என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Speech Contest"
- தீபிகாஸ்ரீ 2-வது பரிசும், காங்கயம் அரசு கல்லூரி மாணவர் ஜெயசூர்யா 3-வது பரிசும் பெற தேர்வானார்கள்.
- திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவி செண்பகம் 3-வது பரிசும் பெற தேர்வு செய்யப்பட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் நடந்தது.இதில் நடந்த பேரறிஞர் அண்ணா பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்கள் பிரிவில் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பரங்கிரி முதல் பரிசும், பெருமாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் ரூபன் 2-வது பரிசும், திருப்பூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவி வினித்தா 3-வது பரிசும், அய்யன்காளி பாளையம் வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ரேணுகா மற்றும் குமார்நகர் மாநகராட்சி பள்ளி மாணவி பானுப்பிரியா ஆகியோர் சிறப்பு பரிசும் பெற தேர்வு பெற்றனர். கல்லூரி மாணவர்கள் பிரிவில் தாராபுரம் அரசு கல்லூரி மாணவர் பிரவீன் முதல் பரிசும், மாணவி தீபிகாஸ்ரீ 2-வது பரிசும், காங்கயம் அரசு கல்லூரி மாணவர் ஜெயசூர்யா 3-வது பரிசும் பெற தேர்வானார்கள்.
பின்னர் நடந்த பெரியார் பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்கள் பிரிவில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மவுனிகா முதல் பரிசும், வேலம்பாளையம் ஜெய்சாரதா மேல்நிலைப்பள்ளி மாணவி ஜிஷப்பிரியா 2-வது பரிசும், பெருமாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் அன்பரசு 3-வது பரிசும், விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் முகமது அஜிம், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி இந்துஜா ஆகியோர் சிறப்பு பரிசும் பெற தேர்வானார்கள்.
கல்லூரி மாணவர்கள் பிரிவில் பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவி காயத்திரி முதல் பரிசும், தாராபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் கவுதமன் 2-வது பரிசும், திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவி செண்பகம் 3-வது பரிசும் பெற தேர்வு செய்யப்பட்டனர்.
- தொண்டியில் மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடந்தது.
- அல்ஹிலால் மெட்ரிக் பள்ளி தாளாளர் அஹமது இப்ராகிம் நன்றி கூறினார்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள அமீர் சுல்தான் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6ம் ஆண்டு பள்ளி மாணாவர்களுக்கான மாவட்ட அளவிலான எம்.ஆர்.எம். அப்துர்-ரகீம் பேச்சுப்போட்டி நடந்தது. தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முகம்மது ரபீக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அல்ஹிலால் அறக்கட்டளை தலைவர் கமால்பாட்ஷா தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் அப்துல் ரவூப் நிஸ்தார் வரவேற்று பேசினார். தொண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ, மாணவிகள் சமகால இந்தியா சமத்துவத்தின் சோலையா? சீரழிவின் பாலையா? என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டனர்.
முதல் பரிசு கீழக்கரை பியர்ல் மெட்ரிக் பள்ளி மாணவி கிருஷ் ரோஷிணி, 2-ம் பரிசு தொண்டி அல்ஹிலால் மெட்ரிக் பள்ளி மாணவி அல்ஹா, 3-ம் பரிசு ராமநாதபுரம் செய்யது அம்மமாள் ஆண்கள் மெட்ரிக் பள்ளி மாணவர் செல்வக்குமார், தமிழ் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு ஆர்.எஸ்.மங்களம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் முகம்மது அஸ் பாக், 2-ம் பரிசு தொண்டி அல்ஹிலால் மெட்ரிக் பள்ளி மாணவி ஹசன் பியாஷா, 3-ம் பரிசு ஆர்.எஸ்.மங்களம் ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி மாணவி கமர் மெர்ஸிஹா ஆகியோர் பெற்றனர். அல்ஹிலால் மெட்ரிக் பள்ளி தாளாளர் அஹமது இப்ராகிம் நன்றி கூறினார்.
- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
- அவற்றுள் ஒன்றாக மகளிர் மேம்பாட்டில் கலைஞரின் பங்கு என்ற தலைப்பில் மகளிருக்கு பேச்சு போட்டி நடத்தப்படுகிறது.
நெல்லை:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக மகளிர் மேம்பாட்டில் கலைஞரின் பங்கு என்ற தலைப்பில் மகளிருக்கு பேச்சு போட்டி நடத்தப்படுகிறது. நாளை மறுநாள்(சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ள இப்போட்டியில் 20 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்ளலாம். கொடுக்கப்பட்ட தலைப்பில் 3 நிமிடங்களுக்கு மிகாமல் பேச வேண்டும். இப்போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கும், முன்பதிவு செய்யவும் 7502433751 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள லாம் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தெரி வித்துள்ளார்.
- மாணவர்களுக்கு அமைச்சர் ஆர்.காந்தி பரிசு வழங்கினார்
- 67 மாணவர்கள் கலந்து கொண்டு போட்டியிட்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொறியியல் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் காந்தி வரவேற்றார். இதில் ராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 67 மாணவர்கள் கலந்து கொண்டு போட்டியிட்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும், 4 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தி.மு.க.சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் வினோத்காந்தி, ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமுர்த்தி, நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, ஆற்காடு ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வேதா சீனிவாசன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் கலாநிதி, பானுசந்தர் திலீபன், சேகர் தினேஷ், கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சுப்போட்டி நடக்கிறது.
- மதுரை மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் (பொ) சுசிலா தெரிவித்தார்.
மதுரை
காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி, மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டி நடைபெற்றது. பள்ளி அளவில் நடந்த பேச்சுப்போட்டியில் வரிச்சியூர், அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவி ஸ்ரீநிகா, முதல்பரிசும், தோப்பூர், அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவி தீப்தி 2-ம் பரிசும், திருமங்கலம் பி.கே.என். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவிஷிபா 3-ம் பரிசும் வென்றனர். தத்தனேரி, திரு.வி.க. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவன்அழகர்சாமி, பாப்பாபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவன் கோகுல் ஆகியோர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு வென்றனர்.
கல்லூரி அளவில் நடந்த பேச்சு போட்டியில் மதுரை பாத்திமா கல்லூரி மாணவி ராஜேஸ்வரி முதல் பரிசும், மதுரை மேலூர் அரசு கலைக் கல்லூரி மாணவி மங்கையர்க்கரசி 2-ம் பரிசும், கே.கே.நகர் வக்பு வாரியக் கல்லூரி மாணவன் இஸ்ஹாக் அகமது மூன்றாம் பரிசும் வென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் சங்கீதா வழங்குவார். இந்த தகவலை மதுரை மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் (பொ) சுசிலா தெரிவித்தார்.
- மதுரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வருகிற 23-ந்தேதி பேச்சுப்போட்டி நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை தமிழ் வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.
மதுரை
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறை யின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக்கோ ரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப்பாடுபட்ட தலை வர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பிற்கிணங்க, கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப்போட்டிகள் வருகிற 23.08.2023 அன்று பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும், கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பக லிலும் மதுரை உலகத்தமிழ்ச்சங்க வளாகக் கூட்டரங்கில் நடத்தப்பட இருக்கி றது.
அரசு, தனியார், அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள், அரசு, தனி யார், அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி கள், பொறியியல் மருத்துவக் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் இப்பேச்சுப் போட்டிகளில் பங்கேற்க லாம்.
போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் அனுப்பப்படும்.
கருணாநிதி பிறந்தநாள் பேச்சுப்போட்டிக்காக தலைப்புகள் வெளியிடப்பட் டுள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு கலைத்தாயின் தவப்புதல் வன், முத்தமிழறிஞர், சங்கத் தமிழ், செம்மொழி, பிறப் பொக்கும் எல்லா உயி ருக்கும், பொறுத்தது போதும் பொங்கி எழு, நல்லான் வகுத்ததா நீதி இந்த வல்லான் வகுத்ததே நீதி, தகடூரான் தந்த கனி, திராவிடம், நெஞ்சுக்கு நீதி.
கல்லூரி மாணவர்களுக்கு என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே, அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், சமத்துவபுரம், திராவிடச்சூரியனே, பூம்பு கார், நட்பு, குறளோவியம், கலைஞரின் எழுதுகோல், அரசியல் வித்தகர் கலைஞர், சமூகநீதிக் காவலர் கலைஞர் ஆகிய தலைப்புகளில் முத்தமிழறிஞர் கருணாநிதி யின் பிறந்தநாள் பேச்சுப் போட்டிகள் நடைபெற வுள்ளன.
பள்ளி கல்லூரி மாண வர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம்பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 என்ற வீதத்திலும் பள்ளி மாணவர்களுக்கென நடத் தப்படும் பேச்சுப் போட்டி யில் மட்டும், தங்கள் பேச் சுத்திறனைச் சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் தனியாகத்தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்புப்பரிசு ரூ.2000 என்ற வீதத்திலும் வழங்கப்பட உள்ளன.
மேற்கண்ட தகவலை தமிழ் வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.
- ஜூலை 18-ந்தேதி “தமிழ்நாடு நாள் விழாவாக” இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
- தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தமிழ்நாடு முதல்-அமைச்சராக பேரறிஞர் அண்ணா இருந்தபோது தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என ஜூலை 18-ந்தேதி பெயர் சூட்டினார்.
அந்த நாளினை "தமிழ்நாடு நாள் விழாவாக" இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இவ்விழாவினை கொண்டாடும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
மாவட்ட அளவில் கட்டுரை.
பேச்சு ப்போட்டியில் வெற்றிபெறும் மாணவ ர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் என பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
போட்டிகள் நடைபெறும் இடம், நாள், நேரம், போட்டிக்கான தலைப்பு, விதிமுறைகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக அந்தந்த பள்ளிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாகத் தெரிவி க்கப்படும்.
இந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்று மாணவர்கள் பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாளினையே “தமிழ்நாடு நாளாக” இனி கொண்டாடப்படும்.
- முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000-, மூன்றாம் பரிசு ரூ.5,000-வீதம் வழங்கப்பெறும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-
தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாளினையே "தமிழ்நாடு நாளாக" இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பின் படி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெற உள்ளன.
இதன்படி, வருகிற 18-ந் தேதி தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை ) அன்று திருவாரூர் மாவட்ட த்திலுள்ள 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி, மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கு திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன.
போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தேர்வு செய்து அனுப்புவார். கட்டுரை போட்டிக்கு, தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள், பேச்சு போட்டிக்கு தமிழ்த் திரை உலகத்தை புரட்டிப்போட்ட முத்தமி ழறிஞர் கலைஞரின் எழுதுகோல் தலைப்பு ஆகும்.
போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்க ளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000-, மூன்றாம் பரிசு ரூ.5,000-வீதம் வழங்கப்பெறும்.
பள்ளிகளில் பயிலும் மாணவ ,மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- நாடார்கள் உறவின் முறைபொருளாளர் செந்தூரான் வரவேற்றார்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாடார் மகாஜன சங்கம் மற்றும் அருப்புக் கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட் இணைந்து காமராஜர் 121- வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். நாடார்கள் உறவின் முறைபொருளாளர் செந்தூரான் வரவேற்றார்.
பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பரிசு மற்றும்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.
மேலும் நிகழ்ச்சியில் நாடார்கள் உறவின்முறை துணைத்தலைவர் முத்துக்குமார், காரியதரிசி முத்துசாமி , புரவலர் ராமர், எஸ்.பி.கே.கல்விக் குழும தலைவர் ஜெயக்குமார், நாடார் மகாஜன சங்க மண்டல செயலாளர் கனக ரத்தினம் எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் கவுன்சிலர்மணி முருகன், பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் காசி கோபிநாத், இன்டர்நேஷனல் பள்ளி செயலாளர் கனகவேல் ராஜன், கல்லூரி செயலாளர் முத்து தினகரன், தொடக்கப் பள்ளி செயலாளர் சவுந்தர பாண்டியன், ஜூனியர் நர்சரி பள்ளி செயலாளர் ராஜசெல்வம், பள்ளி தலைமையாசிரியர் ஆனந்த ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி தலைவர் சிவராம கிருஷ்ணன் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தின்பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவ- மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள்பே ச்சுப்போட்டியில் கலந்து கொண்டனர். பேச்சு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வர்களுக்கு முதல் பரிசு ரூ5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2ஆயிரமும் ஆறுதல் பரிசாக வழங்கினர்.
- கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்
- தமிழக அரசு காலை உணவுத் திட்டம் 1544 பள்ளிகளில் ஜூன் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி அரங்கில், மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்துக் கல்லூரி மாணவ, பேச்சுப் போட்டி நடந்தது. கலெக்டர் பா.முருகேஷ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். போட்டியில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழினை வழங்கி அவர் பேசியதாவது:-
கடுமையான முயற்சி செய்தால்தான் முன்னேற முடியும். விடா முயற்சி, கடுமையான உழைப்பு இதுதான் நமது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் அப்போதுதான் நம்முடைய வாழ்க்கையில் முன்னேற முடியும் பேச்சுப்போட்டி என்பது கல்வி சார்ந்த ஆற்றலை அதிகப்படுத்துவது வாழ்கையில் கல்வி மட்டும் போதுமானது அல்ல. அதையும் தாண்டி பல்வேறு ஆற்றல்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் தனித்திறமைகள் மாணவர்களுக்கு தேவை. அரசை தேடி மக்கள் இல்லை மக்களைத் தேடி அரசு சென்று சேவை செய்யவேண்டும் என்பது தான் நமது பொதுப்பணி துைற அமைச்சரின் விருப்பம், ஒவ்வொரு தொகுதியிலும் நேரடியாக சென்று மக்களிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது தீர்வு காண்பதே தன்னுடைய தலையாய் கடைமையாக பணியாற்றி வருகின்றார்.
மாணவர்கள் அரசுப் போட்டி தேர்வுக்கு தயாராவதற்கு வருகின்ற ஜூன் மாதத்திலிருந்து திருவண்ணாமலை செய்யாறு அரசுக்கலைக் கல்லூரிகளில் வகுப்பு தொடங்கப்படும் இந்த பயிற்சிக்கு வேலை வாய்ப்பு பயிற்சி துறையின் மூலமாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் இதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் எந்த புத்தகத்தை வேண்டுமானாலும் இன்டர்நெட்டில் இ - புக் - ல் டவுன்லோட் செய்து பயன் பெறலாம் மற்றும் தமிழக அரசு காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது நமது மாவட்டத்தில் 1544 பள்ளிகளில் ஜூன் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும். இந்த திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் . பார்வதி சீனிவாசன், திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் . நிர்மலா கார்த்தி வேல்மாறன், மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம்,பேச்சு போட்டி சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
- பேச்சு போட்டியில் ராயகிரி சி.பா.ஆதித்தனார் பள்ளி மாணவி அபிரஞ்சனி முதல் பரிசினையும், சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி மாணவி சத்யபிரியா 2-ம் பரிசையும், சி.பா.ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி மாணவி தர்ஷினி 3-ம் பரிசினையும் வென்றனர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார அலுவலகம் சார்பில் மருத்துவம் ஊரக நல பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம்,பேச்சு போட்டி சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, பள்ளியின் செயலர் தங்கேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் சாந்திசரவணபாய், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளியின் தலைமை ஆசிரியர் சக்திவேலு வரவேற்று பேசினார்.
இதில் ராயகிரி சி.பா.ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி, தென்மலை அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகிரி விவேகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி, வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
பேச்சு போட்டியில் ராயகிரி சி.பா.ஆதித்தனார் பள்ளி மாணவி அபிரஞ்சனி முதல் பரிசினையும், சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி மாணவி சத்யபிரியா 2-ம் பரிசையும், சி.பா.ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி மாணவி தர்ஷினி 3-ம் பரிசினையும் வென்றனர். இவர்களுக்கு பரிசுகளை பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, பள்ளியின் செயலர் தங்கேஸ்வரன், டாக்டர் சாந்தி சரவணபாய் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் ரவிக்குமார், ராஜாராம், செவிலியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் சண்முகவேலு நன்றி கூறினார்.
- காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடந்தது.
- பேச்சு போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
சேரன்மகாதேவி:
காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் என்.எம்.எக்ஸ். அகாடமியும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியும் இணைந்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவி வசுந்தரா 2-ம் இடத்தை பிடித்து விருதுநகரில் நடைபெறும் மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். அவருக்கு அதற்கான தகுதி சான்றும், ரூ.1,500 ரொக்கப்பரிசு தொகையும் வழங்கப்பட்டது.
மாணவியை சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ரிஷப் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் தலைமை ஆசிரியர் மரகதவல்லி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் நெய்னா முகமது, பள்ளி மேலாண்மை குழு தலைவி சரிதாதேவி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவியை பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்