என் மலர்
நீங்கள் தேடியது "stab"
திருவள்ளூர்:
ஆவடியை அடுத்த அயப்பாக்கம் தேவி நகரை சேர்ந்தவர் வேணு. கூலி தொழிலாளி. இவரது மகன் பாபு(14). அம்பத்தூர் அத்திப்பட்டில் உள்ள அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் வீட்டின் மொட்டை மாடியில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பல் பாபுவை கத்தியால் சரமாரியாக குத்தினர். வயிறு, முதுகு, முகம் என 10-க்கும் மேற்பட்ட இடத்தில் அவருக்கு கத்தி குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்ததும் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பாபுவை மீட்டு மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளியில் சக மாணவர்களுடன் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி நடந்ததா? என்பது குறித்து திருமுல்லைவாயில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ராயபுரம்:
விழுப்புரத்தை சேர்ந்தவர் அஸ்லாம் (25). இவர் சென்னையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். பின்னர் அவர் தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள நண்பரை பார்க்க வந்தார்.
இருவரும் ஒரு கடையின் அருகே நின்று பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது அஸ்லாம் புகை பிடித்தார். அந்த புகை அருகே நின்ற அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார் முகத்தில் பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த சசிகுமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஸ்லாமை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
முதுகு, இடுப்பில் பலத்த காயம் அடைந்த அஸ்லாமுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிது.
இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.
பழனி:
பழனி அடிவாரம் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் மணிகண்டன் (வயது28). ஆட்டோ டிரைவர். இவர் அண்ணாநகரை சேர்ந்த ராமன் என்பவர் மகளை காதலித்துள்ளார்.
இது தொடர்பாக அந்த பெண்ணின் அண்ணனுக்கும் மணிகண்டனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று இது தொடர்பாக மணிகண்டனுக்கும், பெண்ணின் அண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பெண்ணின் சகோதரர் மணிகண்டனை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக பழனி அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
பழனி அருகே வத்தகவுண்டன்வலசை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 75). இவருக்கு 4 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். இவர் தனக்கு சொந்தமான 75 சென்ட் நிலத்தை விற்பது குறித்து மகன்களிடம் கடந்த மாதம் 29 ம் தேதி பேசினார். அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த செல்லமுத்து தன்னிடம் இருந்த கத்தியால் தனக்குதானே குத்தி கொண்டார்.
வயிற்றில் குத்தி கொண்டதில் கீழே விழுந்த அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இச்சம்பவம் தொடர்பாக ஆயக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்
பேரையூர்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயவீரபாண்டி (வயது37), அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி கயல்விழி (28). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கயல்விழியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி ஜெயவீரபாண்டி தகராறு செய்து வந்தார். நேற்றும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெய வீரபாண்டி கத்தியால் கயல் விழியை குத்தினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து கயல்விழி கொடுத்த புகாரின்பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயவீரபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள வேலாயுதம் பாளையத்தைச் சேர்ந்தவர் முத்து (வயது 31). ஆட்டோ டிரைவராக உள்ளார். நேற்று நண்பர்களுடன் ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டு இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (29) என்பவர் அங்கு வந்து தகராறு செய்தார்.
மேலும் ஆட்டோவை அடித்து நொறுக்கி முத்துவை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த முத்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேபோல் லோகநாதனை சொத்து தகராறு காரணமாக செந்தில்குமார், முத்து, ஜெயராம் ஆகியோர் தாக்கி கத்தியால் குத்தி மிரட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்து லோகநாதனும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முத்து மற்றும் லோகநாதன் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 52) தனியார் கம்பெனியில் வேலை செய்யும் இவரது மகள் ரஞ்சிதா (19) என்பவரை நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கூட்ரோட்டில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது ஜெயின் கோவில் அருகே சென்ற போது பின்னால் சைக்கிளில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த உலகநாதன் (55) (கூலித் தொழிலாளி) என்பவர் ரஞ்சிதா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார். பின்னால் துரத்தி சென்ற ஜீவா ஏன் எனது மகள் மீது மோதிவிட்டு நிற்காமல் செல்கின்றாய் என கேட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜீவாவை மறைத்து வைத்திருந்த கத்தியால் உலகநாதன் வெட்டியுள்ளார்.
மேலும் உலகநாதனுக்கு ஆதரவாக அவரது மகன் அஜித்குமார் (19) என்பவர் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த ஜீவா வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக ஜீவா வந்தவாசி வடக்கு போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து உலகநாதனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அஜித்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை கே.புதூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகிபாலன் (வயது 41). திருமணமான இவர் 2004-ம் ஆண்டு மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.
அதன்பிறகு கடந்த 2011-ம் ஆண்டு சரளாதேவி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
சரளாதேவி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த மகிபாலன் செல்போனை எடுத்து பார்த்துள்ளார்.
இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சரளாதேவி கத்தியால் மகிபாலனை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து கே.புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த முண்டியம்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இவர் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
வழக்கம்போல் செந்தில்குமார் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பழையகருவாச்சி பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (28) மற்றும் அவரது தம்பி அன்பழகன் (27) ஆகிய 2 பேரும் வந்தனர்.
செந்தில்குமாரிடம் குளிர்பானம் வாங்கினர். பின்னர் கடையின் முன்பு அமர்ந்து தாங்கள் கொண்டு வந்திருந்த மதுவை குடிக்க முயன்றனர்.
இதைப்பார்த்த செந்தில்குமார், இங்கு அமர்ந்து மது குடிக்காதீர்கள் என்று அவர்களிடம் கூறினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அன்பழகன் தனது கையில் வைத்திருந்த கத்தியால், செந்தில்குமாரின் கழுத்தில் குத்தினார். இதில் காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். உடனே சிலம்பரசனும், அன்பழகனும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
அக்கம் பக்கத்தினர் செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து விக்கிரவாண்டி போலீசில் செந்தில்குமார் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசன், அன்பழகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.