என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் நிலையம்"

    • ரெயில் நிலையத்தில் குளிர்சாதன பெட்டியில் வைத்து மல்லிகைப்பூ விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • மதுரை மல்லிகை பூவை ரெயில் பயணிகள் வாங்கும் வகையில் ரெயில் நிலையத்தில் ஏற்பாடு.

    மதுரை ரெயில் நிலையத்தில் முதன்முறையாக பூக்கடைக்கு தெற்கு ரெயில்வே அனுமதி வழங்கியுள்ளது.

    அதன்படி, மதுரை ரெயில் நிலையத்தில் மதுரையின் பிபலமாக மல்லிகைப்பூ விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் குளிர்சாதன பெட்டியில் வைத்து மல்லிகைப்பூ விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது.

    அதன்படி, மிகவும் பிரபலமான மதுரை மல்லிகை பூவை ரெயில் பயணிகள் வாங்கும் வகையில் ரெயில் நிலையத்தில் விற்பனை தொடங்குகிறது.

    இதனால், மதுரைக்கு வரும் மக்கள் ஊரின் சிறப்பம்சமான மதுரை மல்லிகையை சிரமமின்றி வாங்க மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

    • ரெயில் நிலையம் 6 மணி நேரத்தில் கட்டிட முடிக்கப்பட்டது.
    • முப்பரிமாண கட்டிடம் கான்கிரீட் கட்டிடத்தைப் போல் நிலநடுக்கத்தையும் தாங்கும் திறன் கொண்டது.

    டோக்கியோ:

    ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள அரிடா ரெயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மரத்தால் ஆன பழைய கட்டிடம் அகற்றப்பட்டது. பின்னர் முப்பரிமாண அச்சு பொருத்தப்பட்ட ரெயில் நிலையம் 6 மணி நேரத்தில் கட்டிட முடிக்கப்பட்டது.

    இது முப்பரிமாணம் அச்சிடப்பட்ட உலகின் முதல் ரெயில் நிலையம் ஆகும். அதேசமயம் இந்த முப்பரிமாண கட்டிடம் கான்கிரீட் கட்டிடத்தைப் போல் நிலநடுக்கத்தையும் தாங்கும் திறன் கொண்டது என ஜப்பான் வீட்டு வசதி நிறுவனமான செரெண்டிக்ஸ் தெரிவித்துள்ளது.

    இந்த முப்பரிமாண ரெயில் நிலையம் வருகிற ஜூலை மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என ஜப்பான் மேற்கு ரெயில்வே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    • ரெயில் ஓட்டுநர் அப்பெண்ணை கண்டு உடனடியாக பிரேக் போட்டார். ஆனால் ரயிலை உடனடியாக நிறுத்த முடியவில்லை.
    • அப்பெண் ஷகர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்ட்டார்.

    பீகாரில் தற்கொலை செய்ய தண்டவாளத்தில் குதித்த நடுத்தர வயது பெண் ரெயில் ஓட்டுனரின் சமயோஜித நடவடிக்கையால் உயிர்பிழைத்தார்.

    பீகாரில் பெகுசராய் பகுதியில் நேற்று முன் தினம் காலை சலோனா ரெயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

    சஹர்சாவிலிருந்து சமஸ்திபூருக்குச் செல்லும் பயணிகள் ரெயில், நிலையத்தை விட்டு வெளியேறியபோது அந்தப் பெண் திடீரென தண்டவாளத்தில் குதித்தார். ரெயில் ஓட்டுநர் அப்பெண்ணை கண்டு உடனடியாக பிரேக் போட்டார். ஆனால் ரெயிலை உடனடியாக நிறுத்த முடியவில்லை.

    இறுதியில் அப்பெண் என்ஜினுக்கு அடியில் சிக்கிக்கொண்டார். ஓட்டுநரும் உள்ளுர்வாசிகளும் உடனே விரைந்து ரெயிலுக்கு அடியில் சிக்கிய பெண்ணை சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்டனர். அப்பெண் ஷகர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்ட்டார்.

    குடும்பத் தகராறு காரணமாக அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர்வாசிகள் அந்தப் பெண்ணை என்ஜினுக்கு அடியில் இருந்து மீட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

    • ரெயிலில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணுடன் பேச்சுக்கொடுத்து, வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர்.
    • பின்னர் அவருக்கு ரூ.100 கொடுத்து அந்த இடத்தை விட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

     பீகாரில் வேலை வாங்கித் தருவதாக கூறி 18 வயது பெண்ணை 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தின்படி, பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ரெயிலில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணுடன் பேச்சுக்கொடுத்து, வேலை வாங்கித் தருவதாகக் கூறி கியூல் ரெயில் நிலையத்தில் இறங்கும்படி வற்புறுத்தினார்.

    அதை நம்பி அவர் இறங்கியபோது, குற்றம் சாட்டப்பட்டவர் தனது நண்பர்களை அழைத்துள்ளார். அப்பெண்ணை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று  அவர்கள், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவருக்கு ரூ.100 கொடுத்து அந்த இடத்தை விட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

    அங்கிருந்து வெளியேறிய அந்த பெண் காவல் நிலையத்திற்குச் சென்று எட்டு பேர் மீது புகார் அளித்தார். அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று குற்றவாளிகளில் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மேடைகளுக்குச் செல்லும் ஓவர்பிரிட்ஜ் நடைபாலத்தில் வைத்து தலையில் சுட்டுக்கொன்றார்.
    • ஆரா ரெயில் நிலையத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    பீகாரில் ரெயில் நிலையத்தில் வைத்து இளம்பெண் மற்றும் அவரது தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு இளைஞர் ஒருவர் தானும் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பீகார் மாநிலம் போஜ்புர் மாவட்டத்தில் உள்ள ஆரா ரெயில் நிலையத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 20 வயதான அமன் குமார் முதலில் அப்பெண்ணையும் அதன் பின் அவளது தந்தையையும் ரெயில் நிலையத்தில் நடைமேடைகளுக்குச் செல்லும் ஓவர்பிரிட்ஜ் நடைபாலத்தில் வைத்து தலையில் சுட்டுக்கொன்றார்.

    பின் அதே இடத்திலேயே தானும் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். இந்த சம்பத்தால் அங்கிருந்த பயணிகள் அதிரிச்சியில் மூழ்கினர். ஆர்பிஎப் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    உயிரிழந்த மூவரும் உத்வாண்ட்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது. பெண்ணின் பெயர் ஜியா குமாரி (18), தந்தையின் பெயர் அனில் சின்கா (50). காதல் விவகாரம் தொடர்பாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அந்த பெண் டெல்லிக்கு செல்வதற்காக ரெயில் நிலையம் வந்திருந்தாக தெரிகிறது.

    • ரெயிலுக்கு உள்ளே பயணிகளும், வெளியே ரயில்வே கேட்டிலும் நூற்றுக்கணக்கானோர் அவதி
    • 45 நிமிடங்களுக்கும் மேலாக கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தம்.

    சென்னையில் இருந்து கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் வழியாக ஆந்திராவிற்கு தினமும் பல ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில், ரெயிலின் அபாயச் சங்கிலியில் பையை தொங்கவிட்டதால் கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் 45 நிமிடங்களுக்கும் மேலாக ரெயில் நிறுத்தப்பட்டது.

    இதனால் ரெயிலுக்கு உள்ளே பயணிகளும், வெளியே ரெயில்வே கேட்டிலும் நூற்றுக்கணக்கானோர் அவதியடைந்தனர்.

    ரெயில்வே போலீசார் விசாரணை செய்யும் போது, பயத்தில் வட மாநில இளைஞர் இறங்கி ஓடிவிட்டதாக பெட்டியில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டிருந்தது.
    • நடைமேடை டிக்கெட் கட்டணம் குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

    சென்னை :

    பண்டிகை காலத்தையொட்டி, ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை சென்டிரல், எழும்பூர் உள்பட 8 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டிருந்தது. இந்த நடைமுறை அக்டோபர் 1-ம் தேதி முதல் ஜனவரி 31-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று சென்னை ரெயில்வே கோட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தது.

    இந்தநிலையில், அந்த 8 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நடைமேடை டிக்கெட் கட்டணம் குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக சென்னை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். நடைமேடை டிக்கெட் கட்டணத்தில் ரூ.10 குறைக்கப்பட்டு உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • உடுமலை வழியாக 4 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • தினமும் நூற்றுக்கணக்கான ரெயில் பயணிகள் பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.

    உடுமலை:

    கோவை திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரெயில்வே நிலையம் உள்ளது. உடுமலை வழியாக 4 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான ரெயில் பயணிகள் பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றனர். இங்கு வரும் பணிகளின் பாதுகாப்பை கருதியும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும் கண்காணிப்பு கேமரா வைக்க ெரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காரைக்குடி ெரயில் நிலையத்தில் அவசர சிகிச்சை மையம் தொடக்க விழா நடந்தது.
    • அவசர ஊர்தியும் மக்கள் பயன்பாட்டுக்காக நிறுத்திவைக்கப்படும் என கே.எம்.சி. மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தெரிவித்தார்.

    காரைக்குடி

    காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனை சார்பில், காரைக்குடி ெரயில் நிலையத்தில் முதல் உதவி சிகிச்சை மையம் கமாண்டெண்ட் ெரயில்வே புரொடெக்க்ஷன் போர்ஸ் செல்வராஜ் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் கொலம்பஸ் டோபோ ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.

    முதல் உதவி சிகிச்சை மையத்தை பற்றி கே.எம்.சி. மருத்துவமனையின் தலைமை மருத்துவர் காமாட்சி சந்திரன் பேசுகையில் இந்த முதல் உதவிமையம் கே.எம்.சி மருத்துவமனை சார்பாக அடிப்படை அவசர சிகிச்சை உபகரணங்களுடன் 24 மணிநேரமும் ெரயில் பயணிகள் மற்றும் ெரயில்வே பணியாளர்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா மருத்துவ உதவி பெரும் வகையில் செயல்படும் என தெரிவித்தார். மேலும் அவசர ஊர்தியும் மக்கள் பயன்பாட்டுக்காக நிறுத்திவைக்கப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கே.எம்.சி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் காமாட்சி சந்திரன் மற்றும் டாக்டர்கள் காளியப்பு, பாலாஜி, பிரசாந்த் மற்றும் கே.எம்.சி. மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் காரைக்குடி ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ெரயில்வே பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • திருவிழா காலங்களில் 50 லட்சம் மக்கள் கூடும் காரணத்தால் கூடுதல் ரெயில் சேவையை இயக்க வேண்டும்.
    • திருச்செந்தூர் ரெயில் நிலையத்தை நவீனப்படுத்த வேண்டு என வைகோ கூறியிருந்தார்.

    தூத்துக்குடி:

    ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ எம்.பி. தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் ரெயில் நிலையத்தின் நடைமேடை யின் நீளத்தை அதிகரிக்கவும், திருச்செந்தூர் ரெயில் நிலையத்தை நவீனப்படுத்தவும் அதிக ரெயில் சேவைகளை இயக்க பொதுமக்கள் மற்றும் ரெயில் பயனாளி களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

    தற்போது, திருச்செந்தூர் 3 நடைமேடைகளை கொண்டுள்ளது. நடைமேடை எண் 1-ல் 18 பெட்டிகளும் மற்ற 2 நடைமேடைகளில் 12 ரெயில் பெட்டிகள் மட்டுமே நிறுத்த முடியும். எனவே, 24 பெட்டி ரெயில்கள் நிறுத்தும் வகையில் நடைமேடை நீளத்தை அதிகரிக்க வேண்டும். கூடுதலாக 2 நடைமேடைகளையும் அமைக்க வேண்டும்

    50 லட்சம் மக்கள் திருச்செந்தூர் முருகன் கோவில் திருவிழா காலங்களில் கூடும் காரணத்தால் கூடுதல் ரெயில் சேவையை இயக்க வேண்டும். எனவே, நடைமேடைகளின் நீளத்தை அதிகப்படுத்துதல், கூடுதலாக 2 நடைமேடைகள் அமைத்தல், திருச்செந்தூர் ரெயில் நிலையத்தை நவீனப்படுத்துதல் ஆகிய இரண்டு பணிகளை விரைந்து மேற்கொண்டு அதிக ரெயில் சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
    • எர்ணாகுளம் முதல் பாட்னா வரை செல்லும் ரெயிலில் 3பெட்டிகள் இணைக்கப்பட்டு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.

    திருப்பூர் :

    உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக் கழக வளாகத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதில், தமிழகத்தில் இருந்து ரெயில் மூலம் பலர் செல்கின்றனர். இந்த நிலையில் கோவையில் இருந்து காசி தமிழ் சங்கத்தினர் வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் கலைபண்பாட்டு, இலக்கிய விழாவில் கலந்து கொள்ள செல்வதற்கு எர்ணாகுளம் முதல் பாட்னா வரை செல்லும் ரெயிலில் 3பெட்டிகள் இணைக்கப்பட்டு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் திருப்பூர் ரெயில் நிலையத்தில்2 நிமிடம் நின்று செல்கிறது.

    இந்தநிலையில் மங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியையொட்டி திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மாநகர காவல் துணை ஆணையர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் மூலம் ரெயிலில் சோதனை நடத்தப்பட்டது. பயணிகளின் உடைமைகளை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து உள்ளே அனுப்புகின்றனர்.

    • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சென்னையில் இருந்து சென்னையில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர் பயணம் செய்தார்.

    நாகர்கோவில்:

    குழித்துறை அருகே உள்ள நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் லூக்காஸ் (வயது 52).

    இவர், சென்னையில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சென்னையில் இருந்து லூக்காஸ் ஊருக்கு புறப் பட்டார். நேற்று மாலை சென்னையில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர் பயணம் செய்தார்.

    இன்று காலை கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதையடுத்து லூக்காஸ் ரெயில் பெட்டியில் இருந்து இறங்கினார். பின்னர் அவர் குழித்துறை செல்வதற்காக மற்றொரு ரெயிலில் ஏற பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது லூக்காஸ் பிளாட்பாரத்தில் திடீ ரென சுருண்டு விழுந்தார். இதை பார்த்த பயணிகள் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடி யாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். பின்னர் லூக்காசை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் லூக்காஸ் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக கொண்டு செல்லப்பட்டது. லூக்காஸ் இறந்தது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.

    நாகர்கோவில் ரெயில்வே போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×