என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிரட்டல்"

    • தனது மோட்டார் சைக்கிளில் செஞ்சிக்கு வந்து கொண்டு இருந்தார்.
    • ஒரு லட்சத்து 28 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    விழுப்புரம்: 

    செஞ்சி கிருஷ்ணாபுரம் வ.உ. சி. தெருவை சேர்ந்த வர் சையத் ஜின்னா. அவரது மகன் சையத் இத்ரிஸ் (வயது 35). இவர் மேல்மலையனூ ரில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் செஞ்சிக்கு வந்து கொண்டு இருந்தார். அவர் செஞ்சி மேய்கலவாய்_ சந்தை தோப்பு சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஒரு தனியார் பள்ளியின் அருகே அடையாளம் தெரியாத 3 பேர் வழிமடக்கி மிரட்டல் விடுத்து அவர் வைத்தி ருந்த ரூபாய் ஒரு லட்சத்து 28 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து சையத் இத்ரிஸ் செஞ்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். எப்போதும் போக்குவரத்து இருக்கும் பகுதியில் வாலி பரை வழிமடக்கி பணம் பறித்த சம்பவம் இப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரமேஷ் பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
    • வியாபாரி ரமேஷ் ராயபுரம் போலீசில் புகார் செய்தார்.

    ராயபுரம்:

    பழைய வண்ணாரப் பேட்டை அம்மையப்பன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ரவுடி கல்லறை சுரேஷ் என்பவர் அடியாட்களுடன் சென்று மாமூல் கேட்டு மிரட்டினார்.

    வியாபாரி ரமேஷ் மாமூல் தர மறுத்ததால் அங்கிருந்த வாடிக்கையாளர்களின் முன்னிலையிலேயே ரவுடி கல்லறை சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆபாச வார்த்தையில் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து வியாபாரி ரமேஷ் ராயபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி காட்சியை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே ரவுடி கல்லறை சுரேஷ் கூட்டாளிகளுடன் வந்து மாமூல் கேட்டு மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த நிலையில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி கல்லறை சுரேஷ், அவனது கூட்டாளிகள் ஆதம்,பெருமாள் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • புத்தன்கடை பகுதியில் செயல்படும் தனியார் பெட்ரோல் பங்கில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் ஜெபஸ்டின்
    • கண்ணன் மது போதையில் வேலைக்கு வந்துள்ளார். அவரை மேலாளர் ஜெபஸ்டின் கண்டித்துள்ளார்.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே புத்தன்கடை பகுதியில் செயல்படும் தனியார் பெட்ரோல் பங்கில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் ஜெபஸ்டின் (வயது 26). அதே பங்கில் கண்ணனூர் உடையார்விளை பகுதியை சேர்ந்த கண்ணன் (36), உதவி மேலாளராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 2 தினங்களுக்கு முன்பு கண்ணன் மது போதையில் வேலைக்கு வந்துள்ளார். அவரை மேலாளர் ஜெபஸ்டின் கண்டித்துள்ளார். மேலும் பணியிருந்தும் நீக்கி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன் மறுநாள் பெட்ரோல் பங்கிற்கு வந்து ஜெபஸ்டினை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து திருவட்டார் போலீசில் ஜெபஸ்டின் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • முருகனை தகாதவார்த்தையால் திட்டி கொலை மிரட்டல்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகராஜை கைது செய்தனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே உள்ள திம்மகுடி அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் முருகன் (வயது 45).

    இவர் கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நகரப் பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று கும்பகோணத்திலிருந்து திருப்புறம்பியம் வரை செல்லும் நகரப் பேருந்தை திருப்புறம்பயம் கடைத்தெருவில் நிறுத்தி இருந்த போது திருப்புறம்பயம் வெள்ளாளத் தெரு பரணத்தான் என்கி்ற முருகராஜ் (36) என்பவர் பஸ்சின் கண்ணாடியை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் முருகன் இதுபற்றி கேட்டதற்கு முருகராஜ், முருகனை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் , தலைமை காவலர் சங்கர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து முருகராஜை கைது செய்தனர்.

    • மரக்காணம் அருகே கடனை திரும்ப கேட்டு மிரட்டியதால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • ரூ. 5 லட்சம் கடன் வாங்கி தன் கணவர் விட்டுச் சென்ற கடன்களை அடைத்துள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது அனுமந்தை மீனவர் கிராமம். இப்பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50) . இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன் அதே பகுதியில் தீபாவளி சீட்டும் நடத்தி வந்துள்ளார். இதனால் ராஜேந்திரனுக்கு அதிக அளவில் கடன் ஏற்பட்டுள்ளது . எனவே அவர் 2 ஆண்டுக்கு முன் வீட்டை விட்டு வெளியில் சென்று உள்ளார். அதிலிருந்து அவர் வீடு திரும்பவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற விபரமும் உறவினர்கள் கூட இதுவரையில் தெரியவில்லை. இந்நிலையில் ராஜேந்திரனின் மனைவி மணிமேகலை அதே பகுதியை சேர்ந்த சீனிவாசனிடம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கி தன் கணவர் விட்டுச் சென்ற கடன்களை அடைத்துள்ளார். கடந்த 8-ந் தேதி சீனிவாச னின் மனைவி மணி மேகலையின் வீட்டிற்குச் சென்று நீங்கள் எங்களிடம் கடன் வாங்கியது 5 லட்சம் அதற்கு வட்டி இப்பொழுது 5 லட்சம் ஆகிவிட்டது.

    எனவே வட்டியும் அசலுமாக சேர்த்து எங்களுக்கு ரூ. 10 லட்சம் இப்பொழுது நீங்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது மணிமே கலைக்கும் மதிக்கும் வாய் தகராறு ஏற்ப ட்டுள்ளது. இதனால் மதி மணிமேகலையை பார்த்து தகாத வார்த்தைகளால் பேசி அசிங்கப்படுத்தி உள்ளார். இதனால் மணமுடைந்த மணிமேகலை எலி மருந்தை சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த அவரது உறவினர்கள் புதுவை ஜிப்பர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மணிமேகலை சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது உறவினர்கள் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கூட்டப்புளி கிழங்குவிளையைச் சேர்ந்தவர் பிஜு (வயது 38) இவர் படந்தாலுமூட்டில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.

    இங்கு திருமணமான 20 வயது இளம்பெண் வேலை செய்து வந்துள்ளார். அவரை மிரட்டி அருகே நின்று, பிஜு போட்டோ எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கர்ப்ப மாக இருந்ததால், இளம் பெண் பணிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த பிஜு, இளம்பெண்ணுடன் தான் இருக்குமாறு எடுத்த போட்டோக்களை அவரது கணவர் மொபைல் போனுக்கு அனுப்ப போவ தாக மிரட்டி உள்ளார். மேலும் மற்றொரு மொபைல் போனிலிருந்து அந்தப் போட்டோக்களை பெண்ணின் கணவருக்கு அனுப்பி உள்ளார். இதனால் பெண்ணுக்கும் கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாயார் வீட்டுக்கு வந்த பெண் எறும்பு பொடி(விஷம்) யை தண்ணீரில் கலக்கி குடித்து உள்ளார்.

    இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து களியக்கா விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கு மார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து பிஜூவை தேடி வருகின்றனர்.

    • கடன் வாங்கியவர்கள் பணத்தை செலுத்திய பிறகும் வீட்டு பத்திரங்களை கொடுக்காமல் கந்து வட்டி கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
    • ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை கைது செய்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரிய மாயாகுளத்தை சேர்ந்தவர் கலீல் ரகுமான். இவர் ராமநாதபுரத்தில் மிளகாய் கமிசன் கடை வைத்திருந்த போது வட்டிக்கு பணம் கொடுக்கும் அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    கலீல் ரகுமான் மகளின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதால் கங்காதரனிடம் சென்று பணம் கேட்டார். 100 ரூபாய்க்கு 1 ரூபாய் வட்டி வீதம் ரூ.4 லட்சம் பெற்று மாதம் தவறாமல் வட்டி செலுத்தி வந்துள்ளார்.

    உறவினர்களுக்கு பணம் தேவைபட்டால் வாங்கி கொடுங்கள் என்று கூறியதால் கலீல் ரகுமான் உறவினர்கள் மற்றும் ஊரில் உள்ள 19 பேருக்கு மொத்தம் ரூ.46 லட்சம் கடனாக பெற்றுகொடுத்தார். அந்த பணத்திற்கு பதிலாக 19 பேரின் வீட்டு பத்திரங்களை வாங்கி கொடுத்தார்.

    பின்னர் கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டதால் பணம் வாங்கிய சிலர் வட்டி செலுத்த முடியாமல் போனதால் ரூ.100-க்கு 3 ரூபாய், 100 ரூபாய்க்கு 10 ரூபாய், 100 ரூபாய்க்கு 13 ரூபாய் வட்டி வீதமும் மற்றும் அபராத தொகையும் சேர்த்து ரூ.1 ½ கோடி கட்டினர்.

    பெரும்பாலானோர் அசல் தொகையை செலுத்தி விட்டதால் அசல் தொகை அனைத்தையும் வட்டி தொகையில் வரவு வைத்து தற்போது ரூ.50 லட்சம் தர வேண்டும் என்று கங்காதரன் மிரட்டியுள்ளார். பணம் பெற்றவர்கள் அசல் தொகை செலுத்தியதால் வீட்டு பத்திரத்தை திருப்பி கேட்டும் கொடுக்கவில்லை.

    ரூ.46 லட்சம் அசல் தொகைக்கு ரூ. 1 ½ கோடி செலுத்தியும் கங்காதரன் பத்திரத்தை கொடுக்காமல் அடியாட்களை வீட்டிற்கு அனுப்பி வைத்து மிரட்டி உள்ளார். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரையிடம் கலீல் ரகுமான் மனைவி உம்முல் ஹபீபா புகார் செய்தார்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை கைது செய்தனர்.

    • பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் இன்று கழுத்தில் ‘மப்ளர்’ அணிந்து வந்திருந்தனர்.
    • பா.ஜ.க. கவுன்சிலர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    நாகர்கோவில்:

    மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் மீனா தேவ், முத்துராமன், வீர சூர பெருமாள், அய்யப்பன், ரமேஷ் ஆகியோர் இன்று கழுத்தில் 'மப்ளர்' அணிந்து வந்திருந்தனர். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர் மீனாதேவ் பேசுகையில், நாகர்கோவில் அனாதை மடம் மைதானத்தில் இருந்து மணலை அப்புறப்படுத்து வதற்கு ரூ.25 லட்சம் செலவு செய்யப்பட்டு உள்ளது.

    இது மாநகராட்சிக்கு மிகப்பெரிய இழப்பாகும். வருவாய் வரக்கூடிய இந்த திட்டத்தில் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஊழல் நடந்து உள்ளது. தேசியக் கொடி ரூ.20 லட்சத்தில் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதிலும் ஊழல் நடந்து உள்ளது, இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

    அப்போது மற்ற பா.ஜ.க. கவுன்சிலர்கள் நாகர்கோவில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் பாரதிய ஜனதாவினரை சீவி விடுவதாக கூறிய மேயரை கண்டிக்கிறோம் என்று கூறினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் நாங்கள் கழுத்தில் 'மப்ளர்' அணிந்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து பா.ஜ.க. கவுன்சிலர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க., பாரதிய ஜனதா கவுன்சிலர்களுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டது.

    பின்னர் பா.ஜ.க. கவுன்சி லர்கள் கூட்டரங்கை விட்டு வெளியேறி போராட்ட த்தில் ஈடுபட்டனர். கையில் கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தியவாறு அவர்கள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஒரு வாட்ஸ் அப் குறுந்தகவல் வந்தது.
    • உங்களது படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் 28 வயது பட்டதாரி பெண். இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைன் செயலி மூலம் ரூ.20 ஆயிரம் லோன் வாங்கி இருந்தார்.

    பின்னர் அந்த லோனை அதே மாதத்தில் திருப்பி செலுத்தி விட்டார்.

    இந்த நிலையில் இந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஒரு வாட்ஸ் அப் குறுந்தகவல் வந்தது.

    அதில் என் வங்கி கணக்குக்கு பணம் செலுத்த வேண்டும்.

    இல்லையென்றால் உங்களது படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தினார்.

    இருந்தாலும் மீண்டும் அதே எண்ணில் இருந்து அந்த பெண்ணின் படத்தை மார்பிங் செய்து அனுப்பப்பட்டது.

    இதனை அந்தப் பெண் பார்த்ததும் அந்த குறுந்தகவல் அழிக்கப்பட்டது. மீண்டும் தொடர்பு கொண்டு பணம் செலுத்த வேண்டும் என்று மர்ம நபர் மிரட்டல் விடுத்தார்.

    இவ்வாறாக மர்ம நபர் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதும், அந்தப் பெண் பணம் அனுப்புவதாக இருந்தார்.

    பல தவணைகளாக ரூ.16 லட்சத்து 31 ஆயிரத்து 340 பணத்தை அந்தப் பெண் செலுத்தியுள்ளார்.

    தொடர்ந்து மிரட்டல் வரவே அந்தப் பெண் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராம்தாஸ் (பொ) வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்து முன்னணி அமைப்பின் தலைவராக இருப்பவர் கலைகோபி.
    • சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு இந்த புகார் குறித்து விசாரித்து வருகிறார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் தலைவராக இருப்பவர் கலைகோபி (வயது 31). இவரது அலுவலகம் கார்னேசன் திடல் பகுதியில் உள்ளது.

    இந்நிலையில் கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் சிலரை கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாகவும் ,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கலைகோபி போலீசில் புகார் கூறியிருந்தார்.

    இந்த சூழலில் கலைகோபியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு அவருக்கு மிரட்டல் விடப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக ராஜேஷ், சரவணா உள்ளிட்ட சிலர் மீது கிரிஷ்ணகிரி டவுன் போலீசில் கலைகோபி புகார் கொடுத்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு இந்த புகார் குறித்து விசாரித்து வருகிறார்.

    • கண்ணாடி விழுந்து நொறுங்கிய சத்தத்தில் அருகில் இருந்த பயணிகள் கடை வாடிக்கையாளர்கள், அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி புதிய பஸ் நிலையத்தில் நேற்று காலை பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் திடீரென பஸ் நிலையத்தில் குடிபோதையுடன் உள்ளே நுழைந்த வாலிபர் ஒருவர் கையில் மண்வெட்டியுடன் பயணிகளை மிரட்டியபடி பஸ் நிலையத்தில் கடைகளுக்கு சென்று மிரட்டல் விடுத்தார்.

    முடிதிருத்தும் கடை நடத்தி வந்த இளையராஜா (34) பெட்டிக்கடை நடத்தி வந்த பிரபுராஜ் (45) ஆகியோரது கடைகளின் முன்பக்க கண்ணாடிகளை மண்வெட்டியால் உடைத்தார்.

    கண்ணாடி விழுந்து நொறுங்கிய சத்தத்தில் அருகில் இருந்த பயணிகள் கடை வாடிக்கையாளர்கள், அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக பொன்னேரி போலீஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் இன்க்டஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். போலீசை கண்டதும் வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து பார்த்ததில் மிரட்டலில் ஈடுபட்டது பர்மா நகரை சேர்ந்த விஜய் (24) என்பது தெரிய வந்தது தப்பி ஓடிய அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • அசோக்கை உடனடியாக கைது செய்யுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார்.
    • அச்சுறுத்தும் வகையில் பேசமாட்டேன் என அசோக்கை கதற வைத்து போலீசார் அந்த வீடியோவை பதிவு செய்து வெளியிட்டனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல்தெருவை சேர்ந்தவர் அசோக் (வயது 19). இவர் மீது மகாராஜகடை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளன.

    இந்நிலையில் கடந்த 11-ந்தேதி அன்று பழையபேட்டை லட்சுமி நாராயணன் கோவில் அருகே சென்ற போது அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் (24) என்பவரை அசோக் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

    இதுகுறித்து, வினோத்குமார் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகாரளித்தார். இந்நிலையில் அசோக் சமூக வலைதளங்களில் கஞ்சா புகைப்பது, நானும் ரவுடிதான் என பஞ்ச் வசனம் பேசி காட்டுவது, போலீசாரை மிரட்டுவது போன்ற காட்சிகளை வெளியிட்டதுடன் அரசு பஸ்சை தீ வைத்து கொளுத்துவேன் எனவும் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

    இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து அசோக்கை உடனடியாக கைது செய்யுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் பழையபேட்டை பகுதியில் பதுங்கியிருந்த அசோக்கை கைது செய்தார்.

    அவரை உரிய முறையில் கவனித்த போலீசார் இனிமேல் இதுபோல் தவறு செய்யமாட்டேன். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசமாட்டேன் என அசோக்கை கதற வைத்து அந்த வீடியோவையும் பதிவு செய்து வெளியிட்டனர்.

    முதல் நாளில் பந்தாவாக போலீசை சீண்டி பதிவு வெளியிட்டவர் தற்போது போலீசாரின் கவனிப்புக்கு பிறகு கதறல் வீடியோ வெளியிட்டது, கிருஷ்ணகிரியில் ரவுடியிசம் செய்யும் ஆசாமிகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. 

    ×