search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுமித் நாகல்"

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 26-ம் தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது.
    • இதன் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் நெதர்லாந்து வீரரை சந்திக்க உள்ளார்.

    நியூயார்க்:

    ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் பிரபலமானவை. அதில் ஒன்று யு.எஸ். ஓபன் தொடராகும்.

    ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 26-ம் தேதி நியூயார்க்கில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் முறை மூலம் முடிவு செய்யப்பட்டது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் முதல் சுற்றில் 93-ம்நிலை வீரரான அமெரிக்காவின் மெக்டொனால்டை எதிர்கொள்கிறார்.

    ஒலிம்பிக் சாம்பியனும், நடப்பு அமெரிக்க ஓபன் சாம்பியனுமான முன்னணி வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதல் ரவுண்டில் தகுதி நிலை வீரரை சந்திக்கிறார்.

    இந்நிலையில், தரவரிசையில் 72 வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுமித் நாகல், தரவரிசையில் 40வது இடத்தில் உள்ள நெதர்லாந்து வீரர் டாலன் கிரீஸ்க்பூர் உடன் மோதுகிறார்.

    இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக், முதல் சுற்றில் தகுதிச்சுற்று மூலம் பிரதான சுற்றை எட்டும் வீராங்கனையை எதிர்கொள்கிறார்.

    • அமெரிக்காவில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது.
    • இதில் இந்தியாவின் சுமித் நாகல் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இந்த தொடரில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், குரோசியாவின் போர்னா கோரிக் உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் போர்னா கோரிக் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தினார். இதன்மூலம் சுமித் நாகல் இந்தத் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீரர் சுமித் நாகல் தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் முடிந்துள்ளன.

    இந்நிலையில், நேற்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், அமெரிக்காவின் மெக்கின்ஸ் மெக்டொனால்டை எதிர்கொண்டார்..

    இந்தப் போட்டியில் மெக்டொனால்ட் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் சுமித் நாகல் சின்சினாட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.

    பாஸ்தாத்:

    ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

    இதில் இந்திய வீரர் சுமித் நாகல், அர்ஜெண்டினாவின் மரியானோ நவோன் உடன் மோதினார்.

    இதில் சுமித் நாகல் 4-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். மரியானோ நவோன் காலிறுதிக்கு முன்னேறினார்.

    இந்தியாவின் சுமித் நாகல் தரவரிசையில் 68-வது இடத்தில் உள்ளார். சுமித் நாகல் முதல் 70 இடங்களுக்குள் வருவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் வென்றார்.

    பாஸ்தாத்:

    ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், ஸ்வீடனின் எலியாஸ் ஒய்மெர் ஆகியோர் மோதினர்.

    இதில் சுமித் நாகல் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் அடுத்த சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் அர்ஜென்டினா வீரர் மரியானோ நவோனுடன் மோத உள்ளார்.

    • டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் செக் குடியரசின் கிரெஜ்சிகோவா 10-வது இடத்துக்கு முன்னேறினார்.
    • ஆண்களுக்கான ஒற்றையர் தரவரிசையில் இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    லண்டன்:

    டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை டபிள்யு.டி.ஏ. வெளியிட்டது.

    இதில் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசின் கிரெஜ்சிகோவா 32-வது இடத்தில் இருந்து 10-வது இடத்துக்கு முன்னேறினார். நடந்து முடிந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இவர், தனது 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

    இதற்கு முன் கடந்த ஜனவரி மாதம் வெளியான தரவரிசையில் 'நம்பர்-2' இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இறுதிப் போட்டி வரை சென்ற இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி 7-வது இடத்தில் இருந்து முதன்முறையாக 5-வது இடத்துக்கு முன்னேறினார்.

    போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப், பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா ஆகியோர் முதல் 4 இடங்களில் நீடிக்கின்றனர்.

    இதேபோல், ஆண்களுக்கான ஏ.டி.பி. ஒற்றையர் தரவரிசையில் இத்தாலியின் ஜானிக் சின்னர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நடப்பு விம்பிள்டன் சாம்பியன் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் முதல் 3 இடங்களை தக்கவைத்துக் கொண்டனர்.

    இந்நிலையில், இந்தியாவின் சுமித் நாகல் 73-வது இடத்தில் இருந்து 68-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். சுமித் நாகல் முதல் 70 இடங்களுக்குள் வருவது இது முதல் முறை ஆகும்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் தோற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல்-செர்பியாவின் துசன் லாஜோவிக் ஜோடி, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெட்ரோ மார்டினெஸ்-ஜௌம் மூனார் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் சுமித் நாகல் ஜோடி 2-6, 2-6 என நேர் செட்களில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    • கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடக்கிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது. அதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தகுதிபெற்ற ஒரே இந்தியரான சுமித் நாகல், தரவரிசையில் 53-ம் நிலை வீரரான செர்பியாவின் மியோமிர் கெச்மனோவிச்சுடன் முதல் சுற்றில் நேற்று மோதினார்.

    இதில் சுமித் நாகல் 2-6, 6-3, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை தொடங்குகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகலுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது.

    லண்டன்:

    டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இந்நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை தொடங்குகிறது. இந்தப் போட்டியில் யார்- யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தகுதிபெற்ற ஒரே இந்தியரான சுமித் நாகலுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது. அவர் 53-ம் நிலை வீரர் செர்பியாவின் மியோமிர் கெச்மனோவிச்சுடன் முதல் சுற்றில் நாளை மோதுகிறார்.

    நடப்பு சாம்பியன் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), எஸ்தோனியா வீரர் மார்க் லாஜலை எதிர்கொள்கிறார். முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), செக் குடியரசின் தகுதி நிலை வீரர் விட் கோபிரிவாவுடன் மோதுகிறார்.

    • சுமித் நாகல் ஏற்கனவே 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாடியுள்ளார்.
    • ரோகன் போபண்ணா, என் ஸ்ரீராம் பாலாஜி ஆண்டுகள் இரட்டையர் பிரிவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இந்தியாவின் டென்னிஸ் வீரரான சுமித் நாகல், அதிகாரப்பூர்வமாக பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் "நான் 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளேன் என்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஒலிம்பிக்ஸ் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்திருப்பதால் இது எனக்கு ஒரு மகத்தான தருணம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    சுமித் நாகல் ஏற்கனவே 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாடியுள்ளார். தற்போது 2-வது முறையாக தகுதி பெற்றுள்ளார்.

    ரோகன் போபண்ணா, என் ஸ்ரீராம் பாலாஜி ஆண்டுகள் இரட்டையர் பிரிவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். போபண்ணா தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ளார். அவர் தனது ஜோடியை தேர்ந்தெடுத்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மாத தொடக்கத்தில் சுமித் நாகல் ஹெய்ல்பிரோன் சேலஞ்சர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் முதல் 80 இடத்திற்குள் நுழைந்தார். இது தகுதி பெற முக்கிய காரணமாக அமைந்தது.

    ஆஸ்திரேலிய ஓபனில் முதன்மை சுற்று போட்டிக்கு தகுதி பெற்றார். 37-வது இடத்தில் இருந்த அலெக்சாண்டர் பப்லிக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இத்தாலியில் சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் சுமித் நாகல் வென்றார்.

    ரோம்:

    இத்தாலியில் நடக்கும் பெருகியா சேலஞ்சர் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் சுமித் நாகல், ஸ்பெயின் வீரர் மிராலிஸ் உடன் மோதினார்.

    இதில் சுமித் நாகல் 7-6 (7-2), 1-6, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    • இத்தாலியில் சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் சுமித் நாகல் வென்றார்.

    ரோம்:

    இத்தாலியில் நடக்கும் பெருகியா சேலஞ்சர் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் சுமித் நாகல், போலந்தின் மாக்ஸ் கஸ்னிகோவ்ஸ்கி உடன் மோதினார்.

    இதில் சுமித் நாகல் 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

    ×