என் மலர்
நீங்கள் தேடியது "tag 110052"
- அம்மாபேட்டை அருகே பஸ் மீது சுற்றுலா வேன் மோதி சென்னை வாலிபர் பலி, 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
- இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அம்மாபேட்டை:
சென்னை மணலி ஆண்டாள் குப்பம் பகுதி யை சேர்ந்தவர்கள் ராஜேஸ்குமார் (வயது 26), பிரபு, ரூபன் குமார், சந்தோஷ் உள்பட 14 பேர் ஒரு சுற்றுலா வேனில் வெள்ளியங்கிரிக்கு வந்தனர். வேனை சென்னையை சேர்ந்த சந்திர சேகர் ஓட்டி வந்தார்.
அவர்கள் வெள்ளி யங்கிரி சென்று விட்டு நேற்று இரவு வேனில் சென்னைக்கு சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் பவானி அருகே அம்மாபேட்டை அடுத்த குதிரைக்கல் மேடு என்ற பகுதியில் வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராதவி தமாக அந்த வழியாக வந்த அரசு பஸ் மற்றும் சுற்றுலா வேன் மோதி கொண்டது. இதில் ராஜேஸ்குமார், பிரபு, ரூபன் குமார், சந்தோஷ் ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதை கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இருந்து மேல் சிகிச்சைக்கு பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்குமார் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
பலியான ராஜேஸ்குமார் என்ஜினீயரிங் படித்து விட்டு விவசாயம் பார்த்து வந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் புகைமண்டலமாக காட்சி அளித்தது.
- சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை மூட்டம் இருந்தது.
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி பொதுமக்கள் இன்று காலை முதல் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். மாலையில் நிகழ்ததப்பட்ட வாணவேடிக்கையால் சென்னை நகரமே வண்ணமயமாக காட்சி அளித்தது. சில இடங்களில் இரவு 10 மணிக்கு பிறகும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பொதுமக்கள் தொடர்ச்சியாக பட்டாசு வெடித்து வந்ததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புகைமண்டலமாக காட்சி அளித்தது.
நள்ளிரவு வரை சென்னை நகரம் முழுவதும் புகையால் சூழப்பட்டது போல் காணப்பட்டது. சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை மூட்டம் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். புகை மண்டலத்தால் விமான போக்குவரத்து, ரெயில் போக்குவரது பேருந்து போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது.
சென்னையில் காற்று மாசு அபாயகரமான அளவிற்கு அதிகரித்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 4 மணி அளவில் காற்றில் நுண் துகள்களின் அளவு 109 என இருந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் 192 என்ற அளவாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- கனமழை பெய்து அதிக அளவு தண்ணீர் வந்தால் தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்ற 719 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
- மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோவில் குளங்களை சீரமைத்து வைக்க வேண்டும்.
மழை வருது...
மழை வருது...
என்றால் இது ஒரு மேட்டரா...?
மாதம் மும்மாரி மழை பெய்து செழித்த பூமிதானே நம்ம பூமி என்று கிராமத்து விவசாயி சிரிப்பான்.
அட உங்களுக்கு என்னப்பா ஊரு பக்கம் எவ்வளவு மழை பெய்தாலும் கவலை இல்லை. சென்னையில் அப்படியா? ஒரு மணிநேரம் வெளுத்து வாங்கிச்சுன்னா தண்ணீரில் மிதந்து தான் போகணும். இதுதான் இதுவரை நடந்த மழைக்கால அனுபவங்கள். இந்த ஆண்டாவது விடிவு காலம் பிறக்குமா என்பதுதான் சென்னைவாசிகளின் எதிர்பார்ப்பு.
அதற்கு முக்கிய காரணம் சென்னையில் எந்த பக்கம் திரும்பினாலும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் மாத கணக்கில் நடக்கிறது. சின்ன சின்ன தெருக்களை கூட விட்டு வைக்க வில்லை. மழைநீர் கால்வாய் பணிகள் என்று தோண்டி போட்டுள்ளார்கள்.
எனவே இந்த பணிகள் முற்று பெற்று விட்டால் மழைநீர் தேக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என்று கருதுகிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? பருவமழை தொடங்கட்டும் பார்ப்போம் என்கிறார்கள்.
பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு மேயர் பிரியா கூறியதாவது:-
மழைநீர் வடிகால்வாய் பணிகள் வருகிற 15-ந்தேதிக்குள் முடிந்துவிடும். சிங்கார சென்னை முதல் பகுதி திட்டத்தில் 1354 கிலோ மீட்டர் நீளத்துக்கான கால்வாய் சீரமைப்பு பணிகளில் 95 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. 1030 கிலோ மீட்டர் தூரத்துக்கு அடைப்புகள் நீக்கப்பட்டு தூர்வாரி முடிக்கப்பட்டுள்ளது. 10-ந்தேதிக்குள் இந்த பணிகள் முடிவடையும். எங்கும் தண்ணீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எங்காவது தண்ணீர் தேங்கினால் 1913 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். கடந்த ஆண்டை போல பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தங்கவும், அவர்களுக்கு உணவு வழங்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி கூறும்போது, 'பணிகள் முடிந்த இடங்களில் உடனடியாக குழிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. குழிகள் உள்ள இடங்களில் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.
கனமழை பெய்து அதிக அளவு தண்ணீர் வந்தால் தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்ற 719 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதில் 400 மோட்டார்கள் 100 குதிரை திறன் சக்தி கொண்டது. இந்த மோட்டார்கள் ஒவ்வொன்றும் நிமிடத்துக்கு 11,700 லிட்டர் தண்ணீரை வெளியேற்றும் திறன் கொண்டவை.
கால்வாய்கள் இணைக்காத இடங்களில் ஏற்படும் தண்ணீர் தேக்கத்தை சமாளிக்க இந்த மோட்டார்கள் பயன்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள இடங்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் கண்டறியப்பட்டுள்ளது.
34 இடங்களில் வெள்ளம் சூழ்வது தவிர்க்க முடியாது என்று கூறி உள்ளார்கள். அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழைவெள்ள பாதுகாப்பு தொடர்பான தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சேகர் ராகவன் கூறும்போது, 'நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், கழிவு பொருட்களால் நிரம்பியும் கிடக்கின்றன. இந்த நிலையில் தண்ணீர் எப்படி போகும்?
மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோவில் குளங்களை சீரமைத்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றினாலும் எங்கே போகும். மீண்டும் பழைய நிலைதான் ஏற்படும்' என்றார்.
சிவில் என்ஜினீயரான தயானந்த கிருஷ்ணன் கூறியதாவது:-
இணைக்கப்படாத கால்வாய்களை இணைப்பதில் இவ்வளவு காலதாமதம் ஏன்? 5 செ.மீ. மழை தண்ணீரை தங்கும் அளவுள்ள கால்வாய்களில் 10 செ.மீ. மழை வந்தால் எப்படி சமாளிப்பது? அதிலும் இப்போது மேக வெடிப்பு மூலம் மழை கொட்டுவதும் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 11-ந்தேதி இரவு 7 மணிக்கு மங்களூருவில் இருந்து சிறப்பு ரெயில் புறப்படும்.
- 12-ந் தேதி காலை 4:55 மணிக்கு கோவைக்கும், காலை 5:28 மணிக்கு திருப்பூருக்கும் வரும்.
திருப்பூர் :
ஓணம் பண்டிகை நிறைவு பெற்றுள்ள நிலையில், கேரளா சென்றவர்கள் திரும்ப வசதியாக கூடுதலாக ஒரு சிறப்பு ெரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை 11-ந்தேதி இரவு 7 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ெரயில் மறுநாள் மதியம் 1:45 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.இந்த ெரயில், காசர்கோடு, பையனூர், கண்ணுர், கோழிக்கோடு, பாலக்காடு ரெயில் நிலையங்களில் நின்று 12-ந் தேதி காலை 4:55 மணிக்கு கோவைக்கும், காலை 5:28 மணிக்கு திருப்பூருக்கும் வரும்.சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக தாம்பரம் சென்றடையும் என்று சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மாநில தலைவர் முனியாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
- ஆர்ப்பாட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
கடையம்:
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக்கோரி சென்னையில் வள்ளுவர் கோட்டம் முன்பு வருகிற 14-ந் தேதி தமிழ்நாடு பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் முனியாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது குறித்து தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைப்பாளர் டி.கே.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் வருகிற 14-ந்தேதி பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். பட்டியலின மற்றும் பெண் ஊராட்சி தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளுக்கான டெண்டரை ஊராட்சியே முடிவு செய்ய அதிகாரம் வழங்க வேண்டும், ஊராட்சி தலைவர்களுக்கு மாதம் ஊதியமாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற கூட்டமைப்பின் சார்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்கின்றனர். மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுக்க உள்ளோம்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் அதிகமானோர் பங்கேற்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரெயில் மூலமாகவும், ஆம்னி பஸ்கள் மூலமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விளையாட்டுக்களில் ஈடுபடும் மக்களுக்கு இந்த பகுதி பயன்படுத்தப்படும்.
- நிகழ்ச்சிகளுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை பெசன்ட் நகர், 6வது அவென்யூ கிழக்கு பகுதியில் 32வது குறுக்கு தெருவிலிருந்து 3வது பிரதான சாலை சந்திப்பு வரை (வாகனமில்லா ஞாயிற்றுக்கிழமை) "Car-Free Sunday" நிகழ்ச்சியானது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடத்தப்படுகிறது.
அதாவது 04.09.2022, 11.09.2022, 18.09.2022, 25.09.2022, 02.10.2022, 16.10.2022 மற்றும் 23.10.2022 ஆகிய நாட்களில் காலை 06.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மேற்கண்ட பகுதியில் தி இந்து மற்றும் சென்னை பெருநகர போகுவரத்து காவல் துறையால் இணைந்து நடத்தப்படும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடும் பொது மக்களுக்கு இந்த பகுதி பயன்படுத்தப்படும்.
இந்நிகழ்ச்சிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. அதன்படி 7வது நிழற்சாலையிலிருந்து 6வது நிழற்சாலை வரை எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல உத்தேசித்துள்ள வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் அவை இலக்கை அடைய 16வது குறுக்குத் தெரு வழியாக 2வது நிழற்சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.
16வது குறுக்குத் தெருவில் இருந்து 6வது நிழற்சாலையை நோக்கிச் செல்ல வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் அவை 2வது நிழற்சாலை மற்றும் 16வது குறுக்குத் தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். 3வது மெயின் ரோட்டில் இருந்து 6வது நிழற்சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டு, 3வது மெயின் ரோடு மற்றும் 2வது நிழற்சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும்.
4வது மெயின் ரோடு மற்றும் 5வது நிழற்சாலையில் இருந்து 6வது நிழற்சாலை வழியாக எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன, அவை மேலும் 4வது மெயின் ரோடு மற்றும் 5வது நிழற்சாலை வழியாக திருப்பி விடப்படும். வாகன ஓட்டிகள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 5 பேரிடம் போலீசார் விசாரணை.
- மருந்தகங்களுக்கு சப்ளை செய்யும் மருந்துகளை போதை மருந்துகளாக மாற்றி விற்பனை.
வேளச்சேரி:
சென்னை வேளச்சேரி பகுதிகளில் போதை மாத்திரைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் அடையாறு துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின் பேரில் கிண்டி உதவி கமிஷனர் சிவா மற்றும் வேளச்சேரி இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் கொண்ட தனிப்படையினர் வேளச்சேரி பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக 5 பேர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் 5 பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் 4,400 போதை மாத்திரைகள் மற்றும் 90 போதை டானிக்குகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக ஜானகிராமன், முனீஸ்வரன், பாலுசாமி, சுல்தான் அலாவுதீன், நரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் சுல்தான் அலாவுதீனும், நரேசும் மருத்துவ பிரதிநிதிகளாக வேலை பார்த்து வருவதும் இவர்கள் மருந்துகளை மருந்தகங்களுக்கு சப்ளை செய்யாமல் அவற்றை போதை மருந்துகளாக மாற்றி கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
- 'சி' பிரிவில் தமிழகம், ஒடிசா, டெல்லி அணிகள் இடம் பெற்றுள்ளன.
- தினமும் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறும்.
தமிழக அஞ்சல் துறை சார்பில் 34-வது அகில இந்திய அஞ்சல் துறை கால்பந்து போட்டி இன்று முதல் 26-ந் தேதி வரை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. தமிழகம், நடப்பு சாம்பியன் கேரளா, அசாம், டெல்லி, இமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 10 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.
௧௦ அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'சி' பிரிவில் தமிழக அணியுடன் ஒடிசா, டெல்லி அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள பிற அணிகளுடன் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். தினமும் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறும்.
இன்று காலை 8 மணிக்கு நடக்கும் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். காலை 9.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழகம்-ஒடிசா அணிகள் மோதுகின்றன.
- சென்னையில் இயக்கப்படும் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
- பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை.
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை மாநகரில் புதிதாக 500 மின்சார பேருந்துகளை வாங்கி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 100 பேருந்துகள் விரைவில் வரவுள்ளது. சோதனை முறையில் இந்த மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்பட உள்ளது. இந்த முறை வெற்றியடைந்த பின் தமிழகம் முழுவதும் இயக்குவதற்காக மின்சார பேருந்துகள் புதிதாக வாங்கப்படும்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முதற்கட்டமாக சென்னை போக்குவரத்துக்கழக பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அது முழுமையாக நிறைவு பெற்ற பிறகு தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- இளைஞர்களிடையே நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணம்
கன்னியாகுமரி:
நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள கனியாகுளம் பாறையடி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 54).
இவர் ஒற்றைக் காலை இழந்த மாற்றுத்திறனாளி ஆவார். பெயிண்டராக வேலைபார்க்கும்இவர் இளைஞர்களிடையே நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி இவரது சைக்கிள் பயணத்தின் தொடக்க விழா கன்னியா குமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபம் முன்பு நடந்தது.
இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான வக்கீல் ஆர். மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவரது சைக்கிள் பயணத்தை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன், அகஸ்தீஸ்வரம் பேரூர் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் டென்னிஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரியில் இருந்து சைக்கிள் பய ணம் புறப்பட்ட இவர் நாகர்கோவில், நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னையை அடுத்த மாதம் (செப்டம்பர்) பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான 15-ந்தேதி சென்றடைகிறார். நாளொன்றுக்கு நூறு கிலோமீட்டர் வீதம் மொத்தம்1500 கிலோமீட்டர் தூரம் இவர் சைக்கிள் பணம் மேற்கொள்ள உள்ளார்.