என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "son murder"
- சில மாதங்களுக்கு முன்பு சந்தனக் கருப்புவுக்கும், மனைவி சுமித்ராவும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
- ஆத்திரமடைந்த மகாலிங்கம், அங்கு கிடந்த விறகு கட்டையை எடுத்து மகனின் தலையில் பலமாக அடித்தார்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சின்ன உலகாணி பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருடைய மனைவி பேச்சியம்மாள். இவர்களுடைய மகன் சந்தன கருப்பு(வயது 23)
கடந்த 2 ஆண்டுகளுக்கு சந்தன கருப்பு, தனது தந்தையின் சகோதரி மகள் சுமித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சில மாதங்களுக்கு முன்பு சந்தனக் கருப்புவுக்கும், மனைவி சுமித்ராவும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கணவரை பிரிந்து சுமித்ரா தாய் வீடான சாத்தங்குடிக்கு குழந்தையுடன் சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று சந்தன கருப்பு தனது மகனை பார்க்க சாத்தங்குடிக்கு சென்றார். அப்போது அவரது மனைவி சுமித்ரா, மாமியார் மாரியம்மாள் ஆகியோர் தகராறு செய்து உள்ளனர். மேலும் சந்தன கருப்பு கண்களில் மிளகாய் பொடியை தூவி அவரை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தினர்.
அப்போது அங்கு வந்த அவரது தந்தை மகாலிங்கம் சமாதானம் செய்து மகனை அழைத்து செல்ல முயன்றார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகாலிங்கம், அங்கு கிடந்த விறகு கட்டையை எடுத்து மகனின் தலையில் பலமாக அடித்தார். இதில் நிலை குலைந்து விழுந்த சந்தன கருப்பு ரத்த வெள்ளத்தில் மயங்கினார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறிந்து சந்தனகருப்புவின் தாய் பேச்சியம்மாள் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி சுமித்ரா, மாமியார் மாரியம்மாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மகாலிங்கத்தை தேடி வருகின்றனர்.
- குடித்து விட்டு ஊர் சுற்றி வந்த மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
- கொலை குறித்து திட்டக்குடி டி. எஸ். பி. காவியா விசாரணை நடத்தி வருகிறார்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் ஆவினங்குடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொடிக்களம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (60). இவரது மகன் விநாயகம் (28). இவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆறுமுகத்துக்கும் விநாயகத்திற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு குடித்துவிட்டு வீடு திரும்பிய விநாயகத்துடன் சண்டை ஏற்பட்டு மோதலாக மாறியது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் தனது மகன் விநாயகம் நெஞ்சில் கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த விநாயகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடம் விநாயகம் மாரடைப்பால் இறந்ததாக கூறி உடலை அடக்கம் செய்ய தயார் செய்து கொண்டிருந்த நிலையில் ஆவினங்குடி போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் விநாயகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மகனை கொலை செய்து நாடகமாடிய ஆறுமுகத்தை கைது செய்தனர். இதுகுறித்து திட்டக்குடி டி. எஸ். பி. காவியா விசாரணை நடத்தி வருகிறார்.
- சிகிச்சையில் இருந்த ராகுல்ராஜ் மற்றும் நம்பெருமாள் ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
- ஆனந்தகுமார் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அணைக்கரைக்கப்பட்டி காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் நம்பெருமாள் ராஜ் (வயது 49). இவரது மனைவி நிர்மலா தேவி (45). இவர்களது மகன் ராகுல்ராஜ் (15). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இவரை தாய் நிர்மலா தேவி கவனித்து வந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நோய்வாய்பட்டு இறந்து விட்டார்.
அப்போது முதல் நம்பெருமாள் ராஜ் தனது மகனை கவனித்து வந்துள்ளார். மேலும் மனைவி இறந்ததால் மகனை சரிவர கவனிக்க முடியாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். தான் இறந்து விட்டால் தனது மகனை யாரும் கவனிக்க மாட்டார்கள் என நினைத்து அவருக்கு விஷம் கொடுத்து தானும் அதே விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சையில் இருந்த ராகுல்ராஜ் மற்றும் நம்பெருமாள் ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இது குறித்து அவரது உறவினர் ஆனந்தகுமார் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மது குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்திய மகனை பெற்றோரே கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ராம் சிங் அவரது மனைவி ராணி பாய் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை ஜெயிலில் அடைத்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள கம்மத் கிராமத்தை சேர்ந்தவர் ராம் சிங். மரி பெடா பங்களா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவருடைய மனைவி ராணி பாய். மகள் அமெரிக்காவில் குடியேறி உள்ளார். இவர்களது மகன் சாய்ராம் (வயது 26). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து மது குடித்து வந்தார். அவரது பெற்றோரிடம் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டார்.
அவர்கள் தர மறுத்த போது தாய் தந்தை என்று கூட பார்க்காமல் தினந்தோறும் அடித்து துன்புறுத்தினார்.
மகனை எப்படியாவது திருத்தி நல்வாழ்வுக்கு கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய ராம் சிங், சாய்ராமை ஐதராபாத்தில் உள்ள ஒரு மன நல சிகிச்சை மையத்தில் சேர்த்தார். ஆனால் சாய்ராம் அங்கு சிகிச்சை பெறாமல் வீடு திரும்பினார்.
அங்கிருந்து வந்த பிறகு சாய்ராமின் கோர தாண்டவம் அதிகரித்தது. இரவு நேரங்களில் மது குடிக்க பணம் கேட்டு தாய் தந்தையை தொடர்ந்து தாக்கினார். இதனால் மனமுடைந்து போன ராம் சிங்கும் அவரது மனைவியும் மகன் என்று கூட பார்க்காமல் அவனை தீர்த்து கட்ட முடிவு செய்தனர்.
இதுகுறித்து ராணி பாய் அவரது சகோதரர் சத்ய நாராயணா என்பவரிடம் கூறினார்.
அவர் கூலிப்படையை சேர்ந்த ரவி, தர்மா, நாகராஜ், ராம்பாபு ஆகியோரிடம் சாய்ராமை கொலை செய்ய பேரம் பேசினார். அவர்கள் ரூ.8 லட்சம் பணம் கேட்டனர்.
அவர்களிடம் ராம் சிங் முன்பணமாக ரூ.1.5 லட்சம் கொடுத்தார். கொலை நடந்த பிறகு ரூ.6.5 லட்சத்தை தருவதாக ஒப்புக்கொண்டனர்.
கடந்த 18-ந் தேதி சத்யநாராயணா கூலிப்படையுடன் வந்தார். சாய்ராமை மது குடிக்க அழைத்தார். மாமா தான் கூப்பிடுகிறார் என்று சாய்ராம் அவருடன் சென்றார்.
ராம் சிங்கின் காரில் கூலிப்படையினர் சாய்ராமை அழைத்துச் சென்றனர். கல்லேபள்ளி என்ற இடத்தில் வைத்து மது குடித்தனர்.
போதையில் சரிந்த சாய்ராமை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். அங்குள்ள வனப்பகுதியில் அவரது உடலை வீசிவிட்டு திரும்பி வந்து விட்டனர். சாய்ராமை கொலை செய்து வீசியது குறித்து சத்யநாராயணா அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சாய்ராம் பிணமாக கிடந்ததை கண்ட பொதுமக்கள் கம்மத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சாய்ராமை 5 பேர் கும்பல் காரில் அழைத்து வந்தது பதிவாகி இருந்தது.
அதில் உள்ள கார் மூலம் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இதற்கிடையே ராம் சிங் தனது மகனை காணவில்லை என போலீசாரிடம் புகார் அளித்தார். ஆஸ்பத்திரியில் இருந்த சாய்ராம் உடலை அடையாளம் காண்பதற்காக ராம் சிங் மற்றும் ராணி பாயை அழைத்தனர்.
அவர்கள் காரில் வந்து ஆஸ்பத்திரியில் இருந்த உடலை பார்வையிட்டனர்.
அவர்கள் வந்த காரை பார்த்ததும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான அதே கார் இங்கே வந்திருப்பதை அறிந்த போலீசார் ராம் சிங் மற்றும் ராணிபாயிடம் விசாரணை நடத்தினர். இதில் மது குடிக்க பணம் கொடுக்காததால் அடித்துக் கொடுமை செய்த மகனை கூலிப்படை மூலம் கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ராம் சிங் அவரது மனைவி ராணி பாய் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை ஜெயிலில் அடைத்தனர். கூலிப்படையை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மது குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்திய மகனை பெற்றோரே கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தீபாவளி பண்டிகை நாளில் மது குடித்துவிட்டு தகராறு செய்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அவனியாபுரம் போலீசார், மகனை கத்தியால் குத்திக்கொன்ற செல்வராஜை கைது செய்தனர்.
அவனியாபுரம்:
மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62). இரும்பு வியாபாரி. இவர் தனது மகன் கங்காதரன் (34), மருமகள், குழந்தைகள் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தீபாவளி தினமான நேற்று காலை முதலே கங்காதரன் பலமுறை மதுபானக்கடைக்கு சென்று மது குடித்து வந்துள்ளார். மது போதையில் வீட்டிற்கு வந்த கங்காதரன் தந்தையிடம் தொடர்ந்து மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். போதை அதிகரித்ததும் தந்தை, மனைவி ஆகியோரை அவதூறாக பேசி தகராறு செய்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கங்காதரன் நெஞ்சில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கங்காதரனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அவனியாபுரம் போலீசார், மகனை கத்தியால் குத்திக்கொன்ற செல்வராஜை கைது செய்தனர்.
தீபாவளி பண்டிகை நாளில் மது குடித்துவிட்டு தகராறு செய்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்தூர் மாணிக்கவாசகர் நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (69). இவருக்கு 2 மகன்கள். ஒரு மகள். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது.
பாண்டியன் தனது மகன்கள், மருமகள்களுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்.
ஒரு மகன் நாகராஜ் (28). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு 1½ வயதில் ஒரு குழந்தையும், 40 நாட்களில் ஒரு கைக்குழந்தையும் உள்ளன.
நாகராஜனுக்கு குடிப்பழக்கம் உண்டு. சம்பவத்தன்று நாகராஜ் குடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
அதை பார்த்து கொண்டிருந்த கணேசன் தனது மகனை கண்டித்துள்ளார்.
இதையடுத்து கணவன்- மனைவிக்குள் நடந்த சண்டை தந்தை-மகனுக்குள் தொடங்கியது. அப்போது ஆத்திரம் அடைந்த பாண்டியன் அங்கு இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து மகனை குத்தி இருக்கிறார். இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜ் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள அலமேடு பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 65). இவரது மகன் கார்த்தி (28).
இவர் பள்ளிப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே தாங்கள் வசித்து வரும் வீடு தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இது சம்பந்தமாக நேற்று இரவு மீண்டும் தந்தைக்கும், மகனும் இடையே சண்டை ஏற்பட்டது.
இதனால் கோபம் அடைந்த சொக்கலிங்கம் மகனை இனிமேல் விட்டு வைக்கக்கூடாது, அவரை கொலை செய்து விட முடிவு செய்தார். இதற்காக மகன் வீட்டில், மகன் தூங்கும் நேரத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்தார்
இரவு சாப்பாடு முடித்து விட்டு கார்த்தி வீட்டில் படுத்து தூங்கினார். நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் சொக்கலிங்கம் வீட்டிலிருந்த குழவிக்கல்லை எடுத்து வந்து கார்த்தியின் தலையில் ஓங்கி போட்டார்.
இதில் தலை நசுங்கி கார்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சொக்கலிங்கம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது பற்றி அக்கம், பக்கத்தினர் பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்தி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சொக்கலிங்கத்தை போலீசார் பிடித்து இந்த கொலை வீடு தொடர்பாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக நடந்ததா? என கேட்டு துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு தான் முழுவிபரங்களும் தெரியவரும்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவர் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு நந்தினி (16) என்ற மகளும், சரவணன் (14) என்ற மகனும் உள்ளனர். நந்தினி 11ம் வகுப்பும், சரவணன் 9-ம்வகுப்பும் படித்து வந்தனர். முருகன் தனது குடும்பத்தினருடன் திருச்சி குண்டூர் அய்யம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
நேற்றிரவு அவர் பணிக்கு சென்று விட்டார். பின்னர் கோமதி, சரவணன் ஒரு அறையிலும், நந்தினி மற்றொரு அறையிலும் படுத்து தூங்கினர். இன்று காலை நந்தினி எழுந்து பார்த்த போது சரவணன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். கோமதி தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த நந்தினி அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.
உடனே இது குறித்த தகவல் அறிந்ததும் திருச்சி நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை பார்வையிட்டனர். பின்னர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கோமதி, சரவணனை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது முருகன் புதிதாக வீடு கட்டி வருகிறார். இது தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முருகன் கோமதியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்றிரவு முருகன் வேலைக்கு சென்றதும், தனது மகன் சரவணனின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகனை கழுத்தை அறுத்துக் கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் திருச்சி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள சாந்தபுரத்தைச் சேர்ந்தவர் மீனாம்பாள் (வயது 40). கட்டிடத் தொழிலாளியான மீனாம்பாளின் கணவர் வீரமணி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கேன்சர் நோய் ஏற்பட்டு இறந்து விட்டார்.
இதனால் மீனாம்பாள் தனது ஒரே மகனான அங்கு ராஜூடன் (14) தனியாக வசித்து வந்தார். அங்குராஜ் திருப்பராய்த்துறையில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை அங்குராஜ் வீட்டில் மயங்கி கிடந்ததாக கூறி அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு மீனாம்பாளும், அவரது தோழி லெட்சுமியும் கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை அளிக்க முடியாததால் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அங்குராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனால் அங்குராஜ் உடலை வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
இதற்கிடையே அங்குராஜ் உடல்நிலை சரியில்லாமல் சாகவில்லை என்றும், அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் சோமரசம்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அங்குராஜ் உடலை கைப்பற்றினர்.
அங்குராஜ் உடலை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது அவர் கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.
இதனால் போலீசாரின் சந்தேக பார்வை தாய் மீனாம்பாள் மற்றும் அவரது தோழி லெட்சுமி மீது விழுந்தது. அவர்கள் இருவரையும் போலீஸ் கஸ்டடிக்குள் கொண்டு வந்து துருவி துருவி விசாரித்தனர்.
அப்போது கள்ளக்காதல் பிரச்சனையில் பெற்ற மகன் என்றும் பாராமல் மீனாம்பாள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
கணவர் வீரமணி இறந்த நிலையில், கட்டிட வேலைக்கு சென்ற மீனாம்பாளுக்கு அங்கு கொத்தனாராக வேலை பார்த்த இனியானூர் மேலத்தெருவைச் சேர்ந்த முத்தழகு என்ற முத்தையன் (48) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
அடிக்கடி முத்தையனுடன் வீட்டிலேயே மது குடித்து விட்டு மீனாம்பாள் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் முத்தையனின் மற்றொரு கள்ளக்காதலியான லெட்சுமியும் இவர்களுடன் சேர்ந்து மது குடித்து விட்டு அடிக்கடி வீட்டில் ஜாலியாக இருந்துள்ளனர்.
முதலில் அக்கம் பக்கத்தினர் முத்தழகனும் லெட்சுமியும் கணவன், மனைவியாக இருக்கலாம் என நினைத்து சாதாரமாக விட்டு விட்டனர். ஆனால் அங்குராஜ் பள்ளிக்கு சென்றதும் அடிக்கடி முத்தழகனும், லெட்சுமியும் மீனாம்பாள் வீட்டிற்கு வருவதும் அவர்கள் மது குடித்து விட்டு ஜாலியாக இருப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். இதை அங்குராஜிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து அங்குராஜ் அவர்கள் நடவடிக்கையை கண்காணித்தான். ஒருமுறை 3 பேரும் வீட்டில் ஜாலியாக இருப்பதை நேரில் பார்த்து விட்டான். இதனால் மனம் வெறுத்து போன அங்குராஜ் தனது தாயை உறவினர்களிடம் கூறி கண்டித்து திருத்தி விடலாம் என நினைத்தான்.
உறவினர்கள் இது குறித்து மீனாம்பாளிடம், கள்ளக்காதலை கைவிடும்படி கூறினர். ஆனால் மீனாம்பாள் முத்தழகனை பிரிய மனம் இல்லாததோடு தனது கள்ளக்காதலை உறவினர்களிடம் மகன் அங்குராஜ் கூறி அவமானப்படுத்தி விட்டானே என ஆத்திரம் அடைந்தார்.
இது குறித்து முத்தழகன், மீனாம்பாள், லெட்சுமி ஆகியோர் கூடி அடுத்து என்ன செய்யலாம் என குடித்து விட்டு ஆலோசனை செய்தனர். அப்போது அங்குராஜை தீர்த்து கட்டுவது என முடிவு செய்தனர். இதற்கான திட்டத்தை முத்தழகன் தீட்டினார்.
கடந்த வியாழக்கிழமை இரவு அங்குராஜிற்கு அதிக தூக்க மாத்திரை கலந்த ஊட்டச்சத்து பானத்தை மீனாம்பாள் கொடுத்தார். அதை குடித்த அங்குராஜ் தூங்கி விட்டார். அப்போது மீனாம்பாளும், லெட்சுமியும் அங்குராஜ் கழுத்தை கயிற்றால் நெரித்தனர்.
10 மாதம் வயிற்றில் சுமந்து பெற்ற மகன் என்றும் பாராமல் தன் கண் எதிரில் அங்கு ராஜ் துடிதுடித்து சாவதை மீனாம்பாள் கண்டு கொள்ளாமல் தோழியுடன் சேர்ந்து கயிற்றால் நெரித்தார். இதில் மூச்சுத்திணறி அங்குராஜ் இறந்தார்.
அங்குராஜை கொலை செய்ததை கள்ளக்காதலன் முத்தழகனிடம் செல்போனில் இருவரும் தெரிவித்துள்ளனர். உடனே முத்தழகன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று தற்கொலை நாடகம் ஆடும்படி கூறியுள்ளார்.
அதன்படி நாடகமாடிய மீனாம்பாளும், லெட்சுமியும் குட்டு வெளிப்பட்டதால் போலீசில் சிக்கி கொண்டனர். இருவரும் திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட் எண்.5-ல் ஆஜர் படுத்தப்பட்டு திருச்சி மகளிர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கள்ளக்காதலிகள் போலீசில் சிக்கி கொண்டதை அறிந்ததும் முத்தழகன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். #Tamilnews
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் பாஸ்தி மாவட்டம் பரஸ்ராம்பூரைச் சேர்ந்த ராகேஷ். இவரது மகன்கள் ராகுல் (13), ராஜன் (8).
இந்த நிலையில் சிறுவன் ராகுல் திடீரென மாயமனான். இதுகுறித்து அவனது தாத்தா பால்கோவிந்த் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்தபோது தந்தை ராகேஷ் கூறிய தகவல்கள் முன்னுக்கு பின்னாக இருந்தது.
இதையடுத்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், “தொடர்ந்து செல் போனில் விளையாடியதால் மகனை அடித்து கொன்றதாக” தெரிவித்தார்.
சிறுவன் ராகுல் எந்த நேரமும் செல்போனில் கேம் விளையாடிபடியே இருந்து வந்தான். சாப்பிடாமலும் தொடர்ந்து செல்போனிலேயே கவனம் செலுத்தி வந்திருக்கிறான். இதை தந்தை கண்டித்தும் கேட்கவில்லை.
சம்பவத்தன்று ராகேஷ், மகனை அழைத்தபோது அவன் செல்போனில் விளையாடியபடி இருந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த ராகேஷ் மகனை நெஞ்சில் காலால் மிதித்து தள்ளினார்.
இதில் சிறுவன் ராகுல் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராகேஷ் மகன் உடலை அங்குள்ள காட்டு பகுதியில் புதைத்து விட்டார்.
இதையடுத்து போலீசார் சிறுவன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். #tamilnews
மதுரை டோக்நகர் எஸ்.பி.ஓ. காலனி 5-வது தெருவைச் சேர்ந்தவர் சவுபா என்ற சவுந்திரபாண்டியன். (வயது 55). எழுத்தாளராக பணியாற்றிய இவர் ‘சீவலப்பேரி பாண்டி’ என்ற படத்துக்கு கதை வசனம் எழுதியுள்ளார். இவரது மனைவி லதா பூரணம் (50). கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் முதல்வராக உள்ளார். இருவரும் கடந்த 14 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கோவில்பட்டியில் லதா பூரணம் தனியாக வசித்து வருகிறார். இவர்களது ஒரே மகன் விபின் (27). முதுநிலை பட்டதாரியான இவர் தாய்-தந்தை வீட்டில் மாறி மாறி வசித்து வந்தார். போதைக்கு அடிமையானவர். இதனால் தந்தையுடன் தகராறு செய்து அடிக்கடி பணம் வாங்கி செல்வார்.
கடந்த ஏப்ரல் 30-ந் தேதி முதல் விபினை காணவில்லை. அவரது தாய் லதா பூரணம் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் விலை உயர்ந்த காரை விபின் விற்று விட்டதால் அவருக்கும் தனது கணவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அதன் பிறகு விபினை காணவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இது குறித்து சவுந்திரபாண்டியனிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணான பதிலளித்தார். எனவே அவரது நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போலீசார் மறைமுகமாக அவரை கண்காணித்து வந்தனர். அதில் சவுபா தனது மகனை சுத்தியலால் அடித்துக் கொன்றது தெரிய வந்தது.
போலீசாரிடம் சவுபா அளித்த வாக்குமூலத்தில், நான் விலை உயர்ந்த காரை எனது மகனுக்கு வாங்கி கொடுத்தேன். போதைக்கு அடிமையானதால் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்வான். ஒரே மகன் என்பதால் அவன் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்து வந்தேன். ஆனால் நான் வாங்கிக் கொடுத்த காரை என்னிடம் சொல்லாமல் விற்று விட்டான்.
இது குறித்து நான் கேட்டபோது என்னை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினான். இதனால் ஆத்திரமடைந்த நான் சுத்தியலால் அவனது தலையில் அடித்தேன். இதில் மயங்கி விழுந்து இறந்து விட்டான்.
திண்டுக்கல் அருகே உள்ள கொடை ரோடு பகுதியில் எனக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்துக்கு அவனது உடலை எடுத்துச் சென்றேன். பள்ளப்பட்டி மூப்பர் தெருவைச் சேர்ந்த பூமி (40), நிலக்கோட்டை காமராஜ் நகரைச் சேர்ந்த கனிக்குமார் என்ற கணேசன் (42) ஆகிய இருவரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு தோட்டத்தில் விபின் உடலை புதைத்து விட்டேன் என்று கூறினார்.
இதனையடுத்து போலீசார் சவுபா உள்பட அவருக்கு உடந்தையாக இருந்த பூமி மற்றும் கணேசனை கைது செய்தனர். விபின் உடல் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
தாசில்தார் முன்னிலையில் அரசு டாக்டர்கள், சவுபாவை அழைத்து வந்து விபின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்ட வைக்கின்றனர்.
அதன் பிறகு உடல் தோண்டி எடுத்து அதே இடத்தில் பரிசோதனை நடைபெறும். இச்சம்பவம் அப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியதால் ஏராளமான கிராம மக்கள் காலை முதலே அங்கு குவியத் தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்