என் மலர்
நீங்கள் தேடியது "special train"
- சபரிமலை பக்தர்கள் வசதிக்காக ரெயில் இயக்கப்படுகிறது.
- வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணிக்குப் புறப்படும் சிறப்பு ெரயில் மறுநாள் காலை 5.30 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும்.
கோவை,
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஆந்திர மாநிலம் நரசாபூர், கேரள மாநிலம் கோட்டயம் இடையே கோவை வழியாக சிறப்பு ெரயில் இயக்கப்படுவதாக ெரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆந்திர மாநிலம் நரசாபூரில் இருந்து நவம்பா் 18, 25 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணிக்குப் புறப்படும் சிறப்பு ெரயில் (எண்:07119) மறுநாள் காலை 5.30 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும்.
நவம்பா் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சனிக்கிழமைகளில் கோட்டயத்தில் இருந்து காலை 9.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ெரயில் (எண்: 07120) மறுநாள் மாலை 4 மணிக்கு நரசாபூரை சென்றடையும்.
இந்த சிறப்பு ெரயிலில், ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி 2, மூன்றடுக்கு பெட்டி 1, படுக்கை வசதி பெட்டிகள் 11, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 6, என, 22 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
ெரயிலானது, எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சித்தூா், திருப்பதி, ரேணிகுண்டா உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நரசாபூர்-கோட்டயம் ெரயில் வெள்ளி அன்று இரவு 10.12-க்கும், கோட்டயம்-நரசாபூர் ெரயில் சனிக்கிழமை இரவு 10.30-க்கும் கோவை வந்தடையும் .
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இரவு 8:45 மணிக்கு கொல்லத்தில் புறப்படும் ரெயில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1:30 க்கு ைஹதாரபாத் சென்று சேரும்.
- ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது என தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர்:
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, ைஹதராபாத் - கொல்லம் இடையே சிறப்பு ெரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 22 மற்றும், 29ந் தேதி மதியம் 12 மணிக்கு ைஹதராபாத்தில் புறப்படும் சிறப்பு ெரயில், மறுநாள் மாலை 6 மணிக்கு சென்று சேரும். மறுமார்க்கமாக நவம்பர் 16, 23 மற்றும் 30-ந் தேதி (புதன்கிழமை) இரவு 8:45 மணிக்கு கொல்லத்தில் புறப்படும் ரெயில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1:30 க்கு ைஹதாரபாத் சென்று சேரும்.
இந்த சிறப்பு ெரயில் காயன்குளம், மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, செங்கனஞ்சேரி, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது என தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
- சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
திருப்பூர்:
சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கர்நாடக மாநிலம் பெல்காம்-கொல்லம், ஹூப்ளி-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் வருகிற 20-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. பெல்காம்-கொல்லம் சிறப்பு ரெயில் வருகிற 20-ந் தேதி காலை 11.30 மணிக்கு பெல்காமில் இருந்து புறப்பட்டு அடுத்தநாள் மதியம் 3.15 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த ரெயில் ஈரோடுக்கு காலை 5.10 மணிக்கும், திருப்பூருக்கு காலை 6 மணிக்கும், போத்தனூருக்கு 6.45 மணிக்கும் செல்லும்.
கொல்லம்-பெல்காம் சிறப்பு ரெயில் வருகிற 21-ந் தேதி மாலை 5.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 11 மணிக்கு பெல்காம் சென்றடையும். இந்த ரெயில் போத்தனூரில் நள்ளிரவு 1 மணிக்கும், திருப்பூரில் 1.50 மணிக்கும், ஈரோடுக்கு 3 மணிக்கும் செல்லும்.
ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரெயில் வருகிற 27-ந் தேதி ஹூப்ளியில் மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் மதியம் 3.15 மணிக்கு கொல்லத்துக்கு சென்றடையும். இந்த ரெயில் ஈரோட்டுக்கு காலை 5.10 மணிக்கும், திருப்பூருக்கு 6 மணிக்கும், போத்தனூருக்கு 6.45 மணிக்கும் செல்லும்.
கொல்லம்-ஹூப்ளி சிறப்பு ரெயில் வருகிற 28-ந் தேதி கொல்லத்தில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் இரவு 8 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். பெல்காம்-கொல்லம் சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 15-ந் தேதி இயக்கப்படுகிறது. கொல்லம்-பெல்காம் சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொல்லம்-செகந்திராபாத் சிறப்பு ரெயில் (07130) கொல்லத்தில் வருகிற 19-ந் தேதி, 26-ந் தேதி மதியம் 3 மணிக்கு புறப்ட்டு சனிக்கிழமை நள்ளிரவு 12.35 மணிக்கு கோவைக்கும், 1.20 மணிக்கு திருப்பூருக்கும், 2.15 மணிக்கு ஈரோட்டுக்கும், 3.25 மணிக்கு சேலத்துக்கும் சென்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு சென்று சேரும்.
ஆந்திர மாநிலம் நரசப்பூர்-கொல்லம் சிறப்பு ரெயில் (07131) நரசப்பூரில் வருகிற 21 மற்றும் 28-ந் தேதிகளில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணிக்கு சேலத்துக்கும், 9.10 மணிக்கு ஈரோட்டுக்கும், 10.10 மணிக்கு திருப்பூருக்கும், 11.20 மணிக்கு கோவைக்கும் சென்று இரவு 7.35 மணிக்கு கொல்லம் சென்று சேரும்.
கொல்லம்-நரசப்பூர் சிறப்பு ரெயில் (07132) வருகிற 22-ந் தேதி மற்றும் 29-ந் தேதி கொல்லத்தில் இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு கோவைக்கும், 5.05 மணிக்கு திருப்பூருக்கும், 6 மணிக்கு ஈரோட்டுக்கும், 7 மணிக்கு சேலத்துக்கும் சென்று புதன்கிழமை இரவு 10 மணிக்கு நரசப்பூர் சென்று சேரும்.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ரெயிலில் தூங்கும் வசதி, 3-வது மற்றும் 2-வது ஏசி, முன்பதிவில்லா பெட்டிகள் என மொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
- சபரிமலை சிறப்பு ரெயிலுக்கு புனலூர் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
நெல்லை:
சென்னை மாநகர் மற்றும் தமிழக டெல்டா மாவட்ட ஐய்யப்ப பக்தர்களுக்கு வசதியாக ஐய்யப்பன் கோவிலின் மிக அருகாமையில் உள்ள சபரிமலை நுழைவாயிலான புனலூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கவேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து அகல ரெயில் பாதை மாற்றத்திற்கு பிறகு முதன்முறையாக தாம்பரத்தில் இருந்து விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், கோட்டயம் வழியாக எர்ணாகுளம் வரை சிறப்பு ரெயிலை இயக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்தது.
அதன்படி வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி வரை திங்கட்கிழமை தோறும் எர்ணாகுளத்திலிருந்தும், செவ்வாய்க்கிழமை தோறும் தாம்பரத்திலிருந்தும் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.
மொத்தம் 6 முறை இயக்கப்பட உள்ள இந்த ரெயிலில் தூங்கும் வசதி, 3-வது மற்றும் 2-வது ஏசி, முன்பதிவில்லா பெட்டிகள் என மொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இந்த சபரிமலை சிறப்பு ரெயிலுக்கு புனலூர் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. 100 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய சபரிமலை ரெயில் வழிப்பாதையான செங்கோட்டை-புனலூர்-கொல்லம் ரெயில் வழித்தடத்தை பயன்படுத்தி ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா ஆகிய ஐய்யப்ப திருத்தலங்களுக்கும் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி யாத்திரை செல்லலாம் என்பதால் ரெயில் பயணிகள் சங்கத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
- தாம்பரம் - எர்ணாகுளம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது.
- மேற்கண்ட எக்ஸ்பிரஸ் ெரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
மதுரை
தாம்பரம்- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயிலை இயக்குவது என்று தென்னக ெரயில்வே முடிவு செய்துள்ளது.
அதன்படி எர்ணா குளத்தில் இருந்து வருகிற 28-ந் தேதி முதல் ஜனவரி 2-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் மதியம் 1.10 மணிக்கு புறப்படும் ெரயில், அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு தாம்பரம் செல்லும்.மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து வருகிற 29-ந் தேதி முதல் ஜனவரி 3-ந் தேதி வரை செவ்வாய்க் கிழமைகளில் மாலை 3.40 மணிக்கு புறப்படும் ெரயில், அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் செல்லும்.
இந்த ரயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயன்குளம், கரு நாகப்பள்ளி, சாஸ்தான் கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவணேஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும்.
மேற்கண்ட எக்ஸ்பிரஸ் ெரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
- நாகர்கோவில் கோவை ெரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும்.
- கேரள மாநிலம் கோட்டயம் இடையே சிறப்பு ெரயில் இயக்கப்படுவதாக ெரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை,
சபரிமலை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், கோவை வழித்தடத்தில் செகந்தராபாத் - கேரள மாநிலம் கோட்டயம் இடையே சிறப்பு ெரயில் இயக்கப்படுவதாக ெரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செகந்தராபாத்தில் இருந்து நவம்பா் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.50 மணிக்குப் புறப்படும் செகந்தராபாத் - கோட்டயம் சிறப்பு ெரயில் ( எண்:07125) மறுநாள் இரவு 9 மணிக்கு கோட்டயம் நிலையத்தைச் சென்றடையும்.
இதேபோன்று நவம்பா் 28-ந் தேதி (திங்கள்கிழமை) இரவு 11.15 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்படும் கோட்டயம் - செகந்தராபாத் சிறப்பு ெரயில் ( எண்:07126) 30-ந் தேதி காலை 4 மணிக்கு செகந்தராபாத் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ெரயிலானது எா்ணாகுளம், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், சிராலா, தெனாலி, குண்டூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரெயிலானது செகந்தராபாத்தில் இருந்து கோவைக்கு மதியம் 3.07 மணிக்கு வந்து 3.10-க்கு புறப்பட்டு செல்லும். கோட்டயத்தில் இருந்து கோவைக்கு காலை 4.37-க்கு வந்து 4.40 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
பிகார் மாநிலம் தா்பங்காவில் இருந்து நவம்பா் 21-ந் தேதி முதல் ஜனவரி 12-ந் தேதி வரை திங்கள்கிழமைகளில் இரவு 9.15 மணிக்குப் புறப்படும் தா்பங்கா - எா்ணாகுளம் வாராந்திர ெரயில் (எண்: 05555) வியாழக்கிழமைகளில் காலை 6 மணிக்கு எா்ணாகுளத்தைச் சென்றடையும்.
எா்ணாகுளத்தில் இருந்து நவம்பா் 24-ந் தேதி முதல் டிசம்பா் 15-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் இரவு 9 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - தா்பாங்கா வாராந்திர ெரயில் (எண்: 05556) ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு தா்பங்காவைச் சென்றடையும்.
இந்த ெரயிலானது, திருச்சூா், பாலக்காடு, கோவை, ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், விஜயவாடா, ராஜமுந்திரி, சம்பல்பூா், ரூா்கேலா, ஹாட்டியா, ராஞ்சி, தன்பாத் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயிலானது தா்பங்காவில் இருந்து கோவைக்கு இரவு 12.40 மணிக்கு வந்து 12.45-க்கு புறப்பட்டு செல்லும். எா்ணாகுளத்தில் இருந்து கோவைக்கு காலை 12.50-க்கு வந்து 12.55 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
திருப்பூர்-வஞ்சிப்பாளை யம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாகர்கோவில் - கோவை ெரயில் (எண்: 16321) நாளை 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.
- சிலம்பு எக்ஸ்பிரஸை தினசரியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
- ஐதராபாத் - தாம்பரம் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை மதுரை நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில்:
தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளருமான ராஜா எம்.எல்.ஏ., தெற்கு ரெயில்வே புதிய பொது மேலாளர் ஆர். என். சிங்கை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.அதில் கூறியுள்ளதாவது:-
நெல்லையில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில் வழியாக இயங்கும் தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில்களை நிரந்தர ரெயில்களாக இயக்க வேண்டும். சிலம்பு எக்ஸ்பிரஸை தினசரியாக மாற்ற வேண்டும்.
நெல்லையில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில், மதுரை, பெங்களூர் வழியாக மைசூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்க வேண்டும். ஐதராபாத் - தாம்பரம் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை மதுரை நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். தமிழகத்திற்கு பயனில்லாமல் இயக்கப்படும் திப்ரூகர் - கன்னியாகுமரி ரெயிலை மதுரை, நெல்லை வழியாக இயக்க வேண்டும்.
நெல்லை, தாம்பரம் ரெயிலுக்கு சங்கரன்கோவில் ரெயில் நிறுத்தமும், நெல்லை, பாலக்காடு பாலருவி ரெயிலுக்கு பாவூர்சத்திரம் ரெயில் நிறுத்தமும் வழங்க வேண்டும். முருக பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்செந்தூர் ரெயில் நிலையத்தின் நடைமேடைகளை நீட்டித்து, கூடுதல் நடை மேடைகளுடன் கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இதுகுறித்து ராஜா எம்.எல்.ஏ. கூறுகையில், அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படுவதாக பொது மேலாளர் கூறினார். தென்காசி, சங்கரன்கோவில் வழியாக பெங்களூரு, மைசூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கவும், திருச்செந்தூர் ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் பணியும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று பொது மேலாளர் கூறினார் என தெரிவித்தார்.
- மைசூரில் இருந்து தூத்துக்குடி மற்றும் மயிலாடுதுறை செல்லும் ரெயில்களின் பெட்டிகள் பழைய ஐ.சி.எப்.பெட்டிகளாக இயங்கி வந்த நிலையில் இன்று முதல் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிவப்பு வண்ண எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது.
- தென்காசி மாவட்ட பகுதிகளுக்கு முதன்முறையாக கரூர், நாமக்கல், சேலம், பெங்களூரு, மைசூருக்கு ரெயில் இணைப்பு கிடைக்கும்.
தென்காசி:
மைசூரில் இருந்து தூத்துக்குடி மற்றும் மயிலாடுதுறை செல்லும் ரெயில்களின் பெட்டிகள் பழைய ஐ.சி.எப்.பெட்டிகளாக இயங்கி வந்த நிலையில் இன்று முதல் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிவப்பு வண்ண எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது.
எனவே இந்த நான்கு ெரயில்களின் பழைய ரெயில் பெட்டி தொடர்களைக் கொண்டு மைசூரில் இருந்து பெங்களூரு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை வழியாக நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
மைசூர்-தூத்துக்குடி-மைசூர் மற்றும் மைசூர் - மயிலாடுதுறை - மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 23 பெட்டிகளுடன், பெட்டிகள் பகிர்வு முறையில் இயங்கி வந்தன.
இந்த இரண்டு ரெயில் பெட்டி தொடர்களின் பராமரிப்பும் மைசூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வண்டி தென்மேற்கு ரெயில்வேக்கு சொந்தமான வண்டி ஆகும்.
தற்போது இந்த 2 ரெயில்களின் பெட்டி தொடர்கள் அதிநவீன ஜெர்மன் தொழில்நுட்பம் கொண்ட எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது.
எனவே இந்த இரண்டு ரெயில்களின் 4 ெரயில் பெட்டி தொடர்களில் உள்ள 92 ெரயில் பெட்டிகளில் நல்ல பெட்டிகளை தேர்ந்தெடுத்து 18 பெட்டிகளை பயன்படுத்தி நாமக்கல், மதுரை, தென்காசி வழியாக நெல்லைக்கு இயக்க சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது.
இது குறித்து தென் மாவட்ட ரெயில் பயணிகள் கூறுகையில், மதுரை ரெயில்வே கோட்டத்தில் மிக முக்கிய வழித்தடமான விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை. நெல்ைல வழித்தடத்தில் 3 மாவட்டங்கள் பயன்பெறும் மிக முக்கிய நகரங்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் பெங்களூருக்கு ரெயில்கள் வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
தற்போது அதற்கான நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. மைசூர் - தூத்துக்குடி, மயிலாடுதுறை ரெயில்களின் பழைய ெரயில் பெட்டிகளை பயன்படுத்தி உடனடியாக மைசூர் - நெல்லை வழி பெங்களூரு, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம், தென்காசி அம்பை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். இதன் மூலம் தென்காசி மாவட்ட பகுதிகளுக்கு முதன்முறையாக கரூர், நாமக்கல், சேலம், பெங்களூரு, மைசூருக்கு ரெயில் இணைப்பு கிடைக்கும்.
எனவே மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக தெற்கு ரெயில்வே மற்றும் தென்மேற்கு ரெயில்வே பொது மேலாளர்களுக்கு கடிதம் எழுதியும் நேரில் வலியுறுத்தியும் இந்த ரெயிலை பெற்று தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரெயில்களை உடனடியாக அறிவித்து இயக்க வேண்டும்.
- தீபாவளிக்கு இயக்கப்பட்ட ரெயில்களின் வருமானத்தை பொறுத்தவரை, இரு மார்க்கங்களிலும் சேர்த்து ரூ.2.96 கோடி கிடைத்துள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வேயால் தீபாவளிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களுக்கான வருமானம் குறித்து தெற்கு ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினரும் சமூக ஆர்வலருமான பாண்டியராஜா தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு தெற்கு ரெயில்வே வணிகதுறை அதிகாரி ரவீந்திரன் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-
தீபாவளிக்காக அக்டோபர் 18-ல் இருந்து நவம்பர் 3 வரை மொத்தம் 34 ரெயில்கள் இயக்கப்பட்டதில், 19 ரெயில்கள் தெற்கு ரெயில்வே மூலமாகவும், 15 மற்ற மண்டலங்கள் மூலமாக தெற்கு ரெயில்வே எல்லைக்குள் இயக்கப்பட் டது என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இயக்கப்பட்ட ரெயில்களில் பெரும்பாலான ரெயில்கள் தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி, கொச்சுவேலி மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து ராமேஸ்வரம், எர்ணாகுளம், திருவனந்தபுரம் ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளது.
மற்ற ரெயில்வே மண்டலங்கள் சார்பாக திருநெல்வேலி, நாகர்கோவில், கண்ணூர் ஆகிய ஊர்களில் இருந்து இருந்து பெங்களூருக்கும், தூத்துக்குடி மற்றும் மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கும், தீபாவளி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி, எர்ணாகுளம், மங்களூர், தஞ்சாவூர் ஆகிய ஊர்களிலிருந்து வட மாநில நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இயக்கப்பட்ட ரெயில்களின் வருமானத்தை பொறுத்தவரை, இரு மார்க்கங்களிலும் சேர்த்து ரூ.2.96 கோடி கிடைத்துள்ளது.
தாம்பரம் - திருநெல்வேலி ரூ.22.43 லட்சமும், திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் ரூ.22.3 லட்சமும், தாம்பரம் - நாகர்கோவில் ரூ.18.2 லட்சமும், கொச்சுவேலி - தாம்பரம் ரூ. 17.71 லட்சமும் வழி நாகர்கோவில், எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் ரூ.17.01 லட்சமும், தாம்பரம் - திருநெல்வேலி ரூ.11.56 லட்சமும், சென்னை - ராமேஸ்வரம் ரூ.11.29 லட்சமும், திருச்சி - தாம்பரம் ரூ.2.62 லட்சம் மற்றும் ஒரு மார்க்கத்தில் நாகர்கோவில் - பெங்களூரு ரூ.9 லட்சமும், திருநெல்வேலி - தானாப்பூர் ரூ.53.8 லட்சமும் (இரு சேவைகள்) வருமானமாக கிடைத்துள்ளது.
இது தவிர மற்ற மண்டலங்கள் மூலம் இயக்கப்பட்ட ரெயில்கள் மூலம் ரூ.1 கோடி வருமானமாக கிடைத்துள்ளது. அனைத்து ரெயில்களையும் சேர்த்து மொத்த வருமானமாக ரெயில்வே துறைக்கு ரூ.2.96 கோடி வசூலாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது குறித்து பயணிகள் கூறியதாவது: கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை மாதங்களாக விளங்கும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் முழுவதும் சிறப்பு ரெயில்கள் இயக்கினால் தெற்கு ரெயில்வேக்கு ரூ.10 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சிறப்பு ரெயில்கள் அனைத்தும் பல்வேறு ரெயில் நிலையங்களில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரெயில்களை கொண்டு இயக்கப்பட்டது. கிறிஸ்துமஸ், புதுவருட பிறப்பு, பொங்கல் பண்டிகைகளுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர்.
தற்போது இயங்கும் ரெயில்களில் முன்பதிவு இல்லாத காரணத்தால் பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்தும் வருகின்றனர்.
ரெயில்வே துறை பண்டிகை கால சிறப்பு ரெயில்களை பண்டிகைகளுக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே அறிவித்தால் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ரெயில்வே துறை கடைசி நேரத்தில் சிறப்பு ரெயில்களை அறிவித்து இயக்கும் போது ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் அந்த டிக்கெட்டை ரத்து செய்து விட்டு ரெயில்களில் பயணம் செய்ய விரும்பமாட்டார்கள்.
ஆகவே பண்டிகை காலங்களில் சுமார் ஒரு மாதத்துக்கு முன்பாகவே சிறப்பு ரெயில்களை அறிவித்து இயக்கினால் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே ரெயில்வேயின் வருமானத்தையும், பயணிகளின் தேவையையும் கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே நாகர்கோவில், தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரெயில்களை உடனடியாக அறிவித்து இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை-நெல்லை இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- இந்த தகவலை தென்னக ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லை, நாகர்கோ வில் பகுதிகளுக்கு சிறப்பு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரெயில் (06021) தாம்பரத்தில் இருந்து நாளை (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் (06022) டிசம்பர் 23 (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
இந்த ரெயில்கள் கோவில் பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானா மதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 2-ம் வகுப்பு பொது பெட்டிகள், மா ற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியுடன் கூடிய ஒரு சரக்கு பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
தாம்பரம்-நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு கட்டண ரெயில் (06041) தாம்ப ரத்தில் இருந்து டிசம்பர் 23 (வெள்ளிக்கிமை) இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சேரும். இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரெயிலில் 2 குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய 2 அடுக்கு படுக்கை வசதிபெட்டி, 11 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 2-ம் வகுப்பு பொதுப்பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியுடன் கூடிய ஒரு சரக்கு பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
இந்த தகவலை தென்னக ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
- ரெயில் நிலையத்தின் வளாகத்திலோ,ரெயில் பெட்டிக்குள்ளோ புகை பிடிக்க கூடாது.
- ரெயில் பெட்டியில் கற்பூரம், தீபம் போன்றவற்றை ஏற்றக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
சபரிமலை அய்யப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஏற்கனவே 25க்கும் மேற்பட்ட ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது மேலும் கூடுதலாக சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படிடதராபாத் - கொல்லம் இடையே வரும் 29ந் தேதியும், மறுமார்க்கமாக கொல்லம் -ஹைதராபாத் இடையே 31ந் தேதியும் சிறப்பு ரெயில் (07177) இயங்கும்.
நரசப்பூர் - கண்Èர் இடையே 27ந் தேதி மற்றும் 31ந் தேதி சிறப்பு ரெயில் (07178) இயங்கும். மறுமார்க்கமாக கண்Èரில் இருந்து, 28ந் தேதி மற்றும் ஜனவரி 1ந் தேதி புறப்படும். செகந்திராபாத் - கொல்லம் சிறப்பு ரெயில் (07180) வரும் 28ந் தேதியும், மறுமார்க்கமாக கொல்லம் - செகந்திரபாத் ரெயில் (07181) 29ந் தேதியும் இயங்கும்.
ரெயில்களும் ஆந்திர மாநிலம் திருப்பதி, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், திருவல்லா, செங்கனூர், காயன்குளம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ரெயில்வே நிலையத்தில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:- ரெயிலில் பயணிக்கும் பொழுது, எளிதில் தீப்பிடிக்க கூடிய மற்றும் அபாயகரமான பொருட்களை கொண்டு செல்ல கூடாது. ரெயில் நிலையத்தின் வளாகத்திலோ,ரெயில் பெட்டிக்குள்ளோ புகை பிடிக்க கூடாது.
ெரயில் பெட்டியினுள் மற்றும் ரெயில் நிலையத்தில் 'ஸ்டவ்' மற்றும் மின் அடுப்பு போன்றவற்றை கொண்டு சமையல் செய்ய கூடாது. கற்பூரம், தீபம் போன்றவற்றை ரெயில் பெட்டியினுள் ஏற்றுதல் கூடாது. இரவு நேர பயணங்களின் போது செல்போன் சார்ஜ் செய்வதை தவிர்க்கவும்.
இவ்வாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
ரெயில்வே பாதுகாப்பு படையினர் கூறுகையில், ரெயிலில் பயணிக்கும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வழக்கமாக வெளியிடப்படும் விழிப்புணர்வு விதிமுறை தான். தற்போது சபரிமலை சீசன் என்பதால், அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் ரெயிலில் பயணிக்கின்றனர். ரெயில் பெட்டியில் கற்பூரம், தீபம் போன்றவற்றை ஏற்றக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வகையில் புதிய கட்டுப்பாடுகள் எதுவுமில்லை என்றனர்.
- பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக, சென்னையில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளது.
அதன்படி தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13-ந் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண் 06041) அடுத்த நாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் செல்லும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 16-ந் தேதி மாலை 5.10 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டிஎண்06042) அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் சேரும். இந்த ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும்.
அதே போல தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12-ந் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் ரெயில் (06021) அடுத்த நாள் காலை 9 மணிக்கு நெல்லை செல்லும். மறு மார்க்கத்தில் நெல்லையில் இருந்து ஜனவரி 13-ந் தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் ரெயில் (06022), அடுத்த நாள் அதிகாலை 3.20 மணிக்கு எழும்பூர் செல்லும். இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்பு க்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டியில் நின்று செல்லும்.
கொச்சுவேலியில் இருந்து ஜனவரி 17-ந் தேதி காலை 11.40 மணிக்கு புறப்படும் ரெயில் (06044) அடுத்த நாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் செல்லும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து ஜனவரி 18-ந் தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் (06043), அடுத்த நாள் அதிகாலை 3.20 மணிக்கு கொச்சுவேலி செல்லும்.
இந்த ரெயில்கள் திருவ னந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்பு க்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், துறைமுகம் சந்திப்பு, விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும்.
தாம்பரத்தில் இருந்து ஜனவரி 16-ந் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் (06043), அடுத்த நாள் காலை 9 மணிக்கு நெல்லை செல்லும். மறு மார்க்கத்தில் நெல்லையில் இருந்து ஜனவரி 17-ந் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் (06058) அடுத்த நாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் செல்லும்.
இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டியில் நின்று செல்லும். மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.