search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலைம்"

    • வழக்கறிஞர் கண்ணனை ஆனந்தன் என்பவர் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
    • இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஓசூர் குற்றவியல் நீதிமன்றம் அருகே கண்ணன் என்ற வழக்கறிஞர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நீதிமன்ற வளாகத்தில் ஜூனியர் வழக்கறிஞர் கண்ணனை பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வழக்கறிஞர் கண்ணன் நீதிமன்ற வளாகத்திலேயே அரிவாளால் வெட்டப்பட்டதை கண்டித்து நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    • எரித்துக்கொலை செய்யப்பட்ட முதியவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன
    • கிளர்ச்சியாளர்கள் குழுவைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஒரு வருட காலமாக கலவரத்தால் துண்டாடப்பட்டு வரும் மணிப்பூரில் சமீப நாட்களாக தாக்குதல் சம்பவங்களும் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. குக்கி மற்றும் மெய்தேய் இனக்குழுக்களிடையே அரசின் பழங்குடியின அந்தஸ்து முடிவால் வெடித்த சண்டை கடந்த வருடம் மே மாதம் கலவரமாக மாறியது.

    கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச்செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியது. தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் கொலைகளும் அரங்கேறின. 200 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.

    கலவரத்தால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். ஒன்றரை வருடத்திற்கு நூலாகியும் இன்னும் மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப வில்லை. இந்நிலையில் இரு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்றைய தினம் ஜிர்பாம் பகுதியில் 13 பேர் நேற்று மாயமானதாகவும், இதில் ஐந்து பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேரை இன்னும் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. மெய்தேய் இனத்தைச் சேர்ந்த முதியவர்கள் இருவர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

     

    அவர்களின் உடல்கள் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கிடையே பாதுகாப்புப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இதில் கிளர்ச்சியாளர்கள் குழுவைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

     

    எனவே நிலைமை கையை மீறியுள்ளதால் கூடுதலாக 20 மத்திய ஆயுதக் காவல்படை [CAPF] கம்பெனிகளை மணிப்பூருக்கு அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் சுமார் 2000 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். உடனடியாக இவர்களை மணிப்பூர் அனுப்ப நேற்று இரவு இந்த அவசர உத்தரவை பிறப்பித்ததாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • மீரட் நகரில் வசிக்கும் அஞ்சலி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    • அஞ்சலி கொலை தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    உத்தரபிரதேசத்தில் கூலிக்காக கொலை செய்யும் காண்டிராக்ட் கில்லர் ஒருவர் தான் செய்த கொலைக்கு கொடுப்பதாக கூறப்பட்ட பணம் தனக்கு கிடைக்கவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    2023 ஆம் ஆண்டு ஜூன் 7 அன்று, மீரட் நகரில் உள்ள உமேஷ் விஹார் காலனியில் வசிக்கும் அஞ்சலி என்பவர் பால் பண்ணையிலிருந்து வீடு திரும்பியபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

    கொலை செய்யப்பட்ட அஞ்சலி தனது முன்னாள் கணவர் நிதின் குப்தாவின் பெயரில் இருந்த வீட்டில் வசித்து வந்தார். அவரது மாமியார் அந்த வீட்டை யஷ்பால் மற்றும் சுரேஷ் பாட்டியாவுக்கு விற்றுள்ளார். ஆனால் அஞ்சலி அந்த வீட்டை காலி செய்யமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துள்ளார்.

    இதனையடுத்து, யஷ்பால் மற்றும் சுரேஷ் ஆகியோர் நீரஜ் ஷர்மா என்பவரிடம் அஞ்சலியை கொலை செய்தால் 2 லட்ச ரூபாய் பணம் தருவதாக பேரம் பேசியுள்ளனர்.

    பின்னர் இந்த கொலை தொடர்பாக யஷ்பால், சுரேஷ், நீரஜ் ஷர்மா மற்றும் அஞ்சலியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த 2 பேர் என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதனையடுத்து இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட அப்பெண்ணின் முன்னாள் கணவர் மற்றும் மாமியாரை போலீசார் விடுவித்தனர்.

    இந்நிலையில், ஒரு வருடத்திற்கு பிறகு ஜாமினில் வெளியே வந்த நீரஜ் ஷர்மா, இந்த கொலையில் அஞ்சலியின் முன்னாள் கணவர் மற்றும் அவரது மாமியாருக்கு தொடர்பு உள்ளது என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக போலீசாரிடம் பேசிய நீரஜ், "அஞ்சலியை கொலை செய்தால் ரூ.20 லட்சம் பணம் தருவதாக கூறிய அவர்கள் 1 லட்ச ரூபாயை முன்பணமாக கொடுத்தனர். கொலை செய்த பின்பு போலீசில் பிடிபட்டதால் மீதமுள்ள 19 லட்ச ரூபாயை என்னால் வாங்க முடியவில்லை. தற்போது ஜாமினில் வெளியே வந்த பின்பு மீதமுள்ள பணத்தை தரும்படி அவர்களிடம் கேட்டபோது அந்த பணத்தை தரமுடியாது என்று அவர்கள் மறுத்துவிட்டனர். ஆகவே அஞ்சலியின் மாமியார் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றுகூறி அவர்கள் இருவருக்கும் இடையிலான செல்போன் அழைப்புகளை இதற்கான ஆதாரங்களாக அவர் வழங்கியுள்ளார்.

    • தடுக்க வந்த காதலியின் அண்ணனையும் கத்தியால் தாக்கி உள்ளார்.
    • கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பென்சில்வேனியா:

    பென்சில்வேனியாவில் 49 வயதான பெஞ்சமின் என்பவர், தனது காதலியின் தலைமுடியை தனக்கு பிடிக்காத வகையில் வெட்டியதால் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். அதனை தடுக்க முயன்ற அண்ணனையும் கத்தியால் குத்தியுள்ளார்.

    சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் இருந்த பெஞ்சமினை கைது செய்தனர். பின்னர் இறந்து கிடந்த காதலியையும் காயமடைந்த அண்ணனையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இது குறித்து அவர்களது மகள் குறித்த புகாரில், ஒருநாள் முன்னர் 50 வயதான கார்மென் மார்டினெஸ்-சில்வா முடி திருத்தம் செய்துள்ளார். அந்த புதிய ஹேர் ஸ்டைலுடன் அவர் வீடு திரும்பினார். வீட்டில் இருந்த அவரது காதலனுக்கு இந்த ஹேர் ஸ்டைல் பிடிக்கவில்லை. இதனால் காதலி பயந்து, தன் மகளின் வீட்டில் இரவைக் கழிக்க முடிவு செய்தாள்.

    ஆனால் தனது காதலனால் மிகவும் பயந்துடன் இருந்த அவர், தனது மகளின் வீட்டை விட்டு தனது சகோதரனின் வீட்டிற்குச் சென்று, தங்கள் உறவு முடிந்துவிட்டதை பெஞ்சமினிடம் சொல்லுமாறு ஒரு நண்பரிடம் கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த பெஞ்சமின், அவளைத் தேடி அண்ணன் வீட்டுக்குச் சென்றார். முதலில் அவள் இல்லை என்று பொய் சொல்லி அவளை அண்ணன் திருப்பி அனுப்பி வைத்தார். ஆனால் பெஞ்சமின் திரும்பி வந்து காதலியின் அண்ணனை கத்தியால் தாக்க ஆரம்பித்தார். இதனை கண்ட காதலி தடுக்க முயற்சித்தார். அப்போது அவரை சராமாறியாக தாக்கி கொலை செய்துள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டது.

    • பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆட்டிச குறைபாடு கொண்ட இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
    • ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதானே ஒழிய, நோயல்ல.

    பெங்களூரில் தனது ஆட்டிஸ குறைபாடு கொண்ட மூன்றரை மாத பெண் குழந்தையை தாய் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆட்டிச குறைபாடு கொண்ட இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரு குழந்தைக்கு லேசான ஆட்டிச பாதிப்பு உள்ள நிலையில் மற்றோரு குழந்தை முழுமையாக ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

     

    பெண்ணின் கணவன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் குழந்தைகளுடன் தனியாக அப்பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழனன்று தனது ஆட்டிச பாதிப்பு முழுமையாக உள்ள குழந்தையை கழுத்தை நெரித்து தாய் கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்துள்ளார். இதனைதொடர்ந்து அவரிடம் போலீஸ் விசாரணை நடத்தியதில், ஆட்டிச பாதிப்புடன் தனது குழந்தையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்ற கவலையில் அவளைக் கொல்ல முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் கடந்த சில மாதங்களாகவே அதிக மன அழுத்தத்தில் தான் இருந்ததால் விரக்தியில் எனது மகளை கொலை செய்தேன் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

    தந்தை வெளிநாட்டில் இருந்து இன்னும் வராததால் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரட்டைக் குழந்தைகளில் மற்றொரு குழந்தையின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது

    நரம்பியல் வளர்ச்சிக் கோளாறான ஆட்டிசம் என்பது மூளை, தகவல்களைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளும் திறனைத் தடுக்கும் ஒரு குறைபாடு ஆகும். இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களைச் சரியாகப் பயன்படுத்துவதில் சிரமம்.

     

    ஆனால் ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதானே ஒழிய, நோயல்ல. ஆட்டிசம் உள்ள குழந்தைகள் அதிக புத்திசாலிகளாக இருக்கவும் அதிக வாய்ப்புண்டு. ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்கள் அறிவியல் உட்பட பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

     

    ×