என் மலர்
நீங்கள் தேடியது "student"
- கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- கலெக்டரின் பதிலை சமூக வலைதங்களில் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மாலை நேரத்தில் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் பள்ளி சென்று திரும்பிய மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு திரும்பினர். இந்தநிலையில், இரவு 10.10 மணிக்கு சிவகாசியை சேர்ந்த ஒரு மாணவன், விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டியின் டுவிட்டரில் "சார், சிவகாசியில் மாலை முதல் மழை வந்த வண்ணம் இருக்கிறது. நாளை (அதாவது நேற்று) பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை கிடைக்குமா?" என கேள்வி எழுப்பி இருந்தான்.
இதற்கு கலெக்டர் மேகநாதரெட்டி இரவு 10.45 மணிக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில் விடுமுறை கிடையாது என்பதை சூசகமாக தெரிவித்து, "மாலையில் மழையை ரசித்த நீ, நாளை வழக்கம் போல் பள்ளிக்கு செல்" என்று ருசிகரமாக பதில் அளித்து இருந்தார். இந்த பதிலை சமூக வலைதங்களில் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.
- நிதேஸ் சந்துரு என்ற மாணவன் பிளஸ்-2 தேர்வில் 582 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தான்
- தற்பொழுது நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது
நெல்லை:
நெல்லை டவுண் லிட்டில் பிளவர் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2022-21 -ம் கல்வியாண்டில் பயின்ற நிதேஸ் சந்துரு என்ற மாணவன் பிளஸ்-2 தேர்வில் 582 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தான். அந்த மாணவனுக்கு தற்பொழுது நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த மாணவனை பள்ளி தாளாளர் மரிய சூசை பாராட்டினார்.
- அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்தார்.
- தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் வேறு வழியின்றி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் சபரி (வயது 25). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்தார்.
மேலும் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு அடிக்கடி டார்ச்சர் கொடுத்துள்ளார். தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் வேறு வழியின்றி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை மீட்டு உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின்பேரில் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் வாலிபர் சபரி மீது போக்சோ சட்டம், கொலை மிரட்டல், பெண்கள் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வந்தனர். உறவினர் வீட்டில் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்த போலீசார் நேற்று அங்கு சென்று சபரியை கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.
- தஞ்சாவூர் அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டி நடைபெற்றது.
- பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி ஆர்த்தி 3000 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்றார்.
பேராவூரணி:
தஞ்சாவூர் அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டி நடைபெற்றது.
பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி ஆர்த்தி 3000 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்றார்.
இதேப்போல் 10-ம் வகுப்பு மாணவி எஸ்.தீபிகா நீளம் தாண்டுதலில் மூன்றாம் இடமும், 9- வகுப்பு மாணவி நீவிகா தடை தாண்டும் ஓட்டம் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்றனர்.
இதில் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்ற ஆர்த்தி வரும் நவம்பர் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை திருவண்ணாமலையில் நடைபெற உள்ள மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டியில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, உதவி தலைமை ஆசிரியர் சுப. கார்த்திகேயன், ஆசிரியர்கள் ரெங்கேஸ்வரி, அன்னமேரி, நீலகண்டன் மற்றும் பயிற்சியாளர் விக்னேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
- தெப்பக்குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்தான்.
- மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருமங்கலம்
திருமங்கலத்தை அடுத்துள்ள அலப்பலச்சேரி கிராமத்தை சேர்ந்த ராஜகோபால்-காளீஸ்வரி தம்பதியினர். இவர்கள் மானாமதுரை அருகில் உள்ள நாராயணதேவன் பட்டியில் குடியிருந்து கட்டிட வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அஜய் என்ற காளி (11) அலப்பலச்சேரி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி நாகையாபுரம் நடுநிலை பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
அஜய் தனது நண்பர்களுடன் அலப்பலச்சேரி கிராமத்தில் உள்ள வாழவந்தஅம்மன் கோவில் தெப்பக்குளத்தில் குளித்தான்.அவனுக்கு நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக தெப்பக்குளத்தில் மூழ்கினான். இதனைக் கண்ட கிராம மக்கள் அஜய்யை மீட்டனர். அவன் தெப்பக்குளத்தில் மூழ்கியதில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பலியானான்.
நாகையாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- மாணவி வா்ஷினிக்கு பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.
- குத்துச்சண்டைப் போட்டியில் ஆா்வமுள்ள இவா் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயிற்சி பெற்று வந்தாா்.
திருப்பூர்:
வெள்ளக்கோவில் - கரூா் சாலையில் உள்ள அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீ வா்ஷினி (16). குத்துச்சண்டைப் போட்டியில் ஆா்வமுள்ள இவா் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயிற்சி பெற்று வந்தாா்.
திருப்பூா் ஜெய்வாபாய் பள்ளியில் நடைபெற்ற திருப்பூா் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்தாா். இதையடுத்து மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு பெற்றாா். மாணவி வா்ஷினிக்கு பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.
- தமிழகத்தில் பாசிசத்தை நுழைய விடாத வகையில் மாணவரணி மாநாடு நடைபெறும் என்று அமைச்சர் மூர்த்தி பேசினார்.
- மதுரை கருப்பாயூரணியில் தி.மு.க. மாநில மற்றும் மாநகர், புறநகர் மாவட்ட மாணவரணி கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மதுரை
மதுரை கருப்பாயூரணியில் தி.மு.க. மாநில மற்றும் மாநகர், புறநகர் மாவட்ட மாணவரணி கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் மருதுபாண்டி தலைமையில் நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-
உதயநிதி ஸ்டாலின் மாணவரணி, இளைஞர் அணிகளுடன் இணைந்து செயல்படுகிறார். இந்தி திணிப்பு போராட்டத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தது தி.மு.க. மாணவர் அணி தான். அப்போது மாணவ
ரணியில் இருந்தவர்கள் தான் தற்போது அரசியலில் முக்கிய பொறுப்புக்கு வந்துள்ளனர்.
கல்லூரிகளில் மாணவரணியில் இருப்பவர்கள் திராவிட மாடலை மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்ல வேண்டும். ஆட்சியில் இருக்கும் போதும், இல்லாத போதும் உணர்வு பூர்வமாக இந்தியை எதிர்க்கும் ஒரே இயக்கம் தி.மு.க. மட்டுமே ஆகும். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தலைமை ஏற்க இருக்கிறார்.
பாசிசத்தை தமிழகத்தில் நுழைய விடாத வகையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு சிறக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதல் மாணவரணி மாநில செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட பிரதிநிதி அழகு பாண்டி,வழக்கறிஞர் கலாநிதி, மாணவர் அணி இணை, துணை அமைப்பாளர்கள் அதலை செந்தில்குமார், பூவை ஜெரால்டு, மண்ணை சோழராஜன், சேலம் தமிழரசன், உமரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சேலத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மாணவியின் தாய் ஓமலூரில் நடந்த உறவினர் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள சென்றிருந்தபோது மாணவி தூக்குபோட்டு கொண்டார்.
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி ரம்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சித்தேஸ்வரன். இவரது மகள் சிந்துஜா (வயது 17).
இவர் பிளஸ்-1 படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தட்டச்சு கற்று வந்தார். சிந்துஜாவின் தாய் நேற்று ஓமலூரில் நடந்த உறவினர் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள சென்றிருந்தார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த சிந்துஜா திடீரென நேற்று இரவு சேலையை கழுத்தில் மாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலின் பெயரில் கன்னங்குறிச்சி போலீசார் சம்பவத்திற்கு சென்று சிந்துஜாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிந்துஜா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் ? என்பது குறித்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சட்ட கல்லூரி மாணவி தலைமுடியை தானம் செய்தார்
- புற்று நோயாளிகளுக்காக
திருச்சி
திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலரும், யோகா ஆசிரியருமான விஜயகுமார், வழக்குரைஞர் சித்ரா தம்பதியின் மகள் கீர்த்தனா.பி.காம். எல்.எல்.பி. ஹானர்ஸ் சட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இளம் வயதிலேயே தனது தந்தை செய்யும் யோகா பயிற்சியினைப் பார்த்து தானும் யோகா பயிற்சி செய்து அதை நூலாக வெளியிட வேண்டும் என்ற நோக்கில், 'யோகா', 'எளிய உடற்பயிற்சி', 'சூரிய நமஸ்காரம்', உள்ளிட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். தனது பெற்டறோருடன் இணைந்து உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதைப் பிரேதங்களை நல்லடக்கம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் குழந்தைகள் தினமான நேற்று தனது கூந்தலை தானம் செய்துள்ளார். இது குறித்து கீர்த்தனா கூறுகையில், புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையின்போது தலைமுடியை இழப்பவர்களுக்கு உதவுவதற்காக கூந்தலை தானமாக வழங்கியுள்ளேன்.
கூந்தலை தானமாக வழங்க சில வரைமுறைகள் இருக்கின்றன. தலைமுடியை சரியாக கத்தரித்து வழங்காவிட்டால் தானமாக வழங்கும் முடி பயனற்று போய்விடும். தானம் செய்யக்கூடிய முடி குறைந்தபட்சம் 8 அங்குலங்கள் முதல் 14 அங்குலம் வரை இருக்க வேண்டும். குறைந்தபட்ச நீளத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு தலை முடியை விக் வடிவில் தயாரித்து வழங்கும் தொண்டு நிறுவனங்கள் நாடு முழுவதும் இருக்கின்றன. அவர்கள் முடியின் நீளம், அடர்த்தி போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான கூந்தலை தானமாக பெறுகின்றனர். சில தொண்டு நிறுவனங்கள் வண்ணங்கள் பூசப்பட்ட முடிகளை நிராகரித்துவிடுகின்றன.
ரசாயன சிகிச்சை மேற்கொண்டிருந்தாலும் அத்தகைய முடிகளை வாங்குவதில்லை. சில தொண்டு நிறுவனங்கள் நீளமான முடியை மட்டுமே வாங்குகிறது. முடியின் அடர்த்தி எப்படி இருக்கிறது என்பதையும் சில நிறுவனங்கள் கருத்தில் கொள்கின்றன. தானமாக கொடுக்கப்போகும் கூந்தலை இயற்கையான முறையில் பராமரித்து உலர்வாக வைத்துக்கொள்ள வேண்டும்.
கூந்தலை எந்த பகுதியில் இருந்து வெட்ட போகிறீர்களோ அங்கு இறுக்கமாக ரப்பர் பேண்டை மாட்ட வேண்டும். கூந்தலின் நுனிப்பகுதி வரை முழுவதுமாக வெட்டிவிடக்கூடாது. கூந்தலின் நீளமும், அடர்த்தியும் ஒரே அளவில் இருக்க வேண்டும். அதனால்
- ஜெயசெல்வன் சென்னை தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வருகிறார்.
- பஞ்சாயத்து தலைவர் வேல்முருகன் தனது 5 மாத ஊதியத்தை ஜெயசெல்வனுக்கு வழங்கினார்.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே உள்ள வேப்பிலான்குளம் பஞ்சாயத்து சுண்டவளை கிராமத்தை சேர்ந்தவர் சாமுவேல், சமையல் தொழிலாளி. இவரது மகன் ஜெயசெல்வன் (வயது 20).
மாற்றுத்திறனாளியான இவர் சென்னை தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வருகிறார். கடந்த மாதம் மாநில அளவில் ஈரோட்டில் நடந்த கூடைப்பந்து போட்டி யில் இவரது குழுவினர் முதலிடம் பிடித்தனர்.
இதைதொடர்ந்து தேசிய அளவில் கடந்த 5-ந்தேதி முதல் 11-ந் தேதி வரை உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் தனது குழுவினருடன் கலந்து கொண்டு 2-ம்இடம் பிடித்து சாதனை படைத்தார்.
சாதனை படைத்த ஜெய செல்வனை பாராட்டிய வேப்பிலான் குளம் பஞ்சயத்து தலைவர் வேல்முருகன் அவருக்கு தனது 5 மாத ஊதியத்தை காசோலையாக வழங்கினார். வெற்றிபெற்றது குறித்து ஜெயசெல்வன் கூறுகையில், மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலியை எனக்கு யாரேனும் வழங்கினால் உலக அளவில் இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் மாண்பினை தலை நிமிர செய்வேன் என்றார்.
- வட்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
- திருவண்ணாமலையில் நடைபெறஉள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
காங்கயம் :
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவிலான தடகள போட்டி திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பங்குபெற்ற காங்கயம் சிவன்மலை ஜேஸீஸ் பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் லிங்கேஷ் 14 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் இம்மாத இறுதியில் திருவண்ணாமலையில் நடைபெறஉள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவனை பள்ளி பொருளாளர் பழனிச்சாமி, மோகனசுந்தரம், சாவித்திரிசுப்ரமணியம், முதல்வர் சுப்ரமணி,பள்ளியின் தாளாளர்,அகடமிக் டைரக்டர்ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.
- கலைத்திருவிழா போட்டியில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்
- தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
திருச்சி:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் குணசேகரன், பொதுச் செயலாளர் வி. எஸ்.முத்துசாமி, மாநில பொருளாளர் சே. நீலகண்டன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது;-
தமிழகத்தில் படிக்கின்ற மாணவர்களின் திறமையை வெறும் கல்வி சார்ந்து மட்டும் அளவிடாமல் கலை மற்றும் பண்பாடு சார்ந்து அவர்களுக்குள் உள்ள திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் கலைத் திருவிழாவை நடத்த மீண்டும் உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே வேளையில் தமிழக அரசின் உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 11 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
இவர்கள் தமிழ் வழி பாடப் புத்தகத்தையும் ,தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ் வழி ஆசிரியர் பயிற்சி முறைகளையும் பின்பற்றி படித்து வருகின்றனர். ஆகவே இவர்களும் கலை விழாவில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்த தமிழக அரசு வாய்ப்பு வழங்க வேண்டும்.
தமிழ் வழியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவை தமிழக அரசின் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பயனடைகின்ற வகையில் வழங்கிட வேண்டும்.மேலும் 6 முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மாதம் ரூ. 1000 வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திலும் உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் வாய்ப்பினை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.