என் மலர்
நீங்கள் தேடியது "soil erosion"
- பலத்த காற்றுடன் கூடிய மழை கடும் குளிரும் இருந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
- கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர், நவம்பர் மாதம் மிக கனமழை பெய்து வந்தது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் மாண்டஸ் புயல், இதனை தொடர்ந்து கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை கடந்த சில தினங்களாக பெய்து வந்தது. மேலும் கடும் குளிரும் இருந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் மார்கழி மாதம் என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பனிப்பொழிவு இருந்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று கடலூர் பகுதியில் திடீரென்று மழை பெய்தது இதன் காரணமாக திடீர் மழை கடும் பனிப்பொழிவு சீதோசன மாற்றம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் இந்த நிலையில் கடலில் வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக தற்போது கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து வழக்கத்தை விட கடல் அலை சீற்றமாக காணப்படுவதால் பொதுமக்களை போலீசார் அனுமதிக்காமல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்ட காரணத்தினால் பரபரப்பாக காணப்பட்டது.
- கடலூர் தாழங்குடா முதல் தேவனாம்பட்டினம் வரை கடற்கரை ஓரமாக பாதுகாப்பு கருதி நடப்பட்டிருந்த சவுக்கு மரங்கள் கடல் அலை சீற்றம் காரணமாக அடித்து சென்றது,.
- தொடர்ந்து வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்படுவதால் சீல்வர் பீச்சிற்கு வரும் பொதுமக்களை கடலோரம் அனுமதிக்கவில்லை
கடலூர்:
சில மாதங்களாக தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அடிக்கடி கடல் சீற்றம், திடீர் மழை போன்றவை நிகழ்கிறது. இதனால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அடிக்கடி அறிவிப்பு வெளியாகிறது. கடல் அலை முன்னோக்கி அதிக அளவில் வந்து செல்வதால் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் படகுகளை நிறுத்தி செல்கின்றனர்
மேலும், கடலூர் தாழங்குடா முதல் தேவனாம்பட்டினம் வரை கடற்கரை ஓரமாக பாதுகாப்பு கருதி நடப்பட்டிருந்த சவுக்கு மரங்கள் கடல் அலை சீற்றம் காரணமாக அடித்து செல்கிறது.இந்நிலையில் கடலில் அலைகள் வழக்கத்தை விட சீற்றம் அதிகமாக இன்று காலை முதல் காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக தற்போது கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்படுவதால் சீல்வர் பீச்சிற்கு வரும் பொதுமக்களை கடலோரம் அனுமதிக்கவில்லை. மேலும், போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்ட காரணத்தினால் பரபரப்பாக காணப்பட்டது.
- வாய்க்காலில் முழு கொள்ளளவு (2300 கன அடி) தண்ணீரை திறக்கும் பட்சத்தில் கரை உடைப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
- புதிய மண் என்பதால் மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் அடுத்த மோள பாளையம் பகுதியில் கீழ் பவானி வாய்க்கால் செல்கிறது. தற்போது இந்த வாய்க்காலில் 1000 கன அடி தண்ணீர் செல்கிறது.
இந்நிலையில் நேற்று இரவு நம்பியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவ லாக மழை பெய்தது. தொடர்ந்து இந்த பகுதியில் மழை பெய்து வருவதால் மோளபாளையம் கீழ் பவானி வாய்க்கால் பாலத்திற்கு (26-வது மைல்) கிழக்கே வாய்க்காலின் இடது கரையில் நேற்று இரவு திடீரென மண் அரிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கரையில் மண் சரிவு ஏற்பட்டு மண் கரை சேதமானது.
இது குறித்து தெரிய வந்ததும் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
இதையடுத்து கரையில் மண் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் பொதுப் பணித்துறையினர் விரைந்து மண் கொட்டி சீரமைக்க வேண்டும். மண் அரிப்பை சரி செய்யாவிட்டால் சேதாரம் அதிகளவில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வாய்க்காலில் முழு கொள்ளளவு (2300 கன அடி) தண்ணீரை திறக்கும் பட்சத்தில் கரை உடைப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே இந்த அரிப்பை விரைந்து சரி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, இந்த பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கரையில் மண் அரிப்பு ஏற்பட்ட இடத்தின் அருகே பக்கவாட்டில் கான்கிரீட் தளம் அமைத்த போது இந்த பகுதியில் மண் கொட்டி சீரமைக்கப்பட்டது. புதிய மண் என்பதால் மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மண் அரிப்பு இன்று சரி செய்யப்படும் என கூறினர்.
இதையடுத்து இன்று காலை சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து பணியாளர்கள் மூலம் மண் அரிப்பு சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
- கோவில் கடற்கரையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
- கடல் அரிப்பை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் தொடர்ந்து கோவில் கடற்கரையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
கடல் சீற்றத்தின் காரணமாக கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 50 அடி நீளத்திற்கு 9அடி ஆழத்திற்கு இந்த கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கடற்கரையில் கோவில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை இருந்து வருகிறது.
எனவே கடல் அரிப்பை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் இளம் பகவத் மற்றும் அதிகாரிகள் கடற்கரையில் நேரில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், திருச்செந்தூரில் கடற்கரையில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பு காரணமாக 2வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ராமநாதன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது.
- மலைச்சரிவுகளில் தோட்டக்கலை பயிர்களை அதிகளவில் பயிரிட உதவுகிறது.
- There is a risk of soil erosion in an area of 68 thousand hectares due to rainfall.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர் வளப்பாதுகாப்பு நிறுவனம் சார்பில், விவசாயிகளுக்கு 'மலைப்பகுதிகளில் மண் அரிப்பை தடுக்கும் விவசாய முறைகள்' குறித்த பயிற்சி முகாம் நேற்று நடந்தது. முகாமில் முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன், விவசாயிகளுக்கு மலைப்பகுதிகளில் மண் அரிப்பை தடுக்கும் விவசாய முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:-
நீலகிரியில் மண் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் காய்கறி சாகுபடி செய்ததால், மாவட்டத்தில் சராசரியாக 20 முதல் 40 டன் மண் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இங்கு நிலவும் சூழல், மலைச்சரிவுகளில் தோட்டக்கலை பயிர்களை அதிகளவில் பயிரிட உதவுகிறது. காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக ஒழுங்கற்ற மழைப்பொழிவு உள்ளதுடன், அபாயகரமான வகையில் மண் அரிப்பு ஏற்படுகிறது.
அதிக மழைப்பொழிவு நீலகிரியில் அதிக மழைப்பொழிவால் 68 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மண் அரிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வளமான மண் இழப்பு மற்றும் மகசூல் குறைவு ஏற்படுகிறது. வடிகால் வாய்க்கால் மற்றும் நீர்நிலைகளில் வண்டல் மண் படிகிறது. இதனால் நீர்நிலைகளின் கொள்ளளவு குறைவதோடு, வெள்ளம் ஏற்படுகிறது.
இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட ஆய்வுப்படி, படிமட்டங்கள் முறையில் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டு விளைச்சலை அதிகரித்து உள்ளது. மேலும் 50 சதவீதம் நீரோட்டம் குறைந்து, 98 சதவீதம் மண் இழப்பும் குறைந்து உள்ளது. எனவே, விவசாயத்தில் மண் அரிப்பு பிரச்சினை மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறைகள் குறித்து விவசாயிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார். முகாமில் 375 விவசாயிகளுக்கு 15 சுற்றுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- இர்வின் பாலத்தில் இருந்து சுற்றுலா மாளிகை வரை கரையின் இருபுறமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பக்கவாட்டு தடுப்பு கம்பிகளுடன் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
- நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் மண் அரிப்பு ஏற்பட்டு நடைபாதை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகரின் மையப் பகுதியில் கல்லணை கால்வாய் ஆறு ஓடுகிறது. . இர்வின் பாலத்தில் இருந்து சுற்றுலா மாளிகை வரை கரையின் இருபுறமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பக்கவாட்டு தடுப்பு கம்பிகளுடன் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடைபாதையில் தினமும் ஏராளமான பொது மக்கள் நடந்து செல்கின்றனர். பலர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.
தற்போது கல்லணை கால்வாய் ஆற்றில் விநாடிக்கு 3221 கன அடி வீதம் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில் ஆற்றின் இடதுபுற கரையில் நடைபாதை சரிந்து பக்கவாட்டு தடுப்பு கம்பியுடன் ஆற்றில் விழுந்துள்ளது. அந்த நேரத்தில் யாரும் நடந்து செல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் மண் அரிப்பு ஏற்பட்டு நடைபாதை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சில மீட்டர் தூரத்திற்கு நடைபாதை தற்போது மிக குறுகியதாக காட்சியளிக்கிறது. அந்த இடங்களில் பிடிமானம் ஏதும் இல்லாததை கண்டு கொள்ளாமல் சிலர் ஆபத்தான முறையில் நடந்து செல்கின்றனர். இதனால் அவர்கள் தவறி விழக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே முழுவதுமாக கரை உடைப்பு ஏற்பட்டு பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்னர் அதிகாரிகள் விரைந்து வந்து மண் அரிப்பை சரி செய்து கரையை பலப்படுத்த வேண்டும். நடைபாதையை பலமாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த மழை பெய்தது. இதனால் ஆத்தூர் அருகே உள்ள அம்மம் பாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தண்டவாளத்தில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் மண் அரிப்பு காரணமாக தொங்கி கொண்டிருந்தது. அந்த சமயம் விருத்தாச்சலத்தில் இருந்து சேலம் நோக்கி, பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ரெயில் என்ஜீன் டிரைவரை பார்த்து சிகப்பு துணியை காட்டி ரெயிலை நிறுத்துமாறு கூறினார்கள். உடனே டிரைவரும் ரெயிலை நடுவழியில் நிறுத்தினார்.
இதையடுத்து, தண்டவாளத்தில் மண் அரிப்பு குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. எந்தி ரம் மூலம் சீரமைப்பு பணி நடந்தது.
பின்னர், சேலம்- விருத் தாச்சலம் ரெயில் அங்கிருந்து 8.05 மணிக்கு புறப்பட்டது. வழக்கமாக இந்த ரெயில் தினமும் காலை 9 மணிக்கு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு வந்தடையும். ஆனால், இன்று ½ மணி நேரம் தாமதமாக ரெயில் சேலம் வந்து சேர்ந்தது.
இதனால் ரெயிலில் பயணம் செய்த மாணவ, மாணவிகள், வேலைக்கு வரும் ஊழியர்கள், பொதுமக்கள் தவிப்புக்குள்ளானார்கள்.
தக்க சமயத்தில் பொதுமக்கள் சிகப்பு துணியை காட்டியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.