search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியலமைப்பு"

    • காங்கிரஸ் மோடியை மனத்தவளாவில் நம்பிக்கை இழக்கச் செய்துள்ளதாகவும், அரசியலமைப்பை மதித்துச் செயல்பட நிர்ப்பந்தித்துள்ளதாகவும் பேசியிருந்தார்
    • ஒரே நாட்டுக்கு 2 வகையான சட்டம் மற்றும் கோடி இருப்பதைக் காங்கிரஸ் ஆதரிக்கிறதா என்று விளக்கம் கொடுக்க வேண்டும்

    ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசங்களாக பாஜக அரசால் பிரிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. 90 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீருக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் பரூக் மற்றும் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியோடு காங்கிரஸ் கூட்டணி அமைத்து களம் காண்கிறது.

    ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டு இந்த கூட்டணியை உறுதி செய்துள்ளனர். காஷ்மீரில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் மோடியை மனத்தவளாவில் நம்பிக்கை இழக்கச் செய்துள்ளதாகவும், அரசியலமைப்பை மதித்துச் செயல்பட நிர்ப்பந்தித்துள்ளதாகவும் பேசியிருந்தார். மேலும் நேற்று உத்தரப் பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு மூலம் இட ஒதுக்கீட்டை மேம்படுத்த முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சிகளின் கூட்டணி குறித்தும், ராகுல் காந்தியின் அரசியலமைப்பு பேச்சு குறித்தும் கடுமையாக விமர்சித்து பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சேசாத் பூனாவாலா [Shehzad Poonawalla] வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ராகுல் காந்தி அரசியலமைப்பு குறித்துப் பேசுவது, சாத்தான் பகவத்கீதையையும், குரானையும் ஓதுவது போன்றது என்று சாடியுள்ளார்.

    மேலும் அவரது எக்ஸ் பதிவில், ராகுல் உண்மையிலேயே அரசியலமைப்பு மற்றும் இட ஒதுக்கீடு குறித்து அக்கறை கொண்டிருந்தால் காங்கிரஸ் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி பற்றி விளக்கம் கொடுத்தாக வேண்டும். அதாவது, தேசிய மாநாட்டுக் கட்சியின் கொள்கைகளான, சட்டப்பிரிவு 370 வதை திரும்பக் கொண்டு வருவதையும், ஒரே நாட்டுக்கு 2 வகையான சட்டம் மற்றும் கோடி இருப்பதைக் காங்கிரஸ் ஆதரிக்கிறதா என்று விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

    • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பைக் கிழித்து எறிந்துவிடும் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
    • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சியும் என்டிஏ கூட்டணியின் பாஜக கட்சியும் ஒன்றை ஒன்று கடுமையாக விமர்சித்து வருகிறது. காங்கிரஸ் வாக்கு ஜிகாத்தில் ஈடுபடுகிறது என்று பாஜக குற்றம்சாட்டிவரும் நிலையல்ல பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பைக் கிழித்து எறிந்துவிடும் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

    இந்நிலையில் என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பேட்டியில் அவர் பேசுகையில், 1976 ஆம் ஆண்டில், முதல் முறையாக இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் மாற்றம் செய்யப்பட்டது. அதை இந்திரா காந்திதான் செய்தார்.

     

    ஆனால் இப்போது தேவையில்லாமல், பாஜக அரசியலமைப்பை மாற்றும் என்று இதை தேர்தல் பிரச்சனையாக்க காங்கிரஸ் முயல்கிறது என்று கூறினார். முன்னதாக கடந்த 1976 ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சி காலத்தில், இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் 'சோசியலிச' 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டு 'தேசத்தின் ஒற்றுமை' என்ற வாக்கியம், 'தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு' என்று மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை பாஜக ஒழிந்துவிடும் என்ற காங்கிரஸின் விமர்சனம் குறித்துப் பேசிய ராஜ்நாத் சிங், இட ஒதுக்கீட்டை ஏன் ஒழிக்கப்போகிறோம்? ஓபிசி,எஸ்.சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு தேவை, ஆனால் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள். எந்தச் சூழ்நிலையிலும் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்று தெரிவித்தார். 

    • பா.ஜனதா இந்த புத்தகத்தை (கையில் வைத்திருந்த அரசியலமைப்பு புத்தகத்தை பார்த்து) கிழிக்க விரும்புகிறது.
    • பா.ஜனதா வெற்றி பெற்றால் அவர்கள் இடஒதுக்கீட்டை நீக்கி விடுவார்கள்.

    காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று ஒடிசா மாநிலம் போலங்கீரில் நடைபெற்று தேர்தல் பிரசார பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா இந்த புத்தகத்தை (கையில் வைத்திருந்த அரசியலமைப்பு புத்தகத்தை பார்த்து) கிழிக்க விரும்புகிறது. ஆனால் காங்கிரஸ் மற்றும் இந்திய மக்களாகிய நாம் அதை அனுமதிக்கமாட்டோம். பா.ஜனதா வெற்றி பெற்றால் அவர்கள் இடஒதுக்கீட்டை நீக்கி விடுவார்கள். பொது நிறுவனங்கள் தனியார் மயமாகும். நாட்டை 22 பணக்காரர்கள் இயக்குவார்கள். இதனால் மக்களுடைய அரசாங்கம் ஆட்சி அமைக்க வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    • டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி அறிவிப்பு.
    • தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் எந்த ஆதாரமும் இல்லாமல் அமலாக்க இயக்குநரகத்தால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

    மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

    அந்த வகையில், "நாட்டில் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி இன்று ஊடக பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

    டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அனைத்து ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எக்ஸ், பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக கணக்குகளில் தங்கள் சுயவிவரப் படத்தை மாற்றுவார்கள்.

    சுயவிவரப் படத்தில், "மோடியின் மிகப்பெரிய பயம் கெஜ்ரிவால்" என்ற தலைப்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இருப்பது போன்று உள்ளது.

    நாட்டிலேயே பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடக்கூடிய ஒரே தலைவர் கெஜ்ரிவால் மட்டுமே. எனவே, லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் எந்த ஆதாரமும் இல்லாமல் அமலாக்க இயக்குநரகத்தால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

    கலால் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்திய போதிலும் "ஒரு பைசா" ஆதாரத்தை கூட சமர்ப்பிக்க முடியவில்லை.

    பாஜகவும் மோடியும் கெஜ்ரிவாலை நசுக்க விரும்புகின்றனர். ஆம் ஆத்மி, நாட்டில் "சர்வாதிகாரத்திற்கு" எதிரான போரை நடத்தி வருகிறது.

    ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவது கெஜ்ரிவாலின் போராட்டம் மட்டுமல்ல, கட்சியின் சமூக ஊடக டிபி பிரச்சாரத்தில் சேரவும் மக்களை அவர் வலியுறுத்துகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரம்பலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம், இணைந்து இந்திய அரசியலமைப்பு நாள் நிகழ்ச்சியை நடத்தியது.
    • இந்திய அரசியலமைப்பு குறித்த வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம், இணைந்து இந்திய அரசியலமைப்பு நாள் நிகழ்ச்சியை நடத்தியது.

    பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் கீர்த்தனா முன்னிலை வகித்தார். இதில் மாணவ,மாணவிகளுக்கு இந்திய அரசியலமைப்பு குறித்த வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயிற்சி மைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    முன்னதாக இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் தமிழ் பாக்யா வரவேற்றார். நேருயுகேந்திரா கணக்காளர் தமிழரசன் நன்றி கூறினார்.

    ×