search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95786"

    • பரிமளம் என்பவர் மூலம் 24 மணி நேரமும் மது விற்பனை செய்து வருவதாகவும் தகவல் கிடைத்தது.
    • கடந்த ஆண்டும் போலீசாரை தாக்க முயன்றுள்ள பழைய வீடியோவும் பரவியது.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடியை அடுத்த வானக்கண்காடு கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். தி.மு.க. பிரமுகரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இவர் அங்குள்ள டாஸ்மாக் கடையில் அரசு அனுமதியின்றி பார் நடத்தி வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    அத்துடன் பரிமளம் என்பவர் மூலம் 24 மணி நேரமும் மது விற்பனை செய்து வருவதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசாருடன் சென்று அதிரடியாக ஆய்வு நடத்தினார்.

    அப்போது சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த பரிமளத்தை மதுபாட்டில்களுடன் பிடித்து போலீசார் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றியுள்ளனர். அப்போது அங்கு வந்த மதியழகன், பரிமளத்தை கீழே இறக்கிவிட்டதுடன் போலீசாருடன் வாக்குவாதம் செய்து காலணியை கழற்றி தாக்க முயன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

    இதே போல கடந்த ஆண்டும் போலீசாரை தாக்க முயன்றுள்ள பழைய வீடியோவும் பரவியது. போலீசாரை தாக்க முயன்றும், அனுமதி இல்லாமல் பார் நடத்தியும் வந்த மதியழகன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு தனிப்படை போலீஸ்காரர் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் மதியழகன், பரிமளம் ஆகியோர் மீது பணி செய்யவிடாமல் தடுத்தது, போலீசாரை தாக்க முயன்றது, காலணியை கழற்றி தாக்க முயன்றது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் அந்தந்த பகுதிகளில் சி.சி.டி.வி.பதிவுகளை ஆய்வு செய்தனர்.
    • தலைமறைவான ராம்கியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஒதியஞ்சாலை போலீஸ் நிலைய பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் நடந்து வந்தது.

    இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் அந்தந்த பகுதிகளில் சி.சி.டி.வி.பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் கிடைத்த தகவலின் பேரில் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த ராம்கி (வயது21) என்ற வாலிபரை ஒதியஞ்சாலை போலீசார் பிடித்து நேற்று விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    போலீஸ் நிலையத்தில் அமர்ந்திருந்த ராம்கி திடீரென போலீஸ் நிலையத்தில் இருந்து நைசாக வெளியேறி சாலையில் ஓடினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்றனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் தப்பிச்சென்று விட்டார்.

    தலைமறைவான ராம்கியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    போலீஸ் நிலையத்திலிருந்து வாலிபர் தப்பி ஓடியதும் அவரை போலீசார் விரட்டிச் சென்றும் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் போலீசார் திரும்பியதை கண்ட பொது மக்கள் புதுவை போலீசாரின் நிலையை கிண்டலாக பேசினர்.

    • வீட்டில் திருடியதாக 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • வீட்டை காலி செய்யுமாறு முத்துராஜன், மனைவியுடன் கூறியுள்ளார்.

    சிவகங்கை

    மானாமதுரை அருகே உள்ள சோமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜன். கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி சங்கீதா குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டார். பின்னர் அவர் கணவருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டை காலி செய்யுமாறு முத்துராஜன், மனைவியுடன் கூறியுள்ளார். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

    இதையடுத்து முத்துராஜன் மற்றும் 3 பேர் சம்பவத்தன்று சங்கீதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் வீட்டை சேதப்படுத்தி பொருட்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மானாமதுரை போலீசில் புகார் செய்யப்ப ட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பால சதீஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • முத்தம்பட்டியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக, வாழப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • முத்தம்பட்டி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது 12 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக, வாழப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீ சார், முத்தம்பட்டி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது 12 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

    அவர்களை சுற்றி வளைத்த போலீசார், இந்த கும்பலிடமிருந்து ரூ.22 ஆயிரம் ரொக்கத்தை பறி முதல் செய்தனர். இது தொடர்பாக 12 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

    • பணம் கொடுக்கல், வாங்குவதில் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம்
    • தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே அயனிவிளை, மூவாற்று முகம் பகுதியை சேர்ந்தவர் ஐரிஸ் (வயது 42). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ஐரிஸ் தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த ராஜன் (43) என்பவருக்கும், ஐரிஸ் என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்குவதில் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை தாயும், மகளும் வீட்டில் இருக்கும்போது ராஜன் வீட்டின் முன்பக்கம் வந்து நின்று அவதூறாக பேசி கல்லால் தாக்கி உள்ளார். மேலும் அவர்கள் 2 பேருக்கும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். கல்லால் தாக்கியதில் ஐரிசுக்கும் அவரது மகளுக்கும் காயம் ஏற்பட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஐரிஸ் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ரமேஷ் வழக்குப்ப திவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

    • உறவினர்களான ஆஷா, புஷ்பா, ஜெயா ஆகிய 4 பேரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
    • உறவினர்கள் ஆஷா, புஷ்பா, ஜெயா ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வசந்தம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேைல பார்த்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (22). இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் ரம்யாவை அடிக்கடி ராஜ்குமார் அடித்து துன்புறுத்தியுள்ளார். அவருடன் மாமனார் சீனிவாசகுமார் (52) மற்றும் உறவினர்களான ஆஷா, புஷ்பா, ஜெயா ஆகிய 4 பேரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

    இதுகுறித்து ரம்யா ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் ரம்யாவின் கணவர் ராஜ்குமார், மாமனார் சீனிவாசகுமார், அவரது உறவினர்கள் ஆஷா, புஷ்பா, ஜெயா ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் ஓட்டுபுற தெருவை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 51), பெயிண்டர்.

    இவர் நேற்று வடசேரி பஸ் நிலையத்திற்கு சென்றபோது, அங்கு வந்த அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியானார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில், சுதர்சன், மதுபோதையில் பஸ் நிலையத்தில் சுற்றியதாகவும், அப்போது அங்கு வந்த கன்னியாகுமரியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபருடன் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதன்பிறகு அவர், பஸ் நிலையத்தில் நிலைதடுமாறி விழுந்தபோது அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.

    இதனை தொடர்ந்து விபத்து தொடர்பாக அருமனையை சேர்ந்த பஸ் டிரைவர் ஸ்ரீரெங்கநாதன் (50) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    • நடன கலைஞரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் ராயனூர் இலங்கை மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் லிவிங் (வயது 22). நடன கலைஞர். இவர் கடந்த 31-ந்தேதி நடைபெற்ற கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் விழாவை பார்வையிட்டார். பின்னர் அமராவதி ஆற்றின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராட்டினம் ஒன்றில் ஏறுவது தொடர்பாக லிவிங்க்கும், கரூரை சேர்ந்த கவின், நவீன், லிங்கமாணிக்கம் ஆகியோருக்கும் இடையே ராட்டினம் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது லிவிங்கை, கவின், நவீன், லிங்கமாணிக்கம் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியும் மரக்கட்டையால் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக கரூர் டவுன் போலீசார் கவின், நவீன், லிங்கமாணிக்கம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிலம்பு வீட்டின் மாடியில் கார்த்தி உட்பட 5 பேர் வாடகைக்கு தங்கி வருகின்றனர்.
    • மோதலில் சிலம்பு மற்றும் வேளாங்கண்ணி ஆகியோர் காயம் அடைந்தனர்.

    கடலூர்: 

    கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 28). இவரது வீட்டின் மாடியில் கார்த்தி உட்பட 5 பேர் வாடகைக்கு தங்கி வருகின்றனர். இந்நிலையில் சிலம்பு வீட்டின் மாடியில் தங்கி இருக்கும் 5 பேரை காலி செய்யுமாறு கூறி வந்தார். சம்பவத்தன்று கார்த்திக்கும், சிலம்பிற்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. 

    அப்போது இந்த தகராறு மோதலாக மாறியது. இந்த மோதலில் சிலம்பு மற்றும் வேளாங்கண்ணி ஆகியோர் காயம் அடைந்தனர். பின்னர் இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் சிலம்பு கொடுத்த புகாரின் பேரில் கார்த்தி உட்பட 5 பேர் மீதும், வேளாங்கண்ணி கொடுத்த புகாரின்பேரில் சத்தியமூர்த்தி உட்பட 4 பேர் என மொத்தம் 9 பேர் மீது போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் திருமணமண்டபத்தில் உணவு சாப்பிட்டு விட்டு கைகழுவி உள்ளார்.
    • பெண் வக்கீலை பின்புறம் தட்டி அநாகரீகமாக நடந்துள்ளார்.

    புதுச்சேரி: 

    புதுச்சேரி மாநிலம் அப்பாவு நகரைச்சேர்ந்த பெண் வக்கீல் ஒருவர் காரைக்கால் மேடு ஸ்ரீ ரேனுகாதேவி அம்மன் கோவிலில் நடைபெற்ற உறவினர் திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு அன்று பகல், காரைக்கால் காமராஜர் சாைலைய ஒட்டிய தனியார் திருமணமண்டபத்தில் உணவு சாப்பிட்டு விட்டு கைகழுவிய போது, பின்னால் நின்றிருந்த, காரைக்கால் நகர் பகுதியைச்சேர்ந்த மோகன்(52) பெண் வக்கீலை பின்புறம் தட்டி அநாகரீகமாக நடந்துள்ளார். இது குறித்து, பெண் வக்கீல் காரைக்கால் நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மோகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவில் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் உடையாபட்டியில் கோவிந்தராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு சாமிக்கு வார பூஜை, மாத பூஜை, வருட பூஜை நடத்தியதாகவும், இதற்காக அபிஷேகப் பொருட்கள் மாலை அலங்கார பந்தல் சீரியல் பல்புகள் அமைத்ததாகவும், பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்ததாக ரூ.12 லட்சம் வரை எடுக்கப்பட்டதாகவும், போலி பில் வைத்து மோசடி செய்யப்பட்டதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் சென்றது.

    கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டுக்குள் இந்த மோசடி நடந்ததாகவும் அப்போது கோவில் செயல் அலுவலராக சசிகலா என்பவர் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து அப்போதைய செயல் அலுவலராக இருந்த சசிகலா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவில் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • முதியவர் திடீரென மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முத்துக்கூறு நாகராஜ்(வயது60) என்பவர் தனது உறவினர்களுடன் சாமி கும்பிட வந்தார். அப்போது நாகராஜ் கோவிலுக்குள் செல்லாமல் வடக்கு சித்திரை வீதியில் உள்ள காலணிகள் பாதுகாப்பு அறை அருகில் காத்திருப்பதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து சாமி கும்பிட சென்ற உறவினர்கள் திரும்பி வந்து பார்த்தபோது நாகராஜ் மாயமாகி இருந்தார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மீனாட்சி அம்மன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    ×