என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானநிலையம்"

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி புறப்பட்டுச் சென்றிருந்தார்.
    • சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

    சென்னை:

    வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் இரவு 10 மணிக்கு (31-ந்தேதி) சென்னை திரும்புகிறார்.

    விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி புறப்பட்டுச் சென்றிருந்தார்.

    தமிழகத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அரசு சார்பில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்பட உள்ளது.

    இதில் பங்கேற்குமாறு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும் சிங்கப்பூரில் தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார். சில நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்து கொண்டார்.

    சிங்கப்பூரில் 2 நாள் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 25-ந்தேதி ஜப்பான் சென்றார். அங்கு ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஜப்பான் நாட்டு தொழில் நிறுவனங்களுடனும் அவர் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண் டார்.

    அங்குள்ள தொழிற்சாலைகளுக்கும் சென்று பார்வையிட்டார். ஜப்பான் வாழ் தமிழர்களையும் சந்தித்து பேசினார்.

    தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன் வருமாறு அங்குள்ள தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். தொடர்ந்து ஜப்பானில் இன்றும் நாளையும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    அதன் பிறகு வெளிநாட்டு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு வருகிற 31-ந்தேதி இரவு 10 மணிக்கு (புதன்கிழமை) வந்தடைகிறார்.

    சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்து வரவேற்பு கொடுக்க உள்ளனர்.

    • திடீரென வரிசையில் நிற்கும் ஒரு பயணியின் பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறினார்.
    • பயணி வெடிகுண்டு புரளியை கிளப்பிய சம்பவம் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது

    திருவனந்தபுரம்:

    விமானத்தில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கமான நிகழ்வு. சர்வதேச விமானங்களில் செல்லக்கூடிய பயணிகளுக்கு பாதுகாப்பு நடை முறைகள் அதிகநேரம் இருக்கும்.

    அதேபோன்று தான் கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடு செல்ல இருந்த ஒரு விமானத்தில் பயணிக்க வந்திருந்த பயணிகள் பாதுகாப்பு நடை முறைக்காக வரிசையில் காத்து நின்றனர். அவர்களில் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த சாபு வர்க்கீஸ் (வயது55 ) என்பவரும் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்தார்.

    அவர் திடீரென வரிசையில் நிற்கும் ஒரு பயணியின் பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறினார். திடீரென்று அவர் கூறிய இந்த தகவலால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    பின்பு சாபு வர்க்கீஸ் சுட்டிக்காட்டிய பயணியின் உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த பயணியின் பையில் வெடிகுண்டு இல்லை என்பதும், சாபு வர்க்கீஸ் கூறியது பொய் என்பதும் தெரியவந்தது.

    பாதுகாப்பு நடை முறையால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததால் எரிச்சல் அடைந்த சாபு வர்க்கீஸ், வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசாரிடம் விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர். சாபு வர்க்கீசை நெடும்பாசேரி போலீசார் கைது செய்தனர். பயணி வெடிகுண்டு புரளியை கிளப்பிய சம்பவம் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விமானத்தில் இருந்து பயணிகள் அவசர அவசரமாக இறக்கிவிடப்பட்டனர்.
    • 3 மணி நேர தாமதத்துக்கு பிறகு அந்த விமானம் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு தனியார் நிறுவன விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் 138 பயணிகள் இருந்தனர். மேலும் ஒரு கைக்குழந்தையும் இருந்தது. இந்நிலையில் அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து விமானத்தில் இருந்து பயணிகள் அவசர அவசரமாக இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் விமான நிலையத்தில் தங்க வைப்பட்டனர்.

    இதையடுத்து அந்த விமானத்தில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனை செய்தனர். ஆனால் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 மணி நேர தாமதத்துக்கு பிறகு அந்த விமானம் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது. விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • திருச்சியில் இருந்து பயணிகள் விமானங்கள் மூலம் ஆண்டுக்கு 6,409 மெட்ரிக் டன் சரக்குகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
    • 98 சதவீதம் ஏற்றுமதி உள்ள நிலையில் இறக்குமதி 2 சதவீதம் மட்டுமே உள்ளது

    திருச்சி,

    உள்நாட்டில் உற்பத்தியா கும் பொருட்கள் வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்தால் அந்நிய செலவாணி அதிகரி த்து நாட்டின் பொருளாதா ரம் உயரும். இந்த ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்திற்கு கப்பல் மற்றும் விமானம் முக்கிய பங்காற்றி வருகிறது. அதிலும் விமான சரக்கு போக்குவரத்து விரைவான சேவையை வழங்குகிறது.கொரோனா காலகட்ட த்தில் இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஏற்றுமதி மிகவும் பாதிப்புக்குள்ளா னது. அதன் பின்னர் தற்போது சரக்கு ஏற்றுமதி பல நாடுகளில் சீராகியு ள்ளது.ஆனால் திருச்சிக்கு சரக்குகளை கையாள தனி விமானங்கள் இயக்கப்ப டவில்லை. தற்போது வரை பயணிகள் விமானத்தில் மட்டுமே சரக்குகள் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதில் முதலில் பயணிக ளுக்கு முன்னுரிமை அளிக்கி ன்றனர். அவர்களின் உட மைகள் வைக்கும் இடத்தை தவிர்த்து மீதமுள்ள இடத்தி ற்கு தகுந்தார் போல் சரக்கு ஏற்ற அனுமதி அளிக்க ப்படுகிறது.திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட், தோகா, கொழும்பு உள்ளி ட்ட நாடுகளுக்கு அதிகளவு சரக்கு ஏற்றுமதி செய்யப்ப டுகிறது.

    தினமும் இங்கிருந்து 18 மெட்ரிக் டன் சரக்கு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சராசரி யாக மாதத்திற்கு 550 மெட்ரிக் டன்னும் ஆண்டு க்கு 6,409 மெட்ரிக் டன் சரக்குகளும் கையாள ப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.இதில் 98 சதவீதம் காய்கறிகள்,பழங்கள், பூக்கள், கீரை வகைகள், பால் பொருட்கள், மீன்கள் ஆகியவையாகும்.மீதி இரண்டு சதவீதம் மட்டுமே துணி வகைகள் வீட்டு உபயோக பொருட்கள் பரிசு பொருட்கள் மற்றும் புத்தகங்கள் செல்கிறது.திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி கூறும் போது,திருச்சி விமான நிலைய த்தை பொருத்தவரை ஏற்று மதியை ஒப்பிடும்போது இறக்குமதி 2 சதவீதம் மட்டுமே உள்ளது. இதற்குப் பல்வேறு நடைமுறை சிக்க ல்கள் இருப்பதால் அவற்றை சரி செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.ஆகவே இறக்கும தியாளர்கள் விமான சரக்கு இறக்குமதிக்கு முக்கிய த்துவம் தர வேண்டும்.அவர்களுக்கு தேவையான எல்லா ஆவணம் சார்ந்த பணிகளையும் சரக்கு முனையம் பார்த்துக் கொள்ளும் என்றார்.

    • திருச்சியில் இருந்து மும்பைக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது
    • அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் இயக்கப்படும் என அறிவிப்பு

    கே.கே.நகர்,

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி, பகரின் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களை மலிந்தோ ஏர் ஏசியா ஸ்கூல், இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இயக்கி வருகின்றன.இதே போன்று திருச்சியில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக ஹைதராபாத், சென்னை, புதுடெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றை இண்டிகோ நிறுவனம் இயக்கி வருகிறது.திருச்சியில் இருந்து நாள்தோறும் 7 உள்நாட்டு சேவைகள், 11 வெளி நாட்டு விமான சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் வியட்நாமிற்கு புதிய விமான சேவையை வியட் ஜெட் நிறுவனம் தொடங்க உள்ளது.அதேபோன்று 4-ந் தேதி முதல் திருச்சியில் இருந்து மும்பைக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட உள்ளது. இந்த விமானம் மும்பையில் இருந்து மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.55 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடையும்.மறு மார்க்கத்தில் இந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மதியம் 3.50 மணிக்கு புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு மும்பை சென்றடையும் என இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது
    • ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இந்த விமான சேவையை தொடங்கி உள்ளது

    கே.கே. நகர்,

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக ஹைதராபாத், சென்னை, பெங்களூர், உள்ளிட்ட நகரங்களுக்கு இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இதை தவிர வெளிநாட்டு விமான சேவைகளாக துபாய் மலேசியா சிங்கப்பூர் மஸ்கட் ஓமன் இலங்கை போன்ற நாடுகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் உள்நாட்டு விமான சேவைகள் நிறுவனத்தின் சார்பில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவை  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் துவங்கி இருக்கிறது. இந்த விமானம் ஆனது பெங்களூரில் நள்ளிரவு 12:15 மணிக்கு புறப்பட்டு இரவு 1.28 மணிக்கு திருச்சி விமான விமான நிலையத்திற்கு வந்தடைந்தது இந்த விமானத்தில் பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு 30 பயணிகள் பயணம் செய்தனர் மீண்டும் இந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3:30 மணிக்கு புறப்பட்டு காலை 4.40 மணிக்கு பெங்களூர் விமான நிலையத்தை சென்றடைந்தது இந்த விமானத்தில் 78 பயணிகள் திருச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி பயணம் செய்தனர்.

    • மறுசீரமைக்கப்பட்ட புதிய ரெயில் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
    • ரோடுஷோ நிகழ்ச்சியையொட்டி பிரதமர் மோடியை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வர உள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி அதற்கு முன்பு வருகிற 30-ந் தேதி, அயோத்தி விமான நிலையம் திறக்கப்படுகிறது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். விமான நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. மறுசீரமைக்கப்பட்ட புதிய ரெயில் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    இதற்காக பிரதமர் மோடி 15 கி.மீ. தூரம் ரோடுஷோ நடத்தி ரெயில் நிலையத்துக்கு செல்கிறார். என்.எச்.27, தரம் பாதை, லதா மங்கேஷ்கர் சவுக், ராம் பாதை, டெதி பஜார், மொகாப்ரா சந்திப்பு வழியாக அவர் ரோடுஷோ நடத்துகிறார். ரோடுஷோ நிகழ்ச்சியையொட்டி பிரதமர் மோடியை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வர உள்ளனர்.

    • விமானம் அவசரமாக பெங்களூரு விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
    • விமானத்தில் இருந்த 179 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 179 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் உள்பட 185 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் நேற்று இரவு கொச்சி நோக்கி புறப்பட்டனர்.

    அப்போது விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் வலது பக்க எந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து விமானம் அவசரமாக பெங்களூரு விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

    பின்னர் விமானத்தில் இருந்த 179 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    • மர்மநபர் ஒருவர் போன் செய்து தகவல் தெரிவித்தார்.
    • அதிரடியாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

    மும்பை:

    சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்தில் குண்டு வெடிக்கும் என்று மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் போன் செய்து தகவல் தெரிவித்தார்.

    இதைதொடர்ந்து போலீசார் உஷார் படுத்தப் பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இண்டிகோ விமானத்தில் 174 பெரியவர்கள் மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர். அவர்கள் அனைவரையும் பதட்டமின்றி பத்திரமாக மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதன்படி மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விமானத்தில் இண்டிகோ விமானம் அதிரடியாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது விமானத்தின் கழிவறையில் 30 நிமிடத்தில் குண்டு வெடிக்கும் என்று ஆங்கிலத்தில் டஸ்யூ பேப்பர் ஒன்றில் எழுதப்பட்ட எச்சரிக்கை குறிப்பு ஒன்று கிடந்தது. அதையும் பறி முதல் செய்துள்ள போலீசார் இதனை எழுதிப் போட்டது யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இண்டிகோ விமானத்துக்கு ஒரே வாரத் துக்குள் கிடைத்த 2-வது வெடிகுண்டு மிரட்டல் இதுவாகும். கடந்த 28-ந் தேதி டெல்லியில் இருந்து வாரணாசி சென்ற இண்டிகோ விமானத்துக்கும் இதுபோன்ற மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பத்து நாட்களுக்கு சுமார் 120 விமானங்கள் ரத்து.
    • பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் டெல்லி ஐதராபாத், சீரடி, கோவா, அந்தமான் உட்பட பல்வேறு நகரங்களுக்கு விமானம் இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முதல் வருகிற 10-ந் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அனைத்து நகரங்களுக்கும் செல்லும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. இன்று காலை சீரடி, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஏற்கனவே முன்புதிவு செய்து இருந்தவர்கள் பயணம் செய்ய வந்தனர். அவர்களை பாதுகாப்பு வீரர்கள் அனுமதிக்கவில்லை. 10-ந் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து ஒரு நாளைக்கு அந்த நிறுவனத்தின் 12 விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது.

    பத்து நாட்களுக்கு சுமார் 120 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட விமான நிர்வாகம், நிர்வாக சீர்திருத்தம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

    • திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 35 விமான சேவைகள் பாதிப்பு.
    • பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 35 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக திடீரென மேகங்கள் திரண்டு வந்து, மேகமூட்டத்துடன் இருளான சூழ்நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கடும் சூறைக்காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் தொடர் மழை காரணமாக 35 விமான சேவையில் தாமதம் ஏற்பட்டது. இதில் சென்னை வரும் 17 விமானங்களும், சென்னையில் இருந்து புறப்படும் 18 விமானங்களும் அடங்கும்.

    • ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர்.
    • கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    மதுரை:

    அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி.கதிரவன் இல்ல திருமண விழா மதுரை வேலம்மாள் ஐடாஸ்கட்டர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.

    இந்த திருமண விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற் காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 7 மணிக்கு மதுரை வந்தடைந்தார்.

    எடப்பாடி பழனிசாமியை வரவேற்க மதுரை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர்.

    விமான நிலையத்தில் இருந்து பயணிகள் வெளியே வரும் பாதை வழியாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வருகை தந்தார். அவர் அங்கிருந்து விமான நிலையத்திற்குள் சென்ற பின்னரும் அவரது வாகனம் அங்கேயே நினறு கொண்டிருந்தது.

    இதைப்பார்த்த விமான நிலைய பாதுகாப்பு போலீசார் மற்றும் அதிகாரிகள் உடனடியாக அந்த காரை அங்கிருந்து அப்புறப்படுத் துமாறு கூறினர். ஆனால் கார் எடுக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். சற்று நேரத்தில் காரை அகற்றாவிட்டால் லாக் செய்து விடுவதாக கூறினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அங்கு திரண்டிருந்த அ.தி.மு.க.வினர் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். கைகளை நீட்டியவாறு அவர்கள் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் காரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

    கவலைப்படாதீர்கள் 2026-ல் நம்மதான்

    மேலும் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமிக்கு திரண்டிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். அதனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமியிடம், தொண்டர் ஒருவர் உரத்த குரலில் 'கவலைப்படாதீர்கள் 2026 நம்ம தான்' என்று கூறினார். அதைக்கேட்ட எடப்பாடி பழனிசாமி சிரித்தபடியே அங்கிருந்து புறப்பட்டார்.

    ×