என் மலர்
நீங்கள் தேடியது "பண மோசடி"
- பூஜைக்காக வந்தவர்களை தினந்தோறும் காரில் அழைத்து வந்த கார் டிரைவர், தனக்கு வாடகை வேண்டும் என கேட்டுள்ளார்.
- புதையல் பூஜை விவகாரத்தில் தலைமறைவான மேலும் 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த லட்சுமி காந்த் (வயது54). இவர் ஓசூர் அருகே சாந்தபுரம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பூஜைகள் செய்வதற்காக திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள கனியூரை சேர்ந்த சசிகுமார் (61), சங்கர் கணேஷ் (43), செல்வராஜ் (61), உடுமலைப்பேட்டை நக்கீரர் தெருவை சேர்ந்த சசிகுமார் (48), திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகரை சேர்ந்த பிரபாகர் (37), சேலம் குகை முங்கபாடி தெருவை சேர்ந்த ராஜ்குமார் (45), கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஆலடி ரோட்டை சேர்ந்த நடராஜன் (48), சுந்தர்ராஜ் நகரை சேர்ந்த முத்து குமாரவேல் (48), விஜயவாடா கொத்தப்பேட்டை சையத்குலாம் தெருவை சேர்ந்த பிரகாஷ் குப்தா (68) மற்றும் அவர்களுடன் சில பெண்கள் உள்ளிட்டோரை ஓசூருக்கு அழைத்து வந்து ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்தார்.
இந்த பூஜைகள் குறித்து லட்சுமி காந்த், சாந்தபுரம் செந்தமிழ் நகரை சேர்ந்த கிஷோருக்கு கூறியுள்ளார். கிஷோர் மூலம் பூஜைகள் குறித்து அவரது சகோதரரான குள்ளப்பாவிற்கும் குள்ளப்பாவின் மனைவி ராதாம்மாவிற்கும் (46) தெரியவந்தது.
சாந்தபுரம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்ற அவர்கள் கோவிலில் பூஜைகளை நடத்தியுள்ளனர். தொடர்ந்து தாங்கள் பல்வேறு பூஜைகளை செய்து புதையல் எடுத்து தருவதாக குள்ளப்பா மற்றும் அவரது மனைவி ராதாம்மா ஆகியோரிடம் ஆசை வார்த்தை கூறினர்.
தொடர்ந்து அந்த பகுதியில் சிறியதாக புதையல் பூஜை ஒன்றை நடத்தியவர்கள். இந்த புதையல் பூஜையில் ஒரு பானையில் சிறிய அளவில் தங்க காசுகள் கிடைத்ததாக ராதாம்மாவையும் அவரது கணவர் குள்ளப்பாவையும் அனைவரும் நம்ப வைத்துள்ளனர். தங்க காசுகளை கணவன், மனைவி இருவரும் கடைக்கு கொண்டு சென்று சோதித்து பார்த்து உண்மை என நம்பினர்.
அதனை தொடர்ந்து அந்த கும்பல் ராதாம்மா மற்றும் குள்ளப்பா ஆகியோரிடம் இந்த பகுதியில் பெரிய அளவில் புதையல் ஒன்று உள்ளது. அதனை பல்வேறு தீய சக்திகள் தடுத்து வருகின்றன.
பெரிய அளவில் பணம் கொடுத்தால் அந்த சக்திகளை விரட்டி புதையலை எடுக்கலாம். அதன் மூலம் கோடீஸ்வரராக மாறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதற்கான செலவுக்காக ரூ.8 லட்சம் அளவில் பணம் வாங்கியுள்ளனர்.
பூஜைகளை செய்த அவர்கள் ஒரு பானையில் தங்கம், வைரம், வைடூரியம் இருப்பதாக கூறி அதனை பத்திரமாக வீட்டில் வைத்து பூஜைகள் செய்ய வேண்டும் எனக் கூறி பானையை கொடுத்தனர்.
அதனை பெற்றுக்கொண்ட ராதாம்மா தன்னுடைய வீட்டில் வைத்து அந்த பானையை பூஜை செய்து வந்துள்ளார். அதே நேரத்தில் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது, புதையலை வாங்குவதற்கு ஒரு கும்பல் வந்தனர்.
அவர்களிடம் ரூ.2½ கோடி பணம் அட்வான்ஸ் வாங்கி ராதாம்மாவிடம் கொடுத்து புதையல் பானை அருகே வைத்துள்ளனர். இரண்டையும் ஒரே நேரத்தில் தான் திறக்க வேண்டும் எனவும் கூறி நம்ப வைத்துள்ளனர். புதையல் வீட்டில் இருப்பதை கண்டு மகிழ்ச்சியில் திளைத்த ராதாம்மா, குள்ளப்பா தம்பதியினரிடம் பூஜை நடத்துபவர்கள் தொடர்ந்து பணத்தை கேட்டுள்ளனர்.
இதனிடையே ராதாம்மாவின் மகனுக்கு இந்த விஷயத்தில் சந்தேகம் ஏற்படவே வீட்டிலிருந்த பானை மற்றும் ரூ.2½ கோடி பணம் இருந்த பெட்டியை அவர் உடைத்துப் பார்த்தார்.
அப்போது இரண்டிலும் பழைய காகிதங்கள் தான் இருந்துள்ளது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என அவர்கள் உணர்ந்தனர்.
அதே நேரத்தில், பூஜைக்காக வந்தவர்களை தினந்தோறும் காரில் அழைத்து வந்த கார் டிரைவர், தனக்கு வாடகை வேண்டும் என கேட்டுள்ளார்.
வாடகை பணத்தை அவர்கள் கொடுக்காததால் அவர்கள் பேசுவதில் பல்வேறு புதையல் சார்ந்த விஷயங்கள் இருப்பதை அறிந்த அவர், 100 எண் மூலம் போலீசாருக்கு தகவல் அளித்து விட்டார்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கவனத்திற்கு தகவல்சென்றது. அவரது உத்தரவின் பேரில் நல்லூர் போலீசார் அந்த கும்பல் தங்கி இருந்த விடுதியில் சுற்றி வளைத்து அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.
இந்த புதையல் பூஜை விவகாரத்தில் தலைமறைவான மேலும் 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- மர்மநபர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் இளம்பெண்ணுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
- சைபர் கிரைம் போலீசில் இளம்பெண் புகார் அளித்தார்.
ஒயிட்பீல்டு:
பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கம்ப்யூட்டர் என்ஜினீயரான அவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இளம்பெண்ணின் வாட்ஸ்-அப்புக்கு ரிசர்வ் வங்கி அதிகாரி எனக்கூறி கொண்டு ஒரு நபர் பேசினார்.
அப்போது உங்களது வங்கி கணக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கிறது, அதுபற்றி மும்பை போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று அந்த நபர் இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். அதன்படி, மும்பை போலீசார் எனக்கூறி மற்றொரு நபர், இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நீங்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதால், உங்களை கைது செய்வோம் என்று அவர் மிரட்டியுள்ளார்.
இந்த வழக்கில் உங்களை கைது செய்யாமல் இருக்க தான் கூறும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும்படி மர்மநபர் இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் மர்மநபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.84½ லட்சத்தை இளம்பெண் அனுப்பி வைத்தார்.
மர்மநபர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் இளம்பெண்ணுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் மர்மநபர்கள் ரிசர்வ் வங்கி அதிகாரி, மும்பை போலீசார் பெயரில் மிரட்டி பணம் பறித்ததையும் இளம்பெண் உணர்ந்தார். இதுபற்றி ஒயிட்பீல்டு மண்டல சைபர் கிரைம் போலீசில் இளம்பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகிறார்கள்.
- பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சைபர் மோசடியில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
- பல்கலைக்கழக துணை வேந்தர் ரூ.14 லட்சத்தை இழந்திருப்பது ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெர்ஹாம்பூர்:
ஒடிசாவின் பெர்ஹாம்பூர் பல்கலைக்கழக துணை வேந்தராக இருப்பவர் கீதாஞ்சலி தாஸ். இவரை கடந்த பிப்ரவரி மாதம் சிலர் செல்போனில் தொடர்பு கொண்டனர். தங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்ட அவர்கள், கீதாஞ்சலி தாஸ் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறி அவரை டிஜிட்டல் கைது செய்திருப்பதாக தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.14 லட்சம் தருமாறு கூறிய அவர்கள், அதில் ரூ.80 ஆயிரத்தை திருப்பி கொடுத்து விட்டு மீதி பணத்தை விசாரணைக்குப்பின் தருவதாக கூறினர். ஆனால் அவர்கள் கூறியதைப்போல பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட கீதாஞ்சலி தாஸ், போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், இந்த மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த 2 பேரை தற்போது கைது செய்துள்ளனர்.
அவர்களை ஒடிசா அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சைபர் மோசடியில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. டிஜிட்டல் கைது மோசடியில் பல்கலைக்கழக துணை வேந்தர் ரூ.14 லட்சத்தை இழந்திருப்பது ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- விக்கி என்ற ராஜகணபதியை கடந்த மாதம் நில மோசடி வழக்கில் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
- மோசடி வழக்கு தொடர்பாக விக்கியை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிரந்தியத்தை சேர்ந்தவர் சகாயமேரி. இவருக்கு காரைக்கால் கோட்டுச்சேரியை சேர்ந்த நீலமேகன் மற்றும் திருநாள்ளாரை சேர்ந்த காயத்ரி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்சிங் வேலை வாங்கி தர புதுச்சேரியில் ஆள் இருப்பதாக நீலமேகன் மற்றும் காயத்திரி ஆகியோர் சகாயமேரியிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் புதுச்சேரி பா.ஜ.க, பிரமுகரான அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த விக்கி என்ற ராஜகணபதி (வயது35) என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதனை நம்பி சகாயமேரி மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த ஜெயக்கொடி ஆகியோர் இணைந்து நர்சிங் வேலைக்காக விக்கியிடம் ரூ.16.65 லட்சத்தை கொடுத்துள்ளனர்.
ஆனால் பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வேலை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், ஜெயக்கொடி விக்கியிடம் கேட்டுள்ளார். சில நாட்களில் வந்துவிடும் என விக்கி கூறி வந்துள்ளார்.
இதையடுத்து விக்கி, அவர்களுக்கு ஜிப்மர் ஆவணங்கள், ஜிப்மர் ஐ.டி. கார்டு, ஜிப்மர் பணி ஆணை, சம்பளம் தொகை விவரங்கள் உட்பட்ட ஜிப்மர் இயக்குநரின் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார்.
இதனை ஜெயக்கொடி மற்றும் சகாயமேரி ஆகியோர் ஜிப்மர் இயக்குனரிடம் காண்பித்த போது அது போலியான ஆவணங்கள் என்று தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பின்னர் இதுகுறித்து ஜெயக்கொடி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் விக்கி என்ற ராஜகணபதி. கோட்டுச்சேரி நீலமேகன் மற்றும் திருநள்ளாறை சேர்ந்த காயத்ரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே விக்கி என்ற ராஜகணபதியை கடந்த மாதம் நில மோசடி வழக்கில் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
இதை தொடர்ந்து மோசடி வழக்கு தொடர்பாக விக்கியை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- தனது பெற்றோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.5 லட்சம் முதல் 25 லட்சம் வரை வாங்கினார்.
- ஐதராபாத் ஜுபிலி ஹில்சை சேர்ந்த டாக்டர் ஒருவரிடம் ரூ. 11 லட்சம் கடனாக பெற்று திருப்பி தரவில்லை.
ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமகேந்திரவரத்தை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா (வயது 33). இவர் பி.டெக் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கடந்த 2014-ம் ஆண்டு ஐதராபாத் வந்தார்.
ஐதராபாத்தில் உள்ள வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இளைஞர்களுக்கு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக போலீசார் வம்சி கிருஷ்ணாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
ஜெயிலில் இருந்து வெளியே வந்த வம்சி கிருஷ்ணா ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ. போட்டோவை தனது வாட்ஸ்அப் டி.பி.யாக வைத்தார்.
பின்னர் திருமண தகவல் வலைதளங்களில் தன்னுடைய தாய் அமெரிக்காவில் டாக்டராக வேலை செய்கிறார். நான் உள்ளூரில் வியாபாரம் செய்து வருகிறேன். 2-வது திருமணம் செய்ய விரும்பும் பெண்கள் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் என பதிவு செய்தார்.
மேலும் தனது தாய் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியிருந்தார். இதனை உண்மை என நம்பி ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வம்சி கிருஷ்ணாவை தொடர்பு கொண்டனர்.
பழக்கம் ஏற்பட்ட பெண்களிடம் தனது நிறுவனத்தில் ஐடி அதிகாரிகள் சோதனை செய்து பணத்தை பறிமுதல் செய்துவிட்டனர். தனது பெற்றோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.5 லட்சம் முதல் 25 லட்சம் வரை வாங்கினார். இதன் மூலம் ரூ.2½ கோடி மோசடி செய்தார்.
வம்சி கிருஷ்ணாவிடம் பணத்தை இழந்த பெண்கள் பணத்தை திருப்பி கேட்ட போது அவர்களது போட்டோவை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வந்துள்ளார்.
ஐதராபாத் ஜுபிலி ஹில்சை சேர்ந்த டாக்டர் ஒருவரிடம் ரூ. 11 லட்சம் கடனாக பெற்று திருப்பி தரவில்லை. இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார்.
பல்வேறு பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் பெங்களூருவில் பதுங்கி இருந்த வம்சி கிருஷ்ணாவை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- அழகிய குரல் வளம் கொண்ட பெண்களை வேலைக்கு சேர்த்து அவர்கள் மூலம் வாடிக்கையாளர்களை இழுத்துள்ளனர்.
- இப்படி பண ஆசை, பெண்களின் கவர்ச்சியான பேச்சுக்கு மயங்கி பலரும் பணம் முதலீடு செய்ய வந்துள்ளனர்.
கன்னியாகுமரி:
ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுவோரும் இருப்பார்கள் என்பது முதியோர் வாக்கு.
குறுகிய காலத்தில் செல்வந்தர் ஆக வேண்டும் என்று விரும்புவோர் அதற்கான வழிகளையே யோசிப்பார்கள். அத்தகையோரை குறிவைத்து மோசடி நபர்கள் பணம் பறிக்கும் செயல்களை அரங்கேற்றி வருகிறார்கள்.
இதுபற்றி சமூக ஊடகங்கள், பத்திரிகைகளில் பலமுறை எச்சரிக்கை செய்தி வந்தாலும் இன்னும் ஏமாறுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். கன்னியாகுமரியில் அப்படி நடந்த ஏமாற்று செயல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கன்னியாகுமரி அருகே வடக்கு குண்டல் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த சில நாட்களாக வெளியூர் நபர்கள் வருகை அதிகமாக இருந்தது. வருபவர்கள் கன்னியாகுமரியை சுற்றி பார்க்க செல்வதற்கு பதில் லாட்ஜூக்கு வருவதும், சிறிது நேரத்தில் திரும்பி செல்வதுமாக இருந்தனர்.
இது அந்த பகுதி மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அவர்கள் இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். டி.எஸ்.பி.ராஜா தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீரென அந்த லாட்ஜூக்கு சென்றனர்.
போலீசாரை கண்டதும் அந்த கும்பல் லாட்ஜ் அறைகளில் இருந்து தப்பியோடினர். சிலர் அருகில் இருந்த புதருக்குள் புகுந்து மறைந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
ஆண்கள், பெண்கள் என சுமார் 35 பேரை பிடித்த போலீசார் அவர்கள் அனைவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
போலீசாரின் விசாரணையில் தான் அந்த லாட்ஜூக்கு வந்து சென்றவர்கள் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதாவது பணம் கொடுப்பவர் இந்த கும்பலிடம் ஒரு ரூபாய் கொடுத்தால் அடுத்த மாதம் அந்த கும்பல், பணம் கொடுத்தவர்களுக்கு 2 ரூபாயாக திருப்பி கொடுப்பார்கள்.
இப்படி ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரே மாதத்தில் ரூ. 2 ஆயிரம் திரும்ப கிடைக்கும். இதுவே ஒரு லட்சம் கொடுத்தால் அடுத்த மாதம் ரூ.2 லட்சம் கிடைக்கும். இப்படி பணத்தை முதலீடு செய்தால் ஒரே வருடத்தில் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்று இந்த கும்பல் கூறியுள்ளது.
இதற்காக இந்த கும்பலை சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஏஜெண்டுகளை நியமித்து உள்ளனர். அவர்கள் மூலம் அந்த மாவட்டத்தில் பணம் வைத்திருக்கும் நபர்களை தெரிந்து கொண்டு அவர்களிடம் பணம் இரட்டிப்பு குறித்து பேசி அதனை தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய கூறியுள்ளனர்.
இதற்காக அழகிய குரல் வளம் கொண்ட பெண்களை வேலைக்கு சேர்த்து அவர்கள் மூலம் வாடிக்கையாளர்களை இழுத்துள்ளனர். இப்படி பண ஆசை, பெண்களின் கவர்ச்சியான பேச்சுக்கு மயங்கி பலரும் பணம் முதலீடு செய்ய வந்துள்ளனர்.
அதிக வாடிக்கையாளர்களை இழுத்து வரும் ஏஜெண்டுகளுக்கு நிறுவனத்தினர் சொகுசு கார்களை பரிசாக வழங்கி உள்ளனர். இதற்கு ஆசைப்பட்ட பல ஏஜெண்டுகள், பணம் மோசடிக்கு துணை போய் உள்ளனர்.
போலீஸ் விசாரணையில் தெரியவந்த இந்த தகவல்களை தொடர்ந்து இந்த மோசடிக்கு துணை போனவர்கள் உள்பட அனைவரையும் பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பிரசாத் உத்தரவிட்டார்.
இதையடுத்து கன்னியாகுமரி லாட்ஜில் கொஞ்சும் குரலில் பேசி வாடிக்கையாளர்களை வளைத்த 2 பெண்கள் மற்றும் பண இரட்டிப்பு மோசடிக்கு மூளையாக செயல்பட்ட மதுரை பேரையூரை சேர்ந்த சுந்தரபாண்டியன், ராஜாமணி உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சத்து 4 ஆயிரத்து 810 ரொக்க பணம், 3 சொகுசு கார்கள், 32 செல்போன்கள், 2 லேப் டாப்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த கும்பல் தமிழகத்தில் வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டினார்கள் என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.
- உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் கடந்த 30-ந்தேதி களஞ்சியம் புகாா் கொடுத்தாா்.
- அதன் பேரில் செந்தில்மாரி குடும்பத்தினரை விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்துள்ளனர். ஆனால் அவர்கள் வரவில்லை.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாகாச்சி கிராமத்தை சோ்ந்த முனியாண்டி மகன் செந்தில்மாரி(வயது31). இவா் தஞ்சை மாவட்டத்தில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா்.
இவருக்கும், ஆக்கடா வலசை கிராமத்தை சோ்ந்த களஞ்சியம் என்பவரின் மகளுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. பெண்ணின் வீட்டாா் 40 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட சீா்வரிசை தருவதாக பேசப்பட்டதாக தெரிகிறது.
இதனிடையே வீட்டு வேலை நடப்பதாக கூறி முன்பணமாக ரூ.1.07 லட்சத்தை செந்தில்மாரி, அவரது உறவினா்கள் காயத்திரி(34), ராணி(35) ஆகியோா் பெற்றதாக கூறப்படுகிறது. நிச்சயித்த படி அவர்களது திருமணம் கடந்த மாதம் 28-ந் தேதி நடந்திருக்க வேண்டும். ஆனால் திருமணத்துக்கு மாப்பிள்ளை செந்தில்மாரி மற்றும் அவரது குடும்பத்தினா் வரவில்லை.
இதுகுறித்து உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் கடந்த 30-ந்தேதி களஞ்சியம் புகாா் கொடுத்தாா். அதன் பேரில் செந்தில்மாரி குடும்பத்தினரை விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்துள்ளனர். ஆனால் அவர்கள் வரவில்லை.
இதையடுத்து கிராம நிா்வாக அலுவலா் செந்தில்மாரி, அவரது உறவினா்கள் காயத்திரி, ராணி ஆகியோா் மீது 3 பிரிவுகளில் உச்சிப்புளி சப்-இன்ஸ்பெக்டர் நாகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
- தங்களது நிறுவனத்தில் ரூ.15லட்சம் முதலீடு செய்தால் வாரம் தோறும் ரூ.90 ஆயிரம் பணம் கிடைக்கும் என்று ஆதவன் ஆசை வார்த்தை கூறினார்.
- நம்பிய சுந்தரேசன் ரூ.15லட்சம் பணத்தை செலுத்தினார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட ஆதவன் கூறியபடி பணம் கொடுக்கவில்லை.
போரூர்:
கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன். டாக்டரான இவருக்கு நண்பர் ஒருவர் மூலம் விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வந்த சாலிகிராமத்தை சேர்ந்த ஆதவன் என்பவர் அறிமுகமானார்.
அப்போது தங்களது நிறுவனத்தில் ரூ.15லட்சம் முதலீடு செய்தால் வாரம் தோறும் ரூ.90 ஆயிரம் பணம் கிடைக்கும் என்று ஆதவன் ஆசை வார்த்தை கூறினார்.
இதை நம்பிய சுந்தரேசன் ரூ.15லட்சம் பணத்தை செலுத்தினார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட ஆதவன் கூறியபடி பணம் கொடுக்கவில்லை.
இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த டாக்டர் சுந்தரேசன் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட ஆதவன், மேலாளர் சுபாஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் மேலாளர் சுபாசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. ஆதவனை போலீசார் தேடி வருகிறார்கள்.
- வங்கி மேலாளர் பேசுவது போல் நடித்து கூலித்தொழிலாளியிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
- மேட்டுப்பாளையம் போலீசில் கூலித்தொழிலாளி அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை குரும்பாபேட் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 44). கூலித்தொழிலாளி. இவரது செல்போன் எண்ணுக்கு தேசிய மாயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து மானேஜர் பேசுவதாக ஒருவர் கூறினார்.
அவர், ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டதாகவும், அதை புதுப்பிக்க அண்ணாதுரை செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. வரும். அதை தெரிவிக்கும் படியும் கூறியுள்ளார்.
அதை நம்பி அண்ணாதுரை அவரது செல்போன் எண்ணுக்கு பலமுறை வந்த ஓ.டி.பி.யை அந்த நபரிடம் கூறினார்.
அடுத்தடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து மொத்தம் ரூ.96 ஆயிரத்து 250 எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணாதுரை, தனது வங்கிகணக்கில் இருந்து மோசடியாக பணம் எடுத்ததை அறிந்தார்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் அண்ணாதுரை அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சென்னையை போன்று மதுரை, திருமங்கலம், ஈரோடு, நாமக்கல், சேலம், விருதுநகர், கள்ளக்குறிச்சி, கோவை, பெரம்பலூர் ஆகிய 8 இடங்களிலும் போலி வங்கி செயல்பட்டது தெரியவந்தது.
- போலி வங்கியை திருமுல்லைவாயலை சேர்ந்த சந்திரபோஸ் என்பவர் மிகவும் துணிச்சலாக நடத்தி வந்துள்ளார்.
சென்னை:
சென்னை உள்பட முக்கிய நகரங்களில் போலியான ஊரக வங்கியை நடத்தி பெண்களை குறி வைத்து பட்டதாரி வாலிபர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாரத ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், 'ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் வங்கி' என்ற பெயரில் போலியான வங்கி செயல்பட்டு வருவதாகவும் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் தங்க ஜோதி ஆகியோரது மேற்பார்வையில் கூடுதல் துணை கமிஷனர் பிரபாகரன், உதவி கமிஷனர் முத்துக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சென்னை அம்பத்தூர் உள்பட 9 ஊர்களிலும் போலி வங்கி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அம்பத்தூர் லேடான் தெருவில் போலி ஊரக வங்கியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்துள்ளது. அங்கு சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்றிருப்பது போல போலி சான்றிதழ் தயாரித்து வங்கியை மோசடியாக நடத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது.
சென்னையை போன்று மதுரை, திருமங்கலம், ஈரோடு, நாமக்கல், சேலம், விருதுநகர், கள்ளக்குறிச்சி, கோவை, பெரம்பலூர் ஆகிய 8 இடங்களிலும் போலி வங்கி செயல்பட்டது தெரியவந்தது.
இந்த போலி வங்கியை திருமுல்லைவாயலை சேர்ந்த சந்திரபோஸ் என்பவர் மிகவும் துணிச்சலாக நடத்தி வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து சந்திரபோசை போலீசார் கைது செய்தனர். சென்னையை போன்று வெளி மாவட்டங்களிலும் போலி வங்கியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினார்கள்.
வங்கி கணக்கில் இருந்த ரூ.56 லட்சத்து 65 ஆயிரத்து 336 பணமும், சந்திரபோசின் பென்ஸ் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
மோசடி ஆசாமியான சந்திரபோஸ், ஊரக பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு பெண்களை குறிவைத்து ரூ.100 கோடி அளவுக்கு பணத்தை சுருட்டியாக கூறப்படுகிறது. இந்த மோசடி வித்தையை அரங்கேற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் போலி வங்கியை இவர் நடத்தி வந்ததும் இதன் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை வாடிக்கையாளர்களாக சேர்த்திருப்பதும் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
லண்டனில் எம்.பி.ஏ. படித்துள்ள சந்திரபோஸ் வங்கி செயல்பாடுகள் பற்றிய தகவல்களை படித்துள்ளார். இதை வைத்தே அவர் மோசடி செய்வதில் கில்லாடியாக வலம் வந்துள்ளார். அவரது மோசடி லீலைகள் பற்றி புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-
"ரூரல் அண்டு அக்ரிசல்ச்சர் பார்மர்ஸ் கோ-ஆபரேட்டிவ் பேங்க்" (ஆர்.ஏ.எப்.சி. வங்கி) என்ற பெயரில் போலி வங்கியை தொடங்கிய சந்திரபோஸ், வங்கியில் உறுப்பினராக சேருவதற்கு வாடிக்கையாளர்களிடம் ரூ.700 பணம் வசூல் செய்துள்ளார். இதனை வைத்து வங்கி கணக்கை தொடங்கி கொடுத்து ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் கார்டுகளை போலியாக பயன்படுத்தி ஆர்.ஏ.எப்.சி. ஸ்டிக்கரை ஒட்டி வாடிக்கையாளர்களிடம் கொடுத்துள்ளார்.
இந்த கார்டை வைத்து வங்கியில் பணம் எடுக்கலாம் என்றும், பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதன்படி இந்த கார்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் வசிக்கும் சுயஉதவி குழு பெண்கள், விவசாயிகள் ஆகியோரின் பண தேவையை கருத்தில் கொண்டே ஊரக வங்கி என்று வங்கிக்கு பெயர் வைத்து சந்திரபோஸ் மோசடியை அரங்கேற்றி இருக்கிறார்.
ஒவ்வொரு வங்கி கிளையிலும் நூற்றுக்கணக்கானோர் வாடிக்கையாளர்களாக சேர்ந்து இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து டெபாசிட் உள்பட பல வழிகளில் சந்திரபோசும், வங்கி பணியாளர்களும் பணத்தை கறந்துள்ளனர்.
ஒவ்வொரு வங்கி கிளைகளிலும் 4-ல் இருந்து 5 பேர் வரை பணியாற்றி வந்துள்ளனர். வங்கியின் தலைவர் என்று தன்னை கூறிக் கொண்டு செயல்பட்டு வந்த சந்திரபோஸ், மேலாளர், உதவி மேலாளர் என ஊழியர்களையும் நியமித்துள்ளார்.
இதற்காக இவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையில் பணத்தையும் வசூல் செய்துள்ளார். இந்த பணத்தில் இருந்தே மாதா மாதம் வங்கி பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்துள்ளார். வங்கி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.
விவசாய கடன், பெண்களுக்கான கடன், தனிநபர் கடன், மாதாந்திர கடன், வார கடன் என விதவிதமான வழிகளில் கடன் வழங்குவதாக கூறி விளம்பரம் செய்து பெண்கள் மற்றும் விவசாயிகளை சந்திரபோஸ் ஏமாற்றி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
ஆர்.ஏ.எப்.சி. வங்கியில் முதலீடு செய்தால் எப்போது வேண்டுமானாலும் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று மக்களை நம்ப வைத்து சந்திரபோஸ் மோசடி செய்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருப்பது போன்ற போலி சான்றிதழை சந்திர போஸ் தயாரித்ததன் பின்னணி பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சந்திரபோசின் மோசடிக்கு மேலும் பலர் உடந்தையாக இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சந்திரபோசை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். இந்த மோசடியின் பின்னணியில் வங்கி ஊழியர்கள் யாரும் உடந்தையாக இருந்துள்ளார்களா? என்கிற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. சந்திரபோசை காவலில் எடுத்து விசாரிக்கும் போது போலி வங்கி மோசடி தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பண்ருட்டியில் சீட்டு பண மோசடி செய்த ரேசன் கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
- பாக்கியம் என்பவர் நேரில் சென்று பழனியிடம் சீட்டு பணம்கேட்டுள்ளனர்.
கடலூர்:
பண்ருட்டி திருவதிகை யை சேர்ந்தவர் மாரிமுத்து இவர் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார்.இந்த சீட்டு நிறுவனத்தில் ஏராள மான பெண்கள் உள்பட பலர் பணம் கட்டி வந்தனர். இதற்கிடையில் சீட்டு நிறு வனம் நடத்தி வந்த மாரிமுத்து கொரோனாவுக்கு பலியானர். இதனால் சீட்டு நிறுவனம் நடத்தி வந்த இவரது மனைவி, மாமனார், ஆகியோரிடம் சீட்டுகட்டியவர்கள் பணம் கேட்டுவந்தனர். இதற்கிடையில் திருவதிகை சக்கரபாணி நகரில் உள்ள மாரிமுத்துவின் மாமனார் பழனியின் வீட்டுக்கு திருவதிகை ஓறையூரான் சந்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மனைவி பாக்கியம் (57) என்பவர் நேரில் சென்று பழனியிடம் சீட்டு பணம்கேட்டுள்ளனர். பழனி, பாக்கியத்தை ஆபாசமாக திட்டிகொலைமிரட்டல்விடுத்துள்ளார். இது பற்றி பாக்கியம் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொறுப்பு) சப் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ரேஷன் கடை ஊழியர் பழனியை கைது செய்து பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.
- அப்துல் ரகுமான் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தை என்பதும், என்னை ஏமாற்றி பண மோசடி செய்ததும் தெரியவந்தது.
- புகாரின் பேரில், போலீசார் முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணிடம் ரூ. 40 லட்சம் மோசடி செய்த அப்துல்ரகுமான் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 31 வயது இளம்பெண்.
இவர் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் பட்டப்படிப்பை முடித்து விட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தேன். அதற்காக கடந்த 2019-ம் ஆண்டு கோவை வந்து காந்திபுரத்தில் தங்கி அங்குள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் படித்து வந்தேன்.
அப்போது காந்திபுரம் 2-வது வீதியில் செல்போன் கடையில் வேலை பார்த்த அப்துல்ரகுமான் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. பின்னர் இருவரும் கடந்த ஜூலை 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு யாருக்கும் தெரியாமல் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம்.
குடும்பம் நடத்தும் போது பல முறை எங்களுக்குள் தாம்பத்திய உறவு நடந்தது. இந்த நிலையில் சொந்த தொழில் செய்வதற்கு பணம் தேவைப்படுவதாக கூறி என்னிடம் ரூ. 40 லட்சம் பணம், 4.5 பவுன் தங்கம் மற்றும் வைர மோதிரத்தை அப்துல் ரகுமான் வாங்கினார்.
ஆனால் அவர் தொழில் தொடங்காமல் புதிய வீடு கட்டியதாக தெரிகிறது. இது குறித்து நான் அவரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தற்போது நான் 7 மாத கர்ப்பிணியாக உள்ளேன். ஏற்கனவே நான் 2 முறை கருக்கலைப்பும் செய்துள்ளேன்.
இந்நிலையில், அப்துல் ரகுமான் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தை என்பதும், என்னை ஏமாற்றி பண மோசடி செய்ததும் தெரியவந்தது. இது குறித்து கேட்டபோது எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
என்னை ஏமாற்றிய அப்துல்ரகுமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
புகாரின் பேரில், போலீசார் முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணிடம் ரூ. 40 லட்சம் மோசடி செய்த அப்துல்ரகுமான் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.