என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மேல்முறையீடு"
- ஹேமந்த் சோரனுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும்.
- ஹேமந்த் சோரன் எந்த குற்றத்தையும் செய்யவில்லை என கூறி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமின்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் அளித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்க துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கும் முன் அனைத்து அம்சங்களையும் உயர்நீதிமன்றம் ஆராயவில்லை என்று அமலாக்கத்துறை அதன் மனுவில் புகார் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே ஹேமந்த் சோரனுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, நிலமோசடி புகாரில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறையினர் ஜனவரி 31ம் தேதி கைது செய்திருந்தனர்.
பின்னர், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் 45 பிரிவின்படி ஹேமந்த் சோரன் எந்த குற்றத்தையும் செய்யவில்லை என கூறி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமின் அளித்தது குறிப்பிடத்தக்கது.
- கெஜ்ரிவாலை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
- சி.பி.ஐ கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு எதிராக ஐகோர்ட்டில் மேல்முறையீடு.
புதுடெல்லி:
டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ சமீபத்தில் கைதுசெய்தது.
இதற்கிடையே, சி.பி.ஐ கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், கெஜ்ரிவால் மனு குறித்து 7 நாளில் பதிலளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை ஜூலை1 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இவ்வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை ஏற்கனவே கைதுசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- கெஜ்ரிவாலை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
- சி.பி.ஐ கைது மற்றும் நீதிமன்றக் காவலுக்கு எதிராக ஐகோர்ட்டில் மேல்முறையீடு.
புதுடெல்லி:
டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ சமீபத்தில் கைது செய்தது.
இந்த நிலையில் சி.பி.ஐ கைது மற்றும் நீதிமன்றக் காவலுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இவ்வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கெஜ்ரிவாலை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- இது அரசியல் சூனிய வேட்டை என்று தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப், தான் நிரபராதி என்றும் அரசியல் கைதியாக ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புடன் இருந்த ரகசிய உறவவை மறைக்க ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு (இந்திய மதிப்பில்) ரூ.1.07 கோடி டிரம்ப் மூலம் வழங்கப்பட்டது. இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து அவர் மீது தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கில் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என நேற்று (மே 31) நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அமெரிக்காவில் ஒரு முன்னாள் அதிபர் குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்படுவது இது முதல் முறையாகும்.
இது அரசியல் சூனிய வேட்டை என்று தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப், தான் நிரபராதி என்றும் அரசியல் கைதியாக ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அமரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜோ பைடனுக்கு எதிராக வலுவான போட்டியாளராக டிரம்ப் பார்க்கப்படுகிறார். தற்போது வெளியாகியுள்ள தீர்ப்பு காரணமாக டிரம்ப் தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித சிக்கலும் இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இந்த மோசடியான தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார். தான் நிரபராதி என நிரூபிக்க முக்கியமான சாட்சிகளை நீதிமன்றத்துக்கு அழைத்து வர அனுமதிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பான தண்டனை விபரங்கள் வரும் ஜூலை 11ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- திருமணமாகாத 20 வயது இளம் ஒருவர் தனது வயிற்றில் உள்ள 27 வார கருவைக் கலைக்க அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
- கருவை சுமக்கும் பெண் 20 வயதே ஆன திருமணமாகாத இளம்பெண் என்பதால் இந்த கருவால் சமுதாயத்தை எதிர்கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் அவர் இருக்கிறார் என்று வாதிடப்பட்டது
திருமணமாகாத 20 வயது இளம் ஒருவர் தனது வயிற்றில் உள்ள 27 வார கருவைக் கலைக்க அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
கடந்த மே 3 ஆம் தேதி அந்த மனு மீதான விசாரணையின்போது கருவைக் கலைக்க உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுத்தது. மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின்படி 24 வாரங்களுக்குள் மட்டுமே கருவைக் கலைக்க சட்டப்படி அனுமதி உள்ளது என்றும் இந்த வழக்கில் மனுத்தாரரின் கரு 27 வாரங்கள் நிறைந்தது என்பதால் சட்டப்படி கருவைக் கலைக்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த பெண் உச்சநீதிமன்றத்தை நாடினார். இதன் மீதான விசாரணை இன்று (மே 15) உச்சநீதிமன்ற அமர்வில் நடந்தது. அப்போது பெண்ணின் வயிற்றில் உள்ள கருவுக்கும் வாழ்வதற்கான அடிப்படை உரிமை உள்ளது என்றும் அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்றும் உச்சநீதிமன்றம் மனுதாரரிடம் கேள்வி எழுப்பி கருவைக் கலைக்க அனுமதி மறுத்துள்ளது.
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் பேசிய வழக்கறிஞர், கருவை சுமக்கும் பெண் 20 வயதே ஆன திருமணமாகாத இளம்பெண் என்பதால் இந்த கருவால் சமுதாயத்தை எதிர்கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் அவர் இருக்கிறார் என்று வாதிட்டது குறிப்பிடத்தக்கது.
- மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- தீர்ப்பின் நகல் இன்று கிடைக்கப்பெற்றதும், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை.
அமைச்சராக இருந்த பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வரும் ஜனவரி 2ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் இன்று கிடைக்கப்பெற்றதும், மூத்த வழக்கறிஞர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
ஆலோசனைக்கு பிறகு வரும் ஜனவரி 2ம் தேதி மேல்முறையீடு செய்யவுள்ளார்.
- குறுந்தகவல் அனுப்பிய 33 ஆயிரம் பேரிடம் நேரடி களஆய்வு
- துணை கலெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவு
கோவை,
தமிழகத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் உரிமைத்தொகை திட்டம் செப்.15-ல் தொடங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் 7 லட்சத்து 41 ஆயிரத்து 799 கார்டுதாரர்கள் இதற்கு விண்ணப்பித்து இருந்தனர். விதிமுறைக்கு உட்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்து வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. தகுதி இருந்தும் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக ஏராளமான பெண்கள் நினைத்ததால், அந்த பெண்கள் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இதுதவிர விண்ணப்பம் பெற்றவர்களில், பலரும் பூர்த்தி செய்து விட்டு கொடுக்காமல் இருந்தனர். அவர்களுக்கும் தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவ லகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களில் அமைத்த உதவி மையங்களுக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து நிராகரிப்பு செய்ததற்கான காரணங்களை கேட்டறிந்து, மேல்முறையீடு செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 64 ஆயிரம் பெண்கள் இதுவரை மேல்முறையீடு செய்துள்ளனர். ஏற்கனவே பெறப்பட்டவற்றில் பரிசீலனையில் உள்ளது என குறுந்தகவல் அனுப்பப் பட்ட 33 ஆயிரம் விண்ணப்பதாரர்களின் தகுதியை கள ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.
மேலும் மாநகராட்சி பகுதியில் அதிகமானோர் விண்ணப்பித்து இருப்பதால் உதவி கமிஷனர்களை பொறுப்பாளர்களாக நியமித்து, களப்பணிக்கு பில் கலெக்டர்களை அனுப்ப அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.
இந்த பணிக்கு மாவட்ட அளவில் 438 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வருவாய்த்துறையினர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் உரிமை தொகை கேட்டு 64 ஆயிரம் பெண்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். ஏற்கனவே 33 ஆயிரம் விண்ணப்பங்கள் என மொத்தம் 97 ஆயிரம் பேரின் விவரங்கள் குறித்து கள ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
கள ஆய்வுக்கு செல்லும் ஊழியர்களுக்கு சிம் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மேல்முறையீடு செய்தவர்களின் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டு சொந்தவீடு இருக்கிறதா? வருமான வரி செலுத்துபவர் வீட்டில் இருக்கிறாரா? கார் வைத்துள்ளனரா? போன்ற கேள்விகளை கேட்டு பதிவு செய்வார்கள்.
அவர்களது பதிலில் திருப்தி இல்லை என்றால், வி.ஏ.ஓ., அல்லது பில் கலெக்டர்கள் நேரில் சென்று கள ஆய்வு செய்து இதற்கென உருவாக்கியுள்ள பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்வார்கள்.
துணை கலெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகள், கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். விண்ணப்பங்கள் அதிகமாக இருப்பதால் 45 நாட்கள் ஆக வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
- குமரி மாவட்ட மக்களின் உயிரை அடகு வைக்க முடியாது
நாகர்கோவில் :
நாகர்கோயிலில் காதி கிராப்ட் தீபாவளி தள்ளுபடி துணி விற்பனை தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 வழி சாலைகள் இல்லாததாலும் குறுகலான சாலைகள் காணப்படுவதாலும் அதிகனரக வாகனங்களுக்கு வரையறை செய்யப்பட்டு உள்ளது.
அதி கனரக வாகனங்களில் கற்களை கேரளா வுக்கு ஏற்றி செல்வது தொடர்பாக பலமுறை லாரி உரிமையாளர்கள் மற்றும் கல்குவாரி உரிமையாளர்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அழைத்து பேசிய நிலையில் உரிய தீர்வு எடுக்கப்படாத நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அவர்களது பேராசைக்காக மாவட்ட மக்களின் உயிரை அடகு வைக்க முடியாது என்பதால் தற்போது அதி கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால் இந்த வரையறைக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது. இதனை எதிர்த்து அரசின் சார்பில் மேல் முறையீடு செய்ய ஆலோசித்து வருகிறோம்.
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கற்களை கொண்டு செல்வதை மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாது. மத்திய அரசு தான் கட்டுப்படுத்த வேண்டும்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை 10 கிலோமீட்டர் சுற்றளவு என்பதை பூஜ்யம் முதல் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவு என குறைத்ததும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கனிம வளங்களை கொண்டு செல்வதை மாநில அரசால் தடுக்க முடியாது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் தீர்மானித்ததும் தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்வதை தடுப்பதற்கு சவாலாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறி னார்.
- பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்
- விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் நடந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் ஊசாம்பாடி ஊராட்சியில் மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெற விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருவதை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பொது மக்களிடம் கூறியதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் இதில் தகுதியானவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும் அப்படி கிடைக்கப்பெறா தவர்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் மேல்முறையீடு செய்து பெற்றுக் கொள்ளலாம் என கூறினார்.
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர். கு.பிச்சாண்டி, மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ், எம் பி அண்ணாதுரை எம் எல் ஏ சரவணன், ஒன்றிய செயலாளர் ராமஜெயம்,
ஒன்றிய குழுத்தலைவர். தமயந்தி ஏழுமலை, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
- வட்டி தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் கிடைத்த வருமானத்தையும் அவர் மறைத்துள்ளார்.
- மிலானி தாக்கல் செய்த இந்த தேர்தல் வழக்கை ஏற்றுக் கொண்டு, ஒ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது.
சென்னை:
தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத், வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி அந்த தொகுதியைச் சேர்ந்த மிலானி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் வேட்பு மனுவில் உண்மையான விவரங்களை ரவீந்திரநாத் மறைத்து உள்ளார். வருமானத்தை மறைத்து தெரிவித்த நிலையிலும் அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டது சட்ட விரோதம். அதனால் அவரது வெற்றியை ரத்துசெய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கடந்த 6-ந் தேதி பரபரப்பான உத்தரவை பிறப்பித்தது.
ரவீந்திரநாத், வாணி பின்னலாடை நிறுவனத்தில் இயக்குனராக இருந்தபோது வாங்கிய சம்பளத்தையும், வாணி பேப்ரிக்ஸ் நிறுவனத்தில் 15 ஆயிரம் பங்குகள் வைத்திருப்பதையும் வேட்பு மனுவில் மறைத்துள்ளார்.
விவசாயத்தில் மட்டுமே வருமானம் கிடைத்தாக கூறிய நிலையில், வட்டி தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் கிடைத்த வருமானத்தையும் அவர் மறைத்துள்ளார்.
ரூ.4 கோடியே 16 லட்ச ரூபாய்க்கு அசையும் சொத்துகள் இருக்கக்கூடிய நிலையில், ஒரு கோடியே 35 லட்ச ரூபாய்க்கு மட்டுமே சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் காட்டியுள்ளார்.
இந்த சொத்து விவரங்கள் குறித்து தேர்தல் அதிகாரி முறையான விசாரணை செய்யவில்லை என்று கூறினார்.
பணப்பட்டுவாடா மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் சாட்சியையும் மனுதாரர் மிலானி தரப்பில் கொண்டு வரவில்லை. சமூக வலை தளங்களில் பரவிய வீடியோ காட்சிகள் மட்டுமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. அதனால் பணப்பட்டுவாடா செய்தார் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆனால் பணப்பட்டுவாடா தொடர்பான குற்ற வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அதே வேளையில் 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றுள்ளதால், அவர் தகவலை மறைத்தார் என்ற காரணத்தை கூறி அவரது தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது என்கிற ரவீந்திரநாத் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது.
சொத்து, கடன், பொறுப்பு, வருமானம் ஆகியவற்றை மறைத்தது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவே ஒ.பி.ரவீந்திரநாத்தின் வேட்புமனுவை ஏற்றது முறையற்றது.
அதனால் மிலானி தாக்கல் செய்த இந்த தேர்தல் வழக்கை ஏற்றுக் கொண்டு, ஒ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.ரவீந்திரநாத் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு ஜாமீன் கொடுக்கப்பட்டது.
- மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் பேசினார். அப்போது அவர் மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்தி ரேட் கோர்ட்டில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், குஜராத் முன்னாள் மந்திரியுமான புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு ஜாமீன் கொடுக்கப்பட்டது. 2 ஆண்டு சிறை தண்டனையை தொடர்ந்து அவரது மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப் பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி நாளை மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல்முறையீடு செய்வதற்காக அவர் சூரத் செல்கிறார். 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து அவர் சூரத் செசன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்கிறார்.
மேல்முறையீடு மனுவில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் ரத்தாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்