என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிறந்தநாள் கொண்டாட்டம்"

    • 9 1/2 வயதில் திருச்சி திருவானைக்கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது.
    • அகிலாவை கவனித்து வரும் கோவில் நிர்வாகத்தினர் ஒவ்வொரு வருடமும் அதன் பிறந்தநாள் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    திருச்சி:

    பஞ்ச பூதங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருச்சி திருவானைக் கோவில் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இந்த கோவிலுக்கு கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி அசாம் மாநிலத்திலிருந்து பெண் யானை கொண்டு வரப்பட்டது.

    அதற்கு இந்த கோவிலின் சார்பில் அகிலா என்று பெயர் சூட்டப்பட்டது. அதனை கவனித்துக் கொள்வதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஜம்புநாதன் என்ற யானை பாகனை நியமித்து பராமரித்து வருகின்றனர்.

    பெண் யானை அகிலா கடந்த 2002 மே 24-ந்தேதி பிறந்து அசாம் மாநிலத்திலேயே வளர்ந்தது. 9 1/2 வயதில் திருச்சி திருவானைக்கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. அன்று முதல் அகிலாவை கவனித்து வரும் கோவில் நிர்வாகத்தினர் ஒவ்வொரு வருடமும் அதன் பிறந்தநாள் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக அகிலாவிற்கு 21 வயது முடிந்து 22-வது வயதில் அடி எடுத்து வைத்துள்ளது. அதற்காக நேற்று பெய்த சாரல் மழையிலும் ஷவரிலும் அகிலா ஆனந்த குளியல் போட்டு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தயாரானது.

    இன்று காலையில் யானை அகிலாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கோவிலை வலம் வர செய்தனர். பக்தர்கள் பலரும் யானைக்கு பழங்கள் கொடுத்து உபசரித்து வணங்கினர். இன்று மாலை 4 மணி அளவில் கோவில் நிர்வாகம் சார்பில் அகிலாவிற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அதற்காக ஏராளமான பழங்களை பரிசுகளாக கொடுக்கின்றனர். இந்த பிறந்தநாள் விழாவிலும், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அகிலாவிற்கு பரிசு அளிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை புறநகர் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் ECR சரவணன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.
    • தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நீலாங்கரை:

    நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் 50-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கட்சி நிர்வாகிகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் சிறுவன் கையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    சென்னை புறநகர் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் ECR சரவணன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். அந்நிகழ்வில், சிறுவனை அழைத்த வந்து சாகசம் செய்ய வைப்பதாக கூறி ஓடுகளை தீ எரியும் கையால் உடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சிறுவனின் கையில் மண்ணெண்ணெய் ஊற்றி லைட்டரில் தீ பற்ற வைத்ததுடன் கையில் தீப்பற்றி எரிந்தது. வலி தாங்க முடியாமல் சிறுவன் கதறியதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதனால் நிகழ்ச்சி அரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

    முன்னதாக, தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • துப்பாக்கியால் சுட்டவரை பிடிக்க போலீசார் அதிரடி வேட்டை நடத்தினார்கள்.
    • துப்பாக்கியால் சுட்டவரை பிடிக்க போலீசார் அதிரடி வேட்டை நடத்தினார்கள்.

    அமெரிக்கா தெற்கு கரோலினி மாகாணம் கெண்டகி நகரில் உள்ள ஒரு வீட்டில் 21 வயது வாலிபர் பிறந்த நாள் கொண்டாடினார். ஆட்டம்-பாட்டம் கொண்டாட்டத்துடன் நடந்த இந்த விழாவில் நண்பர்கள், உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அப்போது விருந்தில் பங்கேற்ற ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார். இதனால் பயந்து விருந்தில் பங்கேற்றவர்கள் சிதறி ஓடினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே 4 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கியால் சுட்டவரை பிடிக்க போலீசார் அதிரடி வேட்டை நடத்தினார்கள். அப்போது அவர் அங்குள்ள வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர்.

    போலீசாரை பார்த்ததும் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். குண்டு காயம் அடைந்த அவரை போலீசார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். எதற்காக அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்க இருந்த மைதானத்தை சுற்றிவளைத்தனர்.
    • போலீஸ் நிலையத்துக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சமீபத்தில் வெளியான 'மஞ்சுமெல் பாய்ஸ்', 'பிரேமலு', 'ஆடுஜீவிதம்' உள்ளிட்ட படங்கள் வெற்றிபெற்றன. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படங்களை ரசிகர்கள் கொண்டாடினர்.

    இதனால் இந்த படங்கள் கோடிக்க ணக்கில் வசூலை குவித்தன. இந்த படங்களின் வரிசையில் நடிகர் பகத் பாசில் நடித்த 'ஆவேசம்' படம் வெற்றிப் படமாக அமைந்தது.

    ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் பகத் பாசில் ஜாலி கலந்த வில்லத்தனத்துடன் நடித்திருந்தது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது. ரூ.50 கோடிக்குள் எடுக்கப்பட்ட அந்த படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலை குவித்திருப்பதாக கூறப்படுகிறது.

    ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் விதத்தில் அமைந்திருக்கும் 'ஆவேசம்' படத்தில் பிறந்தநாள் கொண்டாட்ட காட்சி பிரபலமாக பேசப்பட்டது.

    மிகவும் பிரமாண்டமாக நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் ஆட்டம் பாட்டத்துடன் பிறந்தநாள் கொண்டாடுவது போன்று எடுக்கப்பட்டிருந்த அந்த காட்சியை பார்க்கும் போதே நமக்குள் ஒருவித உற்சாகம் பிறப்பதை உணர முடியும் என்று படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

    இந்நிலையில் 'ஆவேசம்' படத்தில் இடம்பெற்றுள்ள பிறந்தநாள் பார்ட்டியை போன்று பிறந்தநாள் கொண்டாடிய ஒரு கும்பலை போலீஸ் படை சுற்றிவளைத்து பிடித்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி கும்பலின் தலைவன் தீக்கட்டு சஜன். இவரது பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் வித்தியாசமாக கொண்டாட திட்டமிட்டனர். அதன்படி 'ஆவேசம்' படத்தில் வருவது போன்று பிறந்தநாளை மதுவிருந்து, ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாட ஏற்பாடு செய்தனர்.

    அதன்படி திருச்சூர் அருகே உள்ள தேக்கிங்காடு மைதானத்தில் தீக்கட்டு சஜனின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடக்க இருந்தது. இதற்காக அவரது ஆதரவாளர்கள், கூட்டாளிகள் என ஏராளமானோர் தேக்கிங்காடு மைதானத்தில் திரண்டனர். 'ஆவேசம்' பட பாணியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற இருந்தது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்க இருந்த மைதானத்தை சுற்றிவளைத்தனர். இதையடுத்து பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு திரண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். இருந்தபோதிலும் அவர்களை போலீசார் தப்பிச்செல்ல முடியாதபடி சுற்றி வளைத்தனர்.

    பின்பு அவர்களில் 32 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 17 பேர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவர். பிறந்தநாள் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்தியதால் தீக்கட்டு சஜனின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    மேலும் தங்களது திட்டத்தை முறியடித்ததால் ஆத்திரமடைந்த தீக்கட்டு சஜன் திருச்சூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம், கிழக்கு மற்றும் மேற்கு போலீஸ் நிலையங்களுக்கு தொலைபேசியில் அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தீக்கட்டு சஜன் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத சட்டப்பிரிவு களின் கீழ் வழக்குப் பதிந்தனர். தலை மறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • வீடியோ வைரலாகி 34 லட்சத்துக்கும் அதிகமாக பார்வைகளையும், 51 ஆயிரத்துக்கும் மேலான விருப்பங்களையும் பெற்றுள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பணத்தை வீணடிப்பதாக பதிவிட்டனர்.

    துபாயை சேர்ந்தவர் கோடீஸ்வரர் ஜமால். இவரது மனைவி சவுதி அல் நடக். 26 வயதான சவுதி அல் நடக்கின் பிறந்தநாளில் அவரது கணவர் ஜமால் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பரிசாக கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சவுதி அல் நடக் இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    அதில், தனது கணவரிடம் இருந்து பெற்ற ஆடம்பரமான பரிசுகளை பட்டியலிட்டுள்ளார். அதில், தனது பிறந்தநாளில் மியு மியூவில் ஷாப்பிங் செய்ய ரூ.12 லட்சம் செலவழித்ததாகவும், கணவருடன் ரூ.1 லட்சம் செலவழித்து இரவு விருந்து சாப்பிட்டதாகவும் கூறி உள்ளார். பின்னர் ஹெர்ம்ஸ் பிராண்டின் ஷோரூமுக்கு மனைவியை அழைத்து சென்ற ஜமால் ரூ.29 லட்சம் விலை கொண்ட பரிசை வாங்கி கொடுத்துள்ளார்.

    இதுதவிர அழகு சிகிச்சைகளுக்காகவும் நிறைய பணம் செலவழித்ததாகவும் மொத்தத்தில் அந்த ஒரு நாள் மட்டும் ரூ.60 லட்சத்து 74 ஆயிரத்து 120 தனக்காக கணவர் செலவழித்துள்ளதாக சவுதி அல் நடக் வீடியோவில் கூறி உள்ளார்.

    இந்த வீடியோ வைரலாகி 34 லட்சத்துக்கும் அதிகமாக பார்வைகளையும், 51 ஆயிரத்துக்கும் மேலான விருப்பங்களையும் பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பணத்தை வீணடிப்பதாக பதிவிட்டனர்.

    • கத்தியோடு ஆட்டம் ஆடி எல்லோரையும் மிரட்டனர்.
    • கத்தியை சுழற்றி வீசி மிரட்டிய படியே சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் சாலக்கரையில் நேற்று இரவு பில்லாலி தொட்டியை சேர்நத ஒருவரின் பிறந்தநாள் விழா மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது திடீரென்று 3 இளைஞர்கள் கஞ்சா போதையில் வீச்சு அரிவாளுடன் மண்டபத்திற்கு வந்தனர்.

    அங்கு நடைபெற்ற ஒலிபரப்பான பாடலுக்கு கத்தியோடு ஆட்டம் ஆடி எல்லோரையும் மிரட்டனர். தொடர்ந்து அங்கிருந்த நாற்காலிகளை சேதம் செய்து அனைவருக்கு அச்சமூட்டினர்.

    பின்னர் மண்டபத்தில் இருந்து வெளியில் வந்த அவர்கள், திருவந்திபுரம் பகுதியில் இருந்து கடலூர் கம்மியம்பேட்டை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றனர். வழியில் சென்ற பொதுமக்களை கத்தியை சுழற்றி வீசி மிரட்டிய படியே சென்றனர்.

    அப்போது அய்யப்பன் எம்.எல்.ஏ ஆதரவாளர் தி.மு.க. நிர்வாகி சன் பிரைட் பிரகாஷ் தனது வணிக நிறுவனத்தை மூடிவிட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது சன் பிரைட் பிரகாஷ் மீது கத்தியால் தாக்கியதில் வாய், மூக்கு பகுதியில் கடுமையான வெட்டு காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.

    அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து உடனடியாக கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மாநில தனியார் மருத்துவமனையில் சன் பிரைட் பிரகாஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தி தி.மு.க.வி னரிடையே பரவியது.

    இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் போலீசார் விசாரணை செய்ததில் இந்த 3 பேரும் பில்லாலி தொட்டி எய்தனூரை சேர்ந்த ரவுடிகள் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    தகவல் அறிந்த அய்யப்பன் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின் பேரில் டாக்டர் பிரவீன் அய்யப்பன் மற்றும் திமுக நிர்வாகிகள் காயம் அடைந்த சன் பிரைட் பிரகாஷை நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.

    புதுச்சேரி மாநில தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதை டாக்டர் பிரவீன் அய்யப்பன் முன்னிலையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.

    கஞ்சா போதையில் 3 இளைஞர்கள் கத்தியுடன் பொதுமக்க ளை மோட்டார் சைக்கிளில் சென்று அச்சுறுத்திய நிலையில் எம்.எல்.ஏ ஆதரவாளரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பொதும க்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    • இரு தரப்பினரையும் காலை போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
    • இரு தரப்பினர் புகாரின் பேரில் மயிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ் இடையாளம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் இவருக்கு இன்று பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என்கின்ற ஜெயசந்திரன், சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் அதே பகுதியில் உள்ள விடுதலை சிறுத்கதைகள் ட்சி கொடி கம்பத்தின் அருகே பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.

    இந்த நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை ஆட்டி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்த ராவணன், சுபாஷ், கன்னியப்பன் ஆகியோர் ஏன் கட்சி கொடி கம்பத்தை இதுபோல் செய்து உள்ளீர்கள் என கேட்டு உள்ளனர்.

    ஆனால் அதற்கு லட்சுமணன் தரப்பினர் தாங்கள் அந்த கொடியை சேதப்படுத்தவில்லை என கூறியுள்ளனர். இதனையடுத்து இவர்களுக்குள் மோதல் உருவாகும் சூழலை கண்ட அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது திடீரென ராவணன் தரப்பினர் லட்சுமணன் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது . இதனால் இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தால் அந்த இடமே போர்க்களம் போல மாறியது. இதில் எதிர்தரப்பை சேர்ந்த பா.ம.க. கட்சியில் உள்ள லட்சுமணன் தரப்பினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை அறிந்த மயிலம் போலீசார் இரு தரப்பினையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு அசம்பாவிதம் நிகழாமல் இருப்பதற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரு தரப்பையும் விசாரணைக்காக போலீசார் அழைத்துச் செல்ல வந்துள்ளனர். அப்பொழுது லட்சுமணன் உறவினர்கள் மற்றும் பா.ம.கவினர் ஒரு தரப்பினரை மட்டுமே போலீஸ் விசாரிப்பதாக கூறி திடீரென லட்சுமணன் தரப்பினர் சென்ற காரை வழிமறித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    திடீரென பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் திண்டிவனம் ஜக்காம் பேட்டையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் சமாதானம் பேசி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இரு தரப்பினரையும் காலை போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்துசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பா.ம.க.வினர் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர். இரு தரப்பினர் புகாரின் பேரில் மயிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×