search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "supermarket"

    • உடை என்பது ஒருவரின் அடையாளத்தை வெளிபடுத்தக் கூடியவற்றில் முதன்மையானது ஆகும்.
    • . இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது.

    உடை என்பது ஒருவரின் அடையாளத்தை வெளிபடுத்தக் கூடியவற்றில் முதன்மையானது ஆகும்.ஆள் பாதி ஆடை பாதி என்று பழமொழியே உள்ளது. இந்தியாவில் பெரும்பாலானோர் வெளிநாட்டு உடைகளுக்கு பழக்கப்பட்டு விட்டனர். முக்கியமாக தென்னிந்தியாவில் வீட்டில் அணிந்து கொள்ளும் லுங்கிக்கு பதிலாக தற்போதுள்ள இளைஞர்கள் ஷார்ட்ஸ் அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    ஆனால் இதற்கு மாறாக சமீபத்தில், இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் தெருக்களில் ஒரு பெண் லுங்கி அணிந்து நடந்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    பல ஆண்டுகளாக லண்டனில் வசிக்கும் இந்தியத் தமிழரான வலேரி, @valerydaania என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். வீடியோவில், வலேரி ஸ்டைலாக நீல நிற செக்டு லுங்கியும் டி-ஷர்ட்டும் அணிந்து லண்டன் தெருக்களில் நடந்து சென்று ஒருசூப்பர் மார்கெட்டுக்குள் நுழைகிறார். அவரின் வித்தியாசமான தோற்றத்தைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர்.

     

    இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வலேரியின் முயற்சியை பாராட்டினர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது.  

    • மில்க் ஷேக் கசப்பாக இருந்ததால் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சோதித்துள்ளனர்.
    • அப்போது அதில் அழுகிய நிலையில் கிடந்த பல்லி இருந்துள்ளது.

    சென்னை முகப்பேரில் பிரபல நிறுவனத்தின் மில்க் ஷேக் பாக்கெட்டில் அழுகிய நிலையில் கிடந்த பல்லி இருந்துள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முகப்பேரில் வசித்து வரும் யுவராஜ் - பூங்கோதை தம்பதிக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் இவரது மகளுக்காக யுவராஜ் மில்க் ஷேக் வாங்கி வந்துள்ளார்.

    அந்த மில்க் ஷேக் கசப்பாக இருந்ததால் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சோதித்துள்ளனர். அப்போது அதில் அழுகிய நிலையில் கிடந்த பல்லி இருந்துள்ளதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனையடுத்து மில்க் ஷேக் வாங்கிய சூப்பர் மார்க்கெட்டில் சென்று யுவராஜ் முறையிட்டுள்ளார். ஆனால் அவர்கள் முறையாக பதில் அளிக்கவிலை.

    பின்னர் சிறிது நேரத்தில் மில்க் ஷேக்கை குடித்த கல்லூரி மாணவிக்கும் அவருடைய தம்பிக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மில்க் ஷேக்கை விற்பனை செய்த சூப்பர் மார்க்கெட், தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்நிலையில், மில்க் ஷேக் பாக்கெட்டின் உள்ளே பல்லி அழுகிய நிலையில் கிடந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஹனுமான் நாயக் சேக் பேட்டையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடைக்குச் சென்றார்.
    • இதனைக் கண்டு சூப்பர் மார்க்கெட் மேலாளர் அதிர்ச்சி அடைந்தார்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சேக் பேட்டையை சேர்ந்தவர் ஹனுமான் நாயக் (வயது 22). இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி வருகிறார்.

    இந்த நிலையில் ஹனுமான் நாயக் சேக் பேட்டையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடைக்குச் சென்றார்.

    அங்கிருந்து மாட்டிக்கொள்ளாமல் சாக்லேட் திருடி சாப்பிடுவது எப்படி என்று பேசியபடி ஒரு சாக்லேட்டை நைசாக திருடி சாப்பிட்டார். இதனை அவரது நண்பர் ஒருவர் வீடியோ எடுத்தார்.

    அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். இதனைக் கண்டு சூப்பர் மார்க்கெட் மேலாளர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சாக்லேட் திருடியது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அனுமான் நாயக் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நியூயார்க் நகரில் 200க்கும் மேற்பட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டன
    • ஆக்லேண்டு பகுதியில் 249 மில்லிமீட்டர் மழைபொழிவு ஏற்பட்டது

    கடந்த செப்டம்பர் 29 அன்று அமெரிக்காவின் முக்கிய பெருநகரமான நியூயார்க் நகரில் திடீரென பெய்த பெருமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் ஆங்காங்கே வெள்ள பெருக்கு ஏற்பட்டது. 200க்கும் மேற்பட்ட பல விமான சேவைகள் நிறுத்தப்பட்டு நகரின் ஒரு சில பிராந்தியங்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது.

    நகரில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அவ்வப்போது புகைப்படங்களும், வீடியோக்களும் பயனர்களால் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வந்தது.

    அவ்வாறு வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் ஒரு பல்பொருள் அங்காடியில் முழங்கால் அளவு வரை நீர், நதி போல் ஓடுவதும், அதில் மிதக்கும் பொருட்களை தாண்டி அக்கடைக்கு வந்த பல வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்துடன் தண்ணீர் நடுவே மெதுவாக நடந்து செல்வதையும் காண முடிந்தது.

    மேலும் அந்த வீடியோவில், "பிரளயத்தை போன்ற வெள்ளத்தில் நியூயார்க் மக்கள் ஒரு பெரிய மளிகை கடையில், ஓடி வரும் தண்ணீரில், மிதக்கும் மளிகை பொருட்கள், மிருகங்களுக்கு நடுவே பொருட்களை வாங்கி செல்கின்றனர்" என ஒரு குறுஞ்செய்தியும் பதிவிடப்பட்டிருந்தது.

    ஆனால், ஆய்வில் இது உண்மையல்ல என தெரிய வந்துள்ளது. உண்மையில், இந்த வீடியோவில் காணப்படும் சம்பவம் பல மாதங்களுக்கு முன் 2023 ஜனவரி 28 தேதியிட்ட ஒரு வீடியோவில் உள்ளது.

    நியூசிலாந்து நாட்டின் ஆக்லேண்டு நகரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 24 மணி நேர இடைவெளியில் 249 மில்லிமீட்டர் மழைப்பொழிவு ஏற்பட்ட போது அங்குள்ள கிலென்ஃபீல்டு சூப்பர் மார்கெட் (Glenfield Super Market) எனும் பல்பொருள் அங்காடியில் பொருட்களை வாங்க வந்தவர்கள் சிக்கி கொண்டு மெதுவாக வெளியேறியது வீடியோ பதிவாகி வெளியிடப்பட்டது.

    அந்த சம்பவம் குறித்த வீடியோவைத்தான் நியூயார்க் நகர வெள்ளத்துடன் தொடர்புபடுத்தி தவறுதலாக வலைதளங்களில் சிலர் வெளியிட்டுள்ளனர்.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.


    • அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து அரிசி, மளிகை பொருட்கள் வாங்கினார்.
    • கடைக்கு வந்த நபர் தன்னை ஏமாற்றி விட்டு சென்றதாக அக்கம்பக்கத்தினர்களிடம் கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் கிராமத்தில் ஒரு சிறிய சூப்பர் மார்க்கெட்டை வாசுதேவனூர் கிராமத்தை சேர்ந்த மங்கையர்கரசி (வயது31) என்பவர் நடத்தி வருகிறார். இந்த சூப்பர் மார்க்கெட்டிற்க்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து அரிசி, மளிகை பொருட்கள் வாங்குவது போல் பொருட்களின் விலையை கேட்டு, சில வகை பொருட்களை எடுத்து வைக்கக் கூறியுள்ளார். பின்பு கடை உரிமையாளர் மங்கையர்க்கரசி அந்த நபர் கூறிய அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துள்ளார்.

    பிறகு அந்த நபர் 1400 ரூபாய் விலையில் ஒரு அரிசி சிப்பத்தை எடுத்துக்கொண்டு, உரிமையாளர் மங்கை யர்க்கரசியிடமே ரூ. 2000 பணம் கேட்டுள்ளார். மங்கையர்க்கரசி 2000 ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொடுத்துள்ளார். இதன் பிறகு அந்த நபர் ஒரு சிப்பம் அரிசி ரூ. 2000 பணம் ஆகியவற்றுடன் தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தபோது கடையின் உரிமையாளர் மங்கையர்க்கரசி தனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை என கூறியிருக்கிறார்.

    வெகுநேரம் கழித்து மங்கை யர்க்கரசிக்கு சுயநினைவு வந்ததாகவும் அதன் பிறகே கடைக்கு வந்த நபர் தன்னை ஏமாற்றி விட்டு சென்றதாக அக்கம்பக்கத்தினர்களிடம் கூறியுள்ளார். இதன்பிறகு மங்கையர்க்கரசி அருகில் உள்ள கீழ்குப்பம் ேபாலீஸ் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். மங்கையர்க்கரசியின் சூப்பர் மார்க்கெட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் வந்து போன சம்பவம் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவான நிலையில் அந்த காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தண்டனை காலத்தை சிறைச்சாலைகளில் கழித்து வரும் கைதிகள் அங்கு பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள்.
    • கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள சிறைச் சாலைகளில் தண்டனை கைதிகளாக இருப்பவர்கள் திருந்தி நல்ல மனிதர்களாக வெளியில் வருவதற்கான அனைத்து நடவடிக்கை களையும் தமிழக அரசு செய்து வருகிறது.

    கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதான குற்றவாளிகள் பலர் வழக்கு விசாரணை முடிந்து சிறையில் தண்டனை காலத்தை கழித்து வருகிறார்கள்.

    இதுபோன்று தண்டனை காலத்தை சிறைச்சாலைகளில் கழித்து வரும் கைதிகள் அங்கு பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள்.

    சிறைகளில் உள்ள தோட்டங்களில் நிலக்கடலை உள்ளிட்ட எண்ணை வித்துக்களை பயிரிட்டு அறுவடை செய்வது, இந்த நிலக்கடலையை சிறையிலேயே செக்கு எண்ணையாக தயாரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் கைதிகள் பல்வேறு பொருட்களையும் உற்பத்தி செய்து வருகிறார்கள்.

    இந்த பொருட்கள் சந்தை படுத்தப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது. சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஷ் புஜாரி மேற் பார்வையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டுள்ளன.

    எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள சூப்பர் மார்க்கெட் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மதுரையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் தினமும் ரூ.1 லட்சம் அளவுக்கு பொருட்கள் விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன.

    இப்படி சிறைச்சாலை அருகில் உள்ள சந்தைகள் பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் வர வேற்பை பெற்றுள்ளதால் சிறைகளில் உற்பத்தி அளவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தாங்கள் செய்யும் வேலையை மிகுந்த ஆர்வத்தோடு செய்ய சிறை கைதிகள் மாதம் ரூ.10 ஆயிரம் வரையில் சம்பாதிக்கிறார்கள்.

    கைதிகள் செய்யும் வேலைக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயிக்கப்படுவதால் ரூ.5 ஆயிரம், ரூ.6 ஆயிரம் என சம்பாதிக்கப்பவர்களும் உண்டு. சிறையில் தரமான சாப்பாடு உள்ளிட்டவைகள் கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருவதால் இந்த சம்பளம் கைதிகளுக்கு மிச்சமாகி விடுகிறது.

    கைதிகள் சம்பாதிக்கும் இந்த பணம் அவர்களிடம் நேரடியாக வழங்கப்படுவது இல்லை. இதுபோன்ற சம்பள பணத்தை கையாள்வதற்கே கணக்கர் ஒருவர் சிறைச்சாலைகளில் உள்ளார். அவர் கைதிகள் சம்பள பணத்தை பத்திரமாக வைத்திருந்து குடும்பத்தினர் பார்க்க வரும்போது அவர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்.

    இதன்மூலம் சிறையில் இருந்தாலும் கைதிகள் தங்கள் குடும்பத்துக்காக பணம் சம்பாதித்து கொடுக்கும் நிலையில் இருந்து வேலைகளை செய்து வருவது அவர்களை மனதளவில் நல்ல மனிதர்களாக மாற்றுவதற்கு உந்து சக்தியாகவே இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மானாமதுரையில் பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டது.
    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் குத்துவிளக்கு ஏற்றினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கீழமேல்குடி சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு சூப்பர் மார்கெட்டை திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

    பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் உரிமையாளரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவருமான எஸ்.பாலகுருசாமி வரவேற்றார். இதில் பேரமைப்பின் மாநிலபொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு மாநில, மண்டல, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் வணிகர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை நகரில் மிகபெரிய சூப்பர் மார்க்கெட் இதுவாகும். இங்கு அனைத்து மளிகை பொருட்கள் முதல் வீட்டு உபயோகபொருட்கள் முழுவதும் ஒரேஇடத்தில் வாங்கிச்செல்ல முடியும். மதுரையில் இருந்து தினமும் காய்கறிகள் வரவழைக்கப்பட்டு தரமான பொருட்கள் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என்று சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் எஸ்.பாலகுருசாமி தெரிவித்தார்.

    • மானாமதுரையில் பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா நாளை நடக்கிறது.
    • பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தரமான முறையில் கிடைக்கும்.



    பாலகுருசாமி

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகர் வர்த்தக சங்க தலைவரும், சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் பாலகுருசாமி. இவர் மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகில் கீழமேல்குடி ரோட்டில் பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் அமைத்துள்ளார்.

    இதன் திறப்பு விழா நாளை (9-ந்தேதி) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தமிழ்நாடு வர்த்தக சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா குத்து விளக்கேற்றி திறந்து வைக்கிறார்.

    இதில் வர்த்தக சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், மானாமதுரை நகர் வர்த்தகர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை வர்த்தக சங்க தலைவர், சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் பாலகுருசாமி செய்து வருகிறார்.

    புதிதாக திறக்கப்பட உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தரமான முறையில் கிடைக்கும்.

    • அதிகாரிகள் மீட்டு சீல் வைத்தனர்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியில் தனியார் நிதி நிறுவனம் தீபாவளி மற்றும் பொங்கல் சீட்டு நடத்தி மளிகை பொருட்கள், தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், சீர்வரிசை சாமான்கள் உள்ளிட்டவை கவர்ச்சிகரமான பொருட்கள் தருவதாக பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி பல பேரிடம் கோடி கணக்கில் பணம் வசூல் செய்துள்ளனர்.

    இந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் வந்தவாசி ஆரணி சாலையில் சூப்பர் மார்க்கெட் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகை வருவதால் அதற்குண்டான பொருட்களை வாங்குவதற்காக நிதி நிறுவனத்திற்கு பொது மக்கள் சென்றுள்ளனர்.

    அப்போது அதன் உரிமையாளர் அங்கு இல்லாததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் செல்போன் மூலமும் அக்கம் பக்கம் தேடியும் கிடைக்காததால் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

    இது குறித்து பாதிக்க ப்பட்டவர்கள் திருவண்ணா மலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது சம்பந்தமாக போலீசார் வந்தவாசி ஆரணி சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடையை பூட்டி சீல் வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று சிலர் சூப்பர் மார்க்கெட்டின் பக்கவாட்டில் உள்ள இரும்பு ஷட்டரை உடைத்து உள்ளே இருக்கும் மளிகை பொருட்கள் சாமான்கள் உள்ளிட்டவைகளை திருடிக் கொண்டிருந்தனர்.

    அங்கு வந்த போலீசாரை கண்டதும் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட போது அருகிலுள்ள கடைகளில் மளிகை பொருட்கள், பித்தளை சாமான்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட வை பதுக்கி வைத்தி ருந்தது தெரியவந்தது.

    இதை யடுத்து தாசில்தார் முருகானந்தம் தலைமையில் போலீசார் பூட்டை உடைத்து பதுக்கி வைத்திருந்த பொருட்களை மீட்டு மீண்டும் சூப்பர் மார்க்கெ ட்டில் வைத்து சீல் வைத்தனர்.

    சூப்பர் மார்க்கெட் கடைக்குள் புகுந்து கொ ள்ளைய டித்தவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அன்னபூரணி தாய் பிச்சையம்மாளுடன் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
    • பிச்சையம்மாள் மகள் அன்னபூரணி வேலை முடிந்து வீடு திரும்பவில்லை.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே சாராயமேட்டுப் பகுதியைச் சேர்ந்தவர் குமார் இவரது மனைவி பிச்சையம்மாள் (வயது 47). அவரது மகள் அன்னபூரணி. ( 22). இவருக்கு செல்வகணபதி என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் அன்னபூரணி தாய் பிச்சையம்மாளுடன் திருவெண்ணைநல்லூர் அருகே ஆலங்குப்பம் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பிச்சையம்மாள் மகள் அன்னபூரணி வேலை முடிந்து வீடு திரும்பவில்லை. இதனால் மனைவி மற்றும் மகளை காணவில்லை என்று குமார் இவர்கள் வேலை பார்க்கும் ஆலங்குப்பம் சூப்பர் மார்க்கெட் சென்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் வேலை முடிந்து சென்று விட்டனர். வேறு எங்கு சென்றனர் என்று தெரியாது என்று கூறினர். மேலும் மனைவி மற்றும் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து குமார் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்கு பதிவு செய்து அவர்கள் என்னானார்கள் எங்கு சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக போலீசார் பல்பொருள் அங்காடி கடந்த 15-ந் தேதி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பல்பொருள் அங்காடியில் பொருட்களை வாங்க வருபவர்கள் நேரத்தை வீணடிக்காமல் குறைவான நேரத்தில் எளிதாக வாங்கும் விதமாக நடைமுறையை ஏற்படுத்துவது போன்ற செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக போலீசார் பல்பொருள் அங்காடி கடந்த 15-ந் தேதி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பல்பொருள் அங்காடியில் அமைந்துள்ள பொருட்கள், போலீசார் பெற்றுக் கொள்ளும் முறை, அதன் விலைப்பட்டியல் மற்றும் பொருட்களை வாங்க வருபவர்கள் நேரத்தை வீணடிக்காமல் குறைவான நேரத்தில் எளிதாக வாங்கும் விதமாக நடைமுறையை ஏற்படுத்துவது போன்ற செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் டிஎஸ்பி மணிமாறன் , ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மார்ட்டின் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ராஜபாளையம் அருகே ஆம்னி பஸ் மோதி சூப்பர் மார்க்கெட் ஊழியர் பலியானார்.
    • ரைவர் ராமர் என்பவரிடம் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 37). இவர் ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 8.30 மணி அளவில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் தென்காசி ரோட்டில் சென்றார்.

    அப்போது தென்காசியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த ஆம்னி பஸ் ஆனந்தராஜ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார். பலியான ஆனந்தராஜிக்கு திருமணமாகி மேரி ஷகிலா என்ற மனைவி உள்ளார்.

    இந்த விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து மோதிய ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த தென்காசியை சேர்ந்த டிரைவர் ராமர் என்பவரிடம் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

    ×