search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stab"

    • வால்மிக் கோல் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார்.
    • மாமியார் சரோஜ் கோலைக் கொன்றதற்காக காஞ்சன் கோல் குற்றவாளி.

    மத்தியப் பிரதேச மாநிலத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு தனது மாமியாரை 95 முறைக்கு மேல் கத்தியால் குத்தி கொலை செய்த 24 வயது பெண்ணுக்கு அம்மாநில நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்கின் தீர்ப்பின்போது, ரேவா மாவட்டத்தின் நான்காவது கூடுதல் அமர்வு நீதிபதி பத்மா ஜாதவ், "தனது 50 வயது மாமியார் சரோஜ் கோலைக் கொன்றதற்காக காஞ்சன் கோல் குற்றவாளி" என்று தீர்ப்பளித்துள்ளார்.

    மங்காவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அட்ரைலா கிராமத்தில் வசிக்கும் காஞ்சன், குடும்பத் தகராறை தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி அன்று தனது மாமியார் சரோஜ் கோலை அரிவாளால் 95 முறை குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

    அப்போது வீட்டில் ரத்த வெள்ளத்தில் தனியாக கிடந்த சரோஜை, அவரது மகன் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், சரோஜ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, வால்மிக் கோல் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

    மேலும், பாதிக்கப்பட்ட சரோஜ் கோலின் கணவர் வால்மிக் கோலும், மருமகளை கொலை செய்ய தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கில் இணை குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டார்.

    ஆனால் ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் கூறினார்.

    • சந்தீப் கூடுதலாக சட்னி கேட்டபோது விகாஸ் மறுத்ததாக தெரிகிறது.
    • முகத்தில் காயங்களுடன் சந்தீப் மருத்துவமனையில் அனுமதி.

    டெல்லியில் உள்ள ஷஹ்தரா விஸ்வாஸ் நகர் பகுதியில் மோமோவுக்கு கூடுதலாக சட்னி கேட்ட சந்தீப் என்பவரை கடையின் உரிமையாளர் விகாஸ் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சந்தீப் கூடுதலாக சட்னி கேட்டபோது விகாஸ் மறுத்ததாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

    வாய் சண்டை தீவிரமடைந்த நிலையில், அங்கு இருவருக்குள்ளும் ரகளை ஏற்பட்டுள்ளது. இதில், கடையின் உரிமையாளர் சந்தீபை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தி உள்ளார்.

    இந்த மோதலில், சந்தீப்பின் முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, முகத்தில் காயங்களுடன் சந்தீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சந்தீப் மீது தாக்குதல் நடத்திய விகாஸ் சம்பவ இடத்தில் இருந்து தலைமறைவானார். இந்நிலையில், விகாஸை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். 

    • கன்னியப்பன் மகன் கோகுல்ராஜ் (வயது 29) என்ற காண்ட்ராக்டரிடம், கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார்.
    • ராமச்சந்திரன் காண்ட்ராக்டர் கோகுல்ரா ஜிடம் வேலை செய்ததற்கான சம்பள பணத்தை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் முத்துகாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாயகம். இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 27). பெயிண்டரான இவர், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கடமலை பகுதியைச் சேர்ந்த கன்னி யப்பன் மகன் கோகுல்ராஜ் (வயது 29) என்ற காண்ட்ராக்டரிடம், கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். இவர்கள் தற்போது சேலம் தாத காப்பட்டி மூணாம் கரடு பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு ராமச்சந்திரன் காண்ட்ராக்டர் கோகுல்ரா ஜிடம் வேலை செய்ததற்கான சம்பள பணத்தை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த, கோகுல்ராஜ் கத்தியால் ராமச்சந்திரன் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் படு காயம் அடைந்த ராமச்சந்தி ரனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, இன்று காலை கோகுல்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜயா (வயது 20) இவருக்கும் முருகன் (25) என்பவருக்கும் 3ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.3 மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஜயா தனது தாய் வீட்டிற்கு சென்றார்
    • அவரது கணவர் முருகன் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயாவை சரமாரியாக குத்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே மோ. வன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (வயது 20) இவருக்கும் தியாகதுருகம் அருகே பல்லக்கச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முருகன் (25) என்பவருக்கும் 3ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணம் ஆன 3 மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஜயா மோ. வன்னஞ்சூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்   இதனை யடுத்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு விஜயாவை பலமுறை முருகன் அழைத்துள்ளார். அதற்கு விஜயா முருகனுடன் சேர்ந்து வாழ மறுத்துள்ளார். மேலும் கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் விஜயாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் இதனை முருகன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. விஜயாவை மீண்டும் தன்னுடன் வாழ வருமாறு முருகன் அழைத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தால் நேற்று மாலை கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திலிருந்து மோ. வன்னஞ்சூர் கிராமத்திற்கு தனியார் மினி பஸ்சில் விஜயா சென்றார்.

    அப்போது மழை பெய்ததால் பஸ்சிலிருந்து இறங்கி விஜயா அம்பேத்கர் சிலை அருகில் உள்ள ஒரு கடை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகன் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயாவை சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விஜயா துடித்துடித்து உயிரிழந்தார். மேலும் விஜயாவை கத்தியால் குத்தி விட்டு தப்ப முயன்ற முருகனை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலனையும் முருகன் கத்தியால் குத்தினார். பின்னர் முருகனை போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கொலை செய்ததை முருகன் ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தியதோடு விசாரிக்கச் சென்ற சப் இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்திய முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் நாகதேவி (வயது 47). இவருடைய கணவர் ஜெயச்சந்திரன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
    • இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    சேலம்:

    சேலம் டவுன் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் நாகதேவி (வயது 47). இவருடைய கணவர் ஜெயச்சந்திரன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருடன் நாகதேவிக்கு பழக்கம் ஏற்பட்டது. பிறகு இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த நபர் வீட்டில் இருந்த குழவிக்கல்லை எடுத்து நாகதேவியை தாக்க முயன்றார். ஆனால் அவர் தப்பித்துவிட்டார். இருப்பினும் ஆத்திரத்தில் கத்தியால் நாகதேவியை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூத்துக்குடி தாளமுத்து நகர் பூப்பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் அழகுமுத்து ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
    • தாளமுத்து நகர் பகுதியில் உள்ள மதுபான கடை அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகர் பூப்பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் அழகுமுத்து (வயது 40). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர்அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான பெயிண்டர் மணிகண்டன் (38) தூத்துக்குடி மாநகராட்சி துப்புரவு பணி ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வரும் முருகன் (35) ஆகியோருடன் தாளமுத்து நகர் பகுதியில் உள்ள மதுபான கடை அருகே ஒன்றாய் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

    அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த லாரி டிரைவர் தாழையப்பனும் அவர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார்.

    கத்திக்குத்து

    அனைவரும் மது போதையில் இருந்த சமயத்தில் அழகுமுத்து தரவேண்டிய பணத்தை தாழையப்பன் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் தாழையப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அழகு முத்துவை குத்தியுள்ளார்.

    இதனை தடுத்த மணிகண்டன் மற்றும் முருகன் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காயம்பட்ட மூவரும் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பல்லடம் அருகே முன் விரோத தகராறில் பெயிண்டரை கத்தியால் குத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையம் பழனி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் பிரகாஷ் (37) பெயிண்டர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரேம் (24) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் பிரகாஷ் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். பச்சாப்பாளையம் மகாளியம்மன் கோவில் வீதியில் வந்த போது பிரேம் ரோட்டின் குறுக்கே நின்றுள்ளார்.

    அவரை தள்ளி நிற்கும் படி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பிரேம் தனது நண்பர் மனோஜூக்கு தெரிவித்துள்ளார். அவரும் அங்கு விரைந்து வந்துள்ளார்.

    அவர்கள் பிரகாசை கத்தியால் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    பிரகாஷ் பல்லடம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் பிரேம், மனோஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    திருக்கனூரில் மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்த தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே மண்ணாடிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 32). கூலித்தொழிலாளி. இவர் நேற்று திருக்கனூரில் உள்ள தனியார் மதுகடைக்கு மதுகுடிக்க சென்றார். பின்னர் மது குடித்து விட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் செல்ல தயாரானார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜா (33) என்பவர் செல்வராஜை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டார். ஆனால், செல்வராஜ் பணம் கொடுக்க மறுத்து விட்டார். தொடர்ந்து ராஜா பணம் கேட்டு ரகளை செய்யவே ஆத்திரம் அடைந்த செல்வராஜ் ராஜாவை தாக்கினார்.

    இதனால் ஆவேசம் அடைந்த ராஜா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செல்வராஜை குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில், காயம் அடைந்த செல்வராஜ் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.
    பிரிந்து சென்ற மனைவியை பார்க்கச் சென்ற வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள காஞ்சரம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 25). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் (45) என்பவரின் மகள் அகிலேஸ்வரி என்பவரும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்டு அகிலேஸ்வரி தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.

    சம்பவத்தன்று தனது மனைவியை பார்ப்பதற்காக கண்ணன், மாமனார் வீட்டுக்குச் சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் கண்ணனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்த புகாரின் பேரில் சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமனார் கண்ணன், இவரது மனைவி செல்வி (39), உறவினர்கள் பஞ்சு (50), சத்யா (30) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    சூளகிரி அருகே குடிபோதை தகராறில் நண்பரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    வேப்பனஅள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த அத்திமுகம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடசாமி. இவரது மகன் ரமேஷ் (23). நண்பர். இவர் சம்பவத்தன்று தனது நண்பர் நாகராஜ் உள்பட 5பேருடன் அதேபகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் மது குடித்தனர். அப்போது அவர்களுக்கு போதை தலைகேறியது.

    இதில் ரமேசும், நாகராஜும் தனியாக சென்று தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த நாகராஜ் மறைத்து வைத்திருந்த பட்டன் கத்தியை எடுத்து ரமேசின் வயிற்றில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்து கிடந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இந்த சம்பவம் குறித்து பேரிகை போலீசார் வழக்குபதிவு செய்து நாகராஜியை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.
    ஆண்டிப்பட்டி அருகே குடிபோதையில் போலீஸ் ஏட்டை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே குமணன் தொழுவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது54). அதேபகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் தகராறு செய்து கொண்டிருந்தார். அதை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டு ராஜசேகரை கத்தியால் குத்திவிட்டு லட்சுமணன் தப்பி ஓடிவிட்டார். 

    படுகாயமடைந்த ராஜசேகர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மயிலாடும் பாறை போலீசார் வழக்குபதிவு செய்து லட்சுமணனை தேடி வந்தனர். இதனிடையே மயிலாடும் பாறையை சேர்ந்த பால்பாண்டி என்பவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த லட்சுமணன் நான் போலீசையே கத்தியால் குத்தியவன், எனவே பணம் கொடு என கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். மேலும் அவரிடமிருந்து ரூ.650ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடமுயன்றார். பால்பாண்டி சத்தம்போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடினர். அவர்கள் லட்சுமணனை விரட்டி பிடித்து மயிலாடும்பாறை போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகூரில் குடும்ப தகராறில் பெண் போலீஸ் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.

    பாகூர்:

    விழுப்புரம் அருகே வெள்ளையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது35). இவர் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பாகூரை சேர்ந்த வெங்கடேச பெருமாள் (41) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இதற்கிடையே வெங்கடேச பெருமாளுக்கும், சாந்திக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர். சாந்தி சோரியாங்குப்பத்தில் உள்ள தனது அக்கா சாத்தகி வீட்டில் தங்கி போலீஸ் வேலைக்கு சென்று வந்தார். இதற்கிடையே வெங்கடேசப்பெருமாள் மனைவியிடம் விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் வெங்கடேசப்பெருமாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். இதனை அறிந்த சாந்தி நேற்று தனது அக்காள் சாத்தகி மற்றும் அக்காள் கணவர் சிவானந்தம் ஆகியோருடன் பாகூரில் உள்ள வெங்கடேசபெருமாள் வீட்டுக்கு வந்தார். அங்கு வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் எப்படி 2-வது திருமணம் செய்யலாம் என்று அவர்கள் வெங்கடேச பெருமாளிடம் தட்டிக்கேட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும் மாறிமாறிக் தாக்கி கொண்டனர். வெங்கடேச பெருமாளுக்கு ஆதரவாக அவரது தங்கை புவனேஸ்வரி மற்றும் உறவினர்கள் குமாரவேலு, ராம்கி, இந்திரா ஆகியோர் மோதலில் ஈடுபட்டனர்.

    இந்த மோதலில் வெங்கடேசபெருமாள் தரப்பினர் ஆத்திரம் அடைந்து சாந்தி, அவரது அக்காள் சாத்தகி மற்றும் அவரது கணவர் சிவானந்தம் ஆகிய 3 பேரையும் கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அதுபோல சாந்தி தரப்பினர் தாக்கியதில் வெங்கடேசப்பெருமாள், குமாரவேலு, புவனேஸ்வரி ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.

    இதுகுறித்து இருதரப்பினரும் பாகூர் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் வீரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி ஆகியோர் விசாரணை நடத்தி இருதரப்பினர் மீதும் வழக்குபதிவு செய்தனர். மேலும் வெங்கடேசபெருமாள் தரப்பை சேர்ந்த குமாரவேலு, ராம்கி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    இதற்கிடையே மோதலில் பெண் போலீஸ் சாந்திக்கு கத்திக்குத்தில் காயம் அடைந்ததால் கடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் இந்த சம்பவம் காரணமான இருதரப்பையும் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பாகூர் போலீஸ் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×