என் மலர்
நீங்கள் தேடியது "Commitment"
- கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் அருகே வேலங்குடி ஊராட்சியில் 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
குடியரசு தினத்தை யொட்டி நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் ஊராட்சிகளில் உள்ள மக்கள் கலந்து கொண்டு கிராம வளர்ச்சிக்கு தேவையான கருத்துக்களை வழங்கி, கோரிக்கைகளை தெரியப்படுத்திட வேண்டும்.
இதன்மூலம் கிராம ங்களின் வளர்ச்சிக்கு தேவை யான நடவடிக்கைகளை எடுக்க உதவியாக இருக்கும். வேலங்குடி ஊராட்சியில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு மற்றும் இதர தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி மற்றும் பெண் குழந்தை காப்போம் ஆகிய உறுதிமொழிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் அனைவரும் எடுத்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் ஒன்றி யக்குழுத்தலைவர் புலிவலம் தேவா, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, திட்ட இயக்குநர் மகளிர்திட்டம் வடிவேல், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பொன்னியின்செல்வன், வேளாண்மை இணை இயக்குநர் ஆசீர் கனகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உண்மையுடன் பணியாற்றுவது எனது கடமையாகும்.
- மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
தஞ்சாவூர்:
மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அதன்படி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் என அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அப்போது இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்ப டைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையு டனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மூன்னதாக மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதேபோல் தொழுநோய் ஒழிப்பு குறித்தும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், சுகாதாரத்துறை துணை இயக்குனர் நமச்சிவாயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கண்தானம் பெறப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- அனைவரும் கண்தான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் வசித்து வந்த ரவிச்சந்திரன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மூலம் கண்தானம் பெறப்பட்டு மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கண் தானம் வழங்கிய குடும்பத்தினருக்கு பாராட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கி, ராய் டிரஸ்ட் சார்பில் கண்தான சான்றிதழை குடும்பத்தினரிடம் வழங்கினார்.
இதில் கருணாநிதி, ராய் டிரஸ்ட் நிறுவனர் துரை ராயப்பன், சென்னை ரவிச்சந்திரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
இது குறித்து ராய் டிரஸ்ட் நிறுவனர் துரை ராயப்பன் கூறுகையில்:-
அனைவரும் மண்ணுக்கு போகும் கண்ணை தானம் செய்து அடுத்தவரின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என்றார்.
தொடர்ந்து, அனைவரும் கண்தான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பாக சயீத் சாஹிப் ஓர் சகாப்தம் நினைவு தின உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- தொகுதி தலைவர் ஷா நாவஸ்கான் தலைமை தாங்கினார். செயலாளர் பாபு வரவேற்புரை நிகழ்த்தினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பாக சயீத் சாஹிப் ஓர் சகாப்தம் நினைவு தின உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது தொகுதி தலைவர் ஷா நாவஸ்கான் தலைமை தாங்கினார். செயலாளர் பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் தாஹிர் அலி முன்னிலை வகித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் முகமத் ரபி கலந்து கொண்டு முன்னாள் தேசிய தலைவர் மறைந்த சயீத் சாஹிப் தியாகங்களையும், ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான போராட்ட களத்தில் முன்னின்று செயல்பட்ட துணிச்சலையும் நினைவுப் படுத்தி அவர் வழியில் மக்கள் உரிமைக்காக முன்னின்று போராட உறுதி ஏற்க வேண்டும் என எடுத்துரைத்தார். மூரார்பாது கிளை தலைவர் சிராஜ், பொருளாளர் பஷீர், சமூக ஆர்வலர் கண்ணன், அன்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். தொகுதி பொருளாளர் ரகமத்துல்லா நன்றி கூறினார்.
- மதுரை அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
- வீடு, வீடாகச் சென்று குப்பைகளை தரம் பிரித்து வழங்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் கேட்டுக் கொண்டனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடமருதூர் ஊராட்சியில் ''நம்ம ஊரு சூப்பரு'' மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசர், யூனியன் அலுவலர் வடிவு, ஊராட்சி செயலாளர் ஸ்டாலின் முன்னிலையில் வீடு, வீடாகச் சென்று குப்பைகளை தரம் பிரித்து வழங்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் கேட்டுக் கொண்டனர். இது தொடர்பான விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
- கலெக்டர் பழனி தலைமையில் கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
விழுப்புரம்:
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். அதையொட்டி விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கலெக்டர் பழனி தலைமையில் கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அப்போது போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், எம்.எல்.ஏ.க்கள் புகழந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், கோட்டாட்சியர் பிரவீனா குமாரி, தாசில்தார் வேல்முருகன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கல்லூரி முதல்வர் சிவகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- தமிழ்நாடுஅரசு சார்பில் போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு என்ற நோக்கத்தோடு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
- அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி ,கல்லூரி சார்பில் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி, விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
குமாரபாளையம்:
தமிழ்நாடுஅரசு சார்பில் போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு என்ற நோக்கத்தோடு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி ,கல்லூரி சார்பில் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி, விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நகராட்சி ஆணையாளர் சரவணன் முன்னிலையில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நகராட்சி அதிகாரிகள், அன்பு கலை அறிவியல் கல்லூரி தாளாளர் பெருமாள், கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம், தலைவர் சீனிவாசன், துணை முதல்வர் மஞ்சுளா மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.
- பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
கடலூர்:
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி இன்று காலை சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தாளாளர் எஸ்.குமார் மற்றும் பள்ளியின் முதல்வர் ஏ.ரூபியால் ராணி முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் தலைமை கல்வி அலுவலர் எஸ். பாலதண்டாயுதபாணி தலைமையில் துணை முதல்வர் எஸ்.அறிவழகன் உறுதிமொழி கூறினார். இந்த நிகழ்ச்சியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இறுதியில் பள்ளியின் தாளாளர் எஸ்.குமார் போதை பொருட்களின் தீங்குகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
- மருதுபாண்டியர் நினைவிடத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கருணாஸ் மரியாதை செலுத்தினர்.
- வீரவணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பரமக்குடி
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் 222-வது குருபூஜையையொட்டி முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவர்கள் வீரவணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் மேற்கு மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் கார்த்தி, கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பசும்பொன் பாலாஜி, மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியன், துணைச் செயலாளர் பசும்பொன் சௌந்தர், விருதுநகர் மாவட்ட செயலாளர் எஸ்.பி.ராமு உட்பட சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.