search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stole"

    • நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டை பகுதியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளது.
    • 12 வயது சிறுவன் ஒருவர் ஷட்டர் வழியே டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளே நுழைந்து கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்று உள்ளான்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டை பகுதியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளது.

    சம்பவத்தன்று காலை ஷட்டரை பாதியளவு மூடிவிட்டு அங்குள்ள பணியாளர்கள் பொருட்கள் பாக்கெட் போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சுமார் 12 வயது சிறுவன் ஒருவர் ஷட்டர் வழியே டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளே நுழைந்து கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்று உள்ளான்.

    இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவானது.

    கல்லாவில் இருந்த பணம் காணாமல் போனதால் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை பணியாளர்கள் பார்த்தனர். அதில் சிறுவன் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

    அந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதால் சிறுவனையும், அவரது பெற்றோரையும் நேரில் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • சேலம் 4 ரோடு ஓமலூர் சாலையில் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே பிரபல நகை கடை செயல்பட்டு வருகிறது.
    • இந்த கடையில் வைக்கப்பட்டிருந்த 10 கிராம் எடையுள்ள தங்க டாலர் மாயமானது.

    சேலம்:

    சேலம் 4 ரோடு ஓமலூர் சாலையில் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே பிரபல நகை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் வைக்கப்பட்டிருந்த 10 கிராம் எடையுள்ள தங்க டாலர் மாயமானது.

    இதுகுறித்து அந்த பிரிவின் மேலாளர் சரவணன் (39) என்பவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    இதில் டாலர் வைக்கப்பட்டு இருந்த பிரிவில் வேலை பார்க்கும் சேலம் சூரமங்கலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (38) என்பவர் டாலரை திருடியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கார்த்திக்கை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தங்க டாலரை 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு நகை அடமான கடையில் அடமானம் வைத்தது தெரிய வந்தது.

    கைது செய்யப்பட்ட கார்த்திகை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • காடையாம்பட்டி அருகே பொம்மியாம்பட்டி மேல் கோம்பை பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஆடு திருடிய வாலிபர்கள்.
    • அப்போது அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள் மேட்டார்சைக்கிளில் ஒரு ஆட்டை திருடி எடுத்து செல்வதை கண்டு சத்தம் போட்டார்.

    காடையாம்பட்டி:

    காடையாம்பட்டி அருகே பொம்மியாம்பட்டி மேல் கோம்பை பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 50),இவர், 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று தோட்டம் தார் சாலை அருகே ஆட்டை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள் மேட்டார்சைக்கிளில் ஒரு ஆட்டை திருடி எடுத்து செல்வதை கண்டு சத்தம் போட்டார். அங்கிருந்த பொதுமக்கள் மேட்டார்சைக்கிளை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொரு வாலிபரை பிடித்த பொதுமக்கள் தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்து எஸ்.ஐ. கருப்பண்ணனிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் ஆடு திருட்டில் ஈடுப்பட்டவர் காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் சேர்ந்த மெக்கானிக் கோவிந்தராஜ் (25), என்பதும் இவர் ஏற்கனவே கஞ்சநாயக்கன்பட்டி, கருவள்ளி, பூசாரிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் ஆடுகளைத் திருடி விற்பனை செய்து மது குடித்து வந்ததும் தெரிய வந்தது. இவருடன் வந்தவர் பொம்மிடி பகுதியை சேர்ந்த வேடியப்பன் மகன் பாபு என்பதும் தெரிய வந்தது. கோவிந்தராஜை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • காரில் வந்து ஆடு திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    • கிருஷ்ணம்மாள் தனது வீட்டில் வளர்த்து வரும் 5 ஆட்டுக்குட்டிகளை சாலை ஓரங்களில் மேயவிட்டுள்ளார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டியை ேசர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி கிருஷ்ணம்மாள் (வயது 65). இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் 5 ஆட்டுக்குட்டிகளை சாலை ஓரங்களில் மேயவிட்டுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஒரு காரில் வந்து ஒரு ஆட்டுக்குட்டியை திருடி சென்றுள்ளனர்.

    இதனை கண்ட அதே பகுதியை சேர்ந்த குருவம்மாள் என்பவர் சத்தம் போட்டதால் அங்கு நின்றிருந்த கிருஷ்ணம்மாள் தம்பி சீனிவாசன் மற்றும் சிலர் ஆடு திருடி சென்ற காரை பின் தொடர்ந்து சென்று பிடிக்க முயன்றுள்ளனர்.ஆனால் கார் வேமாக சென்று விட்டது.

    இதுபற்றி கிருஷ்ணம்மாள் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடு திருடிய கும்பலை தேடி வருகின்றனர்.

    • ஏர்வாடியில் வீடு புகுந்து நகை திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • ஸ்டேசனரி கடை வியாபாரம் செய்து வந்தவர் வீட்டில் திருட்டு நடந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்தவர் சுல்தான் அலாவுதீன், இவருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் சென்னை சென்று தனது மகள் வீட்டில் தங்கி மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார்.

    இவரது மகன் நசீர் அகமது தனது பெற்றோர் வீட்டின் அருகில் ஸ்டேசனரி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். நாள்தோறும் கடையை அடைத்து விட்டு திரும்பும் போது தந்தையின் வீட்டை பார்த்து செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்த போது தந்தை வீட்டை பார்த்தபோது வெளிக்கதவு மற்றும் பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நசீர் அகமது வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அவரது தாயாரின் 7 ½ பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்தனர்.

    ஏர்வாடி போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் வீட்டின் முன்பு நின்ற மோட்டார் சைக்கிளை குடிபோதையில் வாலிபர் திருடி சென்றார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுலைமானை கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

      ஈரோடு:

    ஈரோடு பி.பி.அக்ரஹாரம் முத்து தெருவை சேர்ந்தவர் பூசார்அலி (47). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார். பின்னர் காலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்திருந்தார். இந்நிலையில் பூசார்அலி தனது நண்பர் அணீஸ் என்பவருடன் மோட்டார் சைக்கிள் தேடி பவானி ரோடு வழியாக, பி.பி.அக்ரகாரம் அடுத்த பேரஜ் பிரிவில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக பூசார் அலியின் மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் ஓட்டிக்கொண்டு வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த வாலிபரை மோட்டார் சைக்கி ளுடன் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொ ண்டதில் அவர்பவானி சீனிவாசபுரத்தை சேர்ந்த சுலைமான் (20) என்பதும், குடிபோதையில் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுலைமானை கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கோபிசெட்டிபாளையம் பகுதியில் 2 வீடுகளில் புகுந்து மோட்டார் சைக்கிள், செல்போன் திருடிய வாலிபரை 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்த பொதுமக்கள்.
    • இதையடுத்து பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாரிபர் மீது 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் உப்பு கிடங்கு வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவர் மனைவி மற்றும் மகன் சரவணன் (35) மற்றும் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த ஒரு வாலிபர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோடடார் சைக்கிளை திருடிக்கொண்டு சென்றார். இதையடுத்து அந்த வாலிபர் பஸ் நிலைய பகுதியில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு, மீண்டும் நடந்து சென்றார். தொடர்ந்து அவர் அங்கு இருந்த மொபட்டை திருடிக்கொண்டு வாய்க்கால் ரோட்டிற்கு சென்றார்.

    மேலும் அந்த வாலிபர் வாய்க்கால் ரோட்டை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் இப்ராகிம் (40) என்பவரது வீட்டிற்குள் புகுந்து அங்கு இருந்த 3 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றார்.

    சத்தம் கேட்டு இப்ராகிம் எழுந்து பார்த்தார். அப்போது அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பி ஓடினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை விரட்டினார்.

    தொடர்ந்து அந்த வாலிபரை பொதுமக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்றனர். அந்த வாலிபர் கரட்டூர் அருகே உள்ள எஸ்.பி.நகரில் கரும்பு காட்டிற்குள் புகுந்து கொண்டார்.

    அதைத்தொடர்ந்து பொதுமக்கள் விடிய, விடிய கரும்பு காட்டை சுற்றி வளைத்து தேடினர். இதையடுத்து இன்று காலை அந்த வாலிபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து அவரை கோபி செட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருச்சி மாவட்டம் சத்திரம் சின்னகவுண்டன்பட்டியை சேர்ந்த ராஜாமுகமது (27) என தெரிய வந்தது. போலீசாரிடம் சிக்கிய ராஜா முகமது மீது செல்போன், நகை, மோட்டார் சைக்கிள் திருட்டு என 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொள்ளாச்சியில் மூதாட்டியின் பணப்பையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியை அருகே உள்ள சின்னாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மனைவி பிரேமலதா (வயது 60).

    இவர் பொள்ளாச்சி காந்தி சிலை சிக்னல் சந்திப்பில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.19 ஆயிரம் பணத்தை செலுத்த வந்தார்.திடீரென செல்போனில் அழைப்பு வந்ததால், பணம் பையை கீழே வைத்து விட்டு பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த வாலிபர் ஒருவர் பணப்பையை எடுத்துக்கொண்டு ஓடினார். இதனை பார்த்த பிரேமலதா திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். உடனே பொதுமக்கள் விரட்டி சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் அருண்குமார் (21), என்பதும், பி.எஸ்சி. பட்டதாரி என்பதும் தெரியவந்தது. இவர் படித்து முடித்து வேலை கிடைக்காததால், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    பிரேசிலில் நோபல் பரிசுக்கு நிகராக கணிதத்துறைக்கு வழங்கப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில், விருது திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #FieldsMedal #NobelPrize #CaucherBirkar
    பிரேசிலியா:

    உலகின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான நோபல் பல்வேறு முக்கிய துறைகளில் சிறப்பாக செயல்படும் மேதைகளுக்கு வழங்கப்படுவது வழக்கம். கணிதத்துறைக்கு நோபல் பரிசுக்கு இணையாக ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்படும். ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச கணித கூட்டமைப்பின் சார்பில் சிறந்த கணித மேதை தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு இந்த பதக்கம் வழங்கப்படும்.

    இந்த ஆண்டு கணிதத்துறைக்கான ஃபீல்ட்ஸ் பதக்கம் காவ்சர் பிர்கார் என்பவருக்கு வழங்கப்பட்டது. இவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.



    இவருக்கு அளிக்கப்பட்ட பதக்கத்தை தனது பெட்டியில் வைத்திருக்கிறார் காவ்சர் பிர்கார். சிறிது நேரத்துக்கு பிறகு பெட்டி திருடு போனதை அறிந்த அவர், உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் புகார் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக உடனடியான சோதனை செய்து பார்த்தபோது, அரங்கத்தில் காலியாக இருந்த பெட்டியை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் திருடனை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த ஃபீல்ட்ஸ் பதக்கத்தின் விலை 4 ஆயிரம் டாலர்கள் எனவும், அரங்கத்துக்குள்ளேயே உயர்ந்த பரிசு திருடு போனது இதுவே முதல்முறை என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.  #FieldsMedal #NobelPrize #CaucherBirkar
    ×