என் மலர்
நீங்கள் தேடியது "Supervisor"
- தனபால்(வயது 44). இவர் குமாரபாளையத்தில் உள்ள தனியார் நூல் மில்லில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார்.
- கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், மோரூர் கிழக்கு ஊராட்சி தாசநாயக்கன்பாளையம், அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் தனபால்(வயது 44). இவர் குமாரபாளையத்தில் உள்ள தனியார் நூல் மில்லில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சரிதா(38). இவர்களுக்கு ஜெயஸ்ரீ (20) என்ற மகளும், ரித்தீஷ் (18) என்ற மகனும் உள்ளனர்.
கருத்து வேறுபாடு
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் தனபால், அதே பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி பழனியப்பன் என்பவரிடம், தங்களை சேர்த்து வைக்குமாறு கூறியதாக தெரிகிறது. இதை அறிந்த சரிதாவின் அண்ணன் சரவணன் (44), சரிதாவின் தாய் ராஜம்மாள் (60) ஆகியோர் தனபாலிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக தெரிகிறது.
மயக்கம் அடைந்தார்
இதில் அடிபட்ட தனபால் மயக்கம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தனபால் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தனபாலின் மனைவி சரிதா, மாமியார் ராஜம்மாள், மைத்துனர் சரவணன் ஆகிய 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசனை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
- இது அவருக்கு இரண்டாவது முறையாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருபவர் வெங்கடேசன் (வயது 45). வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட போலீஸ் செக்போஸ்ட் அருகே குப்பை கிடந்தது. அதை சுத்தம் செய்யுமாறு துப்புரவு ஆய்வாளர் குருசாமியும், துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தன் என்பவரும் சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளர் வெங்கடேசனிடம் கூறியுள்ளார். ஆனால் கடைசிவரை அவர் துப்புரவு பணியாளர்களை வைத்து அந்த பகுதியை சுத்தம் செய்யவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், துப்புரவு ஆய்வாளர் குருசாமியிடம் உடனடியாக சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் அங்கு துப்புரவு பணியாளர் மூலம் துப்புரவு செய்யப்பட்டது. இந்நிலையில் வெங்கடேசன மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதில் தெரிவிக்கவில்லை. அதன் அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசனை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசனை இரண்டாவது முறையாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் குப்புசாமி இறந்தார்.
- பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் சயனைடு கலந்த மதுவை வாங்கி குடித்ததால் இறந்தது தெரியவந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசல் படைவெட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 68) மீன் வியாபாரி. கீழவாசல் பூமால்ராவுத்தன் கோவில் தெருவை சேர்ந்தவர் விவேக் (36) கார் டிரைவர்.
இவர்கள் நேற்று மதியம் கீழவாசல் தற்காலிக மீன் மார்க்கெட் எதிரே உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் மது வாங்கி குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் குப்புசாமி இறந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி விவேக் இறந்தார்.
இவர்கள் இருவரது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் சயனைடு கலந்த மதுவை வாங்கி குடித்ததால் இறந்தது தெரியவந்தது. இவர்கள் ஒருவர் குடித்த மதுவை மற்றொருவர் குடித்ததால் இரண்டு பேரும் பலியாகினர்.
தற்கொலையா ? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே டாஸ்மாக் பார் உரிமையாளர் செந்தில் நா.பழனிவேல், ஊழியர் காமராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் வேலை பார்த்த மேற்பார்வையாளர் முருகன், விற்பனையாளர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன் உத்தரவிட்டார்.
- மயிலாடுதுறையில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஒரு தனியார் பஸ் சென்றது.
- அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி அருகே இலுப்பூர் கிராமம், அரசலங்குடியைச் சேர்ந்தவர்
இளங்கோவன் (வயது 49). இவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளது
இவர் பூம்புகாரில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் மயிலாடுதுறையில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஒரு தனியார் பஸ் சென்றது.
இந்த பஸ் அரும்பாக்கம் அருகே சென்ற போது இளங்கோவன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் இளங்கோவன் படுகாயம் அடைந்தார்.
உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இச்சம்பவம் குறித்து பெரம்பூர் காவல் நிலைய போலீசார்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடந்தது.
- வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள் நன்றி கூறினார்.
மதுரை
மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் குமரகுருபரன் அறிவுறுத்த லின் படி வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடை பெற்றது. செல்லம்பட்டி வட்டார மருத்துவர் பாண்டியராஜன் தலைமை வகித்தார்.மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் முத்துராமன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.
கூட்டத்தில் விக்கிர மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர், மற்றும் ஜென ரேட்டர் வசதி செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு ஏ.சி., சுகாதார ஆய்வாளருக்கு பிறப்பு இறப்பு பதிவாளருக்கு கணினி வழங்குதல் மற்றும் செல்லம்பட்டி பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும், நாட்டாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை பேருந்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்த ப்பட்டது.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவ லர்கள், செல்லம்பட்டி, நாட்டாபட்டி, தும்மக்குண்டு, விக்கிரமங்கலம் மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வை யாளர்கள் மற்றும் மருத்து வமில்லா மேற்பார்வை யாளர், கோவிலாங்குளம், முதலைக்குளம் ஊராட்சி செயலாளர்கள் ஜெயபால், பாண்டி, வாய்ஸ் டிரஸ்ட் தன்னார்வலர்கள், அங்கன்வாடி மற்றும் அனைத்து துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள் நன்றி கூறினார்.
- 53 சதவீதம் பேர் ஆப்சென்ட்
- தேர்வு எழுத 2 ஆயிரத்து 777 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் ஆயிரத்து 299 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
புதுச்சேரி:
புதுவை பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குனரகத்தில் கள மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று காலை 10 மணி முதல் 12 வரை நடந்தது.
புதுவையில் தாகூர் கலைக் கல்லூரி - 2, வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாவலர் நெடுஞ்செழியன் அரசு பள்ளி, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம், மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி, குளுனி பள்ளி என 7 மையங்களில் தேர்வு நடந்தது.
தேர்வு எழுத 2 ஆயிரத்து 777 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் ஆயிரத்து 299 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 53 சதவீதம் பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
முன்னதாக காலை 8.30 மணி முதல் தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து, தேர்வர்கள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட தகவல் தொடர்பு மற்றும் மின்னணு சாதனங்கள் கொண்டு செல்லாத வகையில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டனர். பின்னர், ஹால்-டிக்கெட் சரிபார்க்க ப்பட்டு தேர்வறைக்குள் செல்ல அனுமதிக்க ப்பட்டனர். மேலும், தேர்வு கட்டுப்பாட்டாளரும், அரசு செயலருமான குமார், உதவி தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் ஜெய்சங்கர், கண்ணன் ஆகியோர் தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதேபோல், போக்குவரத்து துறையில் அமலாக்க உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெற்றது.
- கணவர் துபாயில் வேலை பார்த்து வருவதால் பெண் தனது மகளுடன் வசித்து வருகிறார்.
- பக்கத்து வீட்டில் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் வாலிபர் வசித்து வருகிறார்.
கோவை:
கோவை வடவள்ளி அருகே உள்ள வீர கேரளத்தை சேர்ந்த 40 வயது இளம்பெண்.
இவரது கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். பெண் தனது மகளுடன் வசித்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டில் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் பாலகுமார் (வயது 31) என்பவர் வசித்து வந்தார். இளம்பெண் கணவர் இல்லாமல் இருப்பதை அறிந்த அவர் அடிக்கடி சைகைகள் காட்டி ஆபாசமாக பேசி வந்தார்.
சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் பாலகுமார் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் இளம்பெண்ணை கட்டி பிடித்து தவறாக நடக்க முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். இதனையடுத்து பாலகுமார் நடந்த சம்பவங்களை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து இளம்பெண் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கட்டி பிடித்து தவறாக நடக்க முயன்ற பாலகுமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை ைகது செய்தனர். பின்னர் போலீசார் பாலகுமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- செயல் அலுவலர் சுப்பிரமணிய–னுக்கும் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
- வாக்குவாதத்தை தொடர்ந்து துப்புரவு மேற்பார்வையாளர், செயல் அலுவலரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் சுப்பிரமணியன். இவர் கடந்த 2 மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். அப்போது பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆய்வில் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேஷ் உட்பட 3 பேருக்கு மெமோ கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து செயல் அலுவலர் சுப்பிரமணிய–னுக்கும் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தை தொடர்ந்து துப்புரவு மேற்பார்வையாளர், செயல் அலுவலரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து செயல் அலுவலர் சுப்பிரமணியன் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் செயல் அலுவலர் சுப்பிரமணியன் இதுதொடர்பாக சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனருக்கு புகார் அளித்ததின் பேரில், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேஷை, தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் பரமத்தி வேலூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நகர் ஊரமைப்புத்துறை அலுவலர்களுக்கு ஆன்-லைன் சிறப்பு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.
- முகாம் ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குநர் உமாராணி, கண்காணிப்பாளர் மான்சிங் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள நகர் ஊரமைப்புத்துறை அலுவலகத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலுார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் தொடங்கியது. இதனை இணை இயக்குநர் சங்கரமூர்த்தி தொடங்கி வைத்தார்.
மேலும், இணையதளம் வாயிலாக மனைப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தல், கோப்புகளின் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் அரசுக்கான கட்டணங்களை செலுத்துதல், அரசு உத்தரவு வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து, அலுவலக பணியாளர்கள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.முகாம் ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குநர் உமாராணி, கண்காணிப்பாளர் மான்சிங் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
- பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன விரிவுரையாளர் இளையராணி பார்வையிட்டார்.
- வருகிற 10-ந் தேதி வரை பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
மதுக்கூர்:
மதுக்கூர் அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை மற்றும் ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் மூலமாக 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற பயிற்சி தொடங்கியது.
இப்பயிற்சியில் தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய மூன்று பாடங்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன விரிவுரையாளர் இளையராணி பார்வையிட்டார்.
இதற்கான ஏற்பாடுகளை ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் கனகா, மதுக்கூர் வட்டார கல்வி அலுவலர் மனோகரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தங்கம் ஆகியோர் ஒருங்கிணைத்து செய்திருந்தனர். வருகிற 10-ந் தேதி வரை பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.