என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வழக்கறிஞர்"
- மரண தண்டனை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா?
- அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
உச்சநீதிமன்றத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகம் மற்றும் காப்பக (NJMA) திறப்பு விழாவின் போது இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஏஐ (AI) வழக்கறிஞரை அறிமுகப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து இந்தியாவில் மரண தண்டனை குறித்த கேள்வியைக் கேட்டு ஏஐ வழக்கறிஞரின் அறிவை சோதிக்க தலைமை நீதிபதி முடிவு செய்தார். "இந்தியாவில் மரண தண்டனை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா?" என்று தலைமை நீதிபதி கேட்டார்.
இதற்கு பதில் அளித்த ஏஐ வழக்கறிஞர், "ஆம், இந்தியாவில் மரண தண்டனை என்பது அரசியலமைப்புச் சட்டம். இது உச்ச நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட அரிதான வழக்குகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது, அங்கு குற்றம் மிக கொடூரமாக இருக்கும் போது அத்தகைய தண்டனைக்கு உத்தரவாதம் அளிக்கிறது" என்று கூறியது.
இந்த பதில் சந்திரசூட் மற்றும் மற்ற வழக்கறிஞர்களை கவர்ந்தது. அருங்காட்சியக திறப்பு விழாவில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "இந்த அருங்காட்சியகத்தின் கருத்தாக்கம் மற்றும் திட்டமிடலுக்கு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் எடுத்ததாக கூறினார். இந்த அருங்காட்சியகம் நம் தேசத்தின் வாழ்க்கைக்கு நீதிமன்றத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது."
"இங்குள்ள எனது சகாக்கள் அனைவரின் சார்பாகவும், இந்த அருங்காட்சியகத்தை இளைய தலைமுறையினருக்கு இந்த அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று கூறினார்.
தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் 65 வயதை எட்டியவுடன் பதவியில் இருந்து விலக உள்ளார். இதற்கு மறுநாளான நவம்பர் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவியேற்க உள்ளார்.
#WATCH | Delhi | At the inauguration ceremony of the National Judicial Museum and Archive (NJMA) at the Supreme Court, Chief Justice of India DY Chandrachud interacts with the 'AI lawyer' and asks, "Is the death penalty constitutional in India?" pic.twitter.com/ghkK1YJCsV
— ANI (@ANI) November 7, 2024
- பாஜக எம்எல்ஏ யோகேஷ் வர்மாவை பொதுவெளியில் வழக்கறிஞர் ஒருவர் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் பாஜக எம்எல்ஏ யோகேஷ் வர்மாவை பொதுவெளியில் வழக்கறிஞர் ஒருவர் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் வழக்கறிஞரை கடுமையாக தாக்கினர். பின்னர் போலீசார் இதில் தலையிட்டு சமாதானப்படுத்த முற்பட்டனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
எம்எல்ஏவை அறைந்த வழக்கறிஞர் உள்ளூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் அவதேஷ் சிங் என தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு தேர்தல் நடைமுறையில் மோசடி நடந்துள்ளது ஆகவே தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று எம்எல்ஏ யோகேஷ் வர்மா கடிதம் எழுதியிருந்தார். ஆனால், திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்று கூடுதல் மாவட்ட நீதிபதி சஞ்சய் சிங் தெளிவுபடுத்தியுள்ளார்.
- முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி சார்பில் ஆஜராகி உள்ளார்.
- ஏஜி நூரானி ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.
முன்னாள் உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், வரலாற்றாளர், மற்றும் நூலாசிரியருமான ஏஜி நூரானி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 93 ஆகும்.
சட்டத்துறை ஆய்வாளரான ஏஜி நூரானி- தி காஷ்மிர் குவெஸ்டியன், பத்ருதின் தியாப்ஜி, மினிஸ்டர்ஸ் மிஸ்கன்டக்ட், பிரெஸ்நீவ்ஸ் பிளான் ஃபார் ஏசியன் செக்யூரிட்டி, தி பிரெசிடென்ஷியல் சிஸ்டம், தி டிரையல் ஆஃப் பகத் சிங் மற்றும் கான்ஸ்டிடியூஷனல் குவெஸ்டியன்ஸ் இன் இந்தியா என ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.
மேலும், பல்வேறு தனியார் நாளேடுகளில் கட்டுரை எழுதி வந்துள்ளார். 1930 ஆம் ஆண்டு பாம்பாயில் பிறந்த ஏஜி நூரானி 1960 முதல் எழுத்துத் துறையில் ஈடுபட்டு வந்தார். தான் பிறந்த ஊரிலேயே உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருந்த ஏஜி நூரானி தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி சார்பில் ஆஜராகியுள்ளார்.
ஏஜி நூரானி உயிரிழப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், முன்னாள் வழக்கறிஞர்கள், சட்டத்துறை நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- கட்சிகாரங்கள் தொடர்பாக வழக்கறிஞர் விஜய் சிங் மற்றும் மோஹித் ஆகிய இருவரிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது
- மற்ற வழக்கறிஞர்களும் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு சண்டையிட்டுக்கொண்ட வீடியோ இணையத்தில் பரவியது.
தலைநகர் டெல்லியின் சகார்பூர் [Shakarpur] பகுதியில் உள்ள சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தங்களது கட்சிக்காரர்கள் தொடர்பாக வழக்கறிஞர் விஜய் சிங் மற்றும் மோஹித் ஆகிய இரண்டு வழக்கறிஞர்களுக்கிடையில் நீதிமன்ற வளாகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை மூண்டுள்ளது.
இது கைகலப்பாக மாறவே அங்கிருந்த மற்ற வழக்கறிஞர்களும் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு சண்டையிட்டுக்கொண்ட வீடியோ இணையத்தில் பரவியது.
Lawyers Fighting Police LaughingA video allegedly from Delhi's Karkardooma Court today shows a few lawyers fighting with each other in the court premises. pic.twitter.com/tgorgJ5hHC
— Ravi Rana (@RaviRRana) July 22, 2024
இதுகுறித்து துணை பாதுகாப்பு ஆணையர் பேசுகையில், இந்த விவகாரம் வழக்கறிஞர்களின் பார் அசோசியேசன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட்டு நீதிமன்ற வளாகத்துக்குள் அமைதியை குலைக்கும் வகையில் நடந்துகொண்ட குற்றத்துக்காக சட்டப்பிரிவு 126/169 பாரதீய நகரிக் சுரக்ஷ சன்ஹிதா சட்டம் [ முன்னதாக சிஆர்பிசி 107/150] கீழ் நடவடிக்கை எடுக்கப்டும் என்று உறுதியளித்துள்ளார்.
- 1987 ஆம் ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்று வழக்கறிஞரான ஸ்டார்மர், மனித உரிமைகளில் நிபுணத்துவம் பெற்றார்
- ஆப்பிரிக்கா, கரீபியன் ஆகிய பிராந்தியங்களில் உள்ள தூக்குத்தண்டனை கைதிகளுக்காக வாதாடினார்.
பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி மொத்தம் உள்ள 650 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களையும் தாண்டி 408 இடங்களில் வெற்றி பெற்று 14 வருடங்கள் களைத்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. கடந்த 2010 முதல் ஆட்சியில் இருந்த ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 136 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு மிகவும் பின்னடைவை சந்தித்து படுதோல்வி அடைந்துள்ளது. தற்போது வெற்றி பெற்றுள்ள தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிராமராக பதிவியேற்க உள்ளார்.
61 வயதாகும் கெய்ர் ஸ்டார்மர் தனது இளமைப் பருவத்தில் ப்ளூட், பியானோ, வயலின் உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசிக்கும் இசைக்கலைஞராக இருந்துள்ளார். தனது இளம் வயதிலேயே சோசியலிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட கெய்ர் தனது 16 வயதில் தொழிலாளர் கட்சியின் இளம் சோசியலிஸ்ட் கூட்டமைப்பில் உறுப்பினராக சேர்கிறார்.
லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற கெயர் ஸ்டேமர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு பயின்றார். 1987 ஆம் ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்று வழக்கறிஞரான ஸ்டேமர், மனித உரிமைகளில் நிபுணத்துவம் பெற்றார். ஆப்பிரிக்கா, கரீபியன் ஆகிய பிராந்தியங்களில் உள்ள தூக்குத்தண்டனை கைதிகளுக்காக வாதாடினார்.
1990 களில் மெக் லைப்ல் என்ற நிறுவனம் சுற்றுசூழல் முறைகேடுகளில் ஈடுபட்டதை எதிர்த்தவர்களுக்காக வாதாடினார். பின்னர் 2008 ஆம் ஆண்டு பிரிட்டன் மற்றும் வேல்ஸ் அரசு வழக்கறிங்கர்களுக்கான இயக்குனர் பதவியில் அமர்ந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டிலே அவரின் முழுமையான அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது. 2015 பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு லண்டலில் உள்ள ஹோல்பார்ன் மற்றும் செயிண்ட் பான்க்ராஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரமி கார்பினுக்கு மிகவும் நெருக்கமானவராக கெய்ர் ஸ்டார்மர் இருந்தார்.
கடந்த 2019 பாரளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி தோல்வியடைந்த நிலையில் அக்கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் போட்டியிட்டு கெய்ர் வெற்றிபெற்றார். கெய்ரின் வெற்றியுடன் தொழிலாளர் கட்சியின் புதிய சகாப்தம் தொடங்கியது.
கடந்த 2020 ஆம் ஆண்டு பிரெக்ஸிட் என்ற திட்டத்தின்மூலம் பிரிட்டன் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியது. ஆனால் அதற்கு எதிரின நிலைப்பாட்டை கொண்டவர் கெய்ர். கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக இரண்டாம் எலிசபெத் மகாராணியிடன் கிநைட்ஹூட் மற்றும் சர் பட்டம் பெற்றார். கெய்ர் ஸ்டார்மர் எப்போதும் தான் ஒரு உழைப்பாளி வர்க்கப் பின்னணி கொண்ட நபர் என்று கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
- சிறுவன் தனது வகுப்பு தோழியுடன் ஒரு கடையில் கூல்ட்ரிங்க்ஸ் குடித்துள்ளார்.
- சிறுவனை கொலை செய்து விடுவேன் என்றும் பெண்ணின் தந்தை மிரட்டியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வழக்கறிஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து 17 வயது சிறுவனை கடத்தி சென்று கொடுமைப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்த சிறுவனை உயிருடன் காவல்துறையினர் மீட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய கல்யாண்பூர் காவல் உதவி ஆணையர் அபிஷேக் பாண்டே, "பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவன் மருந்தகம் இளங்கலை படிப்பு படித்து வருகிறார். அந்த சிறுவன் தனது வகுப்பு தோழியுடன் ஒரு கடையில் கூலட்ரிங்க்ஸ் குடித்துள்ளார். இதனை பார்த்த பெண்ணின் தந்தை அந்த சிறுவனை தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி சென்று கொடுமைப்படுத்தியுள்ளார்.
அந்த சிறுவனை கொலை செய்து விடுவேன் என்றும் பெண்ணின் தந்தை மிரட்டியுள்ளார். மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.
சிறுமியின் தந்தையான வழக்கறிஞர் பிரஜ் நரேன் நிஷாத் மற்றும் அவரது சகோதரர் தேஜ் நரேன் மீது கடத்தல், கொலை முயற்சி உட்பட பல பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அதே சமயம் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகப் பாதிக்கப்பட்ட சிறுவன் மீது போஸ்கோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்களின் கடும் அழுத்தத்தின் காரணமாகவே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அப்பாவிகள் மீது பொய்வழக்கு பதிவு செய்து துன்புறுத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது
- மாநில, மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருமளவில் இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் கலந்து கொள்வர்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞரும், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளருமான கணல் கதிரவனை, அவருக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத பொய் வழக்கு ஒன்றில் சூளகிரி காவல்துறையினர் சேர்த்திருக்கின்றனர். அப்பாவிகள் மீது பொய்வழக்கு பதிவு செய்து துன்புறுத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
வழக்கறிஞர் கணல் கதிரவன் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்தும், அந்த வழக்கில் இருந்து அவரை நீக்க வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் வரும் 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் பா.ம.க செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் தலைவருமான வழக்கறிஞர் க. பாலு பங்கேற்று கண்டன உரை நிகழ்த்துவார். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ம.க. மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருமளவில் இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் கலந்து கொள்வர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வழக்கறிஞர் சங்கத்தினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
- நீதிமன்ற வளாகத்தின் முன்பு நடைபெற்றது
கரூர்
மத்திய அரசு இந்திய குற்றவியல் சட்டங்களில் மாற்றங்களை அறிவிக்கும் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த மசோதாவில் குற்றவியல் சட்டங்களின் 3 முக்கிய பிரிவான இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை சட்டம், இந்திய சாட்சியை சட்டம் ஆகியவற்றை சமஸ்கிருதத்தில் மாற்றியும், சட்டத்தில் உள்ள சரத்துகளில் பல்வேறு மக்கள் விரோத சட்டவிரோத சரத்துகளும் புதிதாக திணிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் இந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான புதிய மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களின் கருத்துகளை கேட்காமல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சட்டத்தினை உடனே திரும்ப பெற கோரியும் நேற்று கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பு கரூர் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதற்கு கரூர் வழக்கறிஞர் சங்க துணை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் பார்த்திபன், செயலாளர் தமிழ்வாணன், நன்மாறன் உள்பட வழக்கறிஞர்கள் பலர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
- வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நீதிபதி வெங்கிடலட்சுமி சான்றிதழ் வழங்கினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தேர்தல் அதிகாரிகள் வழக்கறிஞர்கள்சந்திவுரபாண்டி, குரு தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவராக முத்துமணி, துணைத்தலைவர்களாக கார்த்திக்கேயன், தங்கபாண்டி, செயலாளராக பாலகிருஷ்ணன், துணைச்செயலாளர்களாக சிவராமன், காசிநாதன், பொருளாளராக அழகர்சாமி, நூலகராக துரைமுருகன், செயற்குழு உறுப்பினர்களாக ராமர், கார்த்திக்குமார், நேதாஜி, வீரமாரி பாண்டியன், நாச்சியார், கோபி, கார்த்திக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நீதிபதி வெங்கிடலட்சுமி சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் நெடுஞ்செழியன், அரசு வழக்கறிஞர்கள் மோகன்குமார், பார்த்தசாரதி, மகேஷ், மூத்த வழக்கறிஞர்கள் செல்வகுமார், அழகேசன், முத்துராமலிங்கம், வெள்ளைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்