search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெப்ப நிலை"

    • அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது
    • தமிழகத்தில் சராசரியாக வெப்பநிலை 29.5 டிகிரி செல்ஸியஸ் முதல் 33.4 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் உள்ளது

    காலநிலை மாற்றம் :

    உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் தண்ணீர் பஞ்சம், வெப்ப அலை என்ற ரூபங்களில் ருத்ர தாண்டவம் ஆடத்தொடங்கியுள்ளது. ஒருபுறம் பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்கள் தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள்  அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் காலநிலை குழப்பத்தால் வெயிலுடன் சேர்ந்து திடீரென கொட்டித்தீர்க்கும் கனமழையும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அதிகரிக்கும் வெப்பத்தால் தமிழகமும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழக   மக்களுக்கு பீதியைக் கிளப்பும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

     

    ஆய்வு முடிவுகள் :

    அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, தொடர் நகரமயமாக்கல் காரணமாக தமிழக நகரங்கள் உட்பட இந்தியாவில் உள்ள 21 நகரங்களில் அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக அதிகரித்து 2050 வாக்கில் தற்போது வெயில் காலத்தில் உள்ளதை விட இரண்டு மடங்கு வெப்பம் வருடத்தின் 8 மாதங்களுக்கும் வீசி மக்களை தாங்கமுடியாத அவதிக்குள்ளாக்கும் என்று தெரியவந்துள்ளது.

     

    தமிழகத்துக்கு என்ன பாதிப்பு? 

    தமிழகத்தில் கடந்த 30 வருடங்களாக சராசரியாக வெப்பநிலை 29.5 டிகிரி செல்ஸியஸ் முதல் 33.4 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் உள்ளது. மேலும் சராசரி மழைப்பொழிவு 763 மி.மீ முதல் 1432 மி.மீ ஆக உள்ளது.

    தற்போதுள்ள சராசரி வெப்பநிலை 2050 இல் 0.4 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும் என்றும் 2080 இல் 1.3 டிகிரி அளவுக்கு செல்ஸியஸ் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 2100 ஆம் ஆண்டு வாக்கில் சராசரி வெப்ப நிலை 1.7 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும்.

     

    தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வரும் காலங்களில் அதிக வெப்பம் பதிவாகும். அதுமட்டுமின்றி சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் வெப்ப அலை தற்போது உள்ளதை விட 2 மடங்கு அதிகமாக வீசும். குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிக பாதிப்பு இருக்கும்.

     

    வெயில் மட்டுமின்றி வழக்கத்துக்கு மாறான மழைப்பொழிவும் தமிழகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் இயல்புக்கு மாறாக குறிகிய காலத்திலேயே அதிக மழை கொட்டித்தீர்க்கும். 2050 இல் சராசரி மழைப்பொழிவு 4 சதவீதமும், 2080 இல் 11 சதவீதமும், 2100 இல் 16 சதவீதமும் அதிகரிக்கும்.

     

    மாசுபாடு அதிகமாகும் பட்சத்தில் இதுவே 2050 இல் 7 சதேவீதமாகவும், 2100 இல் 26 சதவீதமாகவும் கூட அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் இந்த சராசரி மழைபொழிவின் மாற்றம் கண்கூடாக தெரியும். 24 மணிநேரத்தில் 6 முதல் 7 சென்டிமீட்டர் என்ற அளவில் கூட மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று  ஆய்வில் தெரியவந்துள்ளது.

    • கடும் வெப்பத்தால் புனித கங்கை நதியின் நீர் மட்டம் வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.
    • மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவழித்து கங்கையை சுத்தம் செய்யும் பணியில் சமீப காலங்களாக ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் வெப்ப நிலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருவதால் மக்கள் சொல்லிலடங்கா இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். தண்ணீர் பஞ்சம், ஹீட் ஸ்ட்ரோக் உயிரிழப்புகள் என நிலைமையை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வட மாநிலங்களின் நிலைமை இன்னும் மோசமானது ஆகும்.

    நாட்டில் இதுவரை ஹீட் ஸ்ட்ரோக்கிற்கு சுமார் 250 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அரசியல் போட்டியில் அண்டை மாநிலமான அரியானா யமுனை நதி நீரை அடைத்து வைத்துள்ள நிலையில் தலைநகர் டெல்லி தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்து வருகிறது. இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் கடந்த ஒன்றரை மாத காலமாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் நிலவி வரும் கடும் வெப்பத்தால் புனித கங்கை நதியின் நீர் மட்டம் வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.

    நீர் வற்றிய நிலையில் கற்பாறைகளும், குப்பைக்கூளங்களும், உடைந்த படகுகளும் நதி மணலில் கிடப்பது காண்போருக்கு வெயிலின் கொடுமையைதெள்ளிதின் உணர்த்துகிறது. வற்றாத ஜீவ நதியான கங்கையின் நிலைமையே இப்படியாக இருக்கும் நிலையில் மனிதர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

     இமய மலையில் உருவாகி வங்கக்கடலில் கடக்கும் கங்கை நதி இந்து மதத்தில் புனத்தமனாதாக பராக்கப்படும் நிலையில் மக்கள் அதிகம் புழங்குவதால் மிகுந்த அழுக்கடைந்த நிலையில் மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவழித்து கங்கையை சுத்தம் செய்யும் பணியில் சமீப காலங்களாக ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

    • நாடு முழுவதும் அனல் காற்றுடன் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம் தெரிவித்தது.
    • வெப்ப நிலை அதிகரித்து வருவதால் ஒடிசாவில் வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன.

    புவனேஸ்வர்:

    தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் அனல் காற்றுடன் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தில் வெப்பம் தொடர்பான நோய்களால் 8 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஒடிசாவின் பொது சுகாதார இயக்குநர் டாக்டர் நிரஞ்சன் மிஸ்ரா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஒடிசாவில் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இந்த வெப்பம் தொடர்பாக வெப்பச் சோர்வு, உஷ்ணப் பிடிப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.

    இதுகுறித்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அனைத்து மாவட்டங்களுக்கும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளோம்.

    அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவர்களுக்கான பயிற்சியை சமீபத்தில் நடத்தியுள்ளோம் என தெரிவித்தார்.

    • உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • சராசரியை விட 1.07 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாக நாசா கூறுகிறது.

    லாஸ் ஏஞ்சல்ஸ் :

    எல் நினோ தாக்கத்தால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தான் வரலாற்றிலேயே உலகில் அதிக வெப்பம் பதிவான மாதம் என நாசா தெரிவித்துள்ளது.

    ஜூன் 2023-க்கான உலகளாவிய சராசரி வெப்பநிலை 1951 முதல் 1980 ஜூன் வரையிலான சராசரியை விட 1.07 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாக நாசா கூறுகிறது.

    இது, மனித நடவடிக்கைகளின் விளைவாக, முக்கியமாக கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகளின் விளைவாக, அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலையின் ஒரு பகுதி என நாசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    • வெப்ப அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • மகாராஷ்டிராவில் அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    வடமாநிலங்களில் வெப்ப அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

    வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு மகாராஷ்ராவில் அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    • காற்றின் ஈரப்பதம் காலையில் 94 சதவீதமாகவும், மாலையில் 28 சதவீதமாகவும் இருந்தது.
    • டெல்லியில் 24 மணி நேர காற்று தரக்குறியீடு மாலை 4 மணிக்கு 260 ஆக இருந்தது.

    புதுடெல்லி:

    தலைநகர் புதுடெல்லியில் இம்மாதத்தில் மிக அளவு வெப்பநிலை பதிவாகி வருகிறது. நேற்று அதிகபட்ச வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியசாக பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது பருவத்தின் சராசரியவை விட 7 புள்ளிகள் அதிகமாகும். குறைந்தபட்ச வெப்ப நிலை 14.1 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது. காற்றின் ஈரப்பதம் காலையில் 94 சதவீதமாகவும், மாலையில் 28 சதவீதமாகவும் இருந்தது. டெல்லியில் 24 மணி நேர காற்று தரக்குறியீடு மாலை 4 மணிக்கு 260 ஆக இருந்தது.

    ×