என் மலர்
நீங்கள் தேடியது "slug 95115"
- கன்னியாகுமரி போலீசார் விவேகானந்தபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- கிறிஸ்தவ ஆலயம் மற்றும் கோவில்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் தலைமையில் போலீசார் நேற்று கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக் கிளில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீ சார் அவரை போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் சுசீந்திரம் அக்கரை பகுதியை சேர்ந்த திராஜ் (வயது 19) என்பதும், தற்போது தெற்கு குண்டலில் தங்கி இருந்து கிறிஸ்தவ ஆலயம் மற்றும் கோவில்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் அவர் 7 வழக்குகளில் சம்பந் தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து திராஜை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நாகர்கோவிலில் உள்ள ஜெயிலில் அடைத்தனர்.
- இடையன்கிணறு பகுதியை சோ்ந்தவா் சங்கா் (வயது 48). இவா் ௬௦ செம்மறியாடுகளை வளா்த்து வருகிறாா்.
- காலை வந்து பாா்த்த போது, பட்டியில் ஆடுகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.
குண்டடம் :
தாராபுரம் தாலுகா குண்டடம் அடுத்துள்ள இடையன்கிணறு பகுதியை சோ்ந்தவா் சங்கா் (வயது 48). இவா் 60 செம்மறியாடுகளை வளா்த்து வருகிறாா். தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றாா். காலை வந்து பாா்த்த போது, பட்டியில் ஆடுகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. எண்ணிப் பாா்த்த போது 7 பெரிய செம்மறி ஆடுகளைக் காணவில்லை. மேலும் தோட்டத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்த நிலையில், கம்பி வேலியின் ஒரு இடத்தில் அறுத்து உள்ளே நுழைந்து ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
திருடப்பட்ட ஆடுகளின் மதிப்பு ரூ.70 ஆயிரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், குண்டடம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் மர்மநபர்கள் ஆடுகளை திருடி வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கால்நடை வளர்ப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சேலம் பி.எஸ்.என்.எல் ஆபீசில் ரூ.24 லட்சம் மதிப்பு கேபிள்கள் திருட்டாள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம்:
சேலம் காந்தி ரோடு பகுதியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் துணை பொது மேலாளர் பாஸ்கரன் (வயது 57), அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், பி.எஸ்.என்.எல் அலுவலக வளாகத்தில் இருந்த ரூ.23,88,982 மதிப்புள்ள பழைய மற்றும் புதிய கேபிள்களை, இங்கு காவலாளிகளாக பணியாற்றிய செந்தில்குமார், ஜெயக்குமார், சேட்டு மற்றும் அருண்குமார் ஆகியோர் சேர்ந்து திருடியதாக ெதரிவித்து இருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கோவிலின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு.
- தனிப்படை போலீசார் பதுங்கி இருந்த கொள்ளையர்களை மடக்கி பிடித்தனர்.
வல்லம்:
தஞ்சை மாவட்டம் வல்லம் - திருச்சி சாலையில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கோவில் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுவிட்டனர்.
இதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவுப்படி, வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா தலைமையில் நதியா, வல்லம் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், தனிப்படை சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சாமிநாதன், முதல்நிலை காவலர்கள் புவனேஷ், சிவக்குமார், இரண்டா–ம்நிலை காவலர்கள் வினோத்பாண்டின், ராஜதுரை, ரஞ்சித்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று தனிப்படை போலீஸார் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே பதுங்கி இருந்த 2 கொள்ளையர்களை சினிமா பாணியில் மடக்கி பிடித்தனர்.
போலீஸார் விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள ஈச்சங்காடு பகுதியை சேர்ந்த சிவா (எ) சிவ பாலகணேஷ் மற்றும் திருச்சி திருவவெறும்பூரை சேர்ந்த நாகராஜ் என்பது தெரிய வந்தது.பின்னர் கொள்ளையர்கள் திருடிய கோவில் நகைகள் மற்றும் பணத்தை போலீஸார் மீட்டனர். இது குறித்து வல்லம் போலீஸார் பாலகணேஷ் (வயது 22), நாகராஜ் (வயது 21) இருவர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து பாநாசம் சிறையில் நேற்றிரவு அடைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே சித்தலூர் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் மனைவி உமா மகேஸ்வரி (வயது 30) இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்து விட்டு வழக்கமாக வீட்டின் அருகில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டில் உறங்கினார். அதிகாலை எழுந்து பார்த்தபோது ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த பட்டி திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 8 ஆடுகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதேபோல் அருகில் உள்ள மற்றொருவர் பட்டியிலும் ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. மர்ம நபர்கள் திருடி சென்ற 19 ஆடுகளின் மதிப்பு சுமார் 60,000 என கூறப்படுகிறது. இதுகுறித்து உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள கீரம்பூரில் பொதுப்பணித்துறை சார்பில் ஐ.டி.ஐ வளாகம் கட்டப்பட்டு வருகிறது.
- கட்டிட தொழிலாளர்கள் பணிக்கு வந்த போது அங்கு கட்டிட பணிக்காக போடப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் மற்றும் கம்பிகளை வெட்டும் எந்திரம் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள கீரம்பூரில் பொதுப்பணித்துறை சார்பில் ஐ.டி.ஐ வளாகம் கட்டப்பட்டு வருகிறது. வழக்கம் போல் கட்டிட பணியில் ஈடுபட்டு வரும் கட்டிட தொழிலாளர்கள் பணிக்கு வந்த போது அங்கு கட்டிட பணிக்காக போடப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் மற்றும் கம்பிகளை வெட்டும் எந்திரம் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து பொதுப்ப ணித்துறை காண்ட்ராக்டர் மாதேஸ்வரன் பரமத்தி போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து இரும்பு கம்பிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- சிகிச்சைக்கு வருகிறவர்கள் மற்றும் அவர்களை பார்க்க வருபவர்கள் மோட்டார் சைக்கிள் அடிக்கடி திருட்டு போவதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
- சி.சி.டி.வி காட்சிகளுடன் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமல்லது திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சிகிச்சைக்கு வருகிறவர்கள் மற்றும் அவர்களை பார்க்க வருபவர்கள் மோட்டார் சைக்கிள் அடிக்கடி திருட்டு போவதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் தஞ்சை வண்ணாரப்பேட்டை சேர்ந்த மதிவாணன் உள்பட 4 பேரின் மோட்டார் சைக்கிள்கள் ஒரே நாளில் திருட்டுப் போய் உள்ளது.
இது குறித்த சி.சி.டி.வி காட்சிகளுடன் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏழை எளிய மக்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும்போது இது போன்று வாகனங்களை பறிகொடுத்து வருவதால் அவர்கள் மேலும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே உடனடியாக ராசா மிராசுதார் ஆஸ்பத்திரியில் மோட்டர் சைக்கிள்கள் உள்ளிட்ட வானங்கள் திருட்டு போவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வெளிநாட்டில் வேலை பார்ப்பவர் வீட்டில் நகை, பணம் திருட்டு போயின.
- உறவினர் இல்ல திருமணத்துக்கு சென்றிருந்தார்
திருச்சி:
திருச்சி லால்குடி கணபதி நகர் கபிரியேல் புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம். இவர் அரபு நாட்டில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி திவ்யபாரதி மற்றும் குழந்தைகள் கபிரியேல் புரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திவ்யபாரதி வீட்டை பூட்டிவிட்டுவழுதியூரில் உள்ள தனது உறவினர் இல்ல திருமணத்துக்கு சென்றார். பின்னர் இரு தினங்கள் கழித்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 3.5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.15,000 ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து திவ்யா பாரதி லால்குடி போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருட்டு நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கி வருகின்றனர்.
- துப்பறியும் நிபுணர் வீட்டில் நகை, பணம் கொள்ளை போனது
- சென்னையில் சிகிச்சையில் இருந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் வெங்கடாசலபதி நகர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 51). இவர் சென்னையில் டிடெக்டிவ் ஏஜென்சி (தனியார் துப்பறியும் நிறுவனம்) நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவி சரஸ்வதிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தாமோதரன் தனது மனைவியை சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் கணவன் மனைவி இருவரும் கடந்த இரு தினங்களாக சென்னையிலேயே தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தாமோதரன் வீட்டின் முன்பக்க கேட் மற்றும் கதவினை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.
இது பற்றி தகவல் அறிந்த தாமோதரனின் சகோதரர் கரிகாலன் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீசார் மோப்ப நாயுடன் இன்று காலை சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த மோப்ப நாய் திருட்டு நடந்த வீட்டிலிருந்து மோப்பம் பிடித்துக் கொண்டு சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
துப்பறியும் நிபுணர் வீட்டில் நோட்டமிட்டு கொள்ளையடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மதுரை அருகே கடையின் ஓட்டை பிரித்து பணம்-பொருட்கள் திருடு போயின.
- டூப்ளிகேட் சாவி வைத்திருந்த கடை ஊழியர்கள் உள்பட பலரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
திருப்பரங்குன்றம், பாலாஜி நகரை சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் ஜெய்ஹிந்த்புரம் நல்லமுத்து காலனியில் சாணை கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் கடையை பூட்டிவிட்டு சென்றார். மர்ம நபர்கள் கடையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி, 10 பிளேட்டுகள் மற்றும் பீரோவில் இருந்த ரூ.8 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஐசக் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். கடையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி கொள்ளை அடித்தது எந்த கும்பல்? என்று தெரியவில்லை.
சாணை கடைக்கு டூப்ளிகேட் சாவி வைத்திருந்த கடை ஊழியர்கள் மாரியப்பன், சர்வீஸ் மைதீன் உள்பட பலரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆத்தூரில் சரக்கு வாகனத்தில் செல்போன் திருடிய தம்பதியை போலீசார் தேடிவருகின்றனர்.
- குழந்தையுடன் சென்று கைவரிசை காட்டிய தம்பதிக்கு வலைவீச்சு
ஆத்தூர்:
ஆத்தூரில் சரக்கு வாகனத்தில் செல்போன் திருடிய தம்பதியை போலீசார் தேடிவருகின்றனர்.
செல்போன் திருட்டு
சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான பாத்திரக் கடை உள்ளது. இந்த கடைக்கு தேவையான பாத்திரங்கள் நேற்று காலை வெளியூரில் இருந்து சரக்கு வாகனத்தில் வந்தது.
இந்த வாகனத்தை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் ஓட்டி வந்தார். இவர், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள தனது செல்போனை வண்டியின் முன் பகுதியில் வைத்தவிட்டு வாகனத்தின் மேலே ஏறி மழை பாதுகாப்புக்காக தார்பாய் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே குழந்தையுடன் சென்ற தம்பதி, வாகனத்தில் செல்போன் இருப்பதை பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை முன்பு அனுப்பிவிட்டு குழந்தையுடன் சென்று அப்பெண்ணின் கணவர், செல்போனை திருடிச் சென்றுள்ளார். இதன் சி.சி.டி.வி காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தம்பதிக்கு வலைவீச்சு
இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பட்டப் பகலில் சரக்கு வாகனத்தில் செல்போன் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- அவரது நண்பர்கள் 4 பேருடன் இருசக்கர வாகனத்தில் 3 அரிவாளுடன் வந்தபோது போலீசார் பிடித்தனர்.
- பைக் மற்றும் 3 அரிவாள்களை போட்டு விட்டு 4 பேர் தப்பி ஓடி விட்டனர்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகன் கிருட்டி என்கிற சாந்தகுமார் (வயது19) மற்றும் அவரது நண்பர்கள் 4 பேருடன் இருசக்கர வாகனத்தில் 3 அரிவாளுடன் வந்தபோது போலீசார் பிடித்து விசாரிக்க முற்பட்டனர்.
அப்போது பைக் மற்றும் 3 அரிவாள்களை போட்டு விட்டு 4 பேர் தப்பி ஓடி விட்டனர்.
பிடிபட்ட கிருட்டி என்கிற சாந்தகுமாரை விசாரித்ததில் வாகன திருட்டு, ஆயுதங்களை வைத்து மிரட்டுதல் மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.
பட்டுக்கோட்டை கிரைம் போலீசார் பிடித்து வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.