என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suffering"

    • சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • நேற்று காலை பள்ளி கேட்டின் பூட்டை திறக்க முயன்றபோது, முடியாததால் பள்ளிக்கு மாணவர்கள் அவதி அடைந்தனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்தவுடன் கேட்டை பூட்டி விட்டு சென்றனர். இந்நிலையில், நேற்று காலை பள்ளி கேட்டின் பூட்டை திறக்க முயன்றபோது, முடியாததால் பள்ளிக்கு மாணவர்கள் அவதி அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீ சாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கேட்டின் பூட்டை உடைத்து பள்ளியை திறந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் இதுகுறித்து விசாரித்து வருகிறார்.

    • ஏற்காட்டில் கடந்த 2 தினங்களாக இடைவிடாத சாரல் மழையும், கடுமையான பனிப் பொழிவும் நிலவி வருகிறது.
    • இந்த சாரல் மழை காரணமாக காப்பி பழங்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    ஏற்காடு:

    வடகிழக்கு பருவ மழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வரும் நிலையில் ஏற்காட்டில் கடந்த 2 தினங்களாக இடைவிடாத சாரல் மழையும், கடுமையான பனிப் பொழிவும் நிலவி வருகிறது.

    ஏற்காட்டில் அதிகப்படி யாக காப்பி விவசாயம் செய்யப்படுகிறது. இந்த சாரல் மழை காரணமாக காப்பி பழங்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் காப்பி விவ சாயிகள் வேத னையடைந்து உள்ளனர். மேலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் காப்பி தோட்ட பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது. முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்படுவதால், முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி வாகனங்கள் இயக்கப்படுகிறது.

    மேலும் கடுமையான குளிரும் காணப்படுகிறது. இதனால் பகல் நேரங்களில் கூட ஸ்வட்டர், ஜர்க்கின் உள்ளிட்டவை அணியாமல் வெளியில் வரமுடியாது நிலை உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடர் மழையால், இப்பகுதியில் ஏராளமானோர் சளி, காய்ச்சல் தொல்லையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    ஏற்காட்டில் இடைவிடாத சாரல் மழை, கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    • பாலம் வேலை நடைபெற்று வருவதால் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதி.
    • மளிகை பொருள் மற்றும் காய்கறிகள் வாங்க 3 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து ஆத்தாளூர் செல்லும் வழியில் உள்ள ஆண்டவன் கோயில் எல்சி 117 ரயில்வே கேட் எடுக்கப்பட்டு, கீழ்மட்ட பாலம் 300 மீட்டர் அளவில் கடந்த ஐந்து மாதங்களாக வேலை நடைபெற்று வருகிறது.

    இதனால் ஆத்தாளூர், நாடாகாடு, முனி கோவில் பாலம், பூக்கொல்லை, முடச்சிக்காடு, கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த பகுதிகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இவர்கள் பள்ளிக்கு வருவதற்கு சுமார் மூன்று கிலோமீட்டர் சுற்றி பேராவூரணி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வர வேண்டிய அவல நிலை உள்ளது.

    இவ்வழியே ஆத்தாளுர் வீரமாகாளி அம்மன் கோவில் உள்ளது.

    கோயிலுக்கு மாவடுகுறிச்சி, இந்திரா நகர், தென்னங்குடி, கொன்றைக்காடு, களத்தூர் கிராம பொதுமக்கள், பக்தர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.

    தற்போது பாலம் வேலை நடைபெற்று வருவதால் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    ஆத்தாளூர் கிரா மத்திலிருந்து பேராவூரணி நகர் பகுதியில் மளிகை பொருள் மற்றும் காய்கறிகள் வாங்க 3 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே உடனடியாக பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்படுத்த திறந்து விட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழை பெய்யும் நேரங்களில் எல்லாம் குடியிருப்புகளை சுற்றி மற்றும் தெரு முழுவதும் மழைநீர் தேங்கும்.
    • தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தேங்கி கிடக்கும் தண்ணீர் அளவு அதிகரிக்கும் என அச்சப்படுகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே மருங்கை சாலையில் அருமை நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இங்கு மழை பெய்யும் நேரங்களில் எல்லாம் குடியிருப்புகளை சுற்றி மற்றும் தெரு முழுவதும் மழைநீர் தேங்கிகிடப்பது தொடர் கதையாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தஞ்சை மற்றும் சுற்று வட்டார இடங்களில் பலத்த மழை கொட்டியது. இதில் அருமை நகரில் குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் தேங்கியது.

    இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து கடும் சிரமத்திற்கு இடையே வெளியே வந்தனர். தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தேங்கி கிடக்கும் தண்ணீர் அளவு அதிகரிக்கும் என அச்சப்படுகின்றனர்.

    இதுகுறித்து அருமை நகரை சேர்ந்தகார்த்திக் கூறும்போது, எங்கள் பகுதியில் மழைக்கா லங்களில் தண்ணீர் தேங்குவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    தேங்கி கிடக்கும் தண்ணீரில் இருந்து விஷ பூச்சிகள் வீட்டுக்கு ள் வருவதால் அச்சத்தில் உள்ளோம். எங்கள் பகுதியில் முறையான மழைநீர் வடிகால் வாய்க்கால் இல்லாததால் தண்ணீர் தேங்குகிறது.

    எனவே மழைநீர் வாய்க்காலை தூர்வாரி மழைநீர் தேங்கா வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • சக டிரைவர்கள் மற்றும் பயணிகள் அவர்களை சமதானம் செய்து வைத்தனர்.
    • போக்கு–வரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் யார் முதலில் செல்வது என தனியார் மற்றும் அரசு பஸ்களுக்கும் இடையே போட்டி நிலவுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

    பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில், பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் வழித்தடத்தில் பகல் நேரத்தில் 3 நிமிடங்களுக்கு ஒரு பஸ் புறப்பட்டு செல்லும் வகையில் நேரம் ஒதுக்கீடு செய்து பஸ்கள் இயக்கபட்டு வருகிறது.

    பட்டுக்கோட்டை-– தஞ்சாவூர் வழித்தடத்தில் செல்லும் சில தனியார் பஸ்கள், அரசு பஸ்களை முந்தி செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அசுர வேகத்தில் செல்வதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் பட்டுக்–கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சாவூருக்கு செல்வதற்கு அரசு பஸ் ஒன்று தயாராக இருந்த நேரத்தில், அதற்கு அடுத்த–தகாக தஞ்சாவூருக்கு செல்ல இருந்த தனியார் பஸ் ஒன்றில் பயணிகளை ஏற்றியுள்ளனர்.

    இது தொடர்பாக அரசு பஸ் ஓட்டுநருக்கும், தனியார் பஸ் ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த சக ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் சமதானம் செய்து வைத்தனர்.

    இதனால் பஸ் நிலை–யத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள் அவதி அடைந்த னர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், தனியார் பஸ்சில் ஏறினால் விரைவாக சென்றுவிடலாம் என கருதி பயணிகள் ஏறுகின்றனர்.

    ஆனால் சில தனியார் பஸ்கள் தங்கள் பஸ்சில் அதிக அளவு பயணிகளை ஏற்ற வேண்டும் என்ற லாப நோக்கத்தில் செயல்பட்டு அரசு பஸ்சுக்கு பிறகு புறப்பட்டு அரசு பஸ்சை முந்தி சென்று அதிக அளவில் பயணிகளை ஏற்றுகின்றனர்.

    இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலரும், மாவட்ட கலெக்டரும் உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • நாங்கள் மலை குறவன் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் எங்களுக்கு அடிப்படை வசதி மற்றும் இருப்பிட வசதி இல்லாமல் சாலை ஓரத்தில் வசித்து வந்தோம்.
    • ஆனால் அங்குள்ள மக்கள் வீடு கட்ட அனுமதிக்கவில்லை.

    கடலூர்:

    நெய்வேலி மந்தாரக்குப்பம் ஓம்சக்தி நகரை சேர்ந்த மலை குறவன் பழங்குடி மக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் தங்களது இலவச வீட்டு மனை பட்டா, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அரசு ஆவணங்களை ஒப்படைப்பதாக அறிவித்தனர் பின்னர் அவர்கள் வைத்திருந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் மலை குறவன் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் எங்களுக்கு அடிப்படை வசதி மற்றும் இருப்பிட வசதி இல்லாமல் சாலை ஓரத்தில் வசித்து வந்தோம். மேலும் எங்கள் குழந்தைகள் படிப்பதற்கு பள்ளி வசதி இல்லாமல் 40 குடும்பம் தவித்து வந்தோம்.

    இந்த நிலையில் சிதம்பரம் தாலுகா கூடு வெளிசாவடியில் வீட்டுமனை பட்டா அளித்தார்கள். இதைத் தொடர்ந்து அங்கு வாழ்வதற்கு சென்றோம். ஆனால் அங்குள்ள மக்கள் வீடு கட்ட அனுமதிக்கவில்லை. மேலும் ஊருக்குள் விடாமல் தாக்கினார்கள். ஆகையால் நாங்கள் வசித்து வந்த தாலுகாவில் எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது

    • கோதைமங்களத்தில் வறட்சியால் பயிர்கள் வாடியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்
    • அரசு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரிக்கை

    அறந்தாங்கி

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோதைமங்களம் பகுதியில் சுமார் 240 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர். வானம் பார்த்த பூமியாக மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செழிக்கும் என்ற நிலையில் இப்பகுதியில் போதிய மழை இல்லாததாலும், வரத்துவாரி மூலம் கண்மாய்க்கு தண்ணீர் வராததாலும் இப்பகுதி விவசாயிகள் கடும் வறட்சியை சந்தித்து வருகின்றனர். விவசாயம் செய்து 150 நாட்களை கடந்த நிலையில் பயிர்கள் அனைத்தும் கருகி வருவதால், விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில் வட்டிக்கு மற்றும் வீட்டிலிருந்த நகைகளை அடகு வைத்து ஏக்கர் ஒன்றிற்கு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்து விவசாயம் செய்திருந்தோம், ஆனால் பயிர்கள் வளர்ந்து கதிர் அறுக்கும் தருவாயில் போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் அனைத்தும் கருகிவிட்டது. எங்கள் பகுதி கண்மாய்க்கு வர வேண்டிய வரத்து வாய்க்கால்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கண்மாய் வர வேண்டிய உபரிநீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. அருகாமையில் ஓடக்கூடிய தண்ணீரை முறையாக வரத்து வாய்க்கால் தூர்வாரியிருந்தால் எங்கள் பகுதி விவசாயம் செழித்திருக்கும், ஆனால் அதிகாரிகள் யாரும் இதற்கு முற்படவில்லை.வரத்து வாரி தூர் வாரப்படாததாலும், போதிய மழை இல்லாததாலும் கைக்கு வந்த விவசாயம் கருகி போய்விட்டது.இந்த சூழ்நிலையில் இந்தாண்டு பொங்கல் எங்களுக்கு கசப்பான பொங்கலாக தோன்றுகிறது. எனவே தமிழ அரசு உடனடியாக தலையிட்டு உரிய நிவாரணம் கிடைக்கவும், வரத்து வாரியை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேவகோட்டையில் உரிய நேரத்தில் அரசு பஸ்கள் இயக்காததால் மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    • மாணவ-மாணவிகள் நிலையை கருத்தில் கொண்டு பள்ளி முடியும் நேரத்தில் அரசு பஸ்களை இயக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சுற்றி உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அரசு பஸ்கள் மூலம் தேவகோட்டையில் உள்ள பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இதற்காக காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வரு கின்றன. மாலையில் பள்ளி முடிந்து தேவகோட்டை பஸ் நிலையத்திற்கு செல்ல 4.30 மணிக்கு '3 ஏ' அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த சில வாரங்களாக மாணவ-மாணவிகளை புறக்கணிக்கும் வகையில் குறிப்பிட்ட அரசு பஸ் முன்கூட்டியே 4.15 மணிக்கு சென்றுவிடுவதாக புகார் எழுந்துள்ளது.இதனால் மாணவ-மாணவிகள் பள்ளியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பஸ் நிலையத்திற்கு நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே மாணவ-மாணவிகள் நிலையை கருத்தில் கொண்டு பள்ளி முடியும் நேரத்தில் அரசு பஸ்களை இயக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • போதிய இடவசதி இல்லாமல் குறுகிய இடத்தில் அலுவலகம் அமைந்துள்ளதால் பொது மக்களும், அலுவலர்களும் அவதி அடைந்து வந்தனர்.
    • சீர்காழி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரூ.3 கோடியே மதிப்பில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

    போதிய இடவசதி இல்லாமல் குறுகிய இடத்தில் அலுவலகம் அமைந்துள்ளதால் பொது மக்களும், அலுவலர்களும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து சீர்காழி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்பில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் பூமி பூஜையில் பங்கேற்று பணியினை துவக்கி வைத்தார்.

    இவ்விழாவில் சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், மண்டல துணை வட்டாட்சியர் ரவி, நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • இரவு சுமார் 11.30 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது,
    • மின்சாரம் நேற்று இரவு முழுவதும் இல்லை

    கடலூர்:

    திட்டக்குடி அருகே வாகையூர்,ஆக்க னூர், பாளையம், இடைச்செ ருவாய் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது இன்று காலை 9.30 மணி வரை மின்சாரம் இல்லாமல் பள்ளி செல்லும் மாணவ மாணவர்கள், குழந்தைகள், முதியோர் உட்பட மின்சாரம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டனர்.     

    நேற்று மழை காற்று அதிக அளவில் இல்லை, இருப்பினும் மின்சாரம் நேற்று இரவு முழுவதும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் தங்கு தடை இன்றி பொது மக்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • திருமங்கலம் அருகே குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதிப்பட்டுள்ளனர்.
    • மழைநீரை அப்புறப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உச்சப்பட்டி கிராமத்தில் சிவன் நகர், இந்திராநகர் பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளது. இப்பகுதி விரிவாக்க பகுதி என்பதால் கடந்த சில ஆண்டுகளாக சாலைகள் அமைத்து தராமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் உச்சப்பட்டி கண்மாயில் தண்ணீர் நிரம்பியதால் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் சூழ்வது வழக்கமாக உள்ளது.

    ஆண்டுக்கு ஒரு முறை இப்பகுதியில் மழை வெள்ளம் புகுந்து குடியிருப்பு வாசிகள் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 4 மாதமாக தண்ணீர் வற்றாததால் இப்பகுதி மக்கள் தொற்று நோயால் பாதிக்கப்படுவதாகவும், விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் நுழைவதாகவும் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.

    இது தொடர்பாக பலமுறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.

    மழைநீரை அப்புறப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய மறுக்கின்றனர்.
    • இடத்தின் மீது கடன் வாங்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.

    உடுமலை:

    குடிமங்கலம் அருகே பத்திரப்பதிவு மேற்கொள்ள முடியாமல் 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க குடிமங்கலம் ஒன்றிய கமிட்டி செயலாளர் ஸ்ரீதர் கூறியதாவது:-குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட புதுப்பாளையம்,அடிவள்ளி உள்ளிட்ட 13 க்கும் மேற்பட்ட கிராமங்கள் கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலக வரம்பில் வருகிறது.இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பரிவர்த்தனைகள் மேற்கொண்டு வந்தனர்.இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த கிராம குடியிருப்புகளில் காலி இடம்,வீடுகள் விற்பனை செய்யும்போது கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய மறுக்கின்றனர்.இதற்காக உரிய காரணமும் தெரிவிக்க மறுக்கின்றனர்.இதனால் இந்த கிராமங்களில் காலி இடங்களை வாங்கியவர்கள் பத்திரப் பதிவு செய்ய முடியாமலும்,இடத்தின் மீது கடன் வாங்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.எனவே பத்திரப் பதிவுத்துறை உரிய விளக்கம் அளிக்கவும்,பிரச்சினைக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

    ×