என் மலர்
நீங்கள் தேடியது "சாட்டை துரைமுருகன்"
- தனது செல்போன் ஆடியோவை லீக் செய்ததாக சாட்டை துரைமுருகன் புகார் அளித்துள்ளார்.
- ஆளுங்கட்சியுடன் இணைந்து திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்து செயல்படுவதாக சாட்டை துரைமுருகன் ஐகோர்ட் கிளையில் முறையீடு
திருச்சி டிஐஜி வருண் குமார் மீது சாட்டை துரைமுருகன் கொடுத்த புகாரை பெற்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை உத்தரவிட்டுள்ளது.
பொய் வழக்கு பதிந்து கைது செய்ததுடன் தனது 2 செல்போன்களை பறித்ததாக திருச்சி டிஐஜி மீது சாட்டை துரைமுருகன் புகார் அளித்துள்ளார்.
திருச்சி டிஐஜி வருண் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது செல்போன் ஆடியோவை லீக் செய்ததாக சாட்டை துரைமுருகன் புகார் அளித்துள்ளார்.
ஜாமினில் வெளியான பின்னும் செல்போனை ஒப்படைக்காததால் வழக்கு தொடர்ந்த போது என் செல்போன் ஆடியோ லீக் ஆனது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி டிஐஜி வருண் தனது பள்ளித்தோழரான திருச்சி சூர்யாவின் எக்ஸ் தளத்தில் ஆடியோவை பதிவேற்றம் செய்தார் என்றும் சாட்டை துரைமுருகன் கூறினார்.
மேலும் மனுவில், "நாதகவை சேர்ந்த இருவரை கைது செய்ததுடன் 20 பெண் காவலர்களை கொண்டு தாக்கி சீமானுக்கு எதிராக வாக்குமூலம் பெற துன்புறுத்தல்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியுடன் இணைந்து திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்து செயல்படுவதாக சாட்டை துரைமுருகன் ஐகோர்ட் கிளையில் முறையீடு செய்துள்ளார்.
திருச்சி டிஐஜி மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை தலைவர், திருச்சி ஆணையருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், சாட்டை துரைமுருகனின் மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, திருச்சி டிஐஜி வருண் மீதான புகாரை விசாரித்து ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாம்தமிழர் கட்சியின் மீதும் ,என் மீதும் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு சட்டவிரோத கைது நடவடிக்கை எடுத்து தொடர்ந்து பொதுவெளியில் நாம்தமிழர் கட்சி குறித்து அவதூறு பரப்பும் திருச்சி டிஐஜி வருண்குமார் மீது நான் கொடுத்த புகாரை ஏற்றுக்கொண்டு ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க தமிழக டி.ஜி.பிக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு !
நீதி வெல்லும் !
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பிரபல யுடியூப்பரான சாட்டை துரைமுருகன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது யுடியூப்பில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
- வீடியோவில் குறிஞ்சாகுளத்தில் நிலவும் மோதலில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாகவும், சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாகவும் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குறிஞ்சாகுளம் கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு கோவிலில் சிலை வைத்தது மற்றும் இடப்பிரச்சினை தொடர்பாக இரு சமுதாயத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் பிரபல யுடியூப்பரான சாட்டை துரைமுருகன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது யுடியூப்பில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் குறிஞ்சாகுளத்தில் நிலவும் மோதலில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாகவும், சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாகவும் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக திருவேங்கடம் கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவிட்டதாக திருவேங்கடம் போலீசார் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- நாம் தமிழர் கட்சியில் மாநில பொறுப்பில் உள்ள சாட்டை துரைமுருகன் என்பவர் சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.
- எந்தவித ஆதாரமும் இல்லாத தவறான கருத்துக்களை முன்வைத்து கமல்ஹாசனின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர் சாட்டை துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை:
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், நடிகர் கமல்ஹாசன் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்புவதாக கூறி கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை தெற்கு நகர செயலாளர் தாஜூதீன் தலைமையில் அந்த கட்சியினர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியில் மாநில பொறுப்பில் உள்ள சாட்டை துரைமுருகன் என்பவர் சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அவர் சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் பற்றியும், நடிகர் கமல்ஹாசன் பற்றியும் உண்மைக்கு புறம்பான தகவலை யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அதில் கமல்ஹாசன் கன்னடர். கர்நாடகாவில் உள்ள ஹாசன் என்ற ஊர் தான் அவரின் பூர்வீகம் என்று பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். எந்தவித ஆதாரமும் இல்லாத தவறான கருத்துக்களை முன்வைத்து கமல்ஹாசனின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர் சாட்டை துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். எனவே யூடியூப் சேனலில் இருந்து அதனை அகற்றி சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் பேசிய சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
- தன் மீது உள்ள வழக்குகள் அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக பதிவு செய்யப்பட்டவை.
- பயண உரிமையை மறுப்பது அடிப்படை உரிமையை மறுப்பதாகும்.
மதுரை:
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி மற்றும் சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவர் சாட்டை துரைமுருகன். அரசியல் கட்சி தலைவர்களை தொடர்ந்து யூடியூப் மற்றும் கட்சி பொதுக்கூட்டங்களில் விமர்சித்து வரும் சாட்டை துரைமுருகன் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் அவதூறு வழக்கு ஒன்றில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் சாட்டை துரைமுருகன் கடந்த 2018-ம் ஆண்டு வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த நிலையில் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறி பாஸ்போர்ட் வழங்க மறுத்தனர். இதற்கிடையே இந்தாண்டு ஜூலை மாதம் மீண்டும் பாஸ்போர்ட் வழங்கக்கோரி விண்ணப்பித்த நிலையில் எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.
தன் மீது உள்ள வழக்குகள் அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக பதிவு செய்யப்பட்டவை. அதனை நான் சட்டரீதியாக எதிர்கொண்டு வருகிறேன். நான் வெளிநாட்டில் குடியேற பாஸ்போர்ட் கேட்கவில்லை. வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் என்னை உரையாற்ற அழைக்கின்றனர். இருப்பினும் பாஸ்போர்ட் இல்லாததால் என்னால் செல்ல முடியவில்லை.
பயண உரிமையை மறுப்பது அடிப்படை உரிமையை மறுப்பதாகும். எனவே பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த தனது மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாட்டை துரைமுருகனுக்கு பாஸ்போர்ட் வழங்குவது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 1-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
- திருச்சி சூர்யா, சாட்டை துரைமுருகனை போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
- ஆடியோவை திருச்சி சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மக்களவை தேர்தல் நடைபெறும் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
பாஜக கட்சி கூட்டணி தொகுதி பங்கீடுகள் முடிவடைந்த நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல், 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.
இதில், தென் சென்னையில் தமிழசை சவுந்தரராஜன், கோவையில் அண்ணாமலை, விருதுநகரில் ராதிகா சரத்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
பரபரப்பான தேர்தல் கள நேரத்தில், தமிழக பாஜக நிர்வாகியான திருச்சி சூர்யா சிவா, நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளரும் யூட்யூபருமான சாட்டை துரைமுருகனுக்கும் இடையேயான ஆடியோ உரையாடலை வெளியிட்டுள்ளார்.
திருச்சி சூர்யா, சாட்டை துரைமுருகனை போனில் தொடர்பு கொண்டு, "அண்ணாமலை குறித்து சாட்டை துரைமுருகன் பேசிய வீடியோவை நீக்குமாறும், இனிமேல் அதுபோன்று வீடியோக்களை வெளியிட வேண்டாம் எனவும்" கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்த சாட்டை துரைமுருகன், "இனிமே பாஜகவை எதிர்த்து வீடியோ வெளியிட மாட்டேன், அண்ணனே சொல்லிவிட்டார். நாம் தமிழரின் முழு டார்கெட்டும் திமுகதான் என்று. ஆகையால் இதை விட்டுவிடுங்கள். இனிமே பார்த்துக்கொள்கிறேன். 100 விழுக்காடு உறுதியாக இனி அப்படி வீடியோ வராது" என கூறியிருந்தார்.

சாட்டை துரைமுருகனோடு பேசிய இந்த ஆடியோவை திருச்சி சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோ சர்ச்சையை கிளப்பியது.
ஏற்கனவே, நாம் தமிழர் கட்சி பாஜகவிற்கு மறைமுகமாக ஆதரவாக இருப்பதாக பேசப்படுகிறது. இந்த சூழலில், திருச்சி சூர்யா கேட்டதற்கினங்க பாஜகவிற்கு ஆதரவாக பதிலளித்தது மட்டுமின்றி எங்களது டார்கெட் பாஜக அல்ல என குறிப்பிட்டிருப்பது நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆடியோ தீயாய் பரவியதை அடுத்து, சாட்டை துரைமுருகன், திருச்சி சூர்யாவை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டிருப்பதாவது, 'ஆடியோல என்னடா சொல்றது இங்கேயே சொல்றேன். எங்கள் இனத்தை கொன்றொழிக்க காரணாமாக இருந்த காங்கிரசும் துணை நின்ற திமுகவும் எங்கள் முதல் எதிரிகள் ! அவர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக் கட்டவே நாம்தமிழர் கட்சி துவங்கப்பட்டது !
பாஜக மனித குலத்திற்கு ஆபத்து அண்ணாமலை போன்றவர்கள் தமிழ்நாட்டு அரசியலுக்கே பேராபத்து என்பதை சொல்லி காணொளி போட்டதற்கு காலில் விழாத குறையாக கெஞ்சி கோரிக்கை வைப்பது போல் அலைபேசி உரையாடலை பதிவு செய்து போடுவதெல்லாம் சில்லரைத்தனத்தின் உச்சம் ! இதுக்காகவே கோவையில் தங்கியிருந்து அண்ணாமலை போன்றவர்களை காலி செய்வோம் !' என குறிப்பிட்டுள்ளார்.
- யூடியூபில் அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்க தொடங்கினால்,
- தேர்தலுக்கு முன்னதாக எத்தனை பேர் அடைக்கப்படுவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்?
தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் ஜாமினை ரத்து செய்த நிலையில், சாட்டை துரைமுருகன் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார்.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபாய் எஸ் ஒஹா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது நீதிபதிகள் "யூடியூபில் அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்க தொடங்கினால், தேர்தலுக்கு முன்னதாக எத்தனை பேர் அடைக்கப்படுவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்?. அவருக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை அவர் தவறாக பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.
அவதூறாக பேசமாட்டேன் என அவருக்கு நிபந்தனை விதிக்க முடியாது. ஒரு அறிக்கை அவதூறா? அல்லது அவதூறு இல்லையா? என்பது எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது? என நீதிபதிகள் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழங்கறிஞர் முகுல் ரோஹத்கி நோக்கி கேள்வி எழுப்பினர்.
- சாட்டை துரை முருகன் கடந்த ஏப்ரல் 27ம் தேதி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்
- தேர்தலில் வெற்றி பெற வைக்க நவாஸ் கனி பணம் விநியோகம் செய்ததாக சட்டை துரைமுருகன் பேசியுள்ளார்
5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரி இராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனியின் வழக்கறிஞர் யூ டியூபர் சாட்டை துரைமுருகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சாட்டை துரை முருகன் கடந்த ஏப்ரல் 27ம் தேதி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், "நவாஸ் கனியை வெற்றி பெற வைக்க இராமநாதபுரம் கோபாலபட்டினம் பகுதி ஜமாத், ரூ.10 லட்சம் வழங்கியதாக' பேசியுள்ளார்.
அதாவது, தேர்தலில் வெற்றி பெற வைக்க நவாஸ் கனி பணம் விநியோகம் செய்ததாக சாட்டை துரைமுருகன் பேசியுள்ளார்.
அந்த நோட்டீசில், "சாட்டை துரை முருகன் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்றும், தன்னுடைய நற்பெயருக்கும் கூட்டணி கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் உள்ளது. ஆகவே சாட்டை துரைமுருகன் 5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்" என்று நவாஸ் கனி தெரிவித்துள்ளார்.
இந்த நோட்டீஸ் தொடர்பாக சாட்டை துரைமுருகன் பதில் அளிக்காத பட்சத்தில், அவருக்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் என்று நவாஸ் கனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- குற்றாலத்தில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி போலீசார் கைது செய்தனர்.
- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் குற்றாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றாலத்தில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரசார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசையும் தரக்குறைவாக விமர்சித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
- அவதூராக பாடியதாக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
- என்னை சுற்றியிருப்பவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுக்கிறீர்கள்.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் இன்று காலை கைது செய்யப்பட்டார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி அவதூராக பாடியதாக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சாட்டை துரைமுருகன் கைது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது எல்லாம் பாயாத வழக்கு மேடையில் பேசியதற்காக பாய்கிறது. எதற்காக சாட்டை துரைமுருகனை கைது செய்தீர்கள்? என்னை விட அதிகமாக சாட்டை துரைமுருகன் பேசிவிட்டாரா. என்னை சுற்றியிருப்பவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுக்கிறீர்கள்."
"முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி பற்றி தவறாக பாடியதால், சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளார்கள். இருந்த பாட்டை பாடுவதில் என்ன அவதூறு இருக்கிறது. எழுதியவர், பாடியவரை விட்டுவிட்டு மறுபடியும் எடுத்து பாடியவரை கைது செய்கிறீர்கள்."
"நான் பாடுகிறேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள். திமுகவினர் பேசினால் கருத்துரிமை எதிர்க்கட்சிகள் பேசினால் அவமதிப்பா?" என்று தெரிவித்தார்.
- நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
- சாட்டை துரைமுருகனை குறி வைத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் செயல்படுகிறார்.
சென்னை:
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தேவர், நாடார், கோனார், தேவேந்திரர் மீது வருணுக்கு பிறப்பு வெறுப்பு. அதனால் அவர்களுக்கு எதிராக செயல்படுகிறார்.
* ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் சாதி வெறுப்புடன் செயல்படுகிறார் என்பதற்கு ஆதாரம் உள்ளது.
* சாட்டை துரைமுருகனை குறி வைத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் செயல்படுகிறார் என்று அவர் கூறினார்.
- பொது அமைதியை சீர்குலைத்தல், கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு.
- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார்.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் குற்றாலத்தில் தங்கி இருந்த நிலையில், திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரசார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசையும் தரக்குறைவாக விமர்சித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நாம் தமிழர் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பொது அமைதியை சீர்குலைத்தல், கலவரத்தை தூண்டுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் சாட்டை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- காவல்துறை கையில் வைத்திருக்கும் விடியா திமுக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
- அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மீதும் சர்வாதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது,
கடந்த மூன்றாண்டு விடியா திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள், பாலியல் வன்கொடுமையாளர்கள் போன்றோர் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில், ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதும், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மீதும் சர்வாதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
தன் கையில் இருக்கும் அதிகாரம், நிரந்தரமானது என்ற இருமாப்போடு, 'இம்' என்றால் சிறைவாசம் 'உம்' என்றால் வனவாசம்..... என்ற ரீதியில் வழக்குகள் போட்டு கைது செய்யும் அராஜகம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான திருச்சி சாட்டை துரைமுருகன் அவர்களை, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவர் தெரிவித்த ஒரு சில கருத்துகளுக்காக பொய் வழக்கு புனைந்து இந்த அரசு கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். அவர் மீதான வழக்குகளை திரும்பப்பெற்று, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று காவல்துறை கையில் வைத்திருக்கும் விடியா திமுக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.