search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆய்வு"

    சேலத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் மஞ்சள்நாதன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
    சேலம்:

    சேலம் 5 ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் மஞ்சள்நாதன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெட்ரோல், டீசலின் தரம் குறித்து அவர் ஆய்வு நடத்தினார்.

    பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் சண்முகம் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தார். தொடர்ந்து தொழிலாளர் துறை உதவி ஆணையர் மஞ்சள்நாதன் ஊழியர்களிடம் தரத்தின் விவரங்கள் குறித்து கேட்டு அறிந்தார்.
    வலங்கைமான் அருகே வீடு கட்டுவதற்குகாக குழி தோண்டியபோது கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    நீடாமங்கலம்:

    வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் கடந்த 19-ம் தேதி வீடு கட்டுவதற்கு குழி தோண்டியபோது  சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

    அச்சிலைகள் வட்டாட்சியர் அலுவல–கத்தில் பதிவரையில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட நிலையில் அச்சிலைகளை  திருவாரூர் அருங்காட்சியக காப்பாச்சியர் மருதுபாண்டி–யன் ஆய்வு செய்தார்.

    ஆய்வில்  இச்சிலைகள் அணைத்தும் ஐம்பொன்னால் ஆனவை என்றும், 3 அடி உயரத்தில் 65 கிலோ எடையுள்ள சமயகுறவர்களில் ஒருவரான சுந்தரர் சிலையும், சின்ன சின்னதாய் ஒரு தன்வந்திரி சிலை, ஒரு இராமானுஜர் சிலை, ஒரு பூமா தேவி சிலை, ஒரு ஸ்ரீ தேவி சிலை மற்றும் 1அடி உயரமுள்ள பெருமாள் சிலையும் கிடைத்துள்ளது. 

    இச்சிலைகள் வைணவ மதத்தை சேர்ந்தவை ஆகும் என்றும் அவர் தெரிவித்தார். உடன் வலங்கைமான் தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்னன் ,மண்டல துணை தாசில்தார் ஆனந்தன், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
    குமாரபாளையம் 3,9-வது வார்டுகளில் நகராட்சி சேர்மன் ஆய்வு செய்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பொறுப்பேற்ற நாள் முதல் தினமும் ஒவ்வொரு வார்டாக சென்று ஆய்வு செய்து, தேவைப்படும் அத்தியாவசிய பணிகள் மேற்ெகாள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார். 

    நேற்று 9-வது வார்டு ராஜம் தியேட்டர் பகுதியில் ஆய்வு சேர்மன் விஜய்கண்ணன் செய்தார். வார்டு கவுன்சிலர் விஜயா மற்றும் அப்பகுதி மக்கள் சாலை வசதி, வடிகால், குடிநீர் குழாய் உள்ளிட்ட பணிகள் செய்து தர கேட்டுக்கொண்டனர். 

    இதையடுத்து அவர் அதிகாரிகளை வரவழைத்து, பணிகளை மேற்கொள்ளுமாறு  சேர்மன் அறிவுறுத்தினார். அதே போல் 3-வது வார்டிலும் ஆய்வு செய்தார். அப்போது கவுன்சிலர் வேல்முருகன் உடனிருந்தார்.
    குமாரபாளையம் அருகே ஆதரவற்றோர் மையத்தில் சமூக நலத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி கீதா ஆய்வு செய்தார். 

    ஆய்வின்போது மையத்தில் எத்தனை ஆதரவற்றவர்கள் உள்ளனர்? அவர்களுக்கு முறையாக உணவு 3 வேலையும் வழங்க–படுகிறதா? மையம் நடத்த தேவையான ஆவணங்கள் தயார் நிலையில் உள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது ஆதரவற்றோர் மைய நிர்வாகி ஹேமமாலினி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
    குமாரபாளையம் அருகே ஆதரவற்றோர் மையத்தில் சமூக நலத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி கீதா ஆய்வு செய்தார். 

    ஆய்வின்போது மையத்தில் எத்தனை ஆதரவற்றவர்கள் உள்ளனர்? அவர்களுக்கு முறையாக உணவு 3 வேலையும் வழங்க–படுகிறதா? மையம் நடத்த தேவையான ஆவணங்கள் தயார் நிலையில் உள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது ஆதரவற்றோர் மைய நிர்வாகி ஹேமமாலினி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
    பரமத்திவேலூர் பகுதியில் கல் குவாரிகளை ஆய்வு செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள நல்லூர், குன்னமலை, மணியனூர் உள்ளிட்ட பல்வேறு  ஊராட்சி பகுதிகளில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. 

    இந்த கல் குவாரிகளில் இருந்து அரளைக்கல், சம்பட்டி கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. அதேபோல் கிரைனைட் கற்களும் வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்த கற்களை பல்வேறு வெளி மாவட்டங்களுக்கும் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு பல்வேறு ரகமான கிரானைட் கற்கள் தயார் செய்யப்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
     
    இந்நிலையில் அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் அரசு அனுமதிக்கப்பட்டுள்ள ஆழத்திற்கு அதிகமாக பல கல்குவாரிகள் செயல்படுவதாகவும், மேலும் அனுமதி பெறாமலும் கல்குவாரிகள் செயல்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

    இப்பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து கல்குவாரி களையும் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட குழுவினர்  ஆய்வு செய்து கல்குவாரி யின் நீளம், அகலம், ஆழம் போன்றவற்றை சோதனை செய்ய வேண்டும்.  இந்த கல் குவாரிகளில் திடீர் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     
    பாதுகாப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளதால் என்பதையும் பரிசோதனை செய்ய வேண்டும் .கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் கல்குவாரியில் இதுபோன்று கற்களை வெட்டி எடுத்துக் கொண்டு வரும்போது பாறைகள் சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரமத்திவேலூர் தாலுகா பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    குமாரபாளையம் நகராட்சியில் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சியில் நகராட்சி நிர்வாக இயக்குனரக இணை இயக்குனர் பூங்கொடி அருமைக்கண் நேரில் ஆய்வு செய்தார்.  

    குமாரபாளையம் நகரில் நடந்து வரும் கட்டுமான பணிகள், மார்க்கெட் கட்டுமான பணிகள், தற்காலிக மார்க்கெட் அமைப்பு பணிகள், வரி வசூல் நிலை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். 

    அப்போது நகராட்சி கமிஷனர் விஜயகுமார், பொறியாளர் ராஜேந்திரன், எஸ்.ஓ. ராமமூர்த்தி, மேலாளர் சண்முகம்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    3 இடங்களில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து வர வேண்டிய நிலை உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அம்ரூத் திட்டத்தில் 4வது குடிநீர் திட்டப்பணி ரூ. 1,121 கோடி செலவில் 2017 -18ம் நிதியாண்டில் துவங்கப்பட்டது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து குடிநீர் எடுத்து அன்னூர் அருகே குறுக்கபாளையத்தில் தலைமை சுத்திகரிப்பு மையத்தில் சுத்திகரிப்பு செய்து, ராட்சத குழாய்கள் மூலம் திருப்பூர் கொண்டு வரப்படுகிறது.

    தற்போது சுத்திகரிப்பு மையம் கட்டுமானம் மற்றும் கருவிகள் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. இதற்காக 196 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

    அது வரை, 20 கி.மீ., தூரத்துக்கு பிரதான குழாய்கள் பதித்தும், அங்கிருந்து ஏறத்தாழ, 150 கி.மீ., நீளத்துக்கு குழாய் பதித்தும் மேல் நிலை தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு வந்து சேர்க்கப்படுகிறது.

    அவ்வகையில் மாநகராட்சி பகுதியில் 29 இடங்களில் மேல்நிலை மற்றும் தரைமட்ட தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. பெரும்பாலான தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் நிறைவடையும் நிலையில் உள்ளது. மேலும் 1,062 கி.மீ., நீளத்துக்கு நகரப்பகுதியில் வினியோக குழாய்கள் பதிக்கும் பணி பெரும்பாலும் முடிவடையும் நிலையில் உள்ளது.

    இத்திட்டம் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் தினமும் 230 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும். இதனால், மாநகராட்சி பகுதியில் ஏறத்தாழ 1.2 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். 

    இத்திட்டப்பணி தற்போது 75 சதவீதத்துக்கும் மேல் நிறைவடைந்துள்ளது. பிரதான குழாய்கள் பதிக்கப்படும் இடங்களில் 3 இடங்களில் ெரயில்வே பாதையையும், 3 இடங்களில் தேசிய நெடுஞ்சாலையையும் கடந்து வர வேண்டிய நிலை உள்ளது. இதற்கு அனுமதி பெற தாமதம் ஏற்பட்டது.

    தற்போது இதில் அனுமதி கிடைத்துள்ளதால் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. அவ்வகையில் மேட்டுப்பாளையத்தில் ரெயில்வே பாதையை கடக்கும் இடத்தில் மற்றும் சுத்திகரிப்பு மையத்தில் நடைபெறும் பணியையும் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் நேரில் சென்று பார்வையிட்டார்.

    நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்
    நாமக்கல்:

    கோடை விடுமுறைக்கு பின்னர் இந்த மாதம்  பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், அதற்கு முன்பாக அனைத்து பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது. 

    இதை தொடர்ந்து , நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கல்வி வாகனங்கள் நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டன. 

    இதில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் கலந்துகொண்டு வாகனத்தில் பிரேக் சரியாக உள்ளதா? பாதுகாப்பு கருவிகள், அவசர வழிகள் அமைக்கப்பட்டுள்ளனவா? , வாகன படிக்கட்டுகள் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தார். அப்போது ஓட்டுநர்கள் செல்போன் பேசி கொண்டு வாகனம் இயக்கக்கூடாது. மது அருந்த கூடாது என அறிவுறுத்தப்பட்டன.

     மேலும், தீயணைப்புத் துறையினா் மூலம் தீத்தடுப்பு மற்றும் முதலுதவி தொடா்பான நடவடிக்கைகள் குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டன. 

     ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் மஞ்சுளா, வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், டிஎஸ்பி சுரேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உமாமகேஸ்வரி, சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ×