search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98443"

    • மதுரை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை விராட்டிபத்து கிருதுமால் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ராஜா (வயது21). இவருக்கு நிரந்தர வேலை இல்லாமல் இருந்து வந்தார். அவரை வேலைக்கு செல்லும்படி அவருடைய தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமடைந்த ராஜா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை சுப்பிரமணியன் எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடை ஆரம்பித்த நாளில் இருந்து ஜி.எஸ்.டி. வரி கட்டவில்லை என கூறப்படுகிறது.
    • கடந்த 3 நாட்களாக விசாரணைக்கு சென்றவர்களின் கதி என்ன ஆனது? என்பது மர்மமாக உள்ளது.

    மதுரை:

    மதுரை கீழமாசி வீதியில் பெரிய மற்றும் சிறிய அளவில் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக மொத்த பலசரக்கு கடைகள் அதிகம் உள்ளன. இந்தப்பகுதியில் கதிரவன், குணாளன், சக்கரவர்த்தி ஆகிய 3 பேர் மொத்த பலசரக்கு கடைகளை நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் கடை ஆரம்பித்த நாளில் இருந்து ஜி.எஸ்.டி. வரி கட்டவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரை ஜி.எஸ்.டி. இயக்குநரக அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஜி.எஸ்.டி. வரி கட்டாமல் ரூ.66 கோடி வரை 3 பேரும் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு பலசரக்கு கடைகளுக்கு வந்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அங்குள்ள ரசீதுகள் மற்றும் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து கதிரவன், குணாளன், சக்கரவர்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டுமென கூறி அழைத்துச் சென்றனர்.

    இதுகுறித்த தகவல் அவர்களது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் பதட்டமடைந்த அவர்கள், மகாத்மா காந்தி நகர் வள்ளுவர் காலனியில் உள்ள ஜி.எஸ்.டி. இயக்குநரக அலுவலகத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது அதிகாரிகள் எந்த தகவலையும் கூற மறுத்ததோடு, 3 பேரையும் சந்திக்க முடியாது என கண்டிப்புடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ஜி.எஸ்.டி. அதிகாரிகளின் இந்த நடவடிக்கை வியாபாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 3 நாட்களாக விசாரணைக்கு சென்றவர்களின் கதி என்ன ஆனது? என்பது மர்மமாக உள்ளது. அதிகாரிகளும் சரியாக பதிலளிக்கவில்லை.

    இதை கண்டித்தும், விசாரணைக்கு அழைத்துச் சென்ற 3 பேரை விடுவிக்க வலியுறுத்தியும் நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இன்று வள்ளுவர் காலனியில் உள்ள ஜி.எஸ்.டி. இயக்குநரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் துணை மேயர் நாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. திடீர் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கீழமாசியில் கடை வைத்து வியாபாரம் செய்ய மொத்த முதலீடு ரூ.50 லட்சம் தான். ஆனால் ஜி.எஸ்.டி. செலுத்தாமல் ரூ.66 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக அதிகாரிகள் கூறுவது அதிர்ச்சியாக உள்ளது. ஜி.எஸ்டி. தொடர்பாக ஆய்வு நடத்த வரும் அதிகாரிகள் எஸ்டி மேட் பில் என கூறப்படும் ரத்தான பில்களையும் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்ற 3 பேரையும் விடுவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அந்த வழியாக வந்த இளைஞர்கள் புதுப்பேட்டை போலீசில் குழந்தையை ஒப்படைத்தனர்.
    • சிறிது நேரத்தில் குழந்தையின் பெற்றோர் யார் என போலீசார் கண்டுபிடித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சியில் நேற்று பிற்பகல் சாலையோரம் 2 வயது குழந்தை எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு திரிந்தது. அந்த வழியாக வந்த இளைஞர்கள் புதுப்பேட்டை போலீசில் குழந்தையை ஒப்படைத்தனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் துரிதமாக செயல்பட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்.

    சிறிது நேரத்தில் குழந்தையின் பெற்றோர் யார் என போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து குழந்தையை ஒப்படைத்தனர். குழந்தை காணாமல் போனது எப்படி? குழந்தையை யாராவது கடத்தி வந்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரைக்கால் நெடுங்காட்டில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • சரவ ணக்குமார் இரவு சிமெண்டு கிராதி கடையில் தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே நெடுங்காடு குரும்பகரம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது33) இவர் மனைவி மணிபாரதி. இவர்களுக்கு ஸ்ரீலக்சனா(5), ஸ்ரீ தனிஷ்(3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சரவணக்குமார், நெடுங்காட்டில் உள்ள சிமெண்ட் கிராதி கடையில் கூலிவேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சரவணகு மாருக்கு குடிபழக்கம் அதிகமானதால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    மணிபாரதி, குழந்தை களை பள்ளியில் சேர்க்க வேண்டும் என பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் என்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் கணவன் மடைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், சரவ ணக்குமார் இரவு சிமெண்டு கிராதி கடையில் தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். மறுநாள் காலை கடை க்கு சென்று பார்த்தபோது அங்கு சரணவகுமார் தனது கைலியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொ ண்டார். இது குறித்து மணி பாரதி, நெடுங்காடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரி ன்பேரில் நெடுங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வொரு நாளும் உற்பத்தி செய்யப்பட்ட பாலின் அளவும், விற்பனை செய்யப்பட்ட பாலின் அளவும் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட வேண்டும்.
    • யாருக்கெல்லாம் தொடர்பு என்பது கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையிலிருந்து, ஒரே பதிவு எண் கொண்ட இரு ஊர்திகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் 2500 லிட்டர் பால் திருடப்பட்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பால் திருட்டு நடைபெற்று வந்திருக்கிறது.

    இந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சம் லிட்டர் பால் திருடப்பட்டிருக்கிறது. அதன் மொத்த மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. நீண்ட காலமாக நடைபெற்று வரும் ஆவின் பால் திருட்டை சம்பந்தப்பட்ட நிறுவனம் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    ஒரே பதிவு எண் கொண்ட இரு ஊர்திகளை பயன்படுத்தி ஆவின் பால் திருடப்பட்டதால், ஐயம் எழவில்லை என்றும், அதனால் தான் இந்தத் திருட்டை நீண்டகாலமாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் ஆவின் உயரதிகாரிகள் சார்பில் கூறப்படுவதை ஏற்கமுடியாது. ஒவ்வொரு நாளும் உற்பத்தி செய்யப்பட்ட பாலின் அளவும், விற்பனை செய்யப்பட்ட பாலின் அளவும் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை கணக்குகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். இந்த நடைமுறைகள் எதிலுமே பால் திருட்டு கண்டு பிடிக்கப்படவில்லை என்பதை நம்ப முடியவில்லை.

    வேலூர் சத்துவாச்சாரி பால் பண்ணையில் பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் முறைகேடுகள் நடப்பதாக சில மாதங்களுக்கு முன் குற்றஞ்சாட்டிய மேலாளர் ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஆவின் நிறுவனத்தில் கண்காணிப்பு அதிகாரிகளாக காவல்துறை கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரிகள் முதல் காவல்துறை தலைவர் நிலையிலான அதிகாரிகள் வரை இருந்திருக்கின்றனர். அவர்களை மீறி எந்த முறைகேடும் நடந்திருக்க முடியாது.

    ஆனால், பல ஆண்டுகளாக வேலூர் ஆவினில் பால் திருட்டு நடைபெற்றிருப்பதால் அதற்கு உயர்பதவிகளில் உள்ளவர்களின் ஆதரவு இருந்திருக்கலாம் என்று ஐயங்கள் எழுப்பப்படுவதை ஒதுக்கித்தள்ள முடியவில்லை.

    ஆவின் நிறுவனம் மக்களுடன் ஒருங்கிணைந்த நிறுவனம் ஆகும். ஆவின் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் வலுப்படுத்தப்பட்டு அசைக்க முடியாத பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட வேண்டும். ஆனால், சுயநலமும், பேராசையும் கொண்டவர்களால் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஆவின் நிறுவனம் சுரண்டப்பட்டே வந்திருக்கிறது. இதற்கு முன் ஆவின் நிறுவனத்திற்காக கொள்முதல் செய்யப்பட்ட பாலில் பெருமளவு கலப்படம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது; இப்போது பெருமளவில் பால் திருடப்பட்டிருக்கிறது. இதில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக ஆவின் பால் திருட்டு குறித்து உயர்நிலை விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    காரைக்காலில் ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் கேபிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திருநள்ளாறு பத்தக்குடி கீழத்தெருவைச்சேர்ந்தவர் நெடுஞ்செழியன். இவர், தனியார் செல்போன் டவர் கெம்பெனியில் எலக்ட்ரிக்கல் டெக்னிசி யனாக பணிபுரிந்து வரு கிறார். சம்பவத்தன்று காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள செல்போன் டவரில் சில வேலைகளை நண்பர் குருநாதன் என்பவரோடு செய்து கொண்டிருந்தார். அப்போது 5ஜீஅலை கற்றைக்கான காப்பர் கேபிள் அறுந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடந்தார். அந்த கேபிளை யாரோ மர்ம நபர்கள் அறுத்து திருடி சென்றதை அவர் உறுதி செய்தார். அதன் மதிப்பு சுமார் ரூ.16 ஆயிரம் இருக்கும்.

    இது குறித்து, நெடுஞ்செ ழியன் மேல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து, நெடுஞ்செழியன் காரைக் கால் பஸ் நிலையம் அருகே நண்பரோடு நடந்து சென்ற போது, சந்தேகத்திற்கு இடமாக மூட்டை ஒன்றோடு சென்ற வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அப்போது, மூட்டையில், திருடப்பட்ட செல்போன் டவர் கேபிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, நண்பர்க ளோடு சேர்ந்த மர்ம நபரை பிடித்து, காரைக் கால் நகர போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரனையில், மயிலாடு துறை மாவட்டம் தரங்கம் பாடி மடப்புரம் காந்தி ரோட்டைச்சேர்ந்த மூர்த்தி (வயது32) என்பது தெரிய வந்தது. பின்னர், போலீசார் அவரை கைது செய்து, செல்போன் டவர் கேபிளை பறிமுதல் செய்தனர். இவர், ஏற்கெனவே, காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள அதே தனியார் செல்போன் டவரில் பேட்ரிகளை திருடி கைது செய்யப்பட்டவர் என்பது குறிபிடத்தக்கது.

    • ஆலன் மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தார்.
    • உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஆலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    நெல்லை:

    பாளை சீவலப்பேரி அருகே மேலபாலாடை பகுதியை சேர்ந்தவர் ஆலன் (வயது 23).

    இவர் மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தார். நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டில் தூங்கச் சென்றார். இன்று காலை வெகு நேரமாகியும் அவரது அறையின் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஆலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சீவலப்பேரி போலீசார், ஆலன் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பணியிடத்தில் மன அழுத்தம் கொடுக்கப்பட்டதால் ஆலன் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என சீவலப்பேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அந்த மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • மூதாட்டி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது பக்கத்து வீட்டில் 74 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வந்தார்.

    இவரது வீடு நேற்று முழுவதும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது அங்கு மூதாட்டி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

    அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அந்த மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மூதாட்டி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் மூதாட்டியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மூதாட்டி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மூதாட்டியின் வீடு அருகே வசித்து வந்த ராஜன், அவரை கற்பழித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சவுந்தரராஜன் தனது வீட்டின் சுற்றுபுறம் தென்னந் தட்டிகளால் வேலி அமைத்துள்ளார்.
    • தீ மளமளவென பரவி தென்னந்தட்டிகள் முழுவதும் எரிந்து சாம்பலாயின.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள மேட்டூர் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது53). பாத்திர வியாபாரி. இவரின் வீட்டின் சுற்றுபுறம் தென்னந் தட்டிகளால் வேலி அமைத்துள்ளார்.

    இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர், தென்னந்தட்டிகள் மீது தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதில் தீ மளமளவென பரவி தட்டிகள் முழுவதும் எரிந்து சாம்பலாயின. தட்டிகள் முழுவதும் எரிந்து சாம்பலாகி கிடப்பதை கண்ட சவுந்த ரராஜன் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் கடையம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடு புகுந்து 5 பவுன் நகை திருடப்பட்டது.
    • கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி அருகே உள்ள கள்ளிக்குடி சத்திரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 67), ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டார். இதை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை, 6 வெள்ளி குத்துவிளக்கு, ஒரு வெள்ளி விநாயகர் சிலை ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    • தமிழகம் முழுவதும் பக்தர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.
    • குற்றவாளியை கைது செய்த போலீசார் நடவடிக்கையை சிவசேனா வரவேற்கிறது.

     திருப்பூர் :

    சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 2-6-2023 அன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு லட்சகணக்கான பக்தர்கள் சுப்பிரமணியசுவாமி முருகப்பெருமானை தரிசனம் செய்துகொண்டிருந்த நேரத்தில் அப்பகுதியில் இந்திய வரைபடத்துடன் சுற்றி திரிந்த வங்கதேச வாலிபர் காலிமூசா என்பவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பக்தர்கள் மத்தியில் அச்சஉணர்வை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளியை கைது செய்த போலீசார் நடவடிக்கையை சிவசேனா வரவேற்கிறது.

    மேலும் இதனை சாதாரணமாக எடுத்து கொள்ளாமல் வங்கதேசத்திலிருந்து காலிமூசா தமிழகத்தில் எப்போது நுழைந்தான்?, இந்திய வரைபடம் எதற்காக வைத்திருந்தான்?, சமூக விரோத அமைப்புகளுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?,திருப்பரங்குன்றம் கோவில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் குண்டு வெடிப்பு போன்ற நாசவேலையில் ஈடுபட ஏதேனும் திட்டமிட்டு இருந்தானா? என பல்வேறு கோணத்தில் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • மாமியார் ஏன் குழந்தைகளை அடிக்கிறாய் என்று கேட்டுள்ளார்.
    • சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சுப்பு லட்சுமி சிகிச்சை பெற்று வந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே வேகாக்கொல்லை வடக்கு தெருவைசேர்ந்தவர் அசோக்குமார்.நர்சரி கார்டன் நடத்தி வருகிறார். இவரது மனைவி சுப்பு லட்சுமி (28),இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது.ஒரு மகன்ஒருமகள் உள்ளனர்.கடந்த 21-ந்தேதி காலை தனது குழந்தைகளை அடித்துள்ளார். இதனை அவருடைய மாமியார் ஏன் குழந்தைகளை அடிக்கி றாய்என்று கேட்டுள்ளார். அதனா ல்அன்று மாலை 2 மணிக்கு வேகாக்கொல்லையில் அவரது வீட்டில்எலி மருந்து தின்று விட்டார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருமாம் பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சுப்பு லட்சுமி சிகிச்சைபெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகி ச்சைஅளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பல னளி க்காமல்பரிதாபமாக உயிரிழந்தார்சுப்புலட்சுமி தற்கொலை குறித்து அவரது கணவனிடம் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்.இன்ஸ்பெ க்டர்பிரேம்குமார்மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருமணம் ஆகி 5ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் சுப்புலட்சுமி மரணத்தில் கடலூர் ஆர்.டி.ஓ விசாரணைக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

    ×