என் மலர்
நீங்கள் தேடியது "Sun"
- டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
- வெயிலின் தாக்கம் குறைந்து மிதமான குளிர்ந்த காற்று வீசியது.
தஞ்சாவூர்:
கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கும் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காட்சியளித்தது.
திடீரென பகல் 12 மணியளவில் தஞ்சையில் மிதமான சாரல் மழை ெபய்தது.
இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மிதமான குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது.
- நீர் நிலைகளில் விளையாட செல்வதை கண்காணித்து தடுத்து கட்டுப்படுத்த வேண்டும்.
- 24 மணிநேரமும் இயங்கக்கூடிய இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில், கோடைவெயில் மற்றும் எதிர்வரும் காலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட இருக்கும் நிலையில், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள், கோடை வெயிலில் தேவையின்றி வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.
தற்போது பள்ளிகளில் தேர்வு நடைபெற்று கொண்டிருப்பதால், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு மிகுந்த பாதுகாப்புடன் அனுப்பும் பொருட்டும், பள்ளி முடிந்தவுடன் வெளியிடங்களுக்கு பெற்றோர்கள் அனுமதியின்றி நீர் நிலைகளில் விளையாட செல்வதை கண்காணித்து தடுத்து கட்டுப்படுத்திட வேண்டும்.
ஏதேனும், அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை உடனுக்குடன் தீயணைப்பு துறையினருக்கு (இலவச எண்.101) காவல்துறை, தீயணைப்புதுறை மற்றும் மருத்துவதுறையை அழைக்க (இலவச எண்.108), காவல் துறை மற்றும் தீயணைப்புதுறையை அழைக்க (இலவச எண்.112) என்ற 24 மணிநேரமும் இயங்கக்கூடிய இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24/7 நாள் முழுவதும் இயங்கக்கூடிய 04366 – 226623 / 1077 கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்களுடன் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
கோடைகாலங்களில் அதிக வெப்ப சலனத்தினால் திருவாரூர் மாவட்டத்தில் உயிர்ச்சேதங்கள் ஏதுமின்றி இருக்க உதவ வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது.
- வேதாரண்யத்தில் இன்று ஒரே நாளில் 69 மி.மீ மழை பதிவாகியது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இந்நிலையில் இன்று வேதாரண்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்தது. மழையால் வேதாரண்யம் நகரில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
வேதாரண்யத்தில் இன்று ஒரே நாளில் 69 மி.மீ மழை பதிவாகியது. இந்த கோடை மழையால் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
- மதிய வேளையில் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் சென்றால் அனல்காற்று வீசுகிறது.
- வெயிலின் உக்கிரத்தில் இருந்து தப்பிக்க, கம்பங்கூழ், சர்பத், நுங்கு, தர்பூசணி, இளநீர் சாப்பிட்டு வருகிறார்கள்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகரில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மதிய வேளையில் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் சென்றால் அனல்காற்று வீசுகிறது. வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க குடை பிடித்தபடி நடமாடி வருகிறார்கள். வயதானவர்கள், பெண்கள் மதிய நேரத்தில் வெயிலில் நடமாடுவதை தவிர்த்து வருகிறார்கள். வெயிலின் உக்கிரத்தில் இருந்து தப்பிக்க, கம்பங்கூழ், சர்பத், நுங்கு, தர்பூசணி, இளநீர் சாப்பிட்டு வருகிறார்கள். இதனால் அவற்றின் வியாபாரம் களைகட்டியுள்ளது. நேற்று மாநகரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. திருப்பூரில் 102 டிகிரி வெயில் நேற்று பதிவானது.
இரவு நேரத்தில் வீட்டில் மின்விசிறி ஓடினாலும் வெப்பக்காற்று வீசுவதால் மக்கள் அவதியடைந்து வருகிறார்–கள். மேலும் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- உடல்நலத்திற்கு கேடு விளைவிக்காதபடி குளுமையை அளிப்பது மண்பானைகள்.
- 200 முதல் 500 ரூபாய் வரை விற்பனை மண்பானை செய்யப்படுகிறது.
உடுமலை :
கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அனைவரையும் வாட்டி வதைக்கும் நிலையில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்காதபடி குளுமையை அளிப்பது மண்பானைகள் தான்.பொருளாதார வசதியில்லாத மக்களும், மண்பானை பயன்படுத்த முடிவதால் இவை ஏழைகளின் ஏ.சி., என அழைக்கப்படுகிறது.இத்தகைய பானைகளுக்கு கோடை காலம் துவங்கி விட்டதால் விற்பனையும் அதிகரித்துள்ளது. உடுமலையில் பஸ் நிலையம், ராஜேந்திரா ரோடு, பழநி ரோடு, தளிரோடு உள்ளிட்ட பகுதிகளில் மண்பானைகள் விற்கப்படுகிறது.அங்கு 200 முதல் 500 ரூபாய் வரை, அதன் அளவுகளுக்கு ஏற்றபடி விற்பனை செய்யப்படுகிறது.
பானைகளிலும் வசதிகளை மேம்படுத்தும் வகையில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. மண்பாண்ட ஜக்குகள், குவளைகள் என பலவி தமான வடிவங்களிலும் உள்ளன.மடத்துக்குளம், கணியூர், கணக்கம்பா ளையம், பூளவாடி, உள்ளி ட்ட பகுதிகளிலிருந்து பானைகள் மொத்தமாக பெறப்பட்டு இங்கு சந்தை ப்படுத்தப்படுகின்றன. பொதுமக்களும் பானை களை பயன்படுத்துவதில் அதிகஆர்வம் காட்டுகின்றனர்.
- 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டுகிறது.
- வீடுகளில் எந்நேரமும் மின் விசிறியை சுழல விட வேண்டிய நிலை தான் காணப்படுகிறது.
திருப்பூர் :
திருப்பூரில் சமீபநாட்களாக வெயில் வாட்டி வதைக்க துவங்கியு ள்ளது. 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டுகிறது.கோடை துவங்கியுள்ள நிலையில் வெயிலின் சுடுதல் மக்களை வாட்டி வதைக்க துவங்கியிரு க்கிறது.கடந்த சில நாட்களாக அதிகபட்சம் 39 டிகிரி செல்சியஸ் அதாவது 102 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெயில் வாட்டுகிறது. இதனால் ஏர் கூலர், ஏ.சி., விற்பனை அதிகரிக்க துவங்கியிரு க்கிறது. வீடுகளில் எந்நேரமும் மின் விசிறியை சுழல விட வேண்டிய நிலை தான் காணப்படுகிறது.
சில நாட்களில் பள்ளி தேர்வுகள், முடியவுள்ள நிலையில் ஊட்டி, கொடை க்கானல் உள்ள மலைப் பிரதேசங்களுக்கு செல்லவும் மக்கள் தயாராகி வருகின்றனர்.குறைந்தபட்சம் வார விடுமுறை நாட்களிலா வது, வெயிலில் இருந்து தப்பிக்க மலை பிரதேசம் செல்லும் திட்டமிடலில் பலரும் உள்ளனர். ஊட்டியில் அதிக பட்சம் 24 டிகிரி செல்சியது அதாவது 74 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை நிலவுகிறது.
- கோடை காலம் முடியும் வரை பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- மண்ணெண்ணை விளக்குகளை கவனமாக கையாள வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் கோடை வெயில் தாக்கம் குறித்து அனைத்து தரப்பினர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
கோடைவெயில் வெப்பம் 21.4.23 முதல் 24-ந்தேதி வரை 4 நாட்களுக்கு கூடுதலாக 4 சதவீதம் அதிகரிக்க கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புக்களை தடுக்க செய்ய வேண்டியவை, வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகளாக உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும் வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும்.
ஒ.ஆர்.எஸ். எலுமிச்சை ஜீஸ், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும்.
பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும்.
முடிந்தவரை குழந்தைகள், முதியோர்கள் வெயில் நேரத்தில் வெளியில் வருவதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும்.
கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போடவேண்டும். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம், பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீர் கொடுக்க வேண்டும்.
மேலும், பருவநிலை மாற்றங்களினால் இந்தாண்டு கோடை வெயில் துவக்கத்திலேயே வெப்பம் அதிகமாக உள்ளதால் மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் ஒயர்கள் உருகி சார்ட்சர்க்யூட் ஏற்பட்டு அதில் ஏற்படும் தீப்பொறியினால் கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.
மேலும், மாடி வீடுகளில் மேல் கூரையில் ஏற்படும் அதிக வெப்பத்தினால் வீட்டின் உள்ளே மேல்புறம் உள்ள இரும்புகள் சூடாகி மின்விசிறி, டியூப்லைட் கழன்று கீழே விழும் தன்மையை பெறுகின்றன.
எனவே, கோடை முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன் கூரை வீடுகளில் வசிப்பவர்கள் தண்ணீரை வைத்து கொள்ளலாம். விலை உயர்ந்த பொருட்கள், நில ஆவணங்கள் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.
கேஸ் சிலிண்டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது.
விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும்.
மண்ணெண்ணை விளக்குகளை கவனமாக கையாள வேண்டும். கோடை வெயிலின் தாக்கத்தினை குறைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பணியினை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், வருவாய் கோட்டாட்சியர்கள் திருவாரூர் சங்கீதா, மன்னார்குடி.கீர்த்தனா மணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
- வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் முன் பக்கம் வாளியில் தண்ணீர் வைத்து, குளித்துக் கொண்டே ஓட்டினார்.
- பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் செயல்படக் கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் கடந்த ஒரு வாரமாகவே வெயிலின் உக்ரம் அதிக அளவில் காணப்படுகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் , பெரியகோவில் பகுதியில் கடும் வெயிலின் தாக்கத்தை உணர்த்தும் விதமாக வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் முன் பக்கம் வாளியில் தண்ணீர் வைத்து, குளித்துக் கொண்டே ஓட்டினார். இதை மற்றொரு வாலிபர் செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தார்.
இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. இந்நிலையில், ஆபத்தை விளைவிக்கும் விதமாக வாகனத்தை ஓட்டியதாக, இருவர் குறித்து மேற்கு தஞ்சை போலீஸ் நிலையத்தினர், போக்குவரத்து ஒழுங்கு பிரிவினர் விசாரணை நடத்தினர்.
இதில், வாகனத்தை ஓட்டியவர் தஞ்சை கீழவாசல் குறிச்சி வடக்கு தெருவைச் சேர்ந்த அருணாசலம் (வயது 23), இதை வீடியோ எடுத்தவர் குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த பிரசன்னா (24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அருணாசலம், பிரசன்னாவுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இருவரையும் இதுபோன்று பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் செயல்படக் கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
- தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி முதல், கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது.
- சேலத்தில் இன்று காலையில் வெயில் கொளுத்தியது.
சேலம்:
தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி முதல், கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. தொடக்கத்தில் வெயிலின் அளவு குறைவாக இருந்த நிலையில், கடந்த 1½ வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சேலத்தில் இன்று காலையில் வெயில் கொளுத்தியது. இதன் காரணமாக சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. வாகனங்களின் எண்ணிக்கையும் குறைந்த காணப்பட்டது. நேற்று சேலத்தில் 103 பாரன்ஹீட்டாக வெயில் அளவு பதிவானது.
இன்றும் அதே அளவு பதிவானது இதேபோல் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியது.
- குளிர்ந்த காற்று வீசி வருவதால் சற்று பெருமூச்சு விட்டபடி பொதுமக்கள் நடமாடி வருகின்றனர்.
- உடல் நிலை பாதிப்படைந்து பொது மக்கள் அவதி அடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி உள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டம் முழுவதும் வறண்ட வானிலை மற்றும் அனல் காற்று கடுமையாக வீசி வருவதால் மதியம் முதல் மாலை வரை பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்து முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டு வருகின்றது. இது மட்டும் இன்றி இரவு நேரங்களில் கடும்வெயில் காரணமாக புழுக்கம் ஏற்பட்டு பொது மக்களின் இயல்பு நிலையை முற்றிலு மாக சீர்குலைந்து வருகின்றது. இதன் காரண மாக பழச்சாறு, பழ வகைகள், இளநீர், நுங்கு, கரும்பு சாறு, குளிர்பா னங்கள் போன்ற வற்றை உட்கொண்டு வெயிலின் தாக்கத்தை குறைக்க முயற்சி செய்து வருகின்றனர். மேலும் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை கடும் வெப்பம் காரணமாக தொடர்ந்து அவதியடைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பலத்த இடி மின்னலுடன் திடீர் மழையும் பெய்து வருவதால் குளிர்ந்த காற்று வீசி வருவதால் சற்று பெருமூச்சு விட்டபடி பொதுமக்கள் நடமாடி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை முதல் கடலூர் மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அதிகரித்து அதனுடைய தாக்கம் மாலை வரை நீடித்து வந்தது. இதனால் அனல் காற்று வீசி வந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 103.64 வெயில் அளவு பதிவாகி இருந்தது. இந்த நிலையில் மாலை முதல் திடீரென்று குளிர்ந்த காற்று வீசி வந்த நிலையில் பலத்த இடி மின்னலுடன் கடலூர், பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாச்சலம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, அண்ணா மலை நகர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இந்த திடீர் மழை காரணமாக கடுமையான வெப்பம் குறைந்து குளிர்ந்து காற்று வீசியதால் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஆங்காங்கே இந்த திடீர் மழை காரணமாக விவ சாய பணிகள் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க தாகும். மேலும் கடலூர் மாவட்டத்தில் காலை நேரங்களில் கடுமையான சுட்டெரிக்கும் வெயில் மாலை நேரங்களில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருவதால் சீதோஷ்ண மாற்றம் ஏற்பட்டு உடல் நிலை பாதிப்படைந்து பொது மக்கள் அவதி அடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லிமீட்டர் அளவில் பின்வருமாறு-
லால்பேட்டை - 30.0 சேத்தியாதோப்பு- 29.0 தொழுதூர் - 27.0 காட்டுமன்னார் கோவில் - 24.0 ஸ்ரீமுஷ்ணம் - 13.3 கொத்தவாச்சேரி - 12.0 வானமாதேவி - 10.25 பெல்லாந்துறை - 9.2 எஸ்.ஆர்.சி குடிதாங்கி - 7.0 புவனகிரி - 7.0 குப்பநத்தம் - 5.2 குறிஞ்சிப்பாடி - 5.0 அண்ணாமலைநகர்- 3.5 கீழ்செருவாய் - 3.0 சிதம்பரம் - 2.4 விருத்தாசலம் - 2.0 லக்கூர் - 2.0 கடலூர் - 0.௨ மாவட்டத்தில் ெமாத்தம் 192.05 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
- தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது.
- காலையிலிருந்து வெயிலின் தாக்கம் குறைந்து சாரல் மழை பொழிந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இருந்தாலும் அவ்வப்போது பலத்த காற்று வீசி வந்தது. இந்நிலையில் நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. இரவிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. குறிப்பாக ஒரத்தநாடு தாலுகா வெட்டிக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் கனமழை கொட்டியது.
மாவட்டத்தில் அதிகப ட்சமாக வெட்டிக்காட்டில் 48.40 மி.மீ மழை அளவு பதிவானது. மாவட்டத்தில் ஒரே நாளில் 342.70 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது.
தஞ்சை உள்பட பல்வேறு இடங்களிலும் இன்று காலையிலிருந்து வெயிலின் தாக்கம் குறைந்து சாரல் மழை பொழிந்தது.
மாவட்டத்தில் இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-
வெட்டிக்காடு -48.40, நெய்வாசல் தென்பாதி -32, குருங்குளம் -31.60, மதுக்கூர் -28, பேராவூரணி -26.20, பட்டுக்கோட்டை -26, ஒரத்தநாடு -24.60, அதிராம்பட்டினம் -19.90, வல்லம் -14, தஞ்சாவூர் - 7.
- முன்னோரை வழிபடும் நாட்களில் தை அமாவாசை முக்கியமானது.
- துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய் விட்டனர்.
வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் 'பிதுர் காரகன்' என்கிறோம். சந்திரனை 'மாதுர் காரகன்' என்கிறோம். எனவே சூரியனும், சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபாடு தெய்வங்களாகும்.
சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர், சந்திரன் எமது மனதுக்கு திருப்தியானவர். இதனால் மகிழ்ச்சி தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர்.
இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரண தினங்களில் வழிபாடு செய்வர். தை அமாவாசை தினத்தில் அதிகாலை எழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதுர் தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.
பிதுர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதுர்களின் தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.
புண்ணிய நதியில் நீராடல்
முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களைச் சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம்.
அமாவாசை நாட்களில் தீர்த்தங்கரைகளில் நீராடும்போது பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும்.
சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் இவர் அருளைப் பூரணமாக பெற முடியும்.
திருதயுகம், திரோதாயுங்களில் வருஷ திதி நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக்கொண்டனர். யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்ததால் இந்நிலை இருந்தது. ராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதர் நேரில் தோன்றி தன் பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது.
திருதயுகம், திரோதாயுங்களில் வருஷ திதி நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டனர். யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்ததால் இந்நிலை இருந்தது. ராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதா நேரில் தோன்றி தன் பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது.
துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய் விட்டனர். ஆனால் சூட்சும வடிவில் அவர்கள் நம்மை நேரில் பார்ப்பதாகவும் ஆசியளிப்பதாகவும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. ஒருவரின் வயிற்றில் பிறந்தால் மட்டும் பிள்ளையாகி விட முடியாது.
பிள்ளைக்குரிய முழு தகுதியை ஒருவன் பெற வேண்டுமானால் வாழும் காலத்தில் பெற்றோரைக் கவனிப்பதோடு, இறப்புக்கு பிறகும் பிதுர் கடனை முறையாகச் செய்ய வேண்டும். சிரத்தையுடன் அதாவது, அக்கறையுடன் செய்வதற்கு சிரார்த்தம் என்று பெயர்.
இறந்த பின்னும் நம் வாழ்வு தொடர்கிறது என்ற உண்மையை நமக்கு இக்கடமை நினைவூட்டுகிறது. இறந்த முன்னோர்களின் நற்கதிக்காகவும், அவர்களின் பூரண ஆசி வேண்டியும், சந்ததியினர் இக்கடமையைச் செய்கின்றனர். இச் சடங்கினைத் தீர்த்தக் கரையில் செய்வது வழக்கம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்து முடிப்பர்.
சிரார்த்தம் கொடுக்கும் போது சொல்லும் மந்திரத்தின் பொருளைத் தெரிந்து கொண்டு செல்லும் போது தானே நிச்சயம் பலன் கிடைக்கும். மனித வாழ்வு இறப்புக்கு பின்னும் தொடர்கிறது என்ற உண்மையை உணர்ந்து செய்யும் போது, இச்சடங்கு பொருளுடையதாகும். முன்னோரை வழிபடும் நாட்களில் தை அமாவாசை முக்கியமானது.
கொடிய பாவங்கள் நீங்கும்
மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாக பிறந்தால்தான் இறைவனை எளிதில் அடைய முடியும். வேறு எந்தப் பிறவிக்கும் இந்த சிறப்பு கிடையாது. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய அவரோடு இரண்டறக் கலக்க முடியாது.
ஆக இத்தகைய அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் ஒரு விழாவாக அமாவாசையை எடுத்துக் கொள்ளலாம். சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம் மிகவும் புனிதமானது.
அந்த மாதத்தில் வரும் அமாவாசையில் கடற்கரை தலங்களுக்குச் சென்று முன்னோருக்குச் தர்ப்பணம் செய்து வரலாம். சம்பந்தரும், நாவுக்கரசரும் வழிபட்ட வேதாரண்யம் மிகவும் புனிதமானது. இக்கோவிலுக்குள் உள்ள மணிகாணிகை தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, நாமதை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம்.
இதில் நீராடியவர்கள், தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதுடன், தங்கள் முன்னோர் செய்த பாவங்களுக்கும் சேர்த்து நிவர்த்தி பெற்று வரலாம்.
பிரம்மஹத்தி (கொலை செய்த பாவம்) போன்ற கொடிய பாவங்களும் கூட நீங்கும் என்பது ஐதீகம். பல ஆண்டுகளாக யோகம், தானம், தவம் செய்த பலன்களையும் அடையாளம்.