என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைரல் வீடியோ"

    • வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் செல்போன் உபயோகிக்க மற்றும் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் சினிமா துணை நடிகரான செல்வா என்பவர் திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வது போல உள்ளே சென்று செல்போனில் அத்துமீறி வீடியோ எடுத்துள்ளார்.

    அந்த வீடியோவில் கருவறையில் உள்ள மூலவரையும் வீடியோ எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் ஆன்லைன் மூலம் துணை நடிகர் செல்வா மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அஷ்மிதா செய்த ஒரு தயாரிப்பின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் அவரது கணவர் பகிர்ந்துள்ளார்.
    • இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்த வேலை என சிலவற்றை நினைப்பார்கள். ஆனால் சூழ்நிலை காரணமாக வேறு வேலைகளில் பணியாற்றி கொண்டிருப்பார்கள்.

    அந்த வகையில், பெங்களூருவை சேர்ந்த அஷ்மிதா பால் என்ற இளம்பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மாதம் ரூ.1½ லட்சம் சம்பளம் வாங்கி கொண்டிருந்த அவருக்கு கேக், கிரீம் உள்ளிட்டவை அடங்கிய பேக்கரி தொழில் தொடங்க வேண்டும் என்பது தான் மிகவும் ஆர்வமாக இருந்தது. இதுதொடர்பாக அவர் தனது கணவர் சாகரிடம் விபரங்களை கூறினார். அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவே, அஷ்மிதா பால் உடனடியாக தான் ரூ.1½ லட்சம் சம்பளத்தில் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு தனக்கு பிடித்த பேக்கரி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் அஷ்மிதா செய்த ஒரு தயாரிப்பின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் அவரது கணவர் பகிர்ந்துள்ளார். அதனுடன் அவரது பதிவில், மாதம் ரூ.1½ லட்சம் சம்பளம் பெறும் வேலையில் இருந்து விலகிய என்னுடைய மனைவி இதனை செய்து முடித்துள்ளார். கடவுளுக்கு நன்றி என குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியது. நெட்டிசன்கள் பலரும் அஷ்மிதாவின் இந்த முடிவை வரவேற்கிறோம். நிச்சயம் அவர் வெற்றி பெறுவார் என பதிவிட்டிருந்தார்.

    • கையில் ஏராளமான குச்சிகளை ஏந்தியபடி ஒரு வாலிபர் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
    • வீடியோ 5 லட்சத்து 33 ஆயிரம் பேரின் விருப்பங்களைப் பெற்று, மேலும் பல லட்சம் பேரால் ரசிக்கப்பட்டு உள்ளது.

    மகா கும்பமேளாவில் கூடிய கூட்டத்தினரிடையே பல்துலக்க வேப்பங்குச்சி விற்கும் வாலிபரின் வீடியோ வைரலாகி உள்ளது. கூட்டத்தின் நடுவே கையில் ஏராளமான குச்சிகளை ஏந்தியபடி ஒரு வாலிபர் சுற்றிக் கொண்டிருக்கிறார். அவரிடம், ஒருவர் வீடியோ எடுத்தபடி பேச்சுக் கொடுக்கிறார்.

    " பல்துலக்கும் வேப்பங்குச்சிகளை கும்பமேளா கூட்டத்தில் விற்பனை செய்கிறேன். 5 நாளில் ரூ.40 ஆயிரம் சம்பாதித்து உள்ளேன். எனக்கு இந்த யோசனையை எனது காதலி சொன்னாள். முதலீடே தேவையில்லாத தொழில் என்று அவள் கூறினாள். அவளால் நான் இவ்வளவு சம்பாதித்து இருக்கிறேன்" என்று புன்னகை பூக்க கூறினார் அவர். இந்த வீடியோ 5 லட்சத்து 33 ஆயிரம் பேரின் விருப்பங்களைப் பெற்று, மேலும் பல லட்சம் பேரால் ரசிக்கப்பட்டு உள்ளது.



    • சாலையோரங்களில் நிறுத்தியிருக்கும் கார்களை கூட பனி சூழ்ந்துள்ளது.
    • சம்பவம் தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் பயனர்களை அதிர்ச்சியடைய செய்யும். அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில், ஆஸ்திரேலியாவில் உள்ள போர்ட் ஆர்தர் பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் வீடுகள் முன்பும், சாலையோரங்களில் நிறுத்தியிருக்கும் கார்களை கூட பனி சூழ்ந்துள்ளது.

    இந்நிலையில் அங்கு ஒரு வீட்டு முன்பு நிறுத்தியிருந்த கார் கண்ணாடி தெரியாத அளவுக்கு பனி சூழ்ந்திருந்த நிலையில், பனியை அகற்றுவதற்காக ஒரு வாலிபர் 3 மாத கைக்குழந்தையை பயன்படுத்திய காட்சிகள் உள்ளது. அந்த வாலிபர் தனது காரின் கண்ணாடியில் இருந்த பனியை துடைப்பதற்காக 3 மாத குழந்தையை கருவி போல பயன்படுத்தி பனியை அகற்றும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

    டிக்-டாக் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த வாலிபரின் செயலை கடுமையாக விமர்சித்து பதிவிட்டனர். இதுதொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிங்கம், புலி போன்றவற்றின் வேட்டை காட்சிகள் பயனர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
    • வீடியோ வைரலாகி பயனர்களை கவர்ந்துள்ளது.

    சமூக வலைதளங்களில் வன விலங்குகள் பற்றிய வீடியோக்கள் அடிக்கடி வைரலாகும். இவற்றில் சில வீடியோக்கள் பயனர்களை மிகவும் ரசிக்க செய்யும். குறிப்பாக சிங்கம், புலி போன்றவற்றின் வேட்டை காட்சிகள் பயனர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

    இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் கன்ஹா புலிகள் காப்பகத்தில் 2 ஆண் புலிகள் கர்ஜனையுடன் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. 26 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் 2 ஆண் புலிகளும் சண்டையிடும் போது கடும் உக்கிரத்தை காட்டின.

    புலிகள் காப்பகத்துக்குள் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவை காப்பகத்தின் கலை இயக்குனர் ரவீந்திர மணி திரிபாதி சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோ வைரலாகி பயனர்களை கவர்ந்துள்ளது.



    • கண்ணாடிக்கு வெளியே இருந்து பார்க்கும் பார்வையாளர்கள் கடற்கன்னியை பார்த்து கையசைத்தனர்.
    • கடற்கன்னியை மீன் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சீனாவில் உள்ள ஒரு வன பூங்காவில் பொது மக்களை மகிழ்விப்பதற்காக கடற்கன்னி பொருட்காட்சியும் இடம்பெற்றிருந்தது. பூங்காவுக்கு திரண்டு வரும் பொது மக்கள் கடற்கன்னியை பார்த்து மகிழ்ந்து சென்றனர். இதற்காக பூங்காவில் ரஷிய கலைஞரான மாஷா என்ற 22 வயது இளம்பெண் பிகினி டாப் மற்றும் தேவதை போல வால் அணிந்து மீன் தொட்டிக்குள் அழகாக சறுக்கி கொண்டிருந்தார்.

    கண்ணாடிக்கு வெளியே இருந்து பார்க்கும் பார்வையாளர்கள் கடற்கன்னியை பார்த்து கையசைத்தனர். மேலும் தொட்டிக்குள் இருந்த ராட்சத மீன்கள் கடற்கன்னியை சுற்றியே நீந்தி சென்றன. இந்நிலையில் மீன் தொட்டிக்குள் சுற்றிய ராட்சத மீன் ஒன்று கடற்கன்னியின் அருகே வந்த போது அவரை திடீரென்று தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாஷா மீன் தொட்டிக்குள் இருந்து மேலே ஏறினார்.

    ராட்சத மீன் கடித்ததில் அவருக்கு தலை, கழுத்து மற்றும் கண் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டன. இந்நிலையில் பூங்காவில் கடற்கன்னியை ரசித்து கொண்டிருந்த பொது மக்கள் அவரை ராட்சத மீன் தாக்கியதால் அதிர்ச்சி அடைந்தனர். பூங்கா ஊழியர்கள் விரைந்து வந்து மாஷாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கடற்கன்னியை மீன் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    • அதிரிபுதிரியாக ரிங்கில் இறங்கிய ஜேசன், ஓடிஸ் - ஐ எலிமினேட் செய்ய பிரோன் பிரேக்கருக்கு உதவிசெய்தார்.
    • இனி தனது வாழ்நாளில் WWE பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டேன் என ஜேசன் உறுதி பூண்டுள்ளார்.

    உலகளப் பிரசித்தி பெற்ற யூடியூபர், ஐ ஷோ ஸ்பீட்[IShowSpeed] எனப்படும் டேரன் ஜேசன். இவர் சமீபத்தில் WWE ராயல் ரம்பில் 2025 நிகழ்ச்சியில் பங்கேற்றார். போட்டியாளர் அகிரா டோசாவா கயாத்தால் விளையாடமுடியாமல் இருந்த நிலையில் அவருக்கு பதிலாக யூடியூபர் ஜேசன் ரிங்கில் இறக்கிவிடப்பட்டார்.

     

    அதிரிபுதிரியாக ரிங்கில் இறங்கிய ஜேசன், ஓடிஸ் - ஐ எலிமினேட் செய்ய பிரோன் பிரேக்கருக்கு உதவிசெய்தார். ஓடிஸ் எலிமினேட் ஆன அடுத்த கணமே ஜேசன் பக்கம் திரும்பிய பிரோன் பிரேக்கர் அவரை ஸ்பியர் ஷாட்டை பயன்படுத்தி சில நிமிடங்களில் அல்லோலகல்லோல பட வைத்தார்.

    அந்தரத்தில் ஜேசனை தூக்கி அவர் ஆடிய ருத்ர தாண்டவத்தால் ஜேசன் படுகாயமடைந்தார். இறுதியில் ஜேசன் நிற்பதற்கே ஊன்றுகோலைப் பயன்படுத்த வேண்டிய பரிதாப நிலைமைக்கு ஆளானார். இனி தனது வாழ்நாளில் WWE பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டேன் என ஜேசன் உறுதி பூண்டுள்ளார். 

    • ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த சிக்கன் உணவுக்குள் கத்தி இருந்ததாக கூறி அதுதொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.
    • வீடியோவை பார்த்த பலரும் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பதிவிட்டனர்.

    சமீப காலமாக உணவுகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த எமிலி என்ற பெண் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த சிக்கன் உணவுக்குள் கத்தி இருந்ததாக கூறி அதுதொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.

    வீடியோவுடன் அவரது பதிவில், சம்பவத்தன்று உள்ளூர் ஓட்டலில் சிக்கன் உணவு ஒன்றை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்திருந்தேன். உணவு வீட்டுக்கு வந்தவுடன் ஆர்வமாக சாப்பிட தொடங்கினேன். அப்போது, பல்லில் ஏதோ கடினமான பொருள் கடிபடுவதை உணர்ந்தேன். அது கேரட் துண்டுகளாக இருக்கலாம் என தவறாக நினைத்தேன். ஆனால் உணவை பிரித்து பார்த்தபோது அதற்குள் ஆரஞ்சு நிற கைப்பிடியுடன் கூடிய கத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என பதிவிட்டிருந்தார்.

    அவரது இந்த வீடியோவை பார்த்த பலரும் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பதிவிட்டனர்.

    • மற்றொரு நபர் இங்கிருந்து சிறுவர்களை வெளியேற்றுமாறு சத்தம் போட்டார்.
    • வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயனர்கள் பலரும் பள்ளி நிர்வாகிகளின் செயலை விமர்சித்து பதிவிட்டனர்.

    சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதில், பள்ளி விழா ஒன்றில் சிறுவர்கள் 3 பேர் கைதிகள் போல உடையணிந்து உள்ளனர். அவர்கள் 3 பேரும் மேடை ஏறி தூக்கில் தொங்குவது போல் காட்சிகள் உள்ளது. அப்போது கீழே இருந்து ஒருவர் வேகமாக மேடைக்கு சென்று ஒரு சிறுவனை தூக்கினார். இதை பார்த்த மற்றொரு நபர் இங்கிருந்து சிறுவர்களை வெளியேற்றுமாறு சத்தம் போட்டார்.

    பின்னர் மேடையில் இருந்த மற்ற சிறுவர்களையும் கீழே இறக்கினர். அவர்கள் முகத்தில் அணிந்திருந்த கருப்பு துணியையும் அகற்றினர். பள்ளியில் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் ஒரு பகுதியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    என்றாலும் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயனர்கள் பலரும் பள்ளி நிர்வாகிகளின் செயலை விமர்சித்து பதிவிட்டனர். ஒரு பயனர், இந்த பள்ளி ஆசிரியர்களிடம் மனித நேயம் குறைவாக இருந்திருக்க வேண்டும். இந்த வீடியோ வரம்புகளை மீறியதாக உள்ளது என பதிவிட்டார்.

    • ஒருவர் தனது மனைவியின் மேக்கப் பையை ஒரு கையில் வைத்திருக்கிறார்.
    • வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்ப மேளா நடைபெற்று வருகிறது. இதையொட்டி யமுனை ஆற்றில் நீராட உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து புனித நீராடி வருகின்றனர்.

    இந்நிலையில் கும்ப மேளாவுக்கு வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாசி மாலை விற்கும் பெண் தனது காந்த கண்களால் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தார். இந்நிலையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் கும்ப மேளாவுக்கு கணவருடன் வந்த ஒரு பெண் கூட்டத்தினரின் மத்தியில் மேக்கப் செய்யும் காட்சிகள் உள்ளது.

    அந்த வீடியோவில், ஒருவர் தனது மனைவியின் மேக்கப் பையை ஒரு கையில் வைத்திருக்கிறார். மற்றொரு கையில் கண்ணாடியை பிடித்திருக்கிறார். இந்த தம்பதியை சுற்றிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அப்போது அந்த பெண் கணவர் பிடித்திருக்கும் கண்ணாடியை பார்த்து தனது முகத்துக்கு மேக்கப் செய்கிறார்.

    இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.



    • சூரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றது.
    • மீண்டும் திருமண மண்டபத்துக்கு சென்று திருமணம் நடந்தால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என போலீசார் கருதினர்.

    திருமணங்கள் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டு விமரிசையாக நடைபெறும் போது சில நேரங்களில் அற்ப காரணங்களுக்காக மணமக்களின் வீட்டாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அதே போன்ற ஒரு சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.

    பீகாரை சேர்ந்த ராகுல் பிரமோத் மற்றும் குஜராத்தை சேர்ந்த அஞ்சலி குமாரிக்கு சூரத்தில் வைத்து திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்தது. இதற்காக சூரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றது. பெரும்பாலான சடங்குகள் நிறைவடைந்து மணமக்கள் மாலை மாற்றுவது மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் திடீரென மணமகனின் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தினர்.

    விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறி மணமகனின் குடும்பத்தினர் வாக்குவாதம் செய்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் மணமகளின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பிரச்சனை போலீஸ் நிலையம் சென்றது. போலீசார் விசாரித்து பிரச்சனையை தீர்த்து வைத்தனர். ஆனாலும் மீண்டும் திருமண மண்டபத்துக்கு சென்று திருமணம் நடந்தால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என போலீசார் கருதினர்.

    இதையடுத்து மணமக்களை போலீஸ் நிலையத்துக்கே வரவழைத்து அங்கு இரு வீட்டார் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தனர். வழக்கமாக குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து திருமணம் செய்து கொள்ளும் நிலையில் இந்த சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.

    • ஒரு கம்பி மூலம் கால்வாயில் இருந்து மலைப்பாம்பை மேலே இழுக்கிறார்.
    • பயனர்கள் பலரும் அந்த வாலிபரின் துணிச்சலை பாராட்டி பதிவிட்டனர்.

    நீர்நிலைகளையொட்டிய பகுதிகளில் மலைப்பாம்புகளை பார்த்தால் உடனடியாக பொது மக்கள் வன ஊழியர்கள் மற்றும் வன ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். உடனடியாக அவர்கள் வந்து மலைப்பாம்பை பிடித்து பாதுகாப்பாக கொண்டு செல்வார்கள்.

    இந்நிலையில் தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில், ஓடும் கால்வாயில் இருந்து ஒரு ராட்சத மலைப்பாம்பை வாலிபர் ஒருவர் வெறும் கையால் அசால்ட்டாக பிடிக்கும் காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    இன்ஸ்டாகிராமில் 'விஷால் ஸ்னேக் சேவர்' என்ற பயனரால் பகிரப்பட்ட அந்த வீடியோவில், வாலிபர் ஒருவர் தரைப்பாலத்தின் மீது நிற்கிறார். பாலத்தின் கீழ் பகுதி வழியாக கால்வாய் செல்கிறது. அப்போது கால்வாயில் ராட்சத மலைப்பாம்பு செல்வதை கண்ட வாலிபர் பாலத்தில் இருந்து கால்வாய்க்குள் இறங்குவது போன்று காட்சிகள் உள்ளது.

    பின்னர் ஒரு கம்பி மூலம் கால்வாயில் இருந்து மலைப்பாம்பை மேலே இழுக்கிறார். தொடர்ந்து மலைப்பாம்பை வெறும் கையால் பிடித்து மேலே தூக்குகிறார். அந்த பாம்பு அதிக நீளம் கொண்ட ராட்சத பாம்பாக இருக்கிறது. பாம்பை அவர் மேலே தூக்கும் போது சீறுகிறது. எனினும் அவர் துணிச்சலாக அதனை கையாள்கிறார். இந்த வீடியோ 3.6 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில் பயனர்கள் பலரும் அந்த வாலிபரின் துணிச்சலை பாராட்டி பதிவிட்டனர்.



    ×