிரமணியம், பல்லடம் ஒன்றிய செயலாளர் சந்திரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் திருப்பூர் சாமுண்டிபுரத்தில் அடுத்த மாதம் 16-ந்தேதி ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ கலந்து கொள்ளும் 5 ஆயிரம் சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில இளைஞரணி துணை செயலாளர் ரத்தினசாமி, மகளிரணி துணை செயலாளர் சாந்தாமணி, பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல், மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் மணி, பூபதி, இளைஞரணி செயலாளர் சதீஸ்குமார், வழக்கறிஞரணி துணை செயலாளர்கள் கந்தசாமி, அன்பழகன், புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரவி, மாணவரணி அமைப்பாளர் தாமோதரன், நெசவாளர் அணி செயலாளர் திருநாவுக்கரசு, தொண்டரணி அமைப்பாளர் ராஜகோபால் பகுதி செயலாளர்கள் சம்பத், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இருமத்தூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
- ஊராட்சி பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டன.
கிருஷ்ணாபுரம்,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், இருமத்தூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாதன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் ராஜலிங்கம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனியம்மாள் சரவணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பத்மினி துரைசாமி, கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி செயலாளர் சிவக்குமார் வரவேற்று பேசினார். இவ்விழாவில் மொரப்பூர் ஒன்றிய குழு தலைவர் சுமதி செங்கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள், குடிநீர் மேல் தேக்க தொட்டி இயக்குனர்கள் உள்ளிட்ட ஊராட்சி பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டன.
இவ்விழாவில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கஸ்தூரி நாகராஜ், மணி, ராஜப்பன், தனலட்சுமி முருகன், சரோஜா அழகப்பன், ஆனந்தன், தேவி கார்த்திகேயன், சரவணன் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
- மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பல்வேறு இடங்களில் வண்ண, வண்ண கோலங்கள் போடப்பட்டு இருந்தன.
- பாட்டை கேட்டதும் மாநகராட்சியின் 4-வது வார்டு பெண் கவுன்சிலர் சரிதா, அந்த பாடலுக்கு ஏற்ப குத்தாட்டம் போட்டார்.
கடலூர்:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி நேற்று கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநகராட்சி வளாகத்தில் அலங்காரம் செய்து, ஆங்காங்கே கரும்புகள் வைக்கப்பட்டு இருந்தது. தாரை, தப்பட்டையும் இசைக்கப்பட்டு மாநகராட்சி அலுவலகம் விழா கோலம் பூண்டது.
மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பல்வேறு இடங்களில் வண்ண, வண்ண கோலங்கள் போடப்பட்டு இருந்தன. அனைவரையும் வரவேற்று கோலப்பொடியால் எழுதப்பட்டு இருந்தது. அப்போது திரைப்பட பாடல்களும் இசைக்கப்பட்டன.
சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே, ரஞ்சிதமே என்ற பாடல் திடீரென இசைக்கப்பட்டது.
இந்த பாட்டை கேட்டதும் மாநகராட்சியின் 4-வது வார்டு பெண் கவுன்சிலர் சரிதா, அந்த பாடலுக்கு ஏற்ப குத்தாட்டம் போட்டார். இதை சக பெண் கவுன்சிலர்கள் கைதட்டி வரவேற்றனர். அவரோடு மற்றொரு சிறுமியும் சேர்ந்து நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர்.
அவர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக சுகாதார ஆய்வாளர் ஒருவரும் தப்பாட்டத்துக்கு நடனமாடினார்.
- சமத்துவ பொங்கல் விழாவை எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம் மற்றும் தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
- விழாவில் மாணவ- மாணவிகள் பொங்கலினை இறைவனுக்குப் படைத்து வழிபட்டனர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் கல்விக்குழுமத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம் மற்றும் தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
மருத்துவக் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) மருத்துவர் பாரதி, எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் இராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடுவதற்கான நோக்கம் பற்றி மாணவிகள் எடுத்துரைத்தனர். இவ்விழாவை முன்னிட்டு மருத்துவக் கல்லூரியைச் சார்ந்த மாணவ- மாணவிகள் சிறப்பு ரங்கோலி கோலமிட்டு, இனிய பொங்கலினை இறைவனுக்குப் படைத்து வழிபட்டனர். தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரி, மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகளின் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பாலிடெக்னிக் கல்லூரியின் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவக்கல்லூரியின் மருத்துவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். மாணவ- மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கரும்பு மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது.
- கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் சகோதரத்துவத்தை வெளிப்படுத்திய சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
- பால் பொங்குகின்ற நேரத்தில் மாணவிகள் மகிழ்ச்சியுடன் குலவையிட்டு பொங்கலை வரவேற்றனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அனைத்து சமுதாய மக்களின் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், கீழக்கரை ரோட்டரி சங்கம், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் கிளை மற்றும் கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவ னங்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
கல்வி நிறுவனங்களின் தலைவர் வழக்கறிஞர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் தலைமை தாங்கினார்.
மாணவ-மாணவி களுக்கு பொங்கல் குறித்த ஓவியம் வரைதல், பானை அலங்காரம், "விவசாயம் காப்போம்" என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
இந்த போட்டியில் பல்வேறு பள்ளிகளில் சேர்ந்த 590 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி வளாகத்தில் கரும்புகள், தோரணங்கள் கட்டப்பட்டு பொங்கல் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. பால் பொங்குகின்ற நேரத்தில் மாணவிகள் மகிழ்ச்சியுடன் குலவையிட்டு பொங்கலை வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து பெற்றோர்களுக்கான வினாடி வினா போட்டி, ஆசிரியர் ஆசிரியைக ளுக்கான பல்வேறு போட்டி கள் நடந்தது.
மாலை யில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் பெருவிழா மற்றும் பரிசளிப்பு விழா பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இபுராகிம் தலைமையில் நடந்தது.
ராமநாதபுரம் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சமூக ஆர்வலர் சலிமுல்லா ஹ்கான், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் சேர்மன் சுந்தரம், ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் கபீர் வரவேற்றார்.
கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் உசேன், சொக்க நாதர் கோவில் குருக்கள் வன்மீகநாதன், கீழக்கரை தென்னிந்திய திருச்சபை ஆயர் விஜயகுமார், புனித அந்தோணியர் ஆலயம் பங்குத்தந்தை ரெமிஜியஸ், கீழக்கரை துணை வட்டாட்சியர் பழனிக்குமார், இயற்கை ஆர்வலர் மன்மோகன் சிங் ஆகியோர் பேசினர்.
பள்ளியின் தாளாளர் எம், எம்.கே.முகைதீன் இப்ராஹிம் தீப்பந்தம் சுழற்றி பார்வையாளர்களின் பாராட்டுதலை பெற்றார்.
விழாவில் கீழக்கரை நகர்மன்றத் தலைவர் செகானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்தான், 18-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முகம்மது காசிம், முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் எபன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் செய்தனர்.
- அரசு மருத்துவமனையிலும் கொண்டாட்டம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள வட்டாட்சி யர் அலுவலகத்தில் சமத்துவ மற்றும் சுகாதார பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவிற்கு திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி தலைமை தாங்கினார் வருவாய் வட்டாட்சியர் க.குமார் முன்னிலையில் சமத்துவ மற்றும் சுகாதார பொங்கல் விழா நடைபெற்றது.
நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு நாட்டறம்பள்ளி அரசு தலைமை மருத்துவர் எஸ்.தீலிபன் தலைமை தாங்கி பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் அரசு மருத்துவர் பாலகிருஷ்ணன் மற்றும் அரசு டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருமங்கலம் நகராட்சியில் சமத்துவபொங்கல் விழா நடந்தது.
- நகர் மன்றத்தலைவர் ரம்யா முத்துக்குமார் மற்றும் நகராட்சி பெண் கவுன்சிலர்கள் பொங்கலிட்டனர்.
திருமங்கலம்
திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் சமத்துவபொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகர்மன்ற அலுவலகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முகப்பு வாசலில் அடுப்பு வைக்கப்பட்டு புதிய பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. நகர் மன்றத்தலைவர் ரம்யா முத்துக்குமார் மற்றும் நகராட்சி பெண் கவுன்சிலர்கள் பொங்கலிட்டனர். துணைத்தலைவர் ஆதவன்அதியமான், ஆணையாளர் டெரன்ஸ்லியோன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
கவுன்சிலர்களுக்கு பொங்கல்பானை, கரும்பு உள்ளிட்டவைகளை நகர்மன்றத்தலைவர் ரம்யாமுத்துக்குமார், திருமங்கலம் தி.மு.க. நகரசெயலாளர் ஸ்ரீதர் வழங்கினர். சமத்துவ பொங்கல் திருவிழாவில் நகராட்சி கவுன்சிலர்கள் வீரக்குமார், பெல்ட்முருகன், சின்னசாமி, திருக்குமார், ரம்ஜான்பேகம், சங்கீதா, மங்களகவுரி, முத்துக்காமாட்சி, ராஜவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஒன்றிய செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
- ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் சுரேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம் :
பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஒன்றிய அவைத் தலைவர் சாமிநாதன், ஒன்றிய துணை செயலாளர் ஆட்டோ குமார், மாவட்ட பிரதிநிதி துரைமுருகன், ஒன்றிய பொருளாளர் அம்மாபாளையம் குமார், ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பானுமதி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜேஸ்வரன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாலகுமார், ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் சுரேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- விழாவுக்கு உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
- விழாவையொட்டி பாரம்பரிய முறைப்படி கருப்பு கரும்பு, மஞ்சள் கொம்பு மற்றும் பூஜை பொருட்களுடன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி உழவர் சந்தையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி உழவர் சந்தை வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. விழாவுக்கு உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
உதவி நிர்வாக அலுவலர்கள் மஞ்சுநாதேஸ்வரன், முனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவையொட்டி பாரம்பரிய முறைப்படி கருப்பு கரும்பு, மஞ்சள் கொம்பு மற்றும் பூஜை பொருட்களுடன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
பி ன்னர் விழாவில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
- பொங்கல் சீர்வரிசைகளோடு புத்தக ங்களும் மரக்கன்று களும் வழங்கப்பட்டது.
- 25-வது ஆண்டு சமத்துவ பொங்கல் விழா சாமுண்டிபுரம் பகுதியில் நடைபெற்றது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டு சாமுண்டிபுரம் பகுதியில் மதிமுக சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழாவின் போது சமத்துவ பொங்கல் கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
25-வது ஆண்டு சமத்துவ பொங்கல் விழா
அந்த வகையில் இன்று திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டு கவுன்சிலரும் திருப்பூர் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளருமான நாகராஜ் ஏற்பாட்டில் 25-வது ஆண்டு சமத்துவ பொங்கல் விழா சாமுண்டிபுரம் பகுதியில் நடைபெற்றது.
இதில் அனைத்து மதத்தை சார்ந்த 5000 பெண்கள் கலந்துகொண்டு சூரிய பொங்கல் வைத்தனர்.
இந்நிகழ்வை மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
பெண்கள் முளைப்பாரி
நிகழ்ச்சியின் முன்னதாக சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வ லமாக வந்தனர் .
இதனைத் தொடர்ந்து மதிமுக கொடியினை தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ ஏற்றி வைத்து பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்.
பொங்கல் சீர்வரிசை
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக சாமுண்டி புரத்தை சேர்ந்த புதுமண தம்பதிகளுக்கு மதிமுக சார்பில் பொங்கல் சீர்வரிசைகளோடு புத்தக ங்களும் மரக்கன்று களும் வழங்கப்பட்டது.
பரிசு பொருட்கள்
இதனைத் தொடர்ந்து பொங்கல் வைத்த பெண்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்த 400க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.
- துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் துணை தலைவர் குமார், வார்டு உறுப்பினர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடைகள் வழஙகப்பட்டது.முடிவில் இளநிலை உதவியாளர் வீரமணி நன்றி கூறினார்.
- முதல் இரண்டு நாட்கள் மாலை நேரத்தில் பல்வேறு தமிழ் பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .
- திருப்பூர் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் சார்பாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வளர்மதி பாலம் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையோரம் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல் இரண்டு நாட்கள் மாலை நேரத்தில் பல்வேறு தமிழ் பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது . அதனை தொடர்ந்து மூன்றாவது நாளான இன்று திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையோரம் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளை சேர்ந்த 3000 பெண்கள் கலந்துகொண்டு வைக்கக்கூடிய சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது .
இதில் அனைத்து மதத்தை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்தனர் . இதனை முன்னிட்டு நடைபெற்ற துவக்க விழாவில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் வினீத் , மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி , மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு , சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உள்ளிட்டோர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் கலந்து கொண்ட பொங்கல் விழாவினை துவக்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து பொங்கல் விழா நடைபெற்றது . சமத்துவ பொங்கலின் ஒரு பகுதியாக வள்ளி கும்மியாட்டம் , பெருஞ்சலங்கை ஆட்டம் , பறை இசை நடனம் உள்ளிட்டவை நடைபெற்றது . இதை காண திருப்பூர் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.