என் மலர்
நீங்கள் தேடியது "slug 94837"
- 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
- தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
கோவை:
கோவை சூலூர் அருகே உள்ள காங்கயம் பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பிரதீப் (வயது 20). இவர் நீலாம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதீப்புக்கு இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் சில நாட்களாக இவர்களுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் பிரதீப்புடன் அந்த இளம்பெண் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அவர் சமாதானம் செய்தும் அந்த இளம்பெண் அவரிடம் பேசாமல் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் மிகுந்த மனவேதனையுடன் இருந்து வந்தார்.சம்பவத்தன்று வீட்டில் இருந்த பிரதீப் வாழ்க்கையில் விரக்தி அடைந்து திடீரென தூக்கு போட்டு கொண்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பிரதீப்பை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரதீப்பின் உடலை மீட்டு பிேரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீபாவளிக்கு மனைவி மற்றும் குழந்தைகளுக்கு துணிகள் எடுக்க முடியவில்லை என நண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளார்.
- நேற்று இரவு வீட்டின் தனியறையில் மின்விசிறியில் குமார் ராஜ் தூக்கில் தொங்கினார்.
கன்னியாகுமரி:
தக்கலை அருகே உள்ள வெள்ளிகோடு காட்டு விளை பகுதியை சேர்ந்தவர் குமார் ராஜ் (வயது37),தொழிலாளி.இவர் கடந்த சில நாட்களாக வேலை இல்லாமல் அவதிப்பட்டார். இதனால் தீபாவளிக்கு மனைவி மற்றும் குழந்தைகளுக்கு துணிகள் எடுக்க முடியவில்லை என நண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் தனி யறையில் மின்விசிறியில் குமார் ராஜ் தூக்கில் தொங்கினார்.அவரை குடும்பத்தினர் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமார் ராஜ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி ரேகா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஏ.செட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலை கிடைக்காததால் வேதனை சேலம் லாட்ஜில் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஏ.செட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் காரியப்பா. இவரது மகன் முனுசாமி (வயது 29). இவர் சேலம் புதிய பஸ் நிலையம் பகுதயில் உள்ள ஒரு லாட்ஜில் நேற்று அறை எடுத்து தங்கி உள்ளார். காலையில் இவருடைய அறை கதவு வெகு நேரம் ஆகியும் திறக்காததால் லாட்ஜ் ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது முனுசாமி தூக்கில் பிணமாக தொங்கினார்.
இது குறித்து லாட்ஜ் ஊழியர்கள் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதில், முனுசாமி பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். நீண்ட நாட்களாக தேடியும் வேலை கிடைக்காததால் தனது பெற்றோரிடம், நான் படித்த படிப்புக்கு இங்கு வேலை கிடைக்கவில்லை. அதனால் வெளிநாடு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் வெளிநாடு செல்ல பெற்றோர் மறுத்துவிட்டதால், மன வேதனையில் இருந்து முனுசாமி, தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 19-ந் தேதி அக்சயா வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
- தாயாரை பற்றி ஆபாசமாக அவதூறாக பேசி மிரட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்ததாக தெரிய வந்தது.
கன்னியாகுமரி:
குழித்துறையை அடுத்த மருதங்கோடு கழுவந்திட்டை காலனியை சேர்ந்தவர் ஸ்ரீ சுமா. கணவர் பிரிந்து சென்று விட்ட நிலையில் 2 பெண் குழந்தைகளுடன் இவர் வசித்து வந்தார்.
இவரது இளைய மகள் அக்சயா (வயது 16). செண்டை மேள கலைஞரான இவர் திருமணம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு பேண்ட் வாத்தியம் இசைக்கும் வேலை செய்து வந்தார்.
அப்போது உடன் பணி புரிந்த சுங்கான்கடையை சேர்ந்த சஜின் (24) என்ற வாலிபரை காதலித்து உள்ளார். இந்நிலையில் கடந்த 19-ந் தேதி அக்சயா வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை உறவினர்கள் ஆசாரிபள்ளம் மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அக்சயா இறந்தார்.
இது குறித்து மார்த்தா ண்டம் போலீசில் அக்சயா வின் தாயார் ஸ்ரீசுமா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் அக்சயா தற்கொலை செய்வதற்கு முன்பு சஜின், தொலைபேசியில் பேசிய தாகவும், அப்போது அவரது தாயாரை பற்றி ஆபாசமாக அவதூறாக பேசி மிரட்டியதால் தான் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்ததாகவும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் மேல் விசாரணை நடத்தி சஜினை கைது செய்தனர்.
- சீனிவாசன் ரூ.4 லட்சம் கடனாக கொடுத்துள்ளார்.
- ஏமாற்றப்பட்டு விட்டோமோ என்று மனம் உடைந்த சீனிவாசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள குடிச்சிகானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 40).விவசாயி. அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சீனிவாசன் ரூ.4 லட்சம் கடனாக கொடுத்துள்ளார்.
பணம் கொடுத்து பல நாட்களாகியும் வாங்கியவர் அதனை திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டு விட்டோமோ என்று மனம் உடைந்த சீனிவாசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சீனிவாசனின் மனைவி ரத்னா தந்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மகள் சம்பவத்தன்று வேலை விஷயமாக வெளியே சென்றவர் காதலருடன் சென்று விட்டார்.
- இதனால் வெங்கடேசன் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (54). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 25 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இவர்களது மகள் சம்பவத்தன்று வேலை விஷயமாக வெளியே சென்றவர் காதலருடன் சென்று விட்டார். இதனால் வெங்கடேசன் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று பயிர்களுக்கு அடிப்பதற்காக தனது வீட்டில் வைத்திருந்த கலைக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்துள்ளார். அப்போது சித்ரா தோட்டத்திலிருந்து வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது தனது கணவர் வாந்தி எடுத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கணவரிடம் இதுகுறித்து கேட்டபோது தான் விஷம் குடித்து விட்டதாக கூறியதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.
- பல்வேறு நோயால் அவதிப்பட்டார்.
- இதனால் மனம் உடைந்த அவர் நேற்று விட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
சேலம் வேம்படி தாளம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 75). இவர் அந்த பகுதியில் தனியாக வசித்து வந்தார். மேலும் பல்வேறு நோயால் அவதிப்பட்டார். இதனால் மனம் உடைந்த அவர் நேற்று விட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கொண்டாலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
- 3 முறை தற்கொலைக்கு முயன்றார்.
கோவை,
கோவை இருகூர் அருகே உள்ள ஏ.ஜி.புதூரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 31).
இவர் தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி ராஜலட்சுமி. பெண் போலீசாக உள்ளார். இவர்கள் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மது பழக்கத்துக்கு அடிமையான சதீஷ் மனவேதனை அடைந்து ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்றார். அவரை அவரது உறவினர்கள் காப்பாற்றினர்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த சதீஷ் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட உடற்பயிற்சி ஆசிரியர் சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சம்பவத்தன்று சந்தியா தனது தாய் உமாரா ணியிடம் படிப்பு செலவிற்கு பணம் கேட்டுள்ளார்.
- திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் பாதிரிக்குப்பம் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சந்தியா (வயது 24). விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு எல்.எல்.பி படித்து வந்தார். சம்பவத்தன்று சந்தியா தனது தாய் உமாராணியிடம் படிப்பு செலவிற்கு பணம் கேட்டுள்ளார். அப்போது அவரது தாய் உமாராணி பணம் என்னிடம் இல்லை நாளை தருகிறேன் என கூறினார். இதனால் மன வருத்தத்தில் இருந்த சந்தியா எலி பேஸ்ட் சாப்பிட்டு தனது தாய் உமாராணிடம் தெரிவித்தார்.
அதிர்ச்சி அடைந்த உமாராணி உடனடியாக தனது மகள் சந்தியாவை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்க ப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 49), லாரி டிரைவர். இவருக்கு கமலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து பன்னீர்செல்வம் வீட்டிற்கு வந்தார். பின்னர் குளியலறைக்கு சென்ற பன்னீர்செல்வம் வெகு நேரமாகியும் திரும்ப வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் குளியலறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பன்னீர்செல்வம் கைலியால் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பன்னீர்செல்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வம் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்."