என் மலர்
நீங்கள் தேடியது "tag 118868"
இன்று காலை அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பொன்ராமுக்கு தகவல் கொடுத்தனர்.
பொள்ளாச்சி திலகர் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் .இவர் பொள்ளாச்சி அடுத்துள்ள கெடிமேடு பகுதியில் தர்பூசணி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் பொள்ளாச்சி ரெயில்வே காலனி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் செல்வராஜை தாக்கிவிட்டு அவரிடமிருந்த ரூ.620 பணம் கையில் போட்டிருந்த 5 கிராம் மோதிரம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
நகை, பணத்தை பறிகொடுத்து விட்டு வீட்டுக்கு சென்ற செல்வராஜ் தனது மகன் கண்ணனிடம் நடந்த சம்பவத்தை கூற கண்ணன் தனது நண்பர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்துக் கொண்டு ரெயில்வே காலனி பகுதிக்கு சென்றார். ஆனால் அங்கு வழிப்பறி கொள்ளையர்கள் இல்லை. இதையடுத்து நேதாஜி ரோடு மார்க்கெட் பகுதிக்கு சென்றபோது அங்கு 3 பேர் நின்று கொண்டு இருந்தனர். செல்வராஜ் அவர்களை அடையாளம் காட்டவே பொதுமக்கள் அவர்கள் 3 பேரையும் துரத்திப் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது 2 பேர் மட்டும் சிக்கி கொண்டனர். அவர்களை பொள்ளாச்சி மேற்கு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் பொள்ளாச்சி செரிப் காலனியை சேர்ந்த முகமது ஷேக் பரீத் (23), கண்ணப்பன் நகரை சேர்ந்த சுலைமான் ( 27 )என்பது தெரியவந்தது . அவர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவர் பொள்ளாச்சி அழகாபுரி வீதியை சேர்ந்த ரபிக் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சாலிகிராமம் மதியழகன் நகர் கே.கே. சாலையை சேர்ந்தவர் ஜெயகுமாரி (வயது40). இவர் தனது மகள் பிருந்தாவின் திருமணத்திற்காக நகை வாங்க ரூ. 40 ஆயிரம் பணம் மற்றும் வீட்டில் இருந்த 6 பவுன் நகைகளை எடுத்து கொண்டு அண்ணா நகரில் உள்ள நகைக்கடைக்கு மாநகர பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
கோயம்பேடு 100 அடி சாலை வந்தபோது நகை மற்றும் பணம் இருந்த பையை காணாமல் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்
கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ்சில் வந்த மர்ம நபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயகுமாரி கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தார்.
மற்றொரு சம்பவம்...
பெருங்குடி கல்லுக்குட்டை அன்னை தெரசா தெருவைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (48). இவர் நேற்று நெற்குன்றத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார்.
பின்னர் நெற்குன்றம் செல்லும் மினி பஸ்சில் ஏறி அமர்ந்தார். பஸ் கிளம்பி சிறிது தூரம் சென்றதும் தனது கைப்பை கிழிந்து கிடந்ததை நாகலட்சுமி கண்டார்.
மர்ம நபர்கள் பையை கிழித்து அதிலிருந்த 5 பவுன் நகைகளை திருடி சென்றது தெரிந்தது. இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் கடந்த 1996-97-ல் முதல்-மந்திரியாக இருந்தவர் சங்கர்சின் வகேலா. இவரது வீடு காந்திநகரின் புறநகர் பகுதியான பெதப்பூரில் உள்ளது. சொகுசு மாளிகை போல அமைந்திருக்கும் இந்த வீட்டில் ஏராளமான பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் நேபாளத்தை சேர்ந்தவர்களும் அடங்குவர்.
இந்த நிலையில் வகேலாவின் மனைவிக்கு சொந்தமான ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவை மாயமானது கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் வீட்டு பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது வகேலா வீட்டில் பணியாற்றி வந்த நேபாளத்தை சேர்ந்த ஒரு தம்பதிதான் இந்த நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே அவர்கள் தாய்நாடு திரும்பிய நிலையில் அப்போதே இந்த பணம் மற்றும் நகையை திருடிச்சென்றதாக தெரிகிறது. இது தொடர்பாக பெதப்பூர் போலீசில் தற்போது புகார் செய்யப்பட்டு உள்ளது. அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு அருகே பாச்சூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து. கூலித் தொழிலாளி. இவரது மகன் பாலமுருகன்(வயது28). பி.இ. படித்துள்ளார். மகள் கனிமொழி.
கனிமொழிக்கு திருமண ஏற்பாடுகளை பிச்சை முத்து செய்து வந்தார். அதற்காக 15 பவுன் நகைகள் மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை வீட்டில் பீரோவில் வைத்திருந்தனர். பிச்சைமுத்து, அவரது மனைவி கூலி வேலைக்கு செல்லும்போது வீட்டை பூட்டி சாவியை வாசல் நிலைப் படியில் வைத்துவிட்டு செல்வது வழக்கமாம்.
இந்நிலையில் கடந்த 14-ந்தேதி பாலமுருகன் வெளியூர் சென்றிருந்ததால் பிச்சைமுத்து வீட்டை பூட்டி வழக்கம்போல் சாவியை நிலைப் படியில் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அனைவரும் மாலையில் வீடு திரும்பினர். நேற்று காலை பீரோவில் இருந்த நகைகளை சரிபார்க்க திறந்தபோது 15 பவுன் நகைகளையும், ரூ.10 ஆயிரத்தையும் காணாமல் அதிர்ச்சியடைந்தனர்.
அப்போதுதான் வீட்டு நிலைப்படியில் வைத்திருந்த சாவியை யாரோ எடுத்து திறந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாலமுருகன் ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகரில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ஜோதி பாசு. இவரது மகள் சரிதா பாரதி (வயது 19). இவர், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி., இறுதியாண்டு படித்து வந்தார்.
நேற்று வீட்டில் இருந்த சரிதா பாரதி, திடீரென மாயமானார். இதனால் பதட்டமடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் வீட்டின் பீரோவில் இருந்த 25 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கத்துடன் சரிதா பாரதி மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஜோதிபாசு திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்துடன் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
பெரம்பூர்:
சென்னை வியாசர்பாடி 3-வது பள்ளத் தெருவை சேர்ந்தவர் டில்லி. இவரது மனைவி கெஜலட்சுமி (77). நேற்று மாலை மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். அப்போது 3 பெண்கள் கெஜலட்சுமியை அணுகி பூஜை பொருட்கள் வாங்கித் தருவதாக கூறினர்.
நீங்கள் அலைய வேண்டாம். நாங்கள் வாங்கி தருகிறோம் என்று கூறி பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளனர். பின்னர் அவரை ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். வீட்டிற்கு சென்று பார்த்த போது கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை காணவில்லை.
கெஜலட்சுமியிடம் இருந்து எப்படி நகையை அபேஸ் செய்தார்கள் என்று தெரியவில்லை. நைசாக பேசி கழற்றினார்களா? மாந்திரீகம் ஏதும் செய்து நகையை பறித்தார்களா என்பதை கெஜலட்சுமியால் சொல்ல முடியவில்லை.
இதேபோல வியாசர்பாடி மெகன்சிபுரத்தை சேர்ந்த செல்லம்மாள் என்பவர் பிளாட்பாரத்தில் பூண்டு வியாபாரம் செய்து வருகிறார். அவர் வியாபாரம் செய்து வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் அரை பவுன் நகையை காணவில்லை என்று கூறியுள்ளார். 3 பெண்கள் தன்னிடம் வந்து நைசாக பேசியதாக அவர் கூறியுள்ளார்.
வியாசர்படி போலீசில் 2 பெண்களும் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் மார்க்கெட் பகுதயில் ரகசியமாக கண்காணிக்கின்றனர். ஆட்டோவில் வந்து கைவரிசை காட்டி செல்லும் 3 பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அன்புநகரை சேர்ந்தவர் சிவக்குமார் (35). லாரி அதிபரான இவர் குடும்பத்துடன் கடந்த 24 ந் தேதி திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
நேற்றிரவு சிவக்குமார் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த நகை, பணம் மற்றும் எல்.டி.டிவியை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் மோட்டார் சைக்கிளும் திருட்டு போனது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது தெரியவில்லை. சிவக்குமார் ஊரில் இல்லாத சமயம் பார்த்த மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இதனால் உள்ளூரை சேர்ந்த கொள்ளையர்கள்தான் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது.
இதுகுறித்து சிவக்குமார் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.