என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அசைவ உணவு"
- இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தீபாவளி கொண்டாடியுள்ளார்.
- இங்கிலாந்து பிரதமரின் தீபாவளி விருந்தில் ஆட்டுக்கறி, பீர், ஒயின் ஆகிவையை பரிமாறப்பட்டது.
அக்டோபர் 31 அன்று இந்தியாவில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தீபாவளி கொண்டாடியுள்ளார். தீபாவளி பண்டிகையை ஒட்டி பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அளித்த விருந்தில் அசைவ உணவு மற்றும் மது வகைகள் பரிமாறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமரின் தீபாவளி விருந்தில் ஆட்டுக்கறி, பீர், ஒயின் ஆகிவையை பரிமாறப்பட்டது இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளதாக இந்து தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக இங்கிலாந்தில் வாழும் சில இந்து தலைவர்கள் அந்நாட்டு பிரதமரை கடுமையாக விமர்சித்தனர்.
சென்ற வருடம் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த ரிஷி சுனக் அளித்த விருந்தில் அசைவம் மற்றும் மது வகைகள் பரிமாறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி அன்று தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இந்துக்கள் அசைவ உணவை உண்டு பண்டிகையை கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
??????? ??????'? ?????? ???????: ?????? ??????????? ?????? ?? ???? ??? ???????This year's Diwali celebration at 10 Downing Street, hosted by PM Keir Starmer has sparked significant backlash after reports surfaced… pic.twitter.com/13IB1WRJlE
— INSIGHT UK (@INSIGHTUK2) November 8, 2024
- அந்த சண்டையை சக பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
- சக பயணிகள் பணியாளருக்கு ஆதரவாக அந்த பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
வந்தே பாரத் விரைவு ரெயிலில் பயணி ஒருவர் உணவு பரிமாறும் பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
வந்தே பாரத் ரெயிலில் சைவ உணவிற்கு பதிலாக அசைவ உணவு பரிமாறியதாக பணியாளரிடம் வயதான பயணி ஒருவர் சண்டை போட்டுள்ளார். அப்போது அந்த பணியாளரை கோவத்தில் அந்த பயணி அறைந்துள்ளார்.
அந்த சண்டையை சக பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில், வந்தே பாரத் பணியாளரிடம் பயணி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதே சமயம் சக பயணிகள் பணியாளருக்கு ஆதரவாக அந்த பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
பணியாளர் ஒருவர் தவறுதலாக உணவு பரிமாறியதற்காக அவரை அடிப்பீர்களா என்று நெட்டிசன்கள் இதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் பணியாளருக்கு ஆதரவாக சக பயணிகள் பேசியதையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
- மேற்கு வங்க மாநில மக்கள் 18.9 சதவீதத் தொகையை செலவழித்து 3-வது இடத்தைப் பெற்றுள்ளனர்.
- அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநில மக்கள் பால், பால் பொருட்களுக்காக அதிகம் செலவிடுகின்றனர்.
புதுடெல்லி:
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை கீழ்செயல்படும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்.எஸ்.எஸ்.ஓ) நடத்திய ஆய்வில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ஒரு வீட்டில் உணவுக்காக செலவிடப்படும் செலவுத் தொகையை கணக்கிடவும், மக்களின் உணவு விருப்பங்களை முன்னிலைப்படுத்தவும் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்படி கேரள குடும்பங்களில் அசைவ உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அசைவ உணவுக்காக அதிகம் செலவிடுபவர்கள் பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்து உள்ளது.
கடந்த 2022-23-ம் ஆண்டில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி கேரள மாநிலத்தின் ஊரகப்பகுதிகளில் வசிப்பவர்கள், தங்களது வருமானத்தில் இருந்து அசைவ உணவுக்காக 23.5 சதவீதம் செலவழிக்கின்றனர். அதேநேரத்தில் நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள் தங்களது வருவாயில் இருந்து 19.8 சதவீதத் தொகையை அசைவ உணவுகளுக்காக செலவழிக்கின்றனர். இந்தப் பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்து உள்ளது.
இந்த பட்டியலில் 2-வது இடத்தை அசாம் மாநிலம் பெற்றுள்ளது. உணவுகளுக்காக செலவிடும் தொகையில் 20 சதவீத தொகையை அசைவ உணவுகளுக்காக அசாம் மாநில மக்கள் செலவிடுகின்றனர்.
இந்தப் பட்டியலில் மேற்கு வங்க மாநில மக்கள் 18.9 சதவீதத் தொகையை செலவழித்து 3-வது இடத்தைப் பெற்றுள்ளனர். 4-வது இடத்தை ஆந்திராவும், 5-வது இடத்தை தெலுங்கானாவும் பிடித்துள்ளன.
அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநில மக்கள் பால், பால் பொருட்களுக்காக அதிகம் செலவிடுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை கிடா வெட்டி முப்பூஜை விழா நடத்தப்படுவது வழக்கம்.
- கள்ளவழி கருப்பனாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
ராசிபுரம்:
ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை ஆர்.புதுப்பட்டியையொட்டியுள்ள போதமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பனார் கோவில் உள்ளது. மலைவாழ் மக்களுக்கான இந்த கோவிலில் வருடம் தோறும் தை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை கிடா வெட்டி முப்பூஜை விழா நடத்தப்படுவது வழக்கம்.
நேற்று வழக்கம்போல் விழா நடைபெற்றது. கள்ளவழி கருப்பனாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றியதற்காக 45 ஆடுகள், 60 பன்றிகள், 25 சேவல்கள், 2 ஆயிரம் கிலோ பச்சரிசியை காணிக்கையாக வழங்கினர்.
இந்த விழாவில் ஆட்டு இறைச்சி 500 கிலோ, கோழி இறைச்சி 75 கிலோ, பன்றி இறைச்சி 1300 கிலோ என மொத்தம் 1875 கிலோ இறைச்சியை கொண்டு 50-க்கும் மேற்பட்டவர்கள் அசைவ உணவு சமைத்தனர். அதன் பிறகு பக்தர்களுக்கு விருந்து வழங்கினர். இந்த விருந்தில் புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, ஆயில் பட்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்து அசைவ உணவு சாப்பிட்டனர்.
- கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்
- பல வட இந்திய மாநிலங்களில் அசைவ உணவு டெலிவரி நிறுத்தப்பட்டது
தங்களுடன் பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பும் உணவகங்களில் இருந்து, அவர்களுக்கு விருப்பமான உணவை, அவர்களின் இல்லத்திற்கே சென்று வழங்கும் சேவையை அளிப்பது இணையதள வழியாக இயங்கும் இந்திய நிறுவனம், சொமேட்டோ (Zomato).
நேற்று, உத்தர பிரதேச மாநில அயோத்தியாவில் இந்துக்களின் தெய்வமான பகவான் ஸ்ரீஇராமர் திருக்கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
வட இந்தியாவின் பல மாநிலங்களில் நேற்று, வாடிக்கையாளர்களுக்கு சொமேட்டோவில் அசைவ உணவு வழங்கப்படவில்லை.
இது குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்தது.
"உத்தர பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அரசாங்க உத்தரவிற்கு ஏற்ப அசைவ உணவு வழங்குதல் நிறுத்தப்பட்டுள்ளது" என அந்நிறுவனம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் அறிவித்தது.
ஜனவரி 22 அன்று, மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்கள் சைவ உணவை மட்டுமே வழங்க முடிவெடுத்துள்ளதாக தேசிய உணவக சங்கத்தின் உத்தர பிரதேச தலைவரான வருண் கேரா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அம்மாநிலத்தில் அசைவ உணவகங்கள், இறைச்சி கடைகள் மற்றும் மதுக்கடைகள் நேற்று மூடப்பட்டன.
- திருவிழாவில் பலியிடப்படும் ஆடுகள் நேர்த்திக் கடனாக விடப்பட்டு, கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன.
- சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் விருந்தை ருசி பார்த்தனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திரு மங்கலம் கரடிக்கல் அருகே அனுப்பப்பட்டியில் உள்ளது கரும்பாறை முத்தையா கோவில். இந்த கிராமத்தின் காவல் தெய்வமாக கரும் பாறை முத்தையாவை வழிபட்டு வருகின்றனர். இங்கு மார்கழி மாதத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ விருந்து திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது.
இந்த விழாவுக்கு, பிறந்த பச்சிளம் பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரை பங்கேற்க அனுமதி கிடையாது. ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.திருவிழாவில் பலியிடப்படும் ஆடுகள் நேர்த்திக் கடனாக விடப்பட்டு, கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன.
கரடிக்கல், குன்னம்பட்டி, அனுப்பப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறிய பின்னர், கிடாய்களை இந்த கோவி லில் விட்டுச் செல்வார்கள். அப்படி விடப்பட்ட கிடாய்கள் இந்த கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் வயல்வெளிகளில் மேயும். கோவில் கிடாய்களை யாரும் விரட்டமாட்டார்கள். முத்தையா சாமியே தங்களது வயலில் இரை தேடுகிறார் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த ஆண்டு திருவிழாவில் நேர்த்திக்கடனாக விடப்பட்டு 62 ஆடுகள் கோவிலில் பலியிடப்பட்டன. பின்னர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட 85 மூடை அரிசியை கொண்டு 2 ஆயிரம் கிலோ சாதம் சமைத்து பிரமாண்ட அசைவ விருந்து தயாரானது. கம கம கறி வாசனையுடன் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது.
சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் விருந்தை ருசி பார்த்தனர்.
கறிவிருந்தில் திருமங்கலம், கரடிக்கல், மாவி லிபட்டி, செக்கானூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த அசைவ விருந்தை சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். இந்த இலைகள் காய்ந்து, அந்தப் பகுதியில் இருந்து கலைந்த பிறகே பெண்கள் கோவிலில் சாமி கும்பிட வருவது வழக்கமாக .
மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் திருவிழா விற்காக சிறிய கிடாய்கள் கோவில் வளாகத்தில் நேர்த்திக்கடனாகவும் விடப்பட்டன.
- அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.
- விழாவில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. மதிய உணவு வழங்கினார்.
தஞ்சாவூர்:
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலா ளருமான உதயநிதிஸ்டாலின் 46-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாநகர தி.மு.க. சார்பில் மேம்பாலம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.
மாநகர செயலாளரும் மேயருமான சண்.ராமநாதன் ஏற்பாட்டில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. மதிய உணவு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட அவை தலைவர் இறைவன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, பகுதி செயலாளர்கள் சதாசிவம், மேத்தா, நீலகண்டன், கார்த்திகேயன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் ராணிகண்ணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யா, மாநகர பொருளாளர் காளையார் சரவணன், கவுன்சிலர்கள் உஷா, அண்ணா.பிரகாஷ், லெனின். இளைஞரணி வாசிம்ராஜா மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- ஸ்ரீபகவத் கீதை உணவு பழக்கத்திற்கும் மனதிற்கும் உள்ள தொடர்பினை விளக்குகிறது
- அசைவ உணவு பழக்கத்தை கைவிடுவது கடினமான செயல் அல்ல
இந்தியாவில் பெரும்பாலானோர்கள் அசைவம், சைவம் இரண்டையும் உண்பவர்களாகவும், குறைந்தளவில் சில பேர் சைவ உணவை மட்டுமே உண்ணும் வழக்கத்தையும் கொண்டுள்ளனர். பிற நாடுகளில் பெரும்பாலும் அசைவ உணவே அன்றாட உணவு.
சைவ உணவு பழக்கத்திலேயே பால் மற்றும் பாலினால் தயாரிக்கப்படும் பொருட்களையும் உணவில் தவிர்க்கும் முறை வேகனிசம் எனப்படுகிறது. வேகனிசத்தை கடைபிடிப்பவர்கள் மிகவும் குறைவானவர்கள்.
இன்று அக்டோபர் 1, 'உலக சைவ தினம்' என கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு மனிதரும் கடைபிடிக்கும் உணவு பழக்கம், அவர்களின் உடல் பலம், மன உறுதி மட்டுமின்றி ஆன்மிக தேடலிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் பண்டைய காலம் முதல் சைவ உணவு பழக்கம் பெரிதும் போற்றப்படுகிறது. இந்திய கலாச்சாரம் போர், உயிர் கொலை, மிருக வதை உட்பட பிற உயிரினங்களுக்கு தீங்கு விளைவித்து அதனால் பெறப்படும் எந்த வெற்றியையும் இன்பத்தையும் ஆதரிப்பதில்லை.
அசைவத்தை அறவே ஒதுக்குமாறு கூறாவிட்டாலும் இந்திய கலாச்சாரத்திலும், இந்து மத நூல்களிலும் சைவ உணவு மிகவும் உயர்வாக பேசப்படுகிறது. இந்து மத புனித நூல்களில் ஒன்றான ஸ்ரீபகவத் கீதையில் உணவு பழக்கத்திற்கும் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பது விளக்கப்படுகிறது.
நாம் கொண்டாடும் பண்டிகைகளிலும், பழக்க வழக்கங்களிலும் சில தினங்களுக்கு அசைவத்தை ஒதுக்கி வைப்பது நமது குடும்பங்களில் காலம் காலமாக நடக்கிறது.
உடலாரோக்கியத்தில் செரிமானமே முக்கிய பங்கு வகிக்கிறது என அனைத்து மருத்துவ முறைகளும் ஏற்கின்றன. நல்ல செரிமானத்திற்கு சைவ உணவு உதவுவதை ஆங்கிலேய மருத்துவர்களே ஒப்பு கொள்கின்றனர்.
குழந்தைகள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், திருமணமானவர்கள், கர்ப்பிணிகள், நோய்வாய்பட்டவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள் மற்றும் வயோதிகர்கள் உட்பட அனைவருக்கும் அன்றாட வாழ்வியலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சைவ உணவிலேயே தேவைக்கு அதிகமாக உள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நம்மில் பலர் அசைவ உணவு வகைகள் எங்கெங்கு கிடைக்கின்றன என்பதை தேடி தெரிந்து கொண்டு அங்கு சென்று ஒரு பிடி பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒரு உயிரை பலவந்தமாக கொன்று அதன் மாமிசத்திலிருந்து தயாரிக்கப்படும் உணவினால் நாவிற்கு கிடைக்கும் சுவைக்கு அடிமையாகி அசைவத்தை உண்ணும் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் பலர் தவிக்கின்றனர்.
ஆனால், அது அத்தகைய கடினமான செயல் அல்ல.
மீன்கள், கோழிகள், ஆடுகள் மற்றும் மாடுகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் மனிதர்களை போன்றே உணர்வுள்ள ஜீவன்கள்தான். தன்னிடம் சிக்கி கொண்ட மனிதர்களை பிற மனிதர்கள் கொல்லும் போது, சிக்கியவர்களுக்கு ஏற்படும் வலியும், அச்சமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு மிக தீவிரமானது.
உணவுக்காக கொல்லப்படும் உயிரினங்களும், அவை கொல்லப்படும் சில நொடிகள் இதே போன்றுதான் பரிதாபமாக தவிக்கும் என்பதை சில வினாடிகள் உணர்ந்து சிந்தித்தால், நம் மனதில் தோன்றும் இரக்கமே அசைவ உணவு பழக்கத்திலிருந்து நம்மை விடுபட வைக்கும்.
தன்னூன் பெருக்கற்கு தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்
தன் உடம்பை பெருக்க செய்வதற்காகவே மற்றோரு உயிரின் உடம்பை தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும் எனும் திருக்குறள் வாசகங்களை உணவு மேசைக்கருகே சுவற்றில் மாட்டி வைத்தால், தட்டில் அசைவம் இருந்தாலும் எடுத்து உண்ண மனம் வருமா?
- அப்போது குழம்புக்குள் பாலித்தீன் கவர் கிடந்ததை பார்த்தனர்.
- வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட உணவு மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பினார்கள்.
சென்னை:
தியாகராய நகரில் ஒரு அசைவ உணவகம் உள்ளது. பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவை சாப்பிட இந்த ஓட்டலுக்கு வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வருவார்கள்.
நேற்று பகலில் ஐ.டி. ஊழியர்கள் 15 பேர் மதிய உணவு சாப்பிட சென்றனர். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டனர்.
சிறிது சாப்பிட்டதுமே உணவு சரியில்லை என்று தெரிய வந்தது. உடனே ஓட்டல் ஊழியர்களிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் ஊழியர்கள் தரப்பில் உணவு தரமானதாகத்தான் உள்ளது. முழுவதுமாக சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் பெண் ஊழியர்கள் சிலர் உணவு கெட்டு போனது போல் தெரிகிறது. வாந்தி வருவது போல் உள்ளது என்று சத்தம் போட்டதால் ஓட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இது பற்றி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளார்கள். உடனடியாக அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினார்கள். வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட உணவு மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பினார்கள்.
இதையடுத்து ஓட்டல் உரிமையாளரை வர வழைத்து அவர் முன்னிலையில் சமையல் கூடத்தில் சமைத்து வைத்திருந்த உணவுகளை ஆய்வு செய்தார்கள். அப்போது குழம்புக்குள் பாலித்தீன் கவர் கிடந்ததை பார்த்தனர். குளிர்பதன பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த இறைச்சியும் கெட்டுப்போய் இருந்தது. மேலும் அதற்குள் கரப்பான் பூச்சிகள் ஓடிக் கொண்டிருந்தன.
அவற்றை பார்வையிட்ட அதிகாரிகள் இந்த உணவை நீங்கள் சாப்பிடுவீர்களா என்று கடை ஊழியர்களிடம் கோபத்தில் கேட்டனர். அதை தொடர்ந்து கெட்டுப்போன உணவுகளை எடுத்து சென்று அழித்தனர். மேலும் தற்காலிகமாக அந்த ஓட்டலை பூட்டி சீல் வைத்தனர். தரமற்ற உணவுகள் பற்றி விளக்கம் அளிக்கும் படி ஓட்டல் உரிமையாளருக்கு நோட்டீசும் கொடுக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்