search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலி எண்ணிக்கை"

    • சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது.
    • நிலச்சரிவில் சிக்கி 650-க்கு மேற்பட்டோர் புதையுண்டது அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

    போர்ட் மோர்ஸ்பி:

    பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்கு நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தன. அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர்.

    இதையடுத்து அங்கு விரைந்த பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதல்கட்ட தகவலில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்தன. இதனால் தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் அதில் சிக்கினர். 1200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.

    இந்நிலையில், ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறுகையில், நிலச்சரிவில் 150 வீடுகள் மண்ணில் புதைந்து தரைமட்டமானது. பலியானோரின் எண்ணிக்கை 670 ஐ கடந்துள்ளது என தெரிவித்த அவர், இந்த பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.

    நிலச்சரிவு ஏற்பட்டு 650-க்கு மேற்பட்டோர் புதையுண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகினர்.
    • இதையடுத்து, அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    போர்ட் மோர்ஸ்பி:

    பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்கு நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தன. அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர்.

    இதையடுத்து, அங்கு விரைந்த பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதல் கட்டமாக வெளியான தகவலில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    இந்நிலையில், பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ளது என உள்ளூர் ஊடங்கள் தெரிவித்துள்ளன.

    இதுதொடர்பாக, எங்கா மாகாணத்தில் உள்ள லகாயிப் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் அய்மோஸ் அகேம் கூறுகையில், இந்த நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் மற்றும் 1,182 வீடுகள் புதையுண்டன என தெரிவித்தார்.

    நிலச்சரிவில் சிக்கி மேலும் பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • மும்பை நகரை நேற்று திடீரென புழுதிப்புயல் தாக்கியது.
    • இதில் ராட்சத விளம்பர பலகை விழுந்து பலியானோர் எண்ணிக்கை 14 ஆனது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநில தலைநகரான மும்பை நகரை நேற்று திடீரென புழுதிப்புயல் புரட்டி எடுத்தது. சுமார் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

    அதன்படி மாலை 4 மணியளவில் திடீரென வானத்தில் கருமேகங்கள் திரண்டு பலத்த காற்று வீசத் தொடங்கியது. 50 முதல் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால் புழுதி பறந்தது. அத்துடன் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்தது. காற்று, புழுதி, மழையும் சேர்ந்து தாக்கியதால் மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதிகள் தூசி படலமாக காட்சியளித்தது.

    இதற்கிடையே, மும்பை காட்கோபர், கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் உள்ள போலீஸ் கிரவுண்ட் பெட்ரோல் பங்கில் அமைக்கப்பட்டு இருந்த ராட்சத விளம்பர பலகை பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சரிந்து விழுந்தது. சுமார் 100 அடி உயரம் கொண்ட இந்த பதாகை இரும்பு சாரங்களுடன் விழுந்ததால் பெட்ரோல் பங்க் மற்றும் அருகில் இருந்து வீடுகள் நொறுங்கின. இந்த ராட்சத பலகைக்குள் பலர் சிக்கி கொண்டனர்.

    தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், தேசிய மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய பலரை மீட்டனர். இதில் 70 பேர் காயமடைந்தனர். அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 8 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மீட்பு பணிகளைப் பார்வையிட்டார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.

    இந்நிலையில், ராட்சத பலகை விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
    • இதில், 600-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டதில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில், தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் பயணம் செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியது. மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது ரெயில் பாதை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் யஷ், "ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தை நினைக்கும் போது, என் இதயம் எப்படி நொறுங்கியது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மீட்பு பணிகளுக்கு உதவியவர்களுக்கு என் நன்றிகள்" என்று சோகமாக பதிவிட்டுள்ளார்.


    • ஒடிசா மாநிலம் ரெயில் விபத்தில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • இதில், தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டதில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில், தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் பயணம் செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியது. மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது ரெயில் பாதை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், "ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

    நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன்.

    உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம்" என்று பதிவிட்டுள்ளார்.


    • ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியது.

    ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டதில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


    இதில், தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் பயணம் செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியது. மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது ரெயில் பாதை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூரி, "நெஞ்சு பதைபதைக்கிறது... என்ன கொடுமை இது !! இறந்தவர்களின் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று சோகத்துடன் பதிவிட்டுள்ளார்.


    • ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் 250-க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 250-க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


    நேற்று இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இரும்புப் பெட்டிகளைப் போலவே

    இடிபாடுகளுக்குள் சிக்கி

    இதயக்கூடும் நொறுங்கிவிட்டது

    பாதிக்கப்பட்ட

    ஒவ்வொரு குடும்பத்திற்கும்

    ஆழ்ந்த இரங்கல்

    மீட்புப் பணியாளர்க்குத்

    தலைதாழ்ந்த வணக்கம்

    இருந்த இடத்தில்

    எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலிக்கிறேன்

    கண்ணீர்

    கன்னம் தாண்டுகிறது" என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.


    • ரெயில் விபத்தில் பலருக்கும் கை, கால்கள் உடைந்தும், தலையில் அடிபட்டும் ரத்தம் வீணாகி உயிருக்கு போராடி வருகிறார்கள்.
    • ஒரே நாள் இரவில் மட்டும் சுமார் 500 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டதாகவும், இன்னும் ஏராளமானோர் ரத்த தானம் செய்ய காத்திருக்கிறார்கள்.

    ஒடிசா மாநிலத்தின் பாலாசோர் மாவட்டம் பஹானகா பஜார் ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு நடந்த ரெயில் விபத்தில் 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    அவர்களில் பலரும் பாலாசோர் மற்றும் அதை சுற்றியுள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் பலருக்கும் கை, கால்கள் உடைந்தும், தலையில் அடிபட்டும் ரத்தம் வீணாகி உயிருக்கு போராடி வருகிறார்கள்.

    இவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏராளமான யூனிட் ரத்தம் தேவைபடுகிறது. இதுபற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வெளியானது.

    இதனை அறிந்த தன்னார்வலர்கள் பலர் நேற்றிரவே ஒடிசா சென்றனர். அங்கு அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று ரத்த தானம் செய்தனர். இதனை ஒடிசா மாநில தலைமை செயலாளர் பிகே ஜெனா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    நேற்று ஒரே நாள் இரவில் மட்டும் சுமார் 500 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டதாகவும், இன்னும் ஏராளமானோர் ரத்த தானம் செய்ய காத்திருப்பதாகவும் கூறினார். தற்போது இப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் ஆயிரம் யூனிட் ரத்தம் இருப்பதாகவும், தேவைப்படுவோருக்கு அவை உடனடியாக வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    ×