என் மலர்
நீங்கள் தேடியது "smuggling"
- இன்று காலை உவரியில் இருந்து வந்த ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர்.
- வெள்ளை மண்எண்ணை முறைகேடாக கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் உவரி சோதனைச்சாவடி வழியாக முறைகேடாக மண்எண்ணை மற்றும் குட்கா கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின்பேரில் உவரி கடலோர காவல்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
ராதாபுரம் மீன்வளத்துறை இயக்குனர் மோகன்குமார் தலைமையிலான போலீசார் இன்று காலை 5.30 மணியளவில் உவரியில் இருந்து வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர்.
அதில் மீனவர்களின் விசைபடகுகளுக்கு தமிழக மீன்வளத்துறை சார்பில் மானியமாக வழங்கும் வெள்ளை மண்எண்ணை சுமார் 400 லிட்டர் திருச்செந்தூருக்கு முறைகேடாக கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் அந்த ஆட்டோவை பறிமுதல் செய்து உவரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக ஆட்டோவை ஓட்டி வந்த திருச்செந்தூரை சேர்ந்த வள்ளிராஜா (வயது 42) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்கா பாளையத்தில் அதிகாலை 3 மணியளவில் தன் வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
- காலை 6 மணியளவில் வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்ட லாரி காணவில்லை.
குமாரபாளையம், அக்.28-
குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்கா பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 31). இவர் லாரி வைத்து தொழில் நடத்தி வந்தார். கடந்த 25-ந்தேதி அதிகாலை 3 மணியளவில் தன் வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். காலை 6 மணியளவில் வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்ட லாரி காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில் தினேஷ்குaமார் இது குறித்து புகார் கொடுத்தார்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி.சாய்சரண் தேஜஸ்வி உத்திரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், எஸ்.எஸ்.ஐ.க்கள் முருகேசன், இளமுருகன், போலீஸ் சரவணன் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன லாரியை தேடி வந்தனர். காவேரி நகர் புதிய பாலம் அருகே தனிப்படை போலீசார் ரோந்து மேற்கொண்டபோது, ஆம்னி காரும், பின்னால் லாரி ஒன்றும் வந்து கொண்டிருந்தது. போலீசார் மடக்கி பிடித்த போது அது காணாமல் போன லாரி என்பது தெரியவந்தது. லாரி மற்றும் மாருதி ஆம்னி கார் பறிமுதல் செய்யபட்டது.
காரை ஓட்டி வந்த பவானி சாகரை சேர்ந்த கவியரசு (24), லாரியை ஓட்டி வந்த காரமடை ஜேசுராஜ் (36), அதே லாரியில் வந்த திருமுருகன்பூண்டியை சேர்ந்த கண்ணன், (38) ஆகிய 3 பேரை விசாரணை செய்ததில் லாரியை திருடியதை ஒப்புக்கொண்டனர். இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு குமார பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர்.
இது குறித்து இன்ஸ்
பெக்டர் ரவி கூறியதாவது:
காணாமல் போன லாரியை பிடிக்க எனது தலைமையில் தனிப்படை அமைக்கபட்டது. காவேரி நகர் பகுதியில் ஆய்வு செய்த போது, போலீஸ் யாராவது இருக்கிறார்களா? என்பதை அறிந்து கொள்ள மாருதி ஆம்னி காரில் முன்னால் வந்து யாரும் இல்லை என்பதை அறிந்து, லாரியை எடப்பாடி கொண்டு செல்ல முயற்சித்தனர். இதை தனிப்படை ேபாலீ சார் கண்டுபிடித்து லாரி கடத்தலில் ஈடுபட்ட 3 ேபரையும் கைது செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
- குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்கா பாளையத்தில் அதிகாலை 3 மணியளவில் தன் வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
- காலை 6 மணியளவில் வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்ட லாரி காணவில்லை.
குமாரபாளையம், அக்.28-
குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்கா பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 31). இவர் லாரி வைத்து தொழில் நடத்தி வந்தார். கடந்த 25-ந்தேதி அதிகாலை 3 மணியளவில் தன் வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். காலை 6 மணியளவில் வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்ட லாரி காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில் தினேஷ்குaமார் இது குறித்து புகார் கொடுத்தார்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி.சாய்சரண் தேஜஸ்வி உத்திரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், எஸ்.எஸ்.ஐ.க்கள் முருகேசன், இளமுருகன், போலீஸ் சரவணன் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன லாரியை தேடி வந்தனர். காவேரி நகர் புதிய பாலம் அருகே தனிப்படை போலீசார் ரோந்து மேற்கொண்டபோது, ஆம்னி காரும், பின்னால் லாரி ஒன்றும் வந்து கொண்டிருந்தது. போலீசார் மடக்கி பிடித்த போது அது காணாமல் போன லாரி என்பது தெரியவந்தது. லாரி மற்றும் மாருதி ஆம்னி கார் பறிமுதல் செய்யபட்டது.
காரை ஓட்டி வந்த பவானி சாகரை சேர்ந்த கவியரசு (24), லாரியை ஓட்டி வந்த காரமடை ஜேசுராஜ் (36), அதே லாரியில் வந்த திருமுருகன்பூண்டியை சேர்ந்த கண்ணன், (38) ஆகிய 3 பேரை விசாரணை செய்ததில் லாரியை திருடியதை ஒப்புக்கொண்டனர். இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு குமார பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர்.
இது குறித்து இன்ஸ்
பெக்டர் ரவி கூறியதாவது:
காணாமல் போன லாரியை பிடிக்க எனது தலைமையில் தனிப்படை அமைக்கபட்டது. காவேரி நகர் பகுதியில் ஆய்வு செய்த போது, போலீஸ் யாராவது இருக்கிறார்களா? என்பதை அறிந்து கொள்ள மாருதி ஆம்னி காரில் முன்னால் வந்து யாரும் இல்லை என்பதை அறிந்து, லாரியை எடப்பாடி கொண்டு செல்ல முயற்சித்தனர். இதை தனிப்படை ேபாலீ சார் கண்டுபிடித்து லாரி கடத்தலில் ஈடுபட்ட 3 ேபரையும் கைது செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
- மானூர் அருகே துணிப்பைகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- சோதனையில் 35 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மானூர் அருகே துணிப்பைகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நேற்று இரவு அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது மானூர் அருகே உள்ள தென்கலம் பகுதியை ஒட்டிய தனியார் சுண்ணாம்பு குவாரி பகுதியில் துணிப்பைகளில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே போலீசார் வருவதை பார்த்து அங்கிருந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
போலீசார் நடத்திய சோதனையில் சுமார் 35 ஆயிரம் கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அரிசியை கடத்தி செல்வதற்காக லாரி உள்பட 5 வாகனங்கள், 7 மோட்டார் சைக்கிள்களும் அங்கு இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசி கடத்தி பதுக்கி வைத்திருந்த நபர்களை தேடி வருகின்றனர்.
போலீசார் வாகன சோதனையில் பிடிபடாமல் இருக்க ரேஷன் அரிசியை துணிப்பைகளில் அடைத்து வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
- விழுப்புரம் அருகே லாரியில் கடத்திய ரூ. 15 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- கெங்கிராம்பாளையம் மதுவிலக்கு சோதனை சாவடியில் மதுவிலக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
புதுவை மாநிலத்திலிருந்து விழுப்புரம், கடலூர் , காஞ்சிபுரத்திற்கு மது பாட்டில்கள் கடத்தல் உள்ளிட்டவை ஏராளமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பதவி ஏற்றதில் இருந்து மது, போதை பொருள்கள் கடத்தல் விற்பனை உள்ளிட்டவைகளை அடியோடு ஒடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை புதுவையில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் வளவனூர் கெங்கிராம்பாளையம் மதுவிலக்கு சோதனை சாவடியில் மதுவிலக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை போலீசார் நிறுத்த முயற்சித்த போது நிற்காமல் வேகமாக சென்றது. உடனே மதுவிலக போலீசார் சினிமா பாணியில் லாரியை துரத்தி சென்றனர். அப்போது குடுமியான்குப்பம் பகுதி அருகே லாரியை நிறுத்திவிட்டு 2 பேர் பேரும் தப்பித்து சென்றனர்.
லாரியின் பின்னால் துரத்தி சென்ற போலீசார் சென்று பார்த்தபோது லாரி மட்டும் பள்ளத்தில் இருந்தது. உடனே மதுவிலக்கு போலீசார் சோதனை செய்ததில் லாரியின் உள்ளே நூதன முறையில் 155 அட்டைப்பெட்டியில் புதுவை மது பாட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட போலி மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனே இது குறித்து தகவல் அறிந்த வளவனூர் போலீசார் மற்றும் விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் விழுப்புரம் மதுவிலக்கு போலீசாரிடம் லாரியுடன் போலி மதுபான பாட்டிலும் பறிமுதல் செய்து ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து இதை கடத்தி வந்த நபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- இந்திய கடலோர காவல்படையினர் நடவடிக்கை.
- 4 படகுகளில் இருந்த 104 மூட்டை பீடி இலைகள் பறிமுதல்.
மன்னார் வளைகுடாவில் வஜ்ரா கப்பல் மூலம் இந்திய கடலோர காவல்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது சர்வதேச கடல் எல்லைக்கு அருகே 4 படகுகளை கண்ட அவர்கள் அதனை வழிமறித்தனர். அந்த படகுகளில் இருந்த மீனவர்கள், கடலோர காவல்படையினரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர், அவர்களை விரட்டி பிடித்த கடலோர காவல்படையினர் தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில் இரண்டு இந்திய படகுகள் மற்றும் இரண்டு இலங்கை படகுகள் மூலம் பீடி இலையை கடத்த முயன்றது தெரிய வந்தது. இந்த 4 படகுகளிலும் சுமார் 2.8 கிலோ எடை கொண்ட 104 மூட்டை பீடி இலைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்,பின்னர் உள்ளூர் அதிகாரிகளிடம் மீனவர்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகுகளையும் ஒப்படைத்தனர். அந்த மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
- செங்கிப்பட்டி அருகில் உள்ள முத்தாண்டிப்பட்டி பிரிவு சாலை அருகே கார் ஒன்று நின்று கொண்டிருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
- இதன் மதிப்பு சுமார் 1,80,000 ருபாய் ஆகும். இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சை -திருச்சி சாலையில் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி கொண்டு வந்து கொண்டிருப்பதாக செங்கிப்பட்டி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமோகன் மேற்பார்வையில், செங்கிப்பட்டி இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்இன்ஸ்பெக்டர் ரெத்தினசாமி மற்றும் போலீசார் தஞ்சை -திருச்சி சாலையில் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்தினர்.
இந்நிலையில் செங்கிப்பட்டி அருகில் உள்ள முத்தாண்டிப்பட்டி பிரிவு சாலை அருகே கார் ஒன்று நின்று கொண்டிருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து போலீஸாரை பார்த்ததும் காரில் இருந்த இரண்டு பேர் காரை அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து காரை போலீஸார் சோதனை மேற்கொண்ட போது அதில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.
கார் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 170 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு சுமார் 1,80,000 ருபாய் ஆகும். இது குறித்து செங்கிப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் தப்பி ஓடிய இருவரையும் போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- ஒரு வாரத்தில் 447 குவிண்டால் ரேசன் அரிசி கடத்தல்.
- கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 54 வாகனங்கள் பறிமுதல்,
தமிழக அரசின் பொது விநியோகத் திட்டம், சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் உணவு பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த பொருட்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று வருவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.
இதை தடுக்கும் வகையில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் மாநிலம் முழுவதும் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு, ரேசன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 14.11.2022 முதல் 20.11.2022 வரையிலான ஒரு வார காலத்தில் கள்ளச் சந்தையில் விற்பதற்காக கடத்தப்பட இருந்த ரூ, 53,71,209/- மதிப்புள்ள 9447 குவிண்டால் ரேசன் அரியை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
மேலும் 25 லிட்டர் ரேசன் மண்ணெண்ணெய், 144 கிலோ கோதுமை, இலவச எரிவாயு திட்டத்தின் கீழ் வழங்கப்பட இருந்த 41 எரிவாயு உருளைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 54 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட 193 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
- பெற்றோர் உறவினர்கள் வீடுகளிலும் நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதி களுக்கும் சென்று தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 7-ஆம் தேதி அன்று வழக்கம் போல் ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
அன்று இரவு பாத்ரூம் சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் ஜவுளி கடைக்கு வரவில்லை. இது குறித்து ஜவுளி கடைக்காரர்கள் அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பெற்றோர் உறவினர்கள் வீடுகளிலும் நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதி களுக்கும் சென்று தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்
குமார் வழக்கு பதிவு செய்து அந்த இளம்பெண் எங்காவது சென்று விட்டாரா? அல்லது எவராவது கடத்திச் சென்று விட்டனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாம்பரத்தில் உள்ள கேசவன் என்பவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தி கஞ்சா பொட்டலங்களை வாங்கி விற்று வந்ததாக தெரிவித்தனர்
- 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.
சேதராப்பட்டு:
கோட்டக்குப்பம் பகுதியில் கஞ்சா நடமாட்டம் அதிகம் இருப்பதும் அதனை போலீசார் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில், கோட்டகுப்பம் ஜமீத் நகரில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து கஞ்சா விற்ற புதுவை ஆட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த அருள் என்ற பாண்டியன் (வயது 22) என்பவரை கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர் பாக்கெட்டுகளில் வைத்திருந்த 9 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் சோலை நகரைச் சேர்ந்த அருண் (22) மற்றும் லாஸ்பேட்டையைச் சேர்ந்த அஜித்குமார் (24) ஆகியோர் தனக்கு கஞ்சா சப்ளை செய்ததாக தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் அருணையும் அஜித்குமாரையும் கோட்டக்குப்பம் போலீசார் மடக்கி பிடித்தனர். இருவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் சேர்ந்து சென்னை தாம்பரத்தில் கேசவன் என்பவருக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தி அங்கிருந்து அவர் மூலம் புதுவை பஸ் நிலையத்திற்கு ஒருவர் கஞ்சாவை கிலோ கணக்கில் கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள் என்றும் இந்த கஞ்சா பொட்டலங்களை புதுவையிலும் கோட்டக் குப்பம் பகுதியிலும் விற்று வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களி டமிருந்து 400 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.
- அரசு அனுமதியுடன் சந்தன மரங்கள் வளர்த்து வருகிறார்.
- சந்தனமரங்கள் வெட்டி கடத்தப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மா.புடையூர் மயிலாடும்பாறை பகுதியில் வசித்து வருபவர் நாராயணசாமி (வயது 72). இவர் அந்த பகுதியில் தோட்டத்து வீட்டில் 22 ஆண்டுகளாக குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். எனவே அந்த பகுதியில் அரசு அனுமதியுடன் சந்தன மரங்கள் வளர்த்து வருகிறார். இதனை வெட்டுவதற்கு நாராயணசாமி அனுமதி பெற்று இருந்தார்.
நேற்று இரவு மர்மநபர்கள் அங்கு சென்றனர். அவர்கள் சந்தனமரங்களை வெட்டி கடத்தி சென்று உள்ளனர். இன்று காலை நாராயணசாமி ேதாட்டத்துக்கு சென்றார். அப்போது சந்தனமரங்கள் வெட்டி கடத்தப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராமநத்தம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
- திருச்சியில் இருந்து துபாய்க்கு
- விமானத்தில் கடத்த முயன்ற ரூ.46 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டன
திருச்சி :
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.இந்த நிலையில் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் அதிக அளவில் முறையான அனுமதியின்றி வெளிநாட்டு பணத்தை கடத்தி செல்வதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தற்போது அதிகரித்துள்ளது.அந்த வகையில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு திருச்சியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாய் நோக்கி புறப்பட தயார் நிலையில் இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.அப்போது திருச்சியைச் சேர்ந்த சதாம் உசேன் (வயது 46) என்பவர் தனது உடமையில் வெளிநாட்டு பணமான யூரோ 53,133 கடத்த இருந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து சதாம் உசேனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.46 லட்சம் என தெரியவந்துள்ளது.