என் மலர்
நீங்கள் தேடியது "Devotees"
- மின்தடை உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் முழுமையாக பின்பற்றபடும்.
- தஞ்சைக்கு பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சித்திரை பெருவிழா தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் தேரோடும் தஞ்சை மேலவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு வீதி ஆகிய 4 வீதிகளில் இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் நேரில் ஆய்வு செய்தார்.
தேரோடும் வீதிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.
இன்று தேரோடும் வீதிகளில் அலுவலர்கள், போலீசாருடன் நேரடியாக கள ஆய்வு நடத்தினோம்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக தேரோட்டத்தை காண பக்தர்கள், பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
தேரோட்டத்தை சிறப்பான முறையில் நடத்தி முடிக்க அந்தந்த துறை அலுவலர்க ளுக்கு தேவையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி தேரோட்டத்தை காண பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
தேரோடும் வீதி சாலைகளில் உள்ள சிறு சிறு பள்ளங்கள் மூடப்பட்டு சரி செய்யப்பட்டு வருகின்றன. பார்க்கிங் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் சிறப்பாக செய்யப்படும்.
மேலும் அரசு கூறியப்படி தேரோடும் நேரத்தில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தபட்ட துறை அலுவலர்களுக்கு ஏற்கனவே எடுத்து கூறி உள்ளோம்.
அதாவது தேரோடும் பகுதியில் அன்றைய தினம் செய்ய வேண்டிய மின்தடை உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் முழுமையாக பின்பற்றபடும்.
இது தவிர தேரோட்டம் இன்று தஞ்சைக்கு பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது ஆணையர் சரவணக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, தாசில்தார் சக்திவேல், மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி,
இன்ஸ்பெக்டர் சந்திரா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
- குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீமித்தனர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அருகே உள்ள கரம்பை கிராமத்தில் எழுந்தருளியுள்ள திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
திரவுபதி அம்மன் கோயில தீமிதி திருவிழாவை முன்னிட்டுகோவத்தகுடி அருகே உள்ள வெண்ணாற்றங்கரையில் இருந்து கிராமவாசிகள், சக்தி கரகம் எடுத்து மேள தாளத்துடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீகுண்டத்தில் கிராமவாசிகள் இறங்கி தீமித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
ஏற்பாடுகளை கரம்பை கிராமவாசிகள் செய்து இருந்தனர்.
- பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மனை மனம் உருகி தரிசித்தனர்.
- இன்று மாலை கோவிலில் விளக்கு பூஜை நடைபெற உள்ளது.
தஞ்சாவூர்:
ஆடிமாதம் முழுவதுமே அம்மன்களுக்கு உகந்த மாதம் ஆகும். அதுவும் குறிப்பாக ஆடிமாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும்.
ஆடி மாதங்களில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலில்களில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி பிரசித்தி பெற்றது.
கடந்த 18-ந் தேதி ஆடி முதல் செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தன.
இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
வளையல் பாவாடை அலங்காரத்தில் மாரியம்மன் காட்சியளித்தார்.
ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மனை மனம் உருகி தரிசித்தனர்.
பல பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தீபம் ஏற்றி வழிபட்டனர்.
இன்று மாலை கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.
தஞ்சை கீழவாசல் வடபத்திரகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
பக்தர்கள் பூமாலை, எலுமிச்சை மாலைகளை சாமிக்கு வழங்கி, அகல்விளக்குகள், எலுமிச்சை தோளில் எண்ணெய், நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
வடக்குவாசல் சிரேஸ்சத்திரம் சாலையில் உள்ள மகிசாசுரமர்த்தினி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதேபோல் கோடியம்மன் கோவில், எல்லையம்மன் கோவில், பர்மாகாலனி அங்காளஈஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தஞ்சை புதுஆற்றங்கரை ஜி.ஏ.கெனல் ரோட்டில் உள்ள முனியாண்டவர் கோவிலில் ஆடி வெள்ளி வழிபாடு நடந்தது.
இதேபோல் பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவையாறு, வல்லம் பாபநாசம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு நடைபெற்றன.
- சீர்காழியில் இரட்டை காளியம்மன் கோயில் உள்ளது.
- விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை தீமிதி திருவிழா நடைபெறுகிறது.
சீர்காழி:
சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் சக்தி வாய்ந்த இரட்டை காளியம்மன் கோயில் உள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு ஆடி மாத தீமிதி உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் இரட்டை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாரதனை இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை தீமிதி திருவிழா நடைபெறுகிறது. முன்னதாக சட்டை நாதர் சுவாமி கோயிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், அலகு காவடி, பறவை காவடிகள் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோவில் சென்றடைந்து கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து மாலை பச்சகாளி, பவளக்காளி வேடம் அணிந்து பக்தர்கள் வீதியுலா வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனர் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
- மகரவிளக்கு பூஜை ஜனவரி 14-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை மகரஜோதி தரிசனம் நடைபெறும்.
- மகரவிளக்கு பூஜை முடிந்து ஜனவரி 20-ந்தேதி காலை 7 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு ஆண்டு மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
இந்தநிலையில் சபரிமலையில் மண்டல பூஜை வருகிற 26-ந்தேதி நடைபெறுகிறது. அன்றையதினம் மதியம் 12 மணி முதல் 12.30 மணி வரை மண்டல பூஜை நடைபெறும் நிலையில், இரவில் மண்டல பூஜை முடிந்து கோவில் நடை சாத்தப்பட உள்ளது.
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 25-ந்தேதி 50 ஆயிரம் பக்தர்களும், 26-ந்தேதி 60 ஆயிரம் பக்தர்களும் மெய்நிகர் வரிசை (ஆன்லைன் புக்கிங்) மூலமாக அனுமதிக்கப்படுகின்றனர். இந்த இரண்டு நாட்களும் 'ஸ்பாட் புக்கிங்' இருக்காது என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த 2 நாட்களும் 'ஸ்பாட் புக்கிங்' அப்படையில் 5 ஆயிரம் பேரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மண்டல பூஜை முடிவுக்கு வர உள்ள நிலையில், மகர விளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. மகரவிளக்கு பூஜை ஜனவரி 14-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை மகரஜோதி தரிசனம் நடைபெறும்.
மகரவிளக்கு பூஜை முடிந்து ஜனவரி 20-ந்தேதி காலை 7 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். வருகிற 31-ந்தேதி முதல் ஜனவரி 19-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த சில நாட்களாக நடந்துவந்தது.
இந்நிலையில் மகர விளக்கு பூஜை காலத்துக்கான மெய்நிகர் வரிசை (ஆன்லைன் முன்பதிவு) முடிந்துவிட்டது. மண்டல பூஜையை முன்னிட்டு வருகிற 25 மற்றும் 26 தேதிகளில் மெய்நிகர் வரிசை மூலம் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மகர விளக்கு பூஜையையொட்டி ஜனவரி 12, 13 மற்றும் 14 ஆகிய 3 நாட்களும் மெய்நிகர் வரிசை மூலம் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். ஆனால் எத்தனை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று மகரவிளக்கு பூஜை நெருங்கியதும் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
சபரிமலையில் நடப்பு ஆண்டு மண்டல பூஜை காலத்தில் கடந்த 21-ந்தேதி வரை மொத்தம் 28 லட்சத்து 93 ஆயிரத்து 210 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 4 லட்சத்து 4 ஆயிரத்து 703 பேர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
- பழனியில் 25 போலீஸ் உதவி மையங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.
- 37 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பழனி:
பழனி முருகன் கோவிலில் பிரசித்தி பெற்ற தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். பாதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காக அனைத்து துறை சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி மாவட்ட போலீஸ் துறை சார்பில் பாதுகாப்பு பணி அதிகரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பக்தர்களின் நலனுக்காக போலீசார் இரவு, பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது சாலை பாதுகாப்பு குறித்து பக்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து பழனி டி.எஸ்.பி. தனஞ்செயன் கூறியதாவது:-
தைப்பூச பக்தர்களின் நலன் மற்றும் உதவிக்காக பழனியில் 25 போலீஸ் உதவி மையங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இதில் கூட்ட நெரிசல் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. குற்ற சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கவும், பக்தர்களுக்கு உதவிடவும் 'மே ஐ ஹெல்ப்' என்ற பெயரில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
அடிவாரம், பஸ் நிலையம், கிரிவீதிகளில் 37 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5 பேர் கொண்ட 28 குற்ற தடுப்பு போலீஸ் குழு கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நாட்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை இருக்கும். எனவே அதையொட்டிய 4 நாட்களில் 3500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் பஸ்நிலையம், கோவிலுக்கு செல்லும் வழி, வாகன நிறுத்தம் தெரிந்து கொள்வதற்காக 300 வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட உள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ. நிதியில் இருந்து 300 கேமராக்கள் பொருத்தும் பணியும் நடக்கிறது. ஓரிரு நாட்களில் அவை செயல்பாட்டுக்கு வர உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மலைக்கோவிலுக்கு செல்ல ஒரு வழிப்பாதை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி மலைக்கோவிலுக்கு செல்போன் கொண்டு சென்று பயன்படுத்தினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.