என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 99728"
பேரையூர்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள வில்லூர் கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் சின்ன முனியாண்டி (வயது42). இவருக்கு ராக்கம்மாள் என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
சின்ன முனியாண்டி கோவில்பட்டியில் உள்ள துடைப்பம் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில் வில்லூரைச் சேர்ந்த மீனா (22) என்பவரும் வேலை பார்த்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீனா பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் சின்ன முனியாண்டிக்கும், மீனாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனை உறவினர்கள் கண்டித்தனர்.
சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் செய்து வைத்தனர். மேலும் சின்ன முனியாண்டியிடம், மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தினர்.
போலீசில் புகார் செய்யப்பட்டதால் மீனா ஆத்திரத்தில் இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சின்ன முனியாண்டி சிவகாசி சென்று விட்டு ஊருக்கு பஸ்சில் வந்தார். கண்டியத்தேவன்பட்டியில் இறங்கிய அவர் அங்கிருந்து வில்லூருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு காரில் வந்த மர்ம கும்பல் சின்ன முனியாண்டியை காரில் கடத்தியது. பின்னர் வலுக்கட்டாயமாக சின்ன முனியாண்டி வாயில் அந்த கும்பல் விஷத்தை ஊற்றிவிட்டு தப்பியது.
இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சின்ன முனியாண்டி, வில்லூர் சுடுகாடு அருகே மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து அவரது மனைவி ராக்கம்மாள், வில்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் மீனா, அவரது அண்ணன் காளியப்பன், காளிமுத்து, ராஜா, ஜோதிமணி, பாறைபாண்டி, பாண்டியம்மாள், சின்ன முனியம்மாள், தாஸ் ஆகியோர் தான் கொலை செய்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் 9 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பேரையூர்:
திருமங்கலத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் வெள்ளிராஜன் (வயது 58) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று திருமங்கலம் அருகே உள்ள செங்குளத்தைச் சேர்ந்த குண்டாறு சக்திவேல் (35) என்பவர் தோட்டத்துக்கு வந்துள்ளார். அவர் அங்கிருந்த ஆடுகளை திருட முயன்றார். இதை பார்த்த வெள்ளிராஜன் அவரை தடுத்துள்ளார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த குண்டாறு சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெள்ளிராஜனை சரமாரியாக குத்தியும், தாக்கியும் அங்கிருந்து தப்பினார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய வெள்ளிராஜனை அக்கம், பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவையில் பதுங்கி இருந்த கொலையாளி குண்டாறு சக்திவேலை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் காந்தி தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ராமசந்திரன் (30). அதே பகுதியை சேர்ந்த அந்தோனி முத்து மகன்கள் கண்ணன், விஜய், உறவினர் அந்தோனி ராஜ் மகன் வல்லரசு. ராமசந்திரன்- கண்ணன் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அவ்வப்போது ஜாடையாக பேசி ராமசந்திரனை வம்புக்கு இழுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று ராமச்சந்திரன் அதே பகுதியை ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது கண்ணன், விஜய், வல்லரசு ஆகியோர் சேர்ந்து ராமசந்திரனை அவதூறாக பேசினர்.
இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே கண்ணன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து கல் மற்றும் கம்பால் அடித்து ராமசந்திரனை தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனை அறிந்த ராமசந்திரனின் தாய் மூவரையும் தட்டி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து ராமசந்திரன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் அந்தோணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மகன் செல்வராஜ் (வயது 35). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. ராணுவ வீரராக பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்டவர்.
செல்வராஜ் மீது சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில், சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவில் தேரை தீ வைத்து எரித்தது, ஒரு வீட்டின் மீது வெடிகுண்டு வீசியது ஆகிய 2 வழக்குகளும், வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வழிப்பறி உள்பட 2 வழக்குகளும் உள்ளன.
அதேபோன்று குடும்ப தகராறில் கே.வி.குப்பத்தில் வசித்து வந்த அவருடைய மாமனார் பெருமாள் வீட்டை தீ வைத்து எரித்தது, கடந்த 2014-ம் ஆண்டு பெருமாளை அடித்து கொலை செய்தது உள்பட பல்வேறு வழக்குகள் கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்திலும் செல்வராஜ் மீது உள்ளது.
தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு ரவுடியாக வலம் வந்த செல்வராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான ஏற்பாடுகளில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். கடந்த 19-ந் தேதி வேலூர் ஆவின் அலுவலகம் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிந்து செல்வராஜை வெட்டிக்கொலை செய்தது. யார்? என்று விசாரணை நடத்தி வந்தனர்.
பால்பண்ணை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கினர்.
இதில் கொலை நடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரபல ரவுடி வீச்சு கூட்டாளிகளுக்கும், செல்வராஜிக்கும் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். வீச்சு கூட்டாளிகள் விஜயராகபுரத்தை சேர்ந்த யுவராஜ் (23), பிரபு (23), கணேசன் (21), கிரிதரன் (20) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
யுவராஜிக்கும் கொலையுண்ட செல்வராஜிக்கும் மது குடிக்கும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். சம்பவத்தன்று யுவராஜ் அவரது கூட்டாளிகள் பிரபு, கணேசன், கிரிதரன் ஆகியோருடன் விஜயராகவபுரம் சென்றனர். அங்கு தெருவில் நின்று கொண்டிருந்த செல்வராஜை தாக்கியுள்ளனர். அவர் தப்பி ஓடினர்.
தேசிய நெடுஞ்சாலையில் ஓடிச் சென்ற அவரை விரட்டி விரட்டி வெட்டினர். பலத்த வெட்டு காயங்களுடன் சாலையை கடந்த செல்வராஜ் ஆவின் வாசல் தரையில் சாய்ந்தார். அவரை விரட்டி வந்தவர்கள் செல்வராஜ் சுய நினைவு இழந்ததையடுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை இது தொடர்பாக வழக்குபதிவு செய்து ரவுடி வீச்சு கூட்டாளிகள் யுவராஜ் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது தோட்டப்பாளையம் ஆட்டோ டிரைவரை கடத்தி பாலாற்றில் கொன்று புதைத்த வழக்கு உள்ளது. ரவுடிகள் மோதலால் சத்துவாச்சாரி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் கூடப்பாக்கம் புதுநகரை சேர்ந்தவர் கலியவரதன் (வயது 52). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் பச்சையம்மாள் (வயது 19). பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறார்.
கலியவரதனுக்கும், லட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்தது. அதேபோல் கடந்த 20-ந்தேதியும் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதனை கண்ட பச்சையம்மாள் மனவேதனை அடைந்து வீட்டு மாடிக்கு சென்று ஆஸ்பெட்டாஸ் சீட் பைப்பில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார்.
இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த கலியவரதனும், லட்சுமியும் பச்சையம்மாளை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பச்சையம்மாள் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் ஏட்டு கிருபாகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குன்னத்தூர்:
குன்னத்தூர் அருகே கருக்குபாளையம் நெசவாளர் காலணியைச் சேர்ந்தவர் வடிவேல் இவருக்கு பெரியசாமி (வயது 27) பிரபு (வயது 26) இரண்டு மகன்கள் உள்ளனர்.
வடிவேல் மற்றும் பெரியசாமி குடும்பத்தினர் கேரளாவில் மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார்கள். பிரபு கருக்குபாளையம் நெசவாளர் காலணியில் இருந்து கொண்டு பால் வியாபாரம் செய்து வருகிறார்.
பிரபுவிற்கு கவுதமி என்ற மனைவியும் 6 வயது 3 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்தமகன் அருகில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். கவுதமி பனியன் கம்பெனி வேலைக்கு சென்று வருகிறார்.
இந்த நிலையில் பிரபுவின் அண்ணன் மனைவிக்கும் கவுதமிக்கும் தகராறு ஏற்பட்டதில் கவுதமி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது அம்மா வீடான ஈரோடு மாவட்டம் நம்பியூருக்கு சென்று விட்டார் மேலும் தனது கணவர் பிரபுவை மாமியார் வீட்டிற்கு வந்து விடும் படி கூறி வந்துள்ளார்.
இதில் மனவேதனை அடைந்த பிரபு நேற்று முந்தினம் இரவு விஷ மாத்திரை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குபதிவு செய்து, பிரபுவின் உடலை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி பெரிய கடைத்தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர், பாரதீய ஜனதா கட்சியின் நாகை மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் சங்க தலைவராக இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை திருப்பூண்டி அருகே உள்ள கீரைநேரி ஏரி கரையில் செந்தில்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்தில்குமார் உடலை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் சந்தேகத்தின் பேரில் திருப்பூண்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இதயத்துல்லா(41) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செந்தில்குமார் மனைவியிடம் இதயத்துல்லா தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனை அவர் தனது கணவரிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார், இதயத்துல்லாவிடம் தகராறு செய்து அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் இதயத்துல்லா தனது நண்பரான கீழ்வேளூர் தாலுகா பொரவச்சேரி கீழத்தெரு சேர்ந்த பரமேஸ்வரன்(41) என்பவரை அழைத்து வந்து செந்தில்குமாருடன் காரில் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி மதுகுடித்து உள்ளனர். இந்த சந்தர்ப்பந்தை பயன்படுத்தி 2 பேரும் சேர்ந்து செந்தில்குமாரை கீரைநேரி ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து கீழையூர் போலீசார் இதயத்துல்லா, பரமேஸ்வரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
ஏரல்:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உமரிக்காடு மெயின் ரோட்டில் அரசு சிமெண்ட் குடோன் உள்ளது. இதன் அருகில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சீமை கருவேல மரங்கள் நிறைந்த காட்டு பகுதி உள்ளது.
இங்கு தாமிரபரணி ஆற்றங்கரையில் நேற்று காலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண், பெண் 2 பேரும் அரை நிர்வாணமாக இறந்து கிடந்தனர். அவர்கள் இறந்து ஒரு வாரத்துக்கு மேலானதால் உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவர்களின் உடல்களை காட்டு விலங்குகள் தின்றதால் உருக்குலைந்த நிலையில் இருந்தன.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஏரல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சகாய ஜோஸ், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இறந்த ஆண் வேட்டி, சட்டை அணிந்து இருந்தார். இறந்த பெண் சேலை, சட்டை அணிந்து இருந்தார்.
அவர்களது செருப்புகள், தண்ணீர் பாட்டில் அருகில் தனியாக கிடந்தன. எனவே அவர்கள் கள்ளக்காதல் ஜோடியாக இருக்கலாம் என்று போலீசார் கருதி விசாரணை நடத்தினர். இறந்த ஆண், பெண் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த ஆண், பெண் யார்?, அவர்கள் எப்படி இறந்தனர்?, தற்கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர்கள் திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன்(65), அவரது மனைவி பாலாமணி(58) என்பது தெரியவந்தது.
சிவசுப்பிரமணியன் கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. பல இடங்களில் வரன் பார்த்தும் திருமணம் தள்ளிப்போனதாக தெரிகிறது. இதனால் அவர்கள் மனவேதனையில் இருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கிடையே குடும்ப பிரச்சினையும் இருந்து வந்தது.
இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் இருவரும் ஏரல் பகுதிக்கு வந்து விஷம் குடித்து தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் அவரப்பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் கார்த்திக் (வயது 28). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் வீரபாண்டி திருவள்ளுவர் நகரில் நடந்து சென்றார். அப்போது வழிமறித்த 6 பேர் கும்பல் கார்த்திக்கை உருட்டுக்கட்டையால் தலை மற்றும் உடலில் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த கார்த்திக் மயங்கி விழுந்தார்.
சத்தம்கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்த கும்பல் தப்பி ஓடினர். பொதுமக்கள் காயம் அடைந்த கார்த்திக்கை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேர் கும்பலை தேடி வருகிறார்கள். மேலும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டதா? அல்லது வேறு என்ன பிரச்சினை? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கூடலூரைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 35). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். நேற்று இரவு கூடலூர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மணிவேல் மது குடிக்க சென்றார். அப்போது அவருக்கும் அங்கிருந்த 3 பேர் கொண்ட கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அவர்கள் மணிவேலை சரமாரியாக தாக்கி பாட்டிலால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். அங்கிருந்தவர்கள் அவர்களை பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதில் மணிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மணிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே உள்ள தவசிமடையைச் சேர்ந்தவர் குழந்தைராஜ் (45). இவரது மனைவி பாக்கியம் (41). இவர்களுக்கு ஸ்டெல்லா (22) என்ற மகளும், சார்லஸ் (21) என்ற மகனும் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததால் குழந்தைராஜ் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். பாக்கியம் தனது மகன் மற்றும் மகளுடன் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று மாலை தோட்டத்து வீட்டுக்கு சென்ற பாக்கியம் சொத்து பிரிப்பது தொடர்பாக தனது கணவரிடம் பேசினார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாக்கியம் தனது கணவரை அரிவாளால் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே குழந்தைராஜ் உயிரிழந்தார். சாணார்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து பாக்கியத்தை கைது செய்தனர்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வாழ நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45) தொழிலாளி.
சிவக்குமார் ஒரு அரசியல் கட்சியின் மாநில இளைஞர் அணி இணைச் செயலாளராகவும் உள்ளார். இவரது மனைவி பூங்கொடி (40). இவர்களுக்கு நவீன், சூர்யா என 2 மகன்கள், காயத்ரி என்ற ஒரு மகளும் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக பூங்கொடி கணவர் சிவக்குமாரை பிரிந்து தனது மகன்கள் மகளுடன் பாசூரில் தனியாக வசித்து வருகிறார். சிவகுமார் வாழை நாயக்கன் பாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வடக்கு புதுப்பாளையம் சுடுகாடு கேட் அருகே உள்ள ஒரு புதரில் சிவக்குமார் தலையில் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தார்.
பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர்கள் இதனை பார்த்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிவகுமார் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிவக்குமார் பரிதாபமாக இறந்தார்.
சம்பவ இடத்திற்கு பெருந்துறை டிஎஸ்பி ராஜகுமார் வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் வீரா வர வழைக்கப்பட்டது.
கொலையுண்ட சிவகுமாருக்கு பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. எனவே கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். பெருந்துறை டிஎஸ்பி ராஜகுமார உத்தரவின் பெயரில் கொடுமுடி இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மலையம் பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சிவகுமாரின் கள்ளக்காதலி ஒருவரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த கள்ளக்காதலி கொடுமுடி அருகே காசி பாளையத்தில் வசித்து வருகிறார். இவர் எழுமாத்தூரில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வருகிறார். கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த 7 வருடமாக தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும் சிவக்குமாருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதேபோன்று மொடக்குறிச்சி சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் சிவகுமாருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் சிவகுமார் கொடுமுடி அடுத்த ஒத்தக்கடை பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
சிவகுமார் பெண்களுடன் நெருக்கமாக பழகி அவர்களிடம் செலவுக்கு பணம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.
கொலை நடந்த இரவு முதல் கள்ளக்காதலி தனது செல்போன் எண்ணை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். அந்த பெண் தான் சில பேருடன் சேர்ந்து சிவகுமாரை வெட்டி கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்