என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stabbed"

    • கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கமலக்கண்ணன் என்பவருடன் நட்பு ஏற்பட்டது
    • கத்தியை எடுத்து அந்ேதாணி நிக்சன் முகத்தில் குத்தினார்.

    கோவை,

    கோவை சிட்கோ அருகே உள்ள காந்திநகரை சேர்ந்தவர் அந்தோணி நிக்சன் (வயது 26). டிரைவர். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கமலக்கண்ணன் (26) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.சம்பவத்தன்று அந்ேதாணி நிக்சன் தனது நண்பர் குணசீலன் என்பவருடன் குறிச்சி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த கமலக்கண்ணன் மது குடிக்க ரூ.200 பணம் கொடுக்கும்படி கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதில் ஆத்திரம் அடைந்த கமலக்கண்ணன் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அந்ேதாணி நிக்சன் முகத்தில் குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    கத்திக்குத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   

    • மாரியப்பன் கோவை ராமநாதபுரம் ஒலம்பசில் தங்கி கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
    • போலீசார் தொழிலாளி மாரியப்பனை கத்தியால் குத்திய நபரை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவில்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (42). இவர் கோவை ராமநாதபுரம் ஒலம்பசில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று இவர் திருச்சி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் மாரியப்பனிடம் பணம் கேட்டு மிரட்டினார்.

    அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாரியப்பனை குத்திவிட்டு தப்பினார்.

    இதில் காயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாரியப்பன் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் தொழிலாளி மாரியப்பனை கத்தியால் குத்திய நபரை தேடி வருகின்றனர்.

    • திருமண தரகர்கள் 2 பேருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது.
    • தேவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள முதுகொலா கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா்.

    பிக்கோல் கிராமத்தைச் சோ்ந்தவா் தேவன். இவா்கள் இருவரும் திருமண தரகா்களாக உள்ளனா். இருவருக்குமிடையே ஏற்கெனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கோவைக்கு செல்ல பாலகொலா சந்திப்பு பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக சிவகுமாா் காத்திருந்தாா். அப்போது அங்கு வந்த தேவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவகுமாரை வயிற்றில் குத்தினாா்.

    இதை பாா்த்த கிராம மக்கள் தேவனை பிடித்து கட்டி வைத்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா். உடனடியாக அங்கு வந்த ஊட்டி புறநகர் போலீசார் தேவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். கத்தியால் குத்தப்பட்ட சிவகுமாா் ஆபத்தான நிலையில ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • ஒரு சிறுவன் பைக்கில் கடைசியாக அமர்ந்திருந்த ஆயுஷை சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளான்.
    • போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து 6 சிறுவர்களை கைது செய்துள்ளனர்.

    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், பிரதான சாலையில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கல்லூரி மாணவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டிசம்பர் 31ம் தேதி மாலையில் கல்லூரி மாணவர் ஆயுஷ் (வயது 22) தனது இரண்டு நண்பர்களுடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பிரதான சாலையில் நெரிசல் அதிகமாக இருந்தது. ஆயுஷ் ஹாரன் அடித்து, முன்னால் நின்றுகொண்டிருந்த சிறுவர்களிடம் வழிவிடும்படி கூறி உள்ளார். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    வாக்குவாதம் முற்றிய நிலையில், சிறுவர்கள் ஆயுஷின் பைக்கை பின்தொடர்ந்து துரத்தினர். ஒரு சிறுவன் பைக்கில் கடைசியாக அமர்ந்திருந்த ஆயுஷை சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளான். இதில் பலத்த காயமடைந்த ஆயுஷ் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து 6 சிறுவர்களை கைது செய்துள்ளனர். அவர்களில் இரண்டு பேர் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். இந்த கத்திக்குத்து தொடர்பான சிசிடிவி காட்சி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • கரூர் அருகே வாலிபரை கத்தியால் தாக்கினர்
    • இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், வெள்ளியணை, புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). கடவூர் பாறைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவாஜி (35) ஆடு வியாபாரி, இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில், வெள்ளியணை - விஜயபுரம் சாலையில், சக்திவேல் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இதனை பார்த்த சிவாஜி, அவரை வழிமறித்து, தகாத வார்த்தையால் திட்டி, கத்தியில் குத்தினார். அதில், சக்திவேலுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து, சக்திவேல் அளித்த புகாரின் பேரில், சிவாஜியை வெள்ளியணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சுந்தர மூர்த்திக்கு பேன்சி கடையில் வேலை பார்த்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
    • 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை தெலுங்குபாளையம் வேடப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 24). இவர் சலீவன் வீதியில் உள்ள நகைப்பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.

    அப்போது சுந்தர மூர்த்திக்கு ராஜவீதியில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்த்த செல்வபுரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது.கடந்த டிசம்பர் 25-ந் தேதி வேலைக்கு சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் தனது தாயின் செல்போனுக்கு நான் சுந்தரமூர்த்தி என்பவரை காதலித்ததாகவும், அவருடன் வந்துவிட்டதாகவும் தன்னை யாரும் தேட வேண்டாம் என மெசேஜ் அனுப்பினார்.

    இளம்பெண்ணை சுந்தரமூர்த்தி அழைத்து சென்றார். பின்னர் 10 நாட்களுக்கு பின்னர் 2 பேரும் கோவை க்கு திரும்பினர். இருவரும் தங்களது வீட்டுகளுக்கு தனித்தனியாக சென்றனர். வீட்டுக்கு சென்ற இளம்பெண் தனது பெற்றோரிடம் சுந்தரமூர்த்தியை அவர் திருமணம் செய்ய வில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து இளம்பெண் மீண்டும் பேன்சி கடைக்கு வேலைக்கு சென்றார்.

    ஆனால், சுந்தரமூர்த்தி இளம்பெண்ணை பின்தொடர்ந்து தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் அவர் செல்ல மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று சுந்தரமூர்த்தி தனது நண்பர் ஹரிஹரன் (23) என்பவருடன் காதலி வீட்டுக்கு சென்று இளம்பெண்ணின் தாயாரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினார். அப்போது அங்கு வந்த இளம்பெண்ணின் உறவினர் செல்வின் (19) அவரது நண்பர் மெக்கானிக் பிரகாஷ் (19) ஆகிய இருவரும் சேர்ந்து சுந்தரமூர்த்தியை தாக்கி கத்தியால் குத்தினர். ஹரிஹரனையும் தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

    கத்தி குத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து இருதரப்பினரும் செல்வபுரம் போலீசில் அளித்தனர்.

    புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோதலில் ஈடுபட்டு கத்தியால் குத்திய செல்வின், பிரகாஷ், ஹரிஹரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர், பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் சுந்தரமூர்த்தி மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதை தட்டி கேட்டனர்
    • ஒருவர் கைது செய்யப்ட்டுள்ளார். 2 பேரை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 19). இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார்.

    இவர் தனது நண்பர் ஒருவரது மோட்டார் சைக்கிளை வாங்கி பயன்படுத்தி வருகிறார். சம்பவத்தன்று கார்த்திகேயனின் மற்றொரு நண்பர் ஆண்டோ என்பவர் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை வாங்கி வெளியே சென்றார்.

    பின்னர் மோட்டார் சைக்கிளை கொண்டு வந்து கார்த்திகேயனிடம் கொடுத்தார். அப்போது மோட்டார் சைக்கிள் டேங்கில் சேதம் ஏற்பட்டு இருந்தது. இதனை பார்த்த கார்த்திகேயன் இதுகுறித்து ஆண்டோவிடம் கேட்டார்.

    அதற்கு அவர் தான் வெளியே சென்று இருந்த போது ரியாஸ் என்பவர் கல்லை எறிந்து மோட்டார் சைக்கிளில் சேதம் ஏற்பட்டதாக கூறினார். உடனே கார்த்திகேயன், ரியாசுக்கு போன் செய்து கண்டித்தார்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரியாஸ் அவரது நண்பர்கள் அர்ச்சகன் மற்றும் முனி ஆகியோரை அழைத்து கொண்டு கார்த்திகேயன் வீட்டுக்கு வந்தார். அங்கு 3 பேரும் சேர்ந்து கார்த்திகேயனிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ரியாஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்திகேயனின் தலையில் குத்தினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திகேயன் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    பலத்த காயம் அடைந்த கார்த்திகேயனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து கார்த்திகேயன் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அர்ச்சகன், முனியை தேடி வருகின்றனர்.

    செல்போனை திருடியதாக கூறி கத்தியால் குத்திய 2 பேர் கைது

    திருச்சி, 

    திருச்சி மாவட்டம் தொட் டியம் அருகே உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த–வர் சுரேஷ் (வயது 27). இவர் தனது நண்பர் சத்ய–ராஜ் என்பவருடன் கோட்டை–மேடு சன்னாசியப்பன் கோவில் அருகாமையில் திறந்த வெளியில் உட் கார்ந்து மது குடித்துக் கொண்டிருந்ததாக கூறப்ப–டுகிறது.இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள கோட்டைமேடு நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த ரகுபதி (24), சுகுமார் (23), சரவணன் (40) ஆகிய 3 பேரும் தனியாக அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.இதற்கிடையே ரகுபதி–யின் செல்போன் தொலைந் துள்ளது. உடனே எதிரே மது குடித்துக் கொண்டிருந்த சுரேசிடம் சென்று என்னு–டைய செல்போனை நீ தான் திருடினாய், அந்த செல்போனை கொடுத்து விடு என ரகுபதி கூறி–னார்.ஆனால் சுரேஷ் நான் திருடவில்லை என்று கூறி மறுத்துள்ளார். அதைத் தொடர்ந்து இரு தரப்பின–ருக்கும் இடையே மோதல் ஏற் பட்டது. ஆத்திரமடைந்த ரகு–பதி தரப்பினர் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த சூரி கத்தியால் அவரை குத்தி விட்டு தப்பி ஓடினர்.இதில் சுரேசுக்கு கழுத்து, கன்னம், உதடு ஆகி ய இடங்களில் பலத்த கத்திக்குத்து விழுந்தது. இதைப்பார்த்த அங்கு வந்த நண்பர் சத்யராஜ் அவரை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக தொட்டியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரகுபதி, சுகுமார் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். தலைமறைவாகி விட்ட சரவணனை தேடி வருகின்றனர்.

    • முஜூபூர் ரகுமான் காய்கறி வியாபாரியாக இருந்து வருகிறார்
    • முஜூபூர் ரகுமான் குடிபோதயைில், பாபுவின் தங்கையிடம் பேச அவரது வீட்டு சென்றார்.

    கோவை,

    கோவை தெற்கு உக்கடம் புல்லுகாடு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் முஜூபூர் ரகுமான் (வயது 42). காய்கறி வியாபாரி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பாபு என்கிற முகமது (36). ஆட்டோ டிரைவர்.

    இந்த நிலையில் முஜூபூர் ரகுமான் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார். 2-வதாக அவர் பாபுவின் சகோதரியை திருமணம் செய்ய முடிவு செய்து அவரிடம் பேசி வந்தார்.

    சம்பவத்தன்று முஜூபூர் ரகுமான் குடிபோதயைில், பாபுவின் தங்கையிடம் பேச அவரது வீட்டு சென்றார். அப்போது வீட்டில் இருந்த பாபு அவரிடம் அங்கிருந்து செல்லுமாறு கூறினார். ஆனால் அவர் அங்கிருந்து செல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாபு அவரை சரமாரியாக தாக்கினார். இதனை பார்த்த பாபுவின் நண்பர் முகமது ரபிக் என்பவர் அங்கு வந்தார்.

    அவரும் முஜூபூர் ரகுமானை தாக்கி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தினார். பலத்த காயம் அடைந்த அவர் வலியால் அலறி துடித்தார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து முகமது ரபிக் அங்கிருந்து தப்பி சென்றார்.

    பின்னர் அங்கிருந்தவர்கள் முஜூபூர் ரகுமானை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து முஜூபூர் ரகுமான் பெரிய கடை வீதி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர்.

    அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தப்பி ஓடிய முகமது ரபிக் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது ரபிக் மீது பெரிய கடை வீதி, போத்தனூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மாரிமுத்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒண்டிப்புதூரில் வசித்து வருகிறார்.
    • கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்ச்சை பெற்றுவரும் மாரிமுத்துவிடம் விசாரித்தனர்.

    கோவை,

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது38).கூலித்தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒண்டிப்புதூரில் வசித்து வருகிறார்.

    இன்று காலை மாரிமுத்து வேலைக்கு செல்வதற்காக அங்குள்ள தியேட்டார் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாரிமுத்துவின் தோள்பட்டை, முதுகு மற்றும் முகத்தில் குத்தினார்.

    பின்னர் 2 பேரும் அங்கு இருந்து தப்பி ெசன்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியை மாரிமுத்துவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த சிங்கா நல்லூர் போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்ச்சை பெற்றுவரும் மாரிமுத்துவிடம் விசாரித்தனர்.

    விசாரணையில் மாரிமுத்துவின் மனை–விக்கும், வாடிபட்டியை சேர்ந்த மணிகண்டன் என்ப–வருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

    இதையறிந்த அவர் மனைவியை கண்டித்தார். இதையடுத்து மாரிமுத்துவின் மனைவி கள்ளக்காதலை கைவிட்டு திருந்தி தனது கணவருடன் வசித்து வந்தார்.

    ஆனால் அவரை மணிகண்டன் தொடர்பு கொண்டு உனது கணவனை பிரிந்து வருமாறு தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் அவர் வர மறுத்து தனது கணவருடன் திண்டுக்கல்லில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

    அப்போது தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மாரிமுத்துவின் மனைவியை மணிகண்டன் வெட்டினார். இந்த வழக்கு திண்டுக்கல் போலீஸ் நிலையத்தில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கை வாபஸ் பெறும்படி மாரிமுத்துவிடம் மணிகண்டன் கூறி வந்தார். ஆனால் அவர் மறுத்ததால் தனது நண்பர் மகேந்திரன் என்பவருடன் சேர்ந்து மாரிமுத்துவை கத்தியால் குத்தியது தெரியவந்தது.

    இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மணிகண்டன் மற்றும் மகேந்திரனை தேடி வருகின்றனர்.

    • கவுசிக் நேற்று இரவு கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு வந்த 2 பேர் திடீரென கவுசிக் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் கவுசிக் (வயது20). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று இரவு இவர் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் திடீரென கவுசிக் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சுதாரித்து கொண்டு செயினை இறுக்கமாக பிடித்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதில் பலத்த காயமடைந்த மாணவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஹரிகரன் தந்தையின் மெஸ்சில் வேலை செய்து வருகிறார்.
    • ஹரிகரனை தாக்கி தலையில் கத்தியால் குத்தினார்.

    கோவை,

    கோவை பீளமேடு அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகன் ஹரிகரன் (வயது 22). இவர் தனது தந்தையின் மெஸ்சில் வேலை செய்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஆவாரம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் மீது காதல் ஏற்பட்டது. அந்த இளம்பெண் ஏற்கனவே விக்கி என்ற விக்னேஷ் என்பவரை காதலித்து வந்தார். ஹரிகரன் தனது காதலி பின்னால் சுற்றுவது விக்கிக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக 2 பேருடன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை அறிந்த இளம்பெண் தனது காதலன் விக்கியுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். தனது காதலி தன்னுடன் பேசாததற்கு ஹரிகரன் தான் காரணம் என விக்கி நினைத்தார். இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தார்.

    சம்பவத்தன்று ஹரிகரன் வீட்டில் இருந்த போது விக்கி தனது நண்பர்கள் 2 பேரும் அத்துமீறி உள்ளே நுழைந்தார். பின்னர் தகாத வார்த்தைகள் பேசி ஹரிகரனை தாக்கி தலையில் கத்தியால் குத்தினார். இதனை பார்த்து ஹரிகரனின் தந்தை தடுக்க சென்றார். அவரையும் இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து 3 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தந்தை, மகன் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் தகராறில் தந்தை மகன் ஆகியோரை கத்தியால் குத்திய விக்கி உள்பட 3 பேரை தேடி வருகிறார்கள். 

    ×