என் மலர்
நீங்கள் தேடியது "suicide attempt"
- யோகேஷ் குமார் என்ற 18 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
- பலத்த காயமடைந்த ரேகா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மகன் இறந்த துக்கம் தாளாமல் மருத்துவமனையின் 2 ஆவது மாடியில் இருந்து குதித்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யோகேஷ் குமார் என்ற 18 வயது இளைஞர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 4 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
யோகேஷ் உயிரிழந்த துக்கத்தை தாங்கி கொள்ள முடியாமல் அவரது தாய் ரேகா (40) மருத்துவமனையின் 2 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரேகா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- சாத்தான்குளம் அருகே மோடி நகரை சேர்ந்தவர் செல்வி திருநங்கை
- நீதிமன்றம் மற்றும் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் தர்ணாவில் ஈடுப்பட்டார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே மோடி நகரை சேர்ந்தவர் செல்வி (வயது45). திருநங்கையான இவரது தம்பி முத்துக்குமார் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை தாக்கியது தொடர்பாக புகாரின் பேரில் தட்டார்மடம் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து செல்வி , சாத்தான்குளம் நீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிபதி, போலீசாருக்கு பரிந்துரைத்தார். ஆனாலும் போலீசார் விசாரிக்காததால் செல்வி, நீதிமன்றம் மற்றும் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் தர்ணாவில் ஈடுப்பட்டார். போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சாத்தான்குளம் கோர்ட்டு வளாகத்தில் இருந்த கிணற்றில் செல்வி திடீரென குதித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் செல்வியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- காதல் விவகாரத்தில் தந்தை கண்டித்ததன் காரணமாக ஆனந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
- அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் பழைய பஸ் நிலையம் காமராஜர் ரோட்டில் தனியார் நீட் மற்றும் போட்டி தேர்வு பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையமானது அங்குள்ள கட்டிடத்தின் 3வது மாடியில் உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கு படிக்கும் 17 வயதான ஆனந்தி என்ற மாணவியின் தந்தை இன்று மாலை பயிற்சி மையத்துக்கு வந்தார். மாணவி ஆனந்தியுடன் பேசிக் கொண்டிருந்த போது, தந்தை மணிகண்டனை தள்ளிவிட்டு சென்ற மாணவி ஆனந்தி 3-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக குதித்தார். இதில் அவருக்கு இடுப்பு மற்றும் தலையில் பலத்த காயங்கள்ஏற்பட்டது.ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடினார். உடனே அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவி ஆனந்தி எதற்காக மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று தெரியவில்லை. காதல் விவகாரத்தில் தந்தை கண்டித்ததன் காரணமாக ஆனந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் நீட் தேர்வு பயிற்சியை சரியாக பயிலாததன் காரணமாக தந்தை திட்டியதால் தற்கொலைக்கு முயன்றாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தலைமறைவாக உள்ள சபரியை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு வேண்டு கோள்விடுத்துள்ளனர்.
- வாலிபர் சபரி மீது ஓமலூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் சபரி (வயது 25). கூலி தொழிலாளி.
இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தார். மேலும் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு அடிக்கடி டார்ச்சர் கொடுத்துள்ளார். தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் வேறு வழியின்றி மாணவி, அந்த நபரிடம் பேசியுள்ளார்.
இது மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. சபரியுடன் பேசுவை நிறுத்தி விடு, இல்லையென்றால் கல்லூரி படிப்பு பாதிக்கப்படும் என பெற்றோர் மகளுக்கு அறிவுரை கூறினர். இதன் பிறகு சபரியுடன் பேசுவதை மாணவி நிறுத்தி விட்டார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை மீட்டு உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவியிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டனர். இதில் போலீசாருக்கு பகீர் தகவல் கிடைத்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சபரி, அந்த மாணவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது என்னை காதலிக்க வேண்டும். இல்லையென்றால் நீ என்னுடன் பேசி பழகிய படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார். மேலும், மாணவியின் தந்தைக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். மேலும் இது பற்றி வெளியே சொன்னால் சத்தம் போடுவார்கள் என பயந்தார். மனம் உடைந்த மாணவி ஒரு கட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து வாலிபர் சபரி மீது ஓமலூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதை அறிந்த சபரி தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை போலீசார் துரிதமாக மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இருந்து தப்பிப்பதற்காக சபரி முயற்சித்து வருகிறார். போலீஸ் நிலையத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
தலைமறைவாக உள்ள அவரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு வேண்டு கோள்விடுத்துள்ளனர்.
- 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.
- நேற்று மாலை அவனை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் கிச்சிபாளையம் எஸ்.எம்.சி காலனி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை அவனை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமடைந்த மாணவன் இரவு 9 மணி அளவில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முயற்சி மேற்கொண்டார். இதை கண்ட பெற்றோர் உடனடியாக மகனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவனுக்கு அவசர வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கவுசல்யா (28) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
- இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாமக்கல்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 34). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கவுசல்யா (28) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரும் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
ஓட்டலில் தங்கினர்
இதற்கு இடையே ராஜசேகருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். ஆனால் அவர்களை உறவினர்கள் ஏற்றுக் கொள்ளாததால் நேற்று நாமக்கல்லில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். இன்று காலை வெகு நேரமாகியும் அறை கதவு திறக்காததால், ஓட்டல் ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில் கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததால், கதவை திறந்து உள்ளே சென்றனர்.
தற்கொலை முயற்சி
அப்போது, 2 பேரும் மயங்கி கிடந்தது தெரியவந்தது. இது குறித்து நாமக்கல் நகர போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரையும் மீட்டு நாமக்கல்லில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில், இருவரும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை சாப்பிட்டு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், உறவினர்கள் ஏற்றுக் கொள்ளததால், வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர்கள், தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதுகுறித்து ராஜசேகர், கவுசல்யா உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது .இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இவர்கள் திருப்பூரில் தங்கி இருந்து, பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
- நேற்று முன்தினம் நாமக்கல்லில் உள்ள லாட்ஜில் ஒன்றில் தங்கிய அவர்கள், நேற்று காலை தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மயங்கி நிலையில் கிடந்தனர்.
நாமக்கல்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 34). இவரது மனைவி கவுசல்யா. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இவர்கள் திருப்பூரில் தங்கி இருந்து, பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல்லில் உள்ள லாட்ஜில் ஒன்றில் தங்கிய அவர்கள், நேற்று காலை தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மயங்கி நிலையில் கிடந்தனர். தகவல் அறிந்த நாமக்கல் நகர போலீசார் அவர்களை மீட்டு, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், விரைவில் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து நாமக்கல் நகர போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேலம் கிச்சிப்பாளையம் அடுத்த எருமாபாளையம் பாரதி நகர் பகுதி இளம்பெண் உள்பட 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தனர்.
- சரத்பாபுவின் மனைவி கருவுற்று இருந்ததாகவும், இவருக்கு தெரியாமலேயே இவரது மனைவி கருவை கலைத்ததால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் அடுத்த எருமாபாளையம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சரத்பாபு (வயது 21). திருமணமான இவர் இன்று அதிகாலை வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சரத்பாபுவின் மனைவி கருவுற்று இருந்ததாகவும், இவருக்கு தெரியாமலேயே இவரது மனைவி கருவை கலைத்ததால் மனம் உடைந்த சரத்பாபு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இதேபோல், சேலம் அம்மாபேட்டை இரட்டைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் மகேந்திரன் (23). இவர் நேற்று இரவு மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில், விஷத்தை குடித்து மயங்கினார். வீட்டில் இருந்தவர்கள் மகேந்திரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மகேந்திரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொண்டலாம்பட்டி காதீயம் காடு பகுதியைச் சேர்ந்தவர் சபாபதி. இவரது மனைவி சுகவானேஸ்வரி (29). நேற்று இரவு கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சுகவனேஸ்வரி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட உறவினர்கள் இவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கரட்டூர் அருந்ததியர் தெருவை சேர்ந்த முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
- இவர் கடந்த 2 வருடமாக தீராத முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கரட்டூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பாப்பான் (வயது 65). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2 வருடமாக தீராத முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவ மனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும், முதுகுவலி சரியாகவில்லை. இந்நிலையில் நேற்று மாலை, வலி தாங்க முடியாமல் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பாப்பானை மீட்டு, நாமக்கல் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் ராசி புரம் பகுதியில் உள்ள தனியார் ஹோமியோபதி கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
- மனமுடைந்த மாணவி, அரளி விதையை அரைத்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
சேலம்:
சேலம் உடையாப்பட்டியை சேர்ந்த 24 வயது இளம்பெண், நாமக்கல் மாவட்டம் ராசி புரம் பகுதியில் உள்ள தனியார் ஹோமியோபதி கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். மாணவிக்கு கல்லூரியில் கட்டண பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது பெற்றோரிடம் மாணவி பலமுறை கூறியும் பெற்றோர் கட்டணத்தை செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி, அரளி விதையை அரைத்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதனைப் பார்த்த உறவினர்கள், அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- எபனேசர் அந்த பகுதியில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
- அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.
தக்கலை:
தக்கலை அருகே மேக்கா மண்டபம் மூலச்சல் பன்றி வெட்டான்பாறை விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெபசிங் (வயது 54).
இவரது மகள் ஜெய பிரின்ஷா (31). மகன் ஜெயா பிரின்ஸ். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயபிரின்ஷா அழகிய மண்டபம் தச்சகோடு பகுதியைச் சேர்ந்த எபனேசர் (35), டெம்போ டிரைவர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெபசேபன் (14), ஜெபஆகாஷ் (13) என்ற மகன்கள் உள்ளனர்.
ஜெபபிரின்ஷா திருவனந்தபுரத்தில் பியூட்டிஷியன் படித்து வந்தார். ஜெப பிரின்சாவிற்கும் எபனேசருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி அணிந்து செல்லும் ஆடை பிடிக்கவில்லை என்று எபனேசர் அடிக்கடி கண்டித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று ஜெபபிரின்ஷா சகோதரர்ஜெப பிரின்சிற்கு திருமண ஏற்பாடு செய்வதற்காக எபனேசருடன் சென்றிருந்தார். இரவு எபனேசரும் ஜெப பிரின்ஷாவும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். பரைக்கோடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த எபனேசர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவி ஜெப பிரின்சாவை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் ஜெபபிரின்சா மயங்கி விழுந்தார். இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் எபனேசர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ஜெப பிரின்சாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஜெபசிங் தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் எபனேசர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் எபனேசர் அந்த பகுதியில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மனைவியை கொலை செய்து விட்டு கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் உள்ளோம்.
- ரெயில்வே துறையில் எனது மனைவிக்கு சேரவேண்டிய பணத்தையும் பெற முடியாமல் உள்ளது.
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனுவினை கொடுத்தனர்.
அம்பை அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் சேரி மெயின்ரோட்டை சேர்ந்தவர் மரியசிங்கம் (வயது 73). இவர் இன்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார்.
அப்போது அவர் கலெக்டர் அலுவலக வாசலில் கையில் வைத்திருந்த மண்எண்ணையை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த, பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-
எனது மனைவி சந்திப்பு ரெயில் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். எனது மகனும் 14 ஆண்டுகளுக்கு முன்பு மாயமாகி விட்டார்.
எனது மகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எங்களது ரேஷன் கார்டு தொலைந்து விட்டது.
இதனால் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் உள்ளோம். மேலும் ரெயில்வே துறையில் எனது மனைவிக்கு சேரவேண்டிய பணத்தையும் பெற முடியாமல் உள்ளது. வயதான காலத்தில் என்னால் எனது மகளுக்கு சிகிச்சை அளிக்க அழைத்து செல்ல முடியவில்லை. எனவே எங்களுக்கு மீண்டும் ரேஷன்கார்டு வழங்க வேண்டும் என கூறினார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மரிய சிங்கம் தீக்குளிப்பதை தடுத்து நிறுத்திய சிறிது நேரத்திற்குள் கலெக்டர் அலுவலகத்தில் மற்றொருவர் தனது தலையில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக போலீசார் அவரை பத்திரமாக அழைத்து சென்று அவரிடமும் விசாரணை நடத்தினர். அதில், அவர் அம்பாசமுத்திரம், பொத்தை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மாரியப்பன் என்பது தெரியவந்தது. மேலும் அவர் கூறும்போது, எங்களுக்கு சொந்தமான காலி மனை சுப்பிரமணியபுரம் பொத்தையில் உள்ளது. ஆனால் அந்த இடத்தை சிலர் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனை அவர்களிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும் என்றார்.