என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுரங்கம்"
- அழகர்மலை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி ?
- எந்த அளவுகோலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக விளக்கம்.
மதுரை அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திறகு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.
அரிட்டாபட்டி கிராமம், கடந்த 2022ம் ஆண்டு தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டது. 7 மலைகளை கொண்ட இந்த கிராமப்பகுதியில் புராதன சின்னங்கள், அரியவகை பறவைகள் உள்ளன.
அரிட்டாபட்டி பல்லுயிர் பாராம்பரிய தலம் அழகர்மலை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக, மதுரை அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது
மேலும், மத்திய அரசு அனுமதி அளித்துள்ள குறிப்பிட்ட பகுதி எது என்பது குறித்தும் அது எந்த அளவுகோலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- லெபனானை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் படை தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
- லெபனானின் தெற்கே அமைந்த பயங்கரவாத சுரங்கத்தை தகர்த்து விட்டோம் என இஸ்ரேல் தெரிவித்தது.
டெல் அவிவ்:
சர்வதேச நாடுகளின் அழுத்தத்தையும் மீறி பாலஸ்தீனம் மற்றும் லெபனான்மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பாலஸ்தீனத்தில் இதுவரை 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலின் நடத்திய பதிலடி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர், ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி நபில் குவாவக் உள்பட பலர் கொல்லப்பட்டனர்.
லெபனானை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் படை தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், லெபனானின் தெற்கே அமைந்த பயங்கரவாத சுரங்கத்தின் 250 மீட்டர் பகுதியை தகர்த்து விட்டோம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், அவர்கள் சுரங்கத்திற்குள் இருக்கும் காட்சிகள் காணப்படுகின்றன. இதில் சமையலறை ஒன்றும், வசிக்கும் இடம், போருக்கு பயன்படுத்தும் பைகள், குளிர்சாதன பெட்டி ஒன்று மற்றும் பிற பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஹிஸ்புல்லாவின் ரத்வான் படைகள் இஸ்ரேலுக்குள் படையெடுக்க பயன்படுத்துவதற்காக இந்த சுரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
- கண்ணிவெடிகள் மற்றும் போரின் போது பொதுமக்கள் மீது வெடிமருந்து தாக்குதல் பற்றிய விழிப்புணர்வு இதன் நோக்கம்.
- கண்ணிவெடி தாக்குதலால் பொதுமக்களின் வாழ்க்கை, சமூக , பொருளாதார வளர்ச்சியில் தடை ஏற்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் சுரங்க நடவடிக்கை சேவை (UNMAS) சார்பில் சர்வதேச சுரங்க விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது
கண்ணிவெடிகள் மற்றும் போரின் போது பொதுமக்கள் மீது வெடி மருந்து தாக்குதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அமைதியை உருவாக்குதல், தாக்குதலுக்கு உள்ளான ஊனமுற்றோர்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல் இதன் நோக்கம்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண உலகளாவிய சமூகத்தின் முயற்சிகள் இருந்தபோதிலும், கண்ணிவெடி தாக்குதல் பிரச்சினை ஒரு முக்கியமான சவாலாக உள்ளது. கண்ணி வெடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் மற்றும் அமைதியை நிலைநாட்டவும் UNMAS உறுதி கொண்டுள்ளது.
சர்வதேச சுரங்க விழிப்புணர்வு தினம் ஏன் கடைபிடிக்கப்படுகிறது. அதன் கருப்பொருள் என்ன? மற்றும் அதன் வரலாறு நாம் அறிந்து கொள்வது அவசியம்.
கடந்த 2005 டிசம்பர் -8 ந் தேதி ஐ.நா பொது சபை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4- ந் தேதியை சுரங்க விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கக்கப்படும் என அறிவித்தது. சுரங்கங்கள் மற்றும் போரினால் பொதுமக்கள் கடும் அச்சுறுத்தல் அடைகிறார்கள்.
இதில் கண்ணிவெடி தாக்குதலில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் சபை பலவித அறிவுரைகள் வழங்கி வருகிறது. மேலும், கண்ணிவெடி தாக்குதலால் பொதுமக்களின் வாழ்க்கை, சமூக , பொருளாதார வளர்ச்சியில் தடை ஏற்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஐக்கிய நாடுகளின் சுரங்க நடவடிக்கை சேவையின் ( UNMAS )செய்து வருகிறது. உலகம் முழுவதும் பொதுமக்கள் அமைதியாக, பாதுகாப்பாக வாழ உரிய மனிதாபிமான உதவிகளை ஐ.நா. அமைப்பு செயல்படுத்தி வருகிறது.
சுரங்க விபத்தில் காயமடைந்து உயிர் பிழைத்தவர்கள், கண்ணி வெடியால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேவையான உதவிகள் செய்து இதன் மூலம் உலகில் அமைதியை நிலை நாட்ட பாடுபட்டு வருகிறது.
இந்த சேவைக்கு 164 நாடுகள் ஒப்புதல் அளித்து உலக அமைதிக்காக ஐ.நா. உடன் பாடுபட்டு வருகின்றன. எனவே இந்நாளில் நாம் அனைவரும் பாதுகாப்பாக வாழ உறுதியேற்போம்.
- மற்ற போகங்களில் எள், மணிலா பயிரையும் விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்,
- வசாயிகள் சுரங்க நீரை பயன்படுத்தி 2 போகம் நெல் பயிர் செய்தனர்.
கடலூர்:
வடலூர் அருகே உள்ள கருங்குழி, மேலகொளக்குடி, கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி உள்ள 260 ஏக்கர் பரப்பில் இசா பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நீராதாரமாக ஊத்தங்கால், வெள்ளூர், ஊமங்கலம், உள்ளிட்ட கிராமங்களின் மழை நீர் வடிகால் மூலமாக வரும். இதனால் நிரம்பும் ஏரியின் உபரி நீர் நாட்டேரி என்கிற வாலாஜா ஏரியின் மூலமாக, பெருமாள் ஏரி வழி சென்று கடலூர் கடலில் கலக்கும்,மழை காலங்களில் நிரம்பும் நீரைக் கொண்டு, மேலக்கொளக்குடி, கருங்குழி உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்து 500 ஏக்கரில் ஒருபோகம் சம்பா நெல் பயிரும், மற்ற போகங்களில் எள், மணிலா பயிரையும் விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்,என்.எல்.சி.யில் 2-வது சுரங்கம் அமைக்கப்பட்ட பின்பு, நீர் வரத்துக்கான வழிகள் தடைபட்டது. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர், நீர்வரத்துக்கான ஆதாரங்களாக மாறி, கோடைக்காலங்களில் விவசாயத்திற்கு ஆதாரமாகவும், மழைகாலங்களில் வெள்ளமாக பெருக்கெடுத்து, கருங்குழி, கொளக்குடி, நைனார்குப்பம், மருவாய், ஓணான்குப்பம், திருவெண்ணை நல்லூர், பாதிரிமேடு, கல்குணம் விவசாய நிலங்கள் மூழ்கும் அபாய நிலை தொடர்ந்தது. இருந்தபோதும் விவசாயிகள் சுரங்க நீரை பயன்படுத்தி 2 போகம் நெல் பயிர் செய்தனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக என்எல்சி நிறுவனம் நிறுவனத்தின் மூலம் வெளியேற்றப்படும், தண்ணீர் இந்த ஏரியில் விடாததால், சம்பா பயிர்களையும், குருவை பயிர்களையும் முறையாக செய்ய முடியாமல் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். இயற்கையாக கிடைக்கும் மழைநீரால், ஏரி நிரம்ப வழியும் இல்லை, என்.எல்.சி. கழிவுகளால் ஏரியும் தூர்ந்து மேடாகிபோனது. மழையும் இல்லை, தண்ணீரும் இல்லை, இதனால் சம்பா நெல் பயிரிட்ட விவசாய நிலம் காய்ந்து கரம்பாக கிடக்கிறது, இதனால் நடவு செய்ய முடியாமல் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த விஷயத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும். தூர்ந்து போன ஏரியினை தூர்வாரி ஆழப்படுத்தவேண்டும். ஏரிக்கு நீர் கிடைக்க வழி செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விவசாயத்திற்கு 'தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் வழி செய்யுமா? விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்